Showing posts with label Thirukkolur Ammal. Show all posts
Showing posts with label Thirukkolur Ammal. Show all posts

May 23, 2018

Thirukolur Penpillai Rahasyam-80

தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
அந்நாட்களில், ஸ்ரீரங்கத்து எம்பெருமான் பல்லக்கில் வீதி உலா வரும்பொழுது, முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்திக் கொண்டே இருவர் வருவர். அவர்களின் செயலால், முன் நிற்கும் கூட்டமும் விலகும். சில சமயங்களில், எதிர்பாராமல், அவ்வடி பக்தர்கள் மேலும் படக்கூடும்.

ஒருமுறை, அவ்வாறு அடிக்கும் பொழுது, அது பராசர பட்டரின் தோள்பட்டையில் அடியாக விழ, பட்டரின் சீடர்கள் சவுக்கு வைத்திருப்பவரை கடிந்து கொண்டனர். தெரியாமல் அடித்து விட்டதாக அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, பட்டரோ, “பரவாயில்லை. எம்பெருமானுக்கான கைங்கரியத்தின் போது  விழுந்த அடி. மற்றொரு தோளிலும் விழவில்லையே என்றே நான் வருந்துகிறேன்.”, என வருந்திக் கூறினாராம்.  பொறுமையும் மன்னிக்கும் குணமும் ஸ்ரீ வைஷ்ணவனின் குணமாக இருக்க வேண்டும்.

திருக்கோளூர் அம்மாள், “பட்டர்பிரானைப் போல் ஸ்ரீ வைஷ்ணவ குணத்துடன் வாழ்ந்தேனா?”, என வினவுகிறார்.
 ========********========
thOL kAtti vandhEnO battaraip pOlE
In olden days, when Namperumal of Sri Rangam temple is on a procession in the streets, in order to clear the crowd, there will be some people in front who will hit the ground with long belts so that the crowd will clear the path and leave way for Namperumal. Accidentally, the belts might, at times, hit the devotees too.

On one such occasion, when Namperumal was amidst the crowd, the belt’s edge hit Parasara Bhattar on his shoulder. Bhattar's disciples got angry and used harsh words against the person who was using the belt. Calming his disciples, Bhattar said-"They were only doing their duty. There is no mistake in that. Besides, what's wrong in being hit by those in the service of the Lord?"

He then told the person who hit him, "What you did was correct. When I got hit on one shoulder, I should have offered my other shoulder also to you. That was my mistake and I feel bad about it. Now I am showing you my other shoulder".

The person who used the leather belt apologized to Bhattar. It is the quality of a Srivaishnava to show patience and mercy to anyone who makes mistake.

Thirukkolur Ammal asks, "Did I show these qualities any time like Bhattar?"

May 22, 2018

Thirukolur Penpillai Rahasyam-79

 வாயில் கையிட்டேனோ எம்பாரைப் போலே
திருப்பெரும்பூதூரின் அருகில் உள்ள மழலைமங்கலத்தில் (தற்போதைய மதுரமங்கலம்) கிபி 1026 ஆம் ஆண்டு, கோவிந்த பட்டர் என்ற இயற்பெயருடன் பிறந்த எம்பார், ராமானுஜரின் சித்தி மகனாவார். திருப்புட்குழியில் தன் அண்ணனாகிய இராமானுசருடன் யாதவ பிரகாசரிடம் கல்வி பயின்றார். ஒருமுறை காசிக்குச் சென்று கங்கையில் நீராடுகையில் சிவலிங்கம் ஒன்று கிடைக்க, அதை எடுத்து வந்து காளஹஸ்தியில் வைத்து கோயில் கட்டினார்.  இச்சம்பவத்தால் "உளங்கைக் கொணர்ந்த நாயனார்" என சைவர்களால் அழைக்கப்பட்டார். சிவ பக்தனாக இருந்த கோவிந்த பட்டரை ராமானுஜரின் வேண்டுதலுக்கிணங்க, திருமலையில் இருந்த பெரிய திருமலை நம்பிகள் வைணவத்திற்கு திருப்பினார்.

பெரிய திருமலை நம்பியிடம், திருமலையில் ராமாயணத்தின் உள்ளர்த்தங்களை அறிந்து கொண்டிருந்த ராமானுஜர், ஒருசமயம், எம்பார் பாம்பின் வாயில் தனது கையை வைத்து ஏதோ செய்து கொண்டிருப்பதைக் கண்டார். சில நிமிடங்கள் செல்ல, எம்பார், பாம்பை விட்டுவிட்டு, தனது ஆச்சார்ய சேவைக்கு திரும்புவதைக் கண்டார். ராமானுஜர், "என்ன செய்து கொண்டிருந்தீர் பாம்புடன்?"என வினவினார்.

எம்பார், "அந்த பாம்பு தன் நாக்கை நீட்டிக் கொண்டிருந்தது. அருகில் சென்று பார்த்தபொழுது, நாக்கினுள் முள் ஒன்று தைத்திருந்தது. அதை எடுத்து விட்டேன். அது ஓடிவிட்டது.”, என்றார். அனைத்து உயிர்களையும் ஒன்றெனக் காணும் எம்பாரின் கருணை உள்ளதைக் கண்டு ராமானுஜர் பெருமிதமும் ஆனந்தமும் கொண்டார். வைணவனின் அடிப்படை தர்மம் மனித நேயம், கருணை, இரக்கம்.

திருக்கோளூர்அம்மாள், “எம்பாரைப் போல் அனைத்து உயிர்களிடத்திலும் கருணையுடன் இருந்தேனா?”, என வினவுகிறார்.
========********========

vAyil kaiyittEnO embAraip pOlE
Govindar, maternal cousin to Ramanuja, who was later, called as Embar, was born in Mazhalaimangalam (now Madhuramangalam). Once, when he went on a yatra to Kasi, a Shiva Linga came into his hand while he was bathing in the river Ganges. From then, he became an ardent devotee of Shiva and settled in Kalahasti, near Tripathi, maintaining the Shiva temple there.

Accepting the request of Ramanuja, Periya Thirumalai Nambi engaged Embar and returned him to the Srivaishnavism. Embar then moved to Thirumalai and lived with his acharya Periya Thirumalai Nambi and performed services to him. One of the qualities of a Srivaishnava is feeling empathy for others. This quality was complete in Embar.

Ramanuja was at Tirumalai learning Sri Ramayan from Periya Thirumalai Nambi. One day, Ramanuja noticed Embar putting his hand inside a snake's mouth and later, leaving the snake in the garden, he went to continue his services to his acharya. When Ramanuja asked -"O Govinda! What did you do with the snake?”, Embar replied-"I noticed that the snake was keeping its tongue out and suffering. When I went near it, I saw that a thorn was stuck in its tongue. So, I pulled the thorn out. The snake then ran away. I hope it’s relieved from the pain it was going through." Ramanuja was amazed about his sense of mercy and blessed him.

Thirukkolur Ammal is asking "Did I show mercy on all creatures like Embar?"

May 21, 2018

Thirukolur Penpillai Rahasyam-77


நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே

நீரோருகம் என்பது தாமரை மலரைக் குறிக்கும்.

புனித ஸ்தலமான காசியில், சிங்கன் என்பவன் வசித்து வந்தான். ஸ்ரீமன் நாராயணனின் தீவிர பக்தனான அவன், அனுதினமும் குளத்திலிருந்து தாமரை மலரை, தானே பறித்து, எம்பெருமானை அலங்கரித்து, வணங்குவான். சிறந்த நீச்சல் வீரனான சிங்கனின் நீச்சல் திறமை, நாளுக்கு நாள் வளர, விளைவாக, அவனுள் அகந்தையும் மலர்ந்தது.

கங்கை நதியின் ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு அநாசியமாக நீச்சல் அடிக்கும் அளவிற்கு, திறமையும் வளர்ந்தது. ஒருசமயம், சிங்கன் நீச்சல் அடிக்கையில், நதியின் சுழலில் சிக்கிக் கொண்டான். கங்கை அவனை அடித்துச் சென்றது. அவனது நீச்சல் திறமை கைகொடுக்காமல் போக, கொஞ்சம் கொஞ்சமாக நீரில் மூழ்கத் தொடங்கினான்.

தனது அகந்தையே தனது இந்நிலைமைக்கு காரணம் என்பதை உணர்ந்த சிங்கன், கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வந்து முதலையிடம் சிக்கிய கஜேந்திரனைக் காத்த நாராயணனின் நினைவு வர, "நாராயணா! முதலையிடம் சிக்கிய கஜேந்திரனைப் போல், அகந்தையில் சிக்கியுள்ள நானும் உன்னிடம் சரணாகதி அடைகிறேன். என்னை காப்பாற்று.”, என்று சரணாகதி அடைந்தான்.
காற்று பலமாக வீச, நதியில் ஒரு பெரிய அலை எழுந்து வந்து அவனை கரையில் சேர்த்தது. இறைவனின் அருள்தான் தன்னைக் காத்தது என அறிந்த அவன், அகந்தையை விட்டொழித்தான். அன்று முதல், அனுதினமும் ஸ்ரீமன் நாராயணனை மலர்களால் அலங்கரித்து, அகந்தையின்றி சேவைப்புரிந்து வாழ்ந்தான்.

திருக்கோளூர் அம்மாள், “காசிசிங்கனைப் போல தினமும் ஸ்ரீமன் நாராயணனை தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்தேனா?”, என்று வினவுகிறார். 
========********========

nIrOrugam koNdEnO kAsi singanaip pOlE
“nIrOrugam” means Lotus flower.

In the city of Kasi, once, there lived a person called Singan. Being an ardent devotee of Lord Vishnu, every day he would go to the ponds in the city and collect lotus flowers by himself and pray to the Lord with them.


He was a proficient swimmer. Swimming daily and collecting flowers from the ponds, his swimming skills got better and as a result, he developed an ego about his swimming ability and he claimed that he could even swim across the flooded Ganges. One day, when he was swimming across the Ganges, a quick flood came across and carried him away.

Having caught in the swirls of the flood, he realized that it was his egoism towards his skill that has brought him this far and he started praying to the Lord. He remembered the event of Lord Vishnu saving Gajendra, the elephant caught by a crocodile. He prayed, "O! Lord, You appeared in front of the elephant who sought refuge in You and saved it. Please save this poor soul too as well. I surrender to You completely".

While he was praying to the lord, a big tide picked up Singan and left him safely in the banks of the river. Realizing the work of the Lord who saved him, Singan prayed to Him with a changed and surrendered heart. He then continued to worship Lord Vishnu with lotus flowers, from that day on, without any ego.

Thirukkolur Ammal asks, "Did I pray to the Lord with lotus flowers every day like Kasi Singan?"

Thirukolur Penpillai Rahasyam-76


 நீரில் குதித்தேனோ கணபுரத்தாளைப் போலே
நல்ல அடைமழையுடன் கூடிய இரவுப்பொழுது. ஸ்ரீநம்பிள்ளை, தனது சீடர்கள் சிலருடன் ஒரு சிறிய படகில் காவிரி நதியைக் கடந்துக் கொண்டிருந்தார். மழை மற்றும் எதிர்காற்றின் காரணமாக, படகினை படகோட்டியால் விரைவாக செலுத்த இயலமுடியாது திணறினார். ஆற்றில் வெள்ளம் கூடும் அறிகுறி தென்பட, படகோட்டி, "படகின் பாரம் அதிகமாய் உள்ளது.யாரேனும் நீந்தத் தெரிந்தவர்  நீரில் குதித்தால் மற்றவர்களை காப்பாற்ற இயலும்" என்றார்.

அப்போது, கணப்புரத்தாள் என்ற பெண், படகோட்டியிடம், "எங்கள் ஆச்சாரியார் நம்பிள்ளையைக் காப்பாற்றுங்கள்.நீங்கள் நூறு வயது வாழ்வீர்கள்” என வாழ்த்திவிட்டு, காவிரி ஆற்றில் குதித்து விட்டார்.
படகும் கரை சேர்ந்தது. நம்பிள்ளைக்கோ, தமக்காக ஒரு பெண் தண்ணீரில் குதித்து விட்டாரே என்ற வருத்தம் ஏற்பட அதைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, எங்கிருந்தோ கணப்புரத்தாள், "சுவாமி! நான் பத்திரமாக இருக்கிறேன். சிறு தீவு ஒன்றிருக்க, அதில் ஏறிக்கொண்டேன்.தாங்கள் கவலைப்பட வேண்டாம்", என்றார். நம்பிள்ளை மிகவும் ஆனந்தம் அடைந்தார். படகோட்டி படகை எடுத்துச் சென்று அவரைக் காப்பாற்றி அழைத்து வந்தார்.

கணப்புரத்தாள், நம்பிள்ளையை நமஸ்கரித்து, "சுவாமி! தாங்கள்தான் சிறு தீவு உருவில் வந்து எனைக் காத்தீர்கள்" என்றாள். கணப்புரத்தாளுக்கு அனைத்தும் தனது ஆச்சார்யராய் தெரிந்தது. அவரது உலகமே ஆச்சார்யர் குறித்த எண்ணங்களால் நிறைந்திருந்தது. அதனால், அவரது உயிரைக் கூட பொருட்படுத்தாது, தனது ஆச்சார்யருக்காக உயிர் விட துணிந்தார்.

திருக்கோளூர் அம்மாள், “கணப்புரத்தாளைப் போல் உயிரை துச்சமென எண்ணி, ஆச்சார்யரை உலகமாய் நினைத்தேனா?”, என்று வினவுகிறார்.
========********========

neeril kudhiththEnO kaNapuraththALaip pOlE

Sri Nampillai, along with his disciples once was crossing the banks of river Cauvery in the night. Darkness and rain made it hard for them to cross the river and the river was showing signs of flood. The boatman was struggling to row against the wind and the overflowing water. Finding it hard to row and move forward, he said- "We are overloaded and are now at the risk of submerging. If one or two people who can swim well jump into the water, then the boat can be saved. Otherwise we will all drown".

When everyone was afraid on what to do, a lady named Kanapuraththal replied instantly, "Please save our acharya Nampillai and take him safely to the other side". Saying so, she jumped into the water without waiting for any reply.

As soon as the boat reached the bank of the river, Nampillai cried- "We lost a lady unnecessarily to the water". Hearing that, Kanapuraththal cried from the river "Swami! I am safe here. I managed to reach a small island. Please do not worry".

On hearing her voice from the river, everyone was happy to see her alive and Nampillai was more relieved and happy than any other. The boatman rowed back towards her and got her to the shore. She fell on Sri Nampillai’s feet and said "Swami! It was you who came in the form of an island to save me". To her, everything in her life was only her acharya, Sri Nampillai.

Thirukkolur Ammal says, “Did I consider my acharya as everything and sacrifice my life for his sake like Kanapuraththal?"

May 16, 2018

Thirukolur Penpillai Rahasyam-74


 என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
உபரிசரன் என்றால் மேலுலகங்களில் சஞ்சரிப்பவன் என்று பொருள். உபரிசரன் வசு என்னும் மன்னன், இந்திரனால் பரிசாக அளிக்கப்பட்ட தங்கத் தேரில் மேலுலகம் சென்று வருவான். உபரிசரன் வசு சத்யசீலன், சிறந்த மன்னனாக, தர்மத்தின் வழியில் நாட்டை வழி நடத்தினான். அதனால் தர்மதேவதை மகிழ்ந்து, வசுக்களைப் போல் அவன் பாதங்கள் பூமியில் படாது வானத்தில் நடக்குமாறு அவனுக்கு வரம் வழங்கினார்.

ஒருநாள் ரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் வேள்வியில் பலியிடும் விலங்குகள் குறித்து சர்ச்சை எழுந்தது. ஆடு போன்ற விலங்கினை வேள்வித்தீயில் பலியிட்டால் மட்டுமே வேள்வி முழுமைப் பெரும். வேதத்தின் படி, எந்த ஒரு உயிரினையும் கொல்லுதல் பாவம். ஆதலால், ஆடு போன்ற உருவை தானியங்களில் உருவாக்கி அதை யாகத்தில் இட்டனர் ரிஷிகள். இதற்கு தேவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த யாகத்தில் ஆட்டையே இட வேண்டும் என்றனர். வாக்குவாதம் முற்ற, அவர்கள் உபரிசரனை அணுகி, தர்மத்தின் படி தீர்ப்பை வழங்குமாரு வேண்டினர்.

உபரிசரனை, ஆட்டை உயிர் பலி கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினான். அதனால் வெகுண்ட முனிவர்கள் அவனை அசுரர்கள் நிறைந்த பாதாள லோகத்தில் புகும்படிச் சபித்தனர். அசுரர்கள் உபரிசரனை பலவகையிலும் துன்புறுத்தினர். ஆனால், இரக்கமில்லாமல் உயிர் பலிக்கு ஆதரவளித்த பாவமே தன்னைப் பாதாளலோகத்தில் தள்ளியது என்பதை உணர்ந்த உபரிச்சரன், திருமாலை உள்ளன்போடு வழிபட்டு, உயிர்களுக்குத் தீங்கு நினையாத வைணவ நெறியே சிறந்தது என்பதை அசுரர்களுக்கு எடுத்துரைத்தார்.

அசுரர்கள் அவரிடம், ‘‘யார் அரக்கர்? யார் வைணவர்?’’ என்று கேட்டதற்கு, அன்று உயிர் பலி கொடுக்க பரிந்துரைத்த என்னைப் போன்றவன் அரக்கன். விஷ்ணுவின் பாதம் வணங்கி, எல்லா உயிரும் ஒன்றென நினைக்கும் வைஷ்ணவன், ‘‘இன்றைய என்னைப் போல் இருப்பான்’’ என்றார்.

திருக்கோளூர் அம்மாள், “உபரிசரன் போல் தன்னையே உதாரணமாக எடுத்துக்காட்டி வைணவ நெறிகளை விளக்கினேனா?”, என்கிறார். (உபரிசரனைப் போல் தன்னையே உதாரணம் காட்டும் அளவிற்குத் தன்னால் உயர முடியவில்லையே என்று ஏங்குகிறார்.) 
========********========

ennaip pOl enREnO uparisaranaip pOlE

Uparichara Vasu was a king of Peru who ruled his kingdom as per dharma. His ruling and his name was famous for his knowledge of dharma and his devotion towards truth and virtue and the way he follows it. Due to that he was blessed by the Goddess of Righteous (dharma devata) that he could move without touching the ground. He was named so because Upari - Upwards and Chara - Going i.e. the one who goes Upwards always (his feet was above the ground). One time, during his rule, an argument broke out between sages and the devas about the sacrificial offerings during a yaga.

As per vedas, killing any animal is a sin. But, in every Yaga performed, it requires a sacrifice for the completion. Only a sacrifice completes a yaga and the purpose will be served. It is said that a goat can be sacrificed after the reciting of specific mantras during a yaga. Due to the rule that animals should not be killed in general, the sages created a model resembling a goat using grains, sacred with the mantras and sacrificed it in the yaga. The devas did not accept this sacrifice. They wanted a real animal sacrificed in the yaga. Therefore, the devas and the sages took their case to King Uparichara Vasu and asked him to give a rightful solution.

Uparichara Vasu, who followed dharma, stated that the sages should give sacrifice, in form of an animal.  Angered by this, the sages cursed him that he would rot in underworld. Uparichara Vasu, when he was tormented in the underworld by the asuras, did not feel hurt or bad, and realized that his support to kill a life is a sin and only as a result of it, he is in underworld. He understood that every soul on earth is equal and every life on earth, be it small or big in size, is all the same. He, in underworld, kept thinking of Lord Vishnu all the time and even advised the asuras that that every soul on earth is equal and that's how Lord Vishnu and vedas ask us to live. 

When the asuras asked him "Who is an asura? and who is a Viashanava?",  
Uparichara Vasu replied, "A soul like mine who supports killing of another soul is an asura.  A soul which is like the one I am now, someone who follows the words of Lord Vishnu and considers all soul on earth are equal is a true Vaishnava."


Thirukkolur Ammal is asking "Did I live a life where I can give example from my life and spread the morals of Sri Vaisnavam like Uparichara Vasu?"

Thirukolur Penpillai Rahasyam-73



உடம்பை வேறுத்தேனோ நறையூராரைப் போலே
பிள்ளை திருநறையூர் அரையர் எனும் வைஷ்ணவ ஆச்சார்யார், ஒரு சமயம், தனது மனைவி மற்றும் 6 பிள்ளைகளுடன், தொட்டியம் என்ற ஊரில் அமைந்துள்ள வேதநாராயணப் பெருமாளை தரிசிக்க சென்றார்.
அவர் கோவிலுக்குள் பெருமானை சேவித்துக் கொண்டிருந்த போது எதிர் பாராமல் கோவிலுக்குள் நெருப்பு பரவியது. தீ வேகமாகப் பரவ, மக்கள் அலறிக்கொண்டு கோவிலின் வெளியே ஓடினர்.

கருவறைக்குள் நெருப்பு பரவுவதைக் கண்ட அரையர், “எம்பெருமான் நெருப்பில் சிக்கிகொண்டாரே!”, என்று கூறி, சயன கோலத்தில் இருந்த விக்ரஹத்தை நெருப்பில் இருந்து பாதுகாக்க, எம்பெருமானை இறுக்க அனைத்துக் கொண்டார். அதை கண்ட அவர் மனைவி மற்றும் பிள்ளைகளும் எம்பெருமானை இறுக்க அனைத்துக்கொண்டனர்.

அவ்வெட்டு உயிர்களின் தியாகத்தினால், பெருமானின் திருமேனி எவ்வித பாதிப்பும் இன்றி காப்பாற்றப்பட்டது. அவர்களின் தியாகத்தில், அன்பில் நெகிழ்ந்த எம்பெருமான் அவர்களுக்கு மோக்ஷம் வழங்கினார்.

திருக்கோளூர் அம்மாள், “திருநறையூரார் போல், உடம்பை வெறுத்து எம்பெருமானை நான் காத்தேனா?” என்று வினவுகிறார்.
========********========


udambai veRuththEnO naRaiyUrAraip pOlE


Pillai Thirunaraiyur Araiyar was a noble Srivaishnava acharya. He, along with his wife and 6 children, visited Thottiyam Vedanarayana Perumal temple. At that time, due to some accident, fire started spreading in the temple. Seeing the fire spreading, everyone ran away from the temple. Araiyar noticed the raging fire spreading towards the inner-most sanctum sanctorum (Girbhagriha).   In order to protect the main deity of the temple from the fire, he embraced the Lord. Seeing him, his family including his children too embraced the Lord and offered their bodies to protect the Lord. In the fire, they all lost their lives.

Pleased with their devotion, the Lord appeared before them and granted salvation to the entire family of the Araiyar. His devotion and love for the Lord is celebrated by Pillai Lokachariar in his Sri Vachana Bhushanam - "upEyaththukku iLaiya perumALaiyum periya udaiyAraiyum piLLai thirunaRaiyUr araiyaraiyum chinthayanthiyaiyum pOlE irukka vENdum".

Thirukkolur Ammal is asking "Did I let go of my body for the sake of the Lord like Pillai Thirunaraiyur Araiyar?"

May 15, 2018

Thirukolur Penpillai Rahasyam-72




உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே
ராமானுஜரின் மடத்தில் வாய் பேச முடியாத ஒருவர் இருந்தார். தன்னால் முடிந்த சேவைகளை ராமானுஜருக்கும் அவரது சீடர்களுக்கும் செய்து வந்தார். ஒருநாள், ராமானுஜர் அவரை ஒரு தனியறைக்கு அழைத்துச் சென்றார். தனது பாதுகைகளை அவரது தலையில் வைத்து ஆசிர்வதித்தார். பின், அந்தப் பாதுகைகளை அவரிடமே கொடுத்துவிட்டார்.

இந்நிகழ்வுகளை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த கூரத்தாழ்வார், “நானும் ஏதும் அறியாதவனாய், வாய் பேச முடியாதவனாய் இருந்திருந்தால் எனக்கும் ராமானுஜரின் ஆசி இதுபோல கிடைத்திருக்குமே! என் அறிவால் நான் கெட்டேன்!" என வருந்தினார்.

வாய் பேச முடியாதவர்,  ராமானுஜரின் பாதுகைகளை தனது உயிராய் எண்ணி, ராமானுஜருக்கு சேவை புரிவதே தனது வாழ்நாள் குறிக்கோளாய் கருதி,  தன் வாழ்நாளைக் கழித்தார்.

திருக்கோளூர் அம்மாள், “அவரைப்போல், உமது பாதுகைகளைப் பெற்றேனா இல்லை அவற்றை உயிரெனக் கருதி வாழ்ந்தேனா?”, என்று வினவுகிறார்.
========********========
uyirAya petRREnO Umaiyaip pOlE

In Ramanuja's mutt in Sri Rangam, there lived a mute Sri Vaishnava person who would spent his time in doing services to Ramanuja and to his disciples. He would do everything he can, without asking anyone. Ramnuja noticed him for a long time. One day, he took the mute Sri Vaishnava to a private room. He blessed the Srivaishnava and placed his padhukas (his sandals) on his head. He then signed to the Srivaishnava to take his refuge in those padhukas.

At that time, Koorathazhwan, who was watching everything through a window, exclaimed to himself "I am ruined because of my knowledge. If I had been a naive person like this Srivaishnava, I would have become the target of Ramanuja's grace easily".

The mute Srivaishnava took his refuge at Ramanuja's divine feet from that day and considered that as his sole mean for survival ("uyirAya").

Thirukkolur Ammal is asking, "Did I become the target of your divine grace and receive your padukas which is dearer than life like the mute Srivaishnava?"


May 14, 2018

Thirukolur Penpillai Rahasyam-70




சுற்றிக் கிடந்தேனோ மாலையாண்டானைப் போலே

திருமாலையாண்டான் ஆளவந்தாரின் சீடர்திருமாலிருஞ்சோலையில் அவதரித்த இவரின் இயற்பெயர் ஞானபூர்ணர். திருவாய்மொழி வியாக்யானங்களை ஆளவந்தாரிடம் கற்றவர்.
ஸ்ரீ ரங்கம் அழைத்து வந்த திருகோட்டியூர் நம்பி, ஒரு முறை  திருமாலையாண்டானிடம் ராமானுஜருக்கு நம்மாழ்வாரின் திருவாய்மொழியை கற்பிக்குமாரு வேண்டினார். திருமாலையாண்டானும் ஒப்புக் கொண்டார்.

திருமாலையாண்டான் , தான் கற்ற வியாக்யானத்தை ராமானுஜருக்கு உரைத்தார். ஆனால், ராமானுஜர் அவ்வப்போது குறுக்கிட்டு, ‘இதற்கு இந்தப் பொருள் வராதே’ எனக் கூறி, அவர் ஒரு விளக்கத்தை உரைப்பார். இது ஆண்டானுக்கு எரிச்சல் மூட்டியது.

உதாரணத்திற்கு, திருவாய்மொழி இரண்டாம் பத்தில் வரும்

  "அறியாக் காலத்துள்ளே அடிமைக்கண் அன்பு செய்வித்து
    அறியாமா மாயத்து அடியேனை வைத்தாயால்:
    அறியாமைக் குறள் ஆய்,நிலம் மாவலி மூவடி என்று
   அறியாமை வஞ்சித்தாய், எனது ஆவியுள் கலந்தே"

என்ற பாசுரத்திற்கு  ஆண்டான், "அறிவு பெறாத காலத்தில் தன்னுடன் வைத்திருந்த பெருமாள், பின்பு தன்னை சம்சார சாகரத்தில் தள்ளி வஞ்சித்து விட்டதாக புலம்புகிறார் ஆழ்வார்." எனப் பொருள் கூறினார்.


ஆனால் ராமானுஜர், "அது சரியான விளக்கம் அல்ல. தன்னுள்ளே உரையும் இறைவனை தெரிந்து கொள்ளாதது தனது அறியாமையே." என்று விளக்கினார். இதனால் கடுப்பான ஆண்டான், “ஆளவந்தாரிடம் இவ்விளக்கத்தை நான் கேட்டதில்லை. நீர் புது விளக்கம் கூறுவது, விஸ்வாமித்திரரின் மூன்றாம் உலகத்தைப் போன்றுள்ளது.”, என்று கூறி, அவ்விடத்தை விட்டு நீங்கினார். கற்பிப்பதையும் நிறுத்தினார்.

பாடம் நடத்துவதை ஆண்டான் நிறுத்தி விட்டதை அறிந்த  திருக்கோட்டியூர் நம்பி, ஸ்ரீ ரங்கம் விரைந்து வந்து, திருமாலையாண்டானின் வாயிலாக நடந்தவற்றைக் கேட்டு அறிந்தார். பின்னர்,  “ராமானுஜரின் இவ்விளக்கத்தை ஒரு முறை ஆளவந்தார் உரைத்து நானே கேட்டிருகிறேன். ஆளவந்தாரின் மனதில் இல்லாதது ஒன்றும் ராமானுஜரின் நாவில் வராது. எல்லாம் அறிந்த கிருஷ்ண பகவான் சாந்திபனி முனிவரிடம் பாடம் கேட்டார். அதுபோல எண்ணி ராமானுஜருக்கு கற்பிக்கவும்.”- என ஆண்டானுக்கு அறிவுரை கூறினார்.

திரும்ப பாடம் ஆரம்பமானது. ராமானுஜர் குறுக்கீடு தொடர்ந்தது.  ஆண்டான், ராமானுஜர் சொல்லும் அர்த்தம் பொருத்தமாக இருப்பதை உணர்ந்தார். ராமானுஜரிடம், "நீர் ஆளவந்தாரிடம் பேசியதில்லை. அவர் பேசிக் கேட்டதும் இல்லை.அப்படியிருக்க இவ்வளவு சரியாக அவர் எண்ணங்களை எப்படி பிரதிபலிக்கிறீர்கள்?", என்றார். அதற்கு ராமானுஜர், “நான் ஆளவந்தாரின் ஏகலைவன்”, என்றார்.

திருக்கோளூர் அம்மாள், “ராமானுஜரின் குறுக்கீடுகள் இருந்தும், அவரைச் சுற்றியே இருந்த திருமாலையாண்டான் போல நான் சுற்றிக் கிடந்தேனோ?”, என்று வினவுகிறார்.
========********========
suRRik kidandhEnO mAlaiyANdAn pOlE
Thirumaalaiyandan is one of the prime disciple of Alavandar. Ramanuja had five main acharyas - Periya Nambi, Thirukkottiyur Nambi, Thirumaalaiyandan, Thiruvaranga Perumal Araiyar and Thirumalai Nambi. Based on the order of Thirukkotiyur Nambi, he learned Bhagavad Vishayam (the meanings of Nammazhwar's Thiruvaimozhi pasurams) from Thirumaalaiyandan.

While Thirumaalaiyandan was preaching Ramanuja the meanings of Thiruvaimozhi, as per the teachings of his acharya Swami Alavandar, at some places Ramanuja would propose a different explanation for the verses. At one point, Thirumaalaiyandan became upset with the alternate explanations proposed by Ramanuja and told him "These are not the meanings that I have heard from Alavandar. What you are doing is Vishvamitra srushti" and, saying so, he stopped teaching Ramanuja.

When Thirukottiyur Nambi heard that the lessons had stopped, he came to Srirangam and asked Thirumaalaiyandan as to what happened. When Thirumaalaiyandan told him what happened, Thirukkottiyur Nambi told him-"I have heard these additional meanings from Alavandar. Ramanuja listening to you is similar to Krishna learning from Sandipani. Ramanuja will not think of any meaning that was not in the mind of Alavandar. Do continue the teachings".

Hearing that, Thirumaalaiyandan became pleased that he was able to hear the meanings of the verses that he had missed hearing from Alavandar. Thirumaalaiyandan asked  Ramanuja how he knows this meaning even without meeting Alavandhar,Ramanuja replied – “It is because I am like Ekalvayan for Alavandhar.” Understanding the greatness of Ramanuja, Thirumaalaiyandan offered his respects to Ramanuja. Even after all the intrusions, Thirumaalaiyandan chose to stay in Sri Rangam and continued his teachings to Ramanuja. 

Thirukkolur Ammal asks, "Did I understand the avatara rahasya of Ramanuja and stay with him like Thirumaalaiyandan, no matter what the interference be?"

Thirukolur Penpillai Rahasyam-69

கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
மாறனேரி  நம்பி ஆளவந்தாரின் சீடர். இவர் உழவுத்தொழிலில் ஈடுபட்டிருந்தார். ஆளவந்தார், வைணவ சித்தாந்த உண்மைகளை பரப்பும் நோக்கில்  தம் சீடர்களுடன் பயணிக்கும் போது, ஒரு வயல் வழியே செல்ல நேரிட்டது. அங்கு உழவர்  ஒருவர் உழுதுகொண்டிருந்தார். உச்சிவேளை ஆனதால், பசியும் தாகமும் பொறுக்காத அவர், அருகில் உள்ள ஓடைக்குச் சென்று சேற்று நீரை கையால் அள்ளி எடுத்து, எம்பெருமானுக்கு நிவேதனம் செய்துவிட்டு, பின் பருகினார். இச்செயல் ஆளவந்தாரின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. உடன் இருந்த பெரிய நம்பி இச்செயல் குறித்து அந்த உழவரிடம் வினவ, “இந்த மண்ணும் அந்த மண்ணும் ஒன்றுதான். சேற்றுக்கும் சோற்றுக்கும் வேறுபாடு காணேன்.” என்றார்.

 சடகோப மாறன் என்ற பெயரை உடைய நம்மாழ்வாருக்கு நிகரானவர் என்று கூறி அவருக்கு மாறன் நேர் (இணையான) நம்பி என்று பெயர் சூட்டினார் ஆளவந்தார். நம்பிக்கு பஞ்ச சமஸ்காரம் செய்வித்து வைணவ சித்தாந்தம், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பகவத் கீதை முதலிய சகல வேத சாத்திரங்களை உபதேசம் செய்தார் ஆளவந்தார். நம்பியும் அனைத்தையும் கற்றுத் தெளிந்து சிறந்த ஞானியாக விளங்கினார். பெரிய நம்பியும் மாறனேரி  நம்பியும் குருபக்தியிலும் குருவிற்கு சேவை புரிவதிலும், குருவிடம் இருந்து கற்றுக்கொள்வதிலும் என அனைத்தையும் ஒன்றாகவே செய்து, பேதம் பாராது நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

ஆளவந்தார் ராஜபிளவை நோயினால் அவதியுற்றபோது, மாறனேரி நம்பிகள், உபதேசங்களை கேட்டு வாங்குவதைப் போல் ராஜபிளவை நோயையும், குருவின் வலியினையும் வாங்கிக் கொண்டார். ஆளவந்தாருக்கு பணிவிடைகள் செய்து, நம்பியும் நோயினால் அவதியுற்றார். ஆளவந்தாரின் மறைவுக்குப் பின், மனதாலும் நோயினாலும் அவதியுற்ற மாறனேரி நம்பியை  பெரிய நம்பி கவனித்துக் கொண்டார்.

மாறனேரி நம்பி, தனது இறுதி காலத்தில், பெரிய நம்பியிடம், “வாழும் காலத்தில் என்னை புரிந்து கொள்ளாத என் உறவினர்களிடம் என் உடலை வழங்காதே. இராஜபிளவை நோயை குருப்பிரசாதமாக பெற்றுக் கொண்டப்படியால் எனது உடலும் குருப்பிரசாதம் ஆகும். அதனை வைணவர்கள் அல்லாத என் குடும்பத்தினரிடம் அளிப்பது என்பது உயர்ந்த யாக நெய்யை தெருநாய்களுக்கு இடுவதற்கு ஒப்பாகும். எனது இறுதி சடங்குகளை நீயே முன்நின்று செய்.” , என்றார்.

மாறனேறி நம்பி மறைந்து விட வைணவர்கள் யாரும் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய முன்வரவில்லை. வேதியரான பெரிய நம்பியே, அவருக்கு இறுதி சடங்குகளை செய்தார். தாழ்ந்த குலத்தில் பிறந்த ஒருவனுக்கு வைணவன் ஒருவன், அதுவும் ஆச்சார்யன், இறுதி சடங்குகளை செய்வதா என எண்ணி, மற்ற வேதியர்கள் பெரிய நம்பியை தள்ளி வைத்தனர்.

ராமானுஜர், பெரிய நம்பியின் செயலுக்கு விளக்கம் கேட்க, பெரிய நம்பிகள் -"ஜடாயூவிற்கு ஸ்ரீராமன் இறுதிக் கடன் செய்தாரே! விதுரருக்கு தர்மபுத்திரர் செய்தாரே! மாறனேரி நம்பி இவர்களைவிட தாழ்ந்தவரா? ராமர் மற்றும் தர்மரின் செயல்களைப் பாராட்டி ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.  அவை நாமும் அது வழி நடக்கவே. ராமர், தருமர் செய்த செயல்களை ஆழ்வாராதியர் குறிப்பிட்டுப் போற்றிப் பாடிய பாசுரங்கள் எவரும் பொருட்படுத்தாத கடலோசை போன்றவையா?’’ என்று வினவினார்.

திருக்கோளூர் அம்மாள், “ஆழ்வார்களின் பாசுரங்களை வெறும் கடலோசை என எண்ணாமல், பாசுரங்களில் உள்ள அர்த்தங்களை உணர்ந்து, அது வழி நடந்து பாகவத சேவையில் ஈடுபட்டேனா?”, என்கிறார்.


(அரங்கன் தேர்த் திருவிழா அன்று, மாறனேரி நம்பிக்கு சடங்குகள் செய்தவர்கள் அக்ரஹாரத்தில் இருக்க யோக்யதை அற்றவர்கள் என்று கருதி பெரிய நம்பியின் வீட்டு வாசலில் சிலர் முள்கட்டுகளைப் போட்டு இருந்தனர். அவரது மகள் கோபமுற்று, தேரில் உலா வந்து கொண்டிருந்த எம்பெருமாளை நோக்கி- "எனது தந்தை மாறனேரி நம்பிக்கு இறுதிக்கடன் செய்தது நியாயம் என்றால், உமது தேர் அசையாது நிற்கட்டும்" என்றாள். தேரும் அப்படியே நின்றது. பின் பெரிய நம்பிக்கு தீர்த்தம் வழங்கிய பின்னரே, தேர் நகன்றது.)
========********========


kadalOsai enREnO periyanambiyaip pOlE


Maraneri Nambi, one of Alavandar’s disciples was born in a low caste of that period. To Alavandar, all his disciples were the same, irrespective of caste and differences. Maraneri Nambi received Alavandar's grace and affection just like Alavandar’s yet another chief disciple, Periya Nambi. Being of same age and with same care and respect for their Acharya, both Periya Nambi and Maraneri Nambi became too close in sharing and learning. Alavandar was suffering from carbuncle. Maraneri Nambi, fell on the feet of the suffering Guru and requested his Guru to let him take care of him, though knowing that carbuncle is contagious.  After Alavandar ascended to His divine abode, Maraneri Nambi fell ill and at that time, Periya Nambi took him under his care.

When Maraneri Nambi was in his final stages of his life, he asked Periya Nambi not to give his body to his relatives for final rites and requested Periya Nambi to perform it. Maraneri Nambi’s family and relatives did not understand the heart of Nambi for his acharya and for the lord. So he lived separately from the start. They did not even visit to help the ailing Maraneri Nambi. After Maraneri Nambi left this world, Periya Nambi performed the final rites for him standing in his son's stead. The brahmins became very upset that an acharya and brahmin such as Periya Nambi performed final rites for a low caste person and so they refused to interact with him.

Seeing the way the Brahmins are isolating Periya Nambi for his acts, Ramanuja asked Periya Nambi, "Why is it that you have to do it by yourself? Many are disrespecting you". Periya Nambi replied "Ramanuja! In Ramayana, Lord Rama performed the last rites for Jatayu. I’m not higher than Lord Rama and Maraneri Nambi is no lower than Jatayu. King Yudhistra performed the last rites for his beloved Vidhura. Do we ask someone else to do our sandhyavandanam?"

Nambi continued, "Are the words of Nammazhwar in the verses “Payilum Sudaroli” and “Nedumarkkadimai” nothing more than noise made by the ocean? Are they just meant to be noise or something that we should follow in our everyday life? Are they something that I have to explain and you have to understand?"

These two verses of Thiruvaimozhi speak of the greatness of bhagavatas. Periya Nambi was asking if Azhwar's words were not to be actually followed in real life and were empty like the noise of the ocean.

Thirukkolur Ammal is asking "Did I do great bhagavata service and not treat Azhwar's words like mere noise?"

(Note: To prove Periya Nambi’s greatness to the Brahmins and others, the responsibility fell in the hands of the Lord. Once when Ranganathar was taking a procession, the temple car came to a complete halt at the entrance of Periya Nambi's house and refused to move. Only after Periya Nambi was given the theertham and the aaraadhana, the car allowed itself to proceed. It took Sri Ranganathar to demonstrate the greatness of Periya Nambi.)

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...