Showing posts with label Sri Rama. Show all posts
Showing posts with label Sri Rama. Show all posts

February 26, 2018

Thirukolur Penpillai Rahasyam-48




அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே

இங்கு “பெரிய உடையார்” என்று அழைக்கப்படுபவர், ஜடாயுவாகும். ஸ்ரீ இராமன், ஜடாயு மீது கொண்டுள்ள நன்மதிப்பும், தந்தைக்கு நிகராக ஜடாயுவை கண்டதுமே இதற்கு காரணம். ஜடாயு, இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கருடன். சூரிய தேவனின் தேரோட்டியான அருணனின் மகன். ஜடாயுவும் அவரது அண்ணனுமான சம்பாதியும் தசரத சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்.

வனவாசத்தின் முதல் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்களுடன் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்ரீராமன் அதன் பின்னர், சீதாதேவி மற்றும் இலட்சுமணனுடன் அகத்தியரின் குடிலுக்கு சென்றார். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பஞ்சவடி நோக்கி தன் பயணத்தைத் தொடரும் பொழுது வழியில் ஜடாயுவை சந்தித்தனர்.

தன்னை யார் என்று வினவிய ஸ்ரீ இராமனிடம், ஜடாயு – “நான் அருணனின் புதல்வன். கழுகுகளுக்கெல்லாம் அரசன். சம்பாதியின் தம்பி. தசரத சக்ரவர்த்தியின் நண்பர்கள். இக்காட்டில் வசிப்பவன் நான். நீங்கள் பஞ்சவடியில் வாழும் வரை உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து தருகிறேன். என்னுடன் வாருங்கள்.”, என்று கூறி, அவர்கள் குடில் அமைக்க அமைதியான, அழகான இடத்தையும் காட்டினார்.

“... அவர் திண்சிறை
விரியும் நீழலில் செல்ல விண்சென்றான்

-       என்ற வரிகளின் வாயிலாக, கம்பர், ஜடாயுவின் பரந்த மனதையும், ஸ்ரீ இராமர், சீதாதேவி மற்றும் இலட்சுமணன் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறார். அவ்வரிகளின் அர்த்தம் , பஞ்சவடி நோக்கி காட்டில்  நடந்து செல்லும் ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும் இலட்சுமணனையும் வெயிலில் இருந்து பாதுகாக்க, தனது பெரிய அகண்ட சிறகுகளை குடைப் போல் விரித்தார் ஜடாயு.

சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராவணனின் தவறை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜடாயு. இராவணன் கேக்காமல் போக, இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். இராவணனின் தேரை உடைத்து சுக்குநூறாக்கி, அவனையும் தன் மொத்த பலம் கொண்டு தாக்குகிறார். இறுதியில் இராவணன் வாளுக்கு தன் ஒரு பக்க இறக்கையை இழந்து, ஜடாயு தரையில் விழுகிறார்.

ஸ்ரீ இராமன் மற்றும் இலட்சுமணனின் வருகைக்காக காத்திருந்தவர், அவர்கள் வந்ததும், நடந்தவற்றைக் கூறி, இராவணன் சீதையை கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு, ஸ்ரீ இராமருக்கு மங்களாசாசனம் செய்துவிட்டு உயிர் விடுகிறார்.

தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஏழு புண்ணிய நதிகளையும் வரவழைத்து, ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன் தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார். ஜடாயுவுக்கு மோக்க்ஷமும் கிடைத்தது.

திருக்கோளூர் அம்மாள், “ஜடாயுவைப் போல்  (பெரிய உடையார்) இராவணனுடன் போரிட்டு, பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உதவி புரிந்தேனா?” – என்று வினவுகிறார்.
 ========********========


arakkanudan porudhEnO periya udaiyAraip pOlE

Jatayu is referred as “Periya udaiyar”, here, by our acharyas, because of the great respect Lord Rama had for him. Jatayu is the youngest son of Aruna, the charioteer of Sun God, in Hinduism. Jatayu’s elder brother is Sampaati, who was an old friend of King Dhasaratha!  

During their exile, after staying in Dandaka forest for about 10 years, Lord Rama, Sita and Lakshmana left for sage Agastya's ashram. After receiving the blessings and weapons from Sage Agastya, they left for Panachavati. On their way, they meet an old vulture named Jatayu. When they asked who he is, the vulture replied "My name is Jatayu, Son of Aruna. I and my brother Sampaati are your father Dasaratha's friends. I am living in this forest and I will accompany you while you are here." Rama, Sita, Lakshmana and Jatayu all went together to Panchavati.

Kambar explains the heart of Jatayu through his lines:

          …Avar thisiai
viriyum nī
zhalil sella viseṉṟā

Meaning, as Lord Rama, Sita Piratti and Lakshmana were walking along the forest towards Panchavati, under the hot sun, Jatayu protected them by spreading his wings like an umbrella.

After they have built a hut in Panchavati, Jatayu stayed close to the ashram where Lord Rama was staying. Lord Rama told Lakshmana "We have been separated from our father. So, let's stay under the wings of Jatayu".

Later, when Ravana abducted Sita, Jatayu intercepted them. He tried to talk Ravana into giving up this bad idea and release Sita. When he did not listen, Jatayu began waging a great war with Ravana. He broke Ravana's chariot and attacked him fiercely. In the end, Ravana managed to cut Jatayu's wings and threw him to the ground. He then left with Sita to Lanka.

When Lord Rama and Lakshmana came looking for Sita, they saw Jatayu lying wounded on the ground. Jatayu told them what happened and consoled the distraught Lord Rama and reassured Him that no harm will come to Sita and that very soon she will be restored to them. Knowing that his end is near, Jatayu performed mangalashasana to Lord Rama by calling Him 'Ayushman' and then gave up his life.

Rama says that the grief of seeing Jatayu pass away is greater than the loss of Sita. He considered Jatayu as equal to His father and did the final rites for the bird. Lord Rama then slammed an arrow into the ground so as to call all seven sacred rivers to arrive at the very spot where he is and performed the last rites for Jatayu, so that he could attain moksha. 

Thirukkolur Ammal is asking "Did I fight against Ravana and dare to give up my body and soul, like Periya Udaiyar?"

February 16, 2018

Thirukolur Penpillai Rahasyam-39


அனுப்பி வையும் என்றேனோ வசிஷ்டரைப் போலே

வசிஷ்டர்,  பிரம்ம ரிஷி என புகழ்பெற்ற சப்தரிஷிகளுள் ஒருவர். வேத காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் மாமுனிவர்களுள் இவரும் ஒருவர். வேதங்களின் பல மந்திரங்களை இவர் உருவாக்கியுள்ளார். இவரது துணைவியாரின் பெயர் அருந்ததி. இராமாயணக் காவியத்தில் வசிஷ்டர், மன்னன் தசரதனின் அரசவை ராஜகுருவாக இருந்தார். ஸ்ரீ இராமனும் அவரது தம்பிமார்களும் வசிஷ்ட மகரிஷியிடமே  கல்வி கற்றனர்.

ஒரு நாள், விஸ்வாமித்ரர் தசரத சக்ரவர்த்தியிடம், தன் யாகத்தை காக்கும் பொருட்டு ராமனை தன்னோடு அனுப்பும்படி கேட்க, தசரதர் மனம் கலங்குகிறார்.

“இராமனை பிரிந்து எப்படி என்னால் இருக்க முடியும். தவமிருந்து பெற்ற பிள்ளை! மேலும், அவனோ இன்னும் சிறுபிள்ளை. எனது படையுடன் நானே வருகிறேன்!” – என்று கூறிய தசரதனிடம், விஸ்வாமித்ரர், “என்ன வேண்டுமோ கேளுங்கள் செய்கிறேன் என்று கூறிவிட்டு, இப்படி பேச்சை மாற்றி பேசுகிறீர்களே, ரகு குலத்தில் பிறந்த உங்களுக்கு இது அழகா!?”- என்று கோபம் கொண்டார்.

அரசவையில் இருந்த வசிஷ்டர், மன்னனிடம், “மன்னா! குடுத்த வார்த்தையை மறுத்தல் கூடாது. விஷ்வாமித்ரரின் அரவணைப்பில் இருக்கும் போது, குழந்தைகளுக்கு ஒரு ஆபத்தும் இல்லை, தாங்கள் கவலை கொள்ள வேண்டாம், குழந்தையை அனுப்பி வையுங்கள்! அவருடன் செல்வதால், நம் ராமனுக்கு தான் நல்லது. விஸ்வாமித்ர மரிஷி, உலகில் உள்ள எல்லா அஸ்திரங்களையும் உபயோகிக்கும் ஆற்றலும் வல்லமையும் பெற்றவர். ஈசனிடம் இருந்து தாமே அவ்வாற்றலை தவமிருந்து பெற்றுள்ளார். அவை அனைத்தையும் ராமனுக்கு உபதேசிப்பார்! எனவே பயம் கொள்ளாமல், இராமனை அனுப்புங்கள்!” என்று எடுத்து சொல்கிறார்.

விஸ்வாமித்ரரின் மகிமையை வசிஷ்டர் எடுத்துக்கூறிய பின் ராம லக்ஷ்மணர்களை முனிவரோடு அனுப்பிவைத்தார்.

திருக்கோளூர் அம்மாள், “வசிஷ்ட மகரிஷி போல், பரம்பொருளுக்கு எது நன்மை தரும் என்று அறிந்து, பரம்பொருளின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அவருக்காக உரையாடினேனா?” – என்று வினவுகிறார்.
========********========


anuppi vaiyum enREnO vasishtaraip pOlE

Sage Vasistha is a revered Vedic sage in Hinduism and is the author of the Mandala 7 of Rigveda. In the great Indian Epic, Ramayan, Lord Rama and his brothers did their education in Sage Vasistha’s Gurukul. He was also Rajaguru in King Dasaratha’s court.

One time Vishvamitra Maharishi came to King Dasaratha and asked him to send Prince Rama with him in order to protect the yaga performed by the sages in his ashram, from the rakshasas who were disturbing it. King Dasaratha did not want to send Rama with the rishi as he was young and also that he could not bear the pain of separation, even though he had promised the rishi anything he wanted. Vishvamitra was not pleased and became angry at King Dasaratha. King Dasaratha offered to go himself with the rishi but Sage Vishvamitra wanted only Rama.

Sage Vasistha who was also present in the court, predicted the future with his powers and came to know about the weapons and training Sage Vishwamitra will be giving to Lord Rama. He informed King Dasaratha to send both Prince Rama and Prince Lakshmana with Vishvamitra and not to worry about them, for they are his disciples and he is well aware of their talents and skills. Even though he is famous for his legendary conflicts with Sage Viswamitra, he supported the deeds of Sage Vishvamitra, knowing the benefits that Lord Rama will get and as the result of which the world will be benefited in the future!

Thirukkolur Ammal is asking "Did I see the benefits Lord Rama would receive and asked King Dasaratha to send his beloved son with sage Vasishta?"

February 09, 2018

Thirukolur Penpillai Rahasyam-32

Garuda Vahana,Kencana Cultural Park, South Kuta, Bali. 
கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே

இங்கு “திருவடி” என்பது, ஸ்ரீமன் நாராயணனின் வாகனங்களான கருடரையும் (பெரிய திருவடி), ஹனுமனையும் (சிறிய திருவடி) ஒரு சேர குறிக்கும்.

ஸ்ரீமன் நாராயணனின்  பெரியதிருவடியாக கருடன் போற்றப்படுகிறார்.  கருடன்  என்பதற்கு, சமஸ்கிருத மொழியில்,  பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள். மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.  தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை .

ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ ராமராக அவதரித்த பொழுது, அவரையும், லக்ஷ்மணனையும் தன் தோள்களில் சுமந்து ராவணனுக்கு எதிராக போரிட உதவியவர் ஹனுமான்.  "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்க் காரணம் உண்டு. இராமனிடத்தில் அளவற்ற பக்தி கொண்டவராய் இருந்து, தேவைப்படும் போதெல்லாம் அவரைச் சுமந்தும், இணை பிரியாமல் எப்போதும் அவருக்குத் தொண்டுச் செய்ததால் திருமாலின் அடி(யார்) என்று புகழப்பட்டு, இராமனுக்குத் தொண்டு செய்து அவரை சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றதால் 'திரு' என்ற சிறப்புச் சொல்லையும் சேர்த்து திருவடி (திரு+அடி), சிறிய திருவடி என்றழைக்கப்பட்டார். கருடன் எப்போதும் திருமாலுக்கு வாகனமாகயிருப்பதால் அவர் பெரிய திருவடியென்றும், அனுமன் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றார்.

திருக்கோளூர் அம்மாள், “கருடாழ்வாரையும் ஹனுமனையும் போல் பெருமாளின் திருவடியாய் இருந்து, தோள்களில் சுமந்து சேவை செய்தேனா?
========********======== 

Hanumantha Vahana


 koNdu thirindhEnO thiruvadiyaip pOlE

The term “thiruvadi” refers to the Vehicle Mount (Vahana) of Lord Vishnu. Both Garuda (periya thiruvadi) and Hanuman (siriya thiruvadi) are referred here. They got this name because they both perform the service of carrying the Lord, wherever and whenever he wants. Just as Adisesha does various services, so too Garuda and Hanuman acts as the Lord's friend, His servant, His conveyance, His seat, His flag, His umbrella, etc.

In Hindu Mythology, Garuda is a divine eagle-like sun bird and the king of birds. The Shatapatha Brahmana embedded inside the Yajurveda text mentions Garuda as the personification of courage. He is a powerful creature in the epics, whose wing flapping can stop the spinning of heaven, earth and hell. Azhwars refer many times to the fact that the Lord rides Garuda and performs various acts.

Hanuman is referred as the vehicle mount of Lord Rama, an avatar of Lord Vishnu. He symbolizes the human excellences of inner self-control, faith and service to a cause, hidden behind the first impressions of a being who looks like a monkey. In the great Indian epic Ramayan, Hanuman carried Lord Rama and Lakshmana on a few occasions. When they first arrived to meet Sugriva, after ensuring that they are not sent by King Vaali, Hanuman carried Lord Rama and Lakshmana on his shoulders to Sugriva. Later when Lord Rama and Lakshmana waged a war against Ravana, he carried them again on his shoulders so that they do not have to stand on the ground and fight.


Thirukkolur Ammal is asking "Did I carry the Lord on my shoulders with affection like Garuda and Hanuman?"

February 06, 2018

Thirukolur Penpillai Rahasyam-29




கர்மத்தால் பெற்றேனோ ஜனகரைப் போலே

ஜனகர் என்பவர் மிதிலையின் அரசனாவார். இவர் இராமாயண காவிய நாயகி,  சீதையின் தந்தையாவார். ஜனகர் எனும் சொல்லுக்கு தந்தை என்று பொருள். ஜனகர் மாபெரும் தத்துவ ஞானி. கர்ம யோகி. குரு யாக்ஞவக்யர் என்பவரிடம் கல்வி கற்றார். தாமரை இலைத் தண்ணீர் போல, பட்டும் படாமல், ஒட்டி உறவாடாமல், எதன் மீதும் மோகம் கொள்ளாமல், எதையும் எதிர் பார்க்காமல், சாஸ்திரத்தில் கூறியது போல் வாழ்க்கை நடத்தினார். இறைவனுக்கு செய்யும் தொண்டாகவே மன்னன் பொறுப்பை ஏற்றார். அவருடைய குரு யாக்ஞவக்யர் என்ற மஹரிஷி. ஜனகர் பால் பேரன்பு கொண்டவர்.

ஜனகர் மன்னனாக அரியணை ஏறிய நேரம், அவரின் ஞானத்தை அறிய, பரம்பொருளான ஸ்ரீமன் நாராயணன் பிராமணன் போல் மிதிலை வந்தார். தவறு செய்து, காவலாளிகள் கையில் அகப்பட்டு, ஜனகரின் அரசவையில் நின்றார். பிராமணனை கண்ட ஜனகர், அவர் செய்த தவறுக்கு அவரை நாடு கடத்தினார். இதை கேட்ட பிராமணன், மன்னனிடம், “உங்கள் நாட்டின் எல்லை எது?” – என்று வினவ, அக்கூற்றின் உண்மையை அறிந்து கொண்ட மன்னர், ”இந்நாட்டில் இருக்கலாமா என்று தாங்களே முடிவெடுத்து கொள்ளுங்கள்.” என்றார். மன்னின் அறிவையும், பண்பையும் பாராட்டிய பரம்பொருள், அவருக்கு ஆசிகளை வழங்கினார்.

குரு யாக்ஞவக்யர் , ஒரு நாள், தனது சீடர்களுக்கு ஜனகரின் சிறப்பினை எடுத்துரைக்க விரும்பினார். எனவே, அவரது சக்தியால், மிதிலை நகரம் தீப்பிடித்து எரிந்தது. அனைவரும் தங்களையும் தங்கள் உடைமைகளையும் பாதுகாக்க நெருப்பிடம் இருந்து தப்பி ஓட, ஜனகர் அசையவில்லை. என்னுடைய உடைமை எதுவும் அங்கும் இல்லை, இங்கும் இல்லை என்றார். அவர் ஆத்ம ஞானி என்பதால் பற்றறவராக இருந்தார்.  இதை கண்டு மகிழ்ந்த அவரது குரு, மிதிலையை மீண்டும் பொலிவுடன் மிளிர செய்தார்.

அர்ஜுனனுக்கு கீதை உரைக்கும் பரமாத்மா, ஜனகரை ராஜரிஷி என்றே அழைத்தார். ஜனகர் கர்ம யோகியாய் வாழ்ந்து சித்தி பெற்றார் என்று கிருஷ்ணன் அர்ஜுனனிடம் உரைத்தார்.


திருக்கோளூர் அம்மாள்,  “ஜனகரைப் போல், கர்ம யோகியாய் வாழும் ஆற்றலை பெற்றேனா?, என்று வினவுகிறார்.


========********========

karmaththAl petREnO janakaraip pOlE

King Janaka is father of Sita in the great Indian epic Ramayan. Despite being the ruler of kingdom Videha, he was a great karma yogi. He carried on the rules of the sastras with detachment, controlled senses and without expecting anything in return. He performed all his duties as per the sastras... as a service to the Lord.

When Sriman Narayan wished to test the equanimity of King Janaka, he disguised himself as a Brahmin and did a mistake that would present him in the court of King Janaka. When he was presented before King Janaka, instead of punishing the brahmin, he exiled him from his country! “Which is the boundary of your country?”- The Brahmin asked the king. Janaka understood the implication of the question and remained silent. He told the Brahmin that it is open for him to remain in his country or not. God complemented King Janaka for his detachment and controlled senses.

One time his Guru Yagyavalka wanted to show the greatness of King Janaka to his other disciples. The Guru desired to reveal the spiritual accomplishment and the detachment of Janaka to the world! As per the wish of Guru Yagyavalka, King Janaka’s capital city, Mithila was in flames and people screamed and ran to save themselves and their belongings! Even the disciples ran to save their lives! Seeing his capital in terrible flames, Janaka remained calm and unruffled! There was no anxiety or any shade of suffering on his face!

He said, “My wealth is eternal! There is nothing for me to desire! Nothing in me is burnt or destroyed as Mithila burns!”

Amazed and pleased at the equanimity and spirituality of Janaka, Lord Vishnu brought back Mithila to its original glory! The flames disappeared instantly! The Lord presented himself before Janaka, blessed and directed him to tread on the righteous path and be truthful always! 

In Bhagavad Gita, when Sri Krishna explains the karma yoga, He says "karmaNyaivahi samsiddhim AsthitA janakAtaya:" - saying that Rajarishis such as Janaka attained siddhi through karma yoga.

Thirukkolur Ammal is asking "Am I capable of being steady in karma yoga like Janaka?"

February 04, 2018

Thirukolur Penpillai Rahasyam-27



ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே

அகத்தியர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை. அகத்தியர், ஒரு இசைப் போட்டியில், மலையை உருக வைத்து, இராவணனை வென்றவராகவும் அறியப்பெறுகிறார்.

அகஸ்தியர் முக்காலமும் அறிந்த ஞானி. ராமாவதாரத்தின் போது, வனவாச காலத்தில், ஸ்ரீ ராமர், சீதை மற்றும் இலக்குவனுடன் முனிவர்கள் பலரின் குடிலில் சென்று தங்கி ஆசிகள் பெற்றார். அவ்வாறு ஒரு முறை, கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் அகஸ்தியரின் குடிலில் தங்கினர். அவர்கள் விடை பெரும் நேரம், முக்காலமும் அறிந்த அகத்தியர், ஸ்ரீ ராமர் எதிர்கொள்ள போகும் போரினை அறிந்து, ஸ்ரீ இராமருக்கு மூன்று ஆயுதங்களை அன்பளிப்பாக வழங்கினார். அவை மகாவிஷ்ணு தேவர்களை அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற விஸ்வகர்மாவே செய்த வில், எடுக்க எடுக்க குறையாத அம்புகளை வழங்கும் அம்பறாத்துணி (அம்புக்கூடு), போர் வாள்! “எதிர் வரும் காலத்தில் நீ சந்திக்க நேரும் அசுரர்களை இவ்வாயுதங்கள் கொண்டு வீழ்த்துவாயாக!” – என்றார்.


திருக்கோளூர் அம்மாள், “அகத்தியர் போல்   வரும் இன்னல்களை அறிந்து, ஸ்ரீ இராமருக்கு உதவி புரிந்தேனா?”, என்று வினவுகிறார்.

=========********========



AyudhangaL IndhEnO agasthiyaraip pOlE
Agastya was a revered Vedic sage of Hinduism, who is one of the seven or eight most revered rishis in the Vedic texts. He lived in the Dandakaranya forest with his wife Lopamudra, on the banks of river Godavari. While explaining about Sage Agastya to Lakshmana, Lord Rama said – “Sage Agastya is of such a purified nature that in his hermitage a liar cannot live, nor a deceitful person, nor a wicked person, nor one that is committed to sinful activity.”

When Sri Rama entered the Dandakaranya forest in his exile, He went to the ashramas of several maharishis and paid His respects to them, along with Sita and Lakshmana. He went to see Sage Agastya too. Agastya received Rama with respect and love. Knowing Rama's avatara secrecy and what was to come, he presented Him with three weapons - a bow made by Visvakarma for Vishnu, an inexhaustible quiver and a sword. He said to Lord Rama, "This bow which belongs to Vishnu. It was made by Vishvakarma. Using this bow, Maha Vishnu killed many asuras and helped the devas. These two quivers which never reduce in arrows and this sword were given to me by Indra. Take these weapons and use them effectively in slaying the demons."


Thirukkolur Ammal is asking "Did I help the Lord like Agastya did?"

January 27, 2018

Thirukolur Penpillai Rahasyam - 20



அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே

கௌசிகன் என்னும் மன்னன், பிரம்மரிஷி வசிட்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து தானும் பிரம்ம ரிஷியானார். அவரே விசுவாமித்திரர்! காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை இவர் எழுதியதாக கருதப்படுகிறது. 

இராமவதாரத்தில், ஒரு நாள், தசரத சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு வந்த விசுவாமித்ரர் - "தசரத சக்ரவர்த்தியே! என் சித்தாஸ்ரமத்தில் வசிக்கும் முனிவர்கள் அசுரர்களின் துன்பத்திற்கு ஆளாகின்றனர். சித்தாஸ்ரமத்தில் நடைபெறவுள்ள யாகத்துக்கு ஆறுநாட்கள் காவலாக உன் புதல்வன், ஸ்ரீ ராமனை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இராமன் எங்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், அசுரர்களின் கொட்டத்தை அடக்கவும் உதவியாய் இருப்பான்.", என்றார்.

அசுரர்களுக்கு எதிராக தன் புதல்வனை அனுப்ப தயங்கிய மன்னன், இராமன் இன்னும் இளைஞன் என்றும், அதற்கு பதிலாக, தாமே தம் பெரும் சேனையுடன் வந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் வேண்டினார். மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட முனிவர், "தசரத சக்ரவர்த்தியே! எம் வார்த்தைகளில் நம்பிக்கை கொள். உம் புதல்வன் யார் என்பதும், அவனது வீரத்தின் மதிப்பு என்ன என்பதும் வசிஷ்டர் மற்றும் என் போன்ற பிரம்மரிஷிகளுக்கே  நன்கு தெரியும். வேதம் கற்றோர்க்கு மட்டுமே உம் புதல்வனின் பலமும் குணமும் தெரியும். தயங்காமல் உம் புதல்வனை அனுப்பு. அவனின் வீரத்தினை உலகம் அறிய வேண்டிய நேரம் இது.", என்று கூறினார்.

                   "அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸ்த்யராக்ரமம் வஷிஷ்டோபி
                     மஹாதேஜா யே சேமே தபஸிஸ்திதா"

நான் ராமனை மஹாத்மா என உண்மையில் அறிகிறேன். மஹாதேஜஸ்வியான விஷிஷ்டரும் கூட இதை அறிவார். அனைவரும் இதை அறிவார்கள்!

 மன்னனும், முனிவரின் வார்த்தையில் உள்ள உண்மையினை உணர்ந்து, நம்பிக்கையுடன் ஸ்ரீ ராமனையும், இராமனை விட்டு என்றும் நீங்காத இலட்சுமணனையும் முனிவருடன் வழியனுப்பி வைத்தார்.


           திருக்கோளூர் அம்மாள், "பிரம்மரிஷி விசுவாமித்ரரைப் போல் உண்மை அறிந்து, அதை நம்பிக்கையுடன் கூற என்னால் இயலுமா?", என்று வினவுகிறார்.

========********========



aham vEdhmi enREnO visvAmithraraip pOlaE

Brahmarshi Vishvamitra is one of the most venerated sages of ancient India. He is credited as the author of most of  Mandala 3 of the Rigveda, including Gayatri Mantra. The Puranas mention that only 24 rishis since antiquity have understood the whole meaning of—and thus wielded the whole power of—Gayatri Mantra. Vishvamitra is supposed to be the first!

Vishvamitra was a king in ancient India, called by the name, Kaushika. An enraged King Kaushika once had a fight against Brahmarishi Vasishta and looking at the powers of the Brahmarishi, Vishvamitra too performed tapasya for several years to please Shiva. Even after getting the grace of Lord Shiva, Vishvamitra lost his battle against brahmarishi Vasishta. This incident made a deep impression on the King. He realized that power obtained by penances is far greater than mere physical might. He renounced his kingdom and began his quest to become a greater rishi than Vashista. He took on the name Vishvamitra.

During the era of Ramayan, one day, Vishvamitra came to king Dasaratha's court. The king received him with great honor. The sage then asked Dasaratha to give him Sri Rama so that He can defend the 6 days of yaga which is to be conducted in his ashram by the great sages and maharishis, from the rakshasas who were disturbing it.

The king, who is really fond of Sri Rama than everyone else replied with a concerned heart that Rama is very young and instead, the King himself would come along with a vast army and defend the Yaga and slay the rakshasas!

Vishvamitra replied: "O King! I know Sri Rama. He is capable of defeating the rakshasas. Only people like me and Vasishta truly know who He is. Understand that my words are nothing but the truth."

“aham vedmi mahAtmAnam rAmam satya parAkramam
 vasishTopi mahAtejA ye cheme tapasistithA:”

Vasishta agreed with Vishvamitra and asked the king to send Rama and Lakshmana along with Vishvamitra. The king agreed and the two princes went with the sage and helped protect his yaga against the likes of Tataka and Maricha.

Thirukkolur Ammal is asking "Am I capable of understanding the truth and speak it like Vishvamitra?"



Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...