February 14, 2015

புலியும் எலியும்!






  ஒரு காட்ல ஒரு சிங்கமும் எலியும் நண்பர்களா இருந்துச்சாம். ஒரு நாள் விளையாடிட்டு  இருக்கும் போது அந்த சிங்கம் ஒரு சைக்கிள பார்த்துச்சாம். சிங்கத்துக்கு சைக்கிள் ஓட்ட ஆச வரஅந்த சைக்கிள தன்னோட குகைக்கு எடுத்துட்டு வந்து, தானா சைக்கிள் ஓட்ட கத்துகிச்சாம்.
       ஒரு நாளு அந்த சிங்கமும் எலியும் சைக்கிள்ள போய்ட்டு இருக்கும் போது , எலி தானும் சைக்கிள் ஓட்ட ஆச பட்டுச்சாம். அத சிங்கத்துக்கிட்ட சொல்லுச்சாம். ஆனா அந்த சிங்கம் விடல. "என் சைக்கிள். நா மட்டும் தான் ஓட்டுவேன். அது மட்டுமில்லநீ குட்டியா இருக்கஉனக்கு காலு எட்டாது. அதனால உன்னால ஓட்டவும்  முடியாது." -அப்டின்னு சிங்கம் சொல்ல,எலிக்கு கோவம் வந்துச்சாம். இந்த சிங்கத்த எப்டியாச்சு சைக்கிள் ஓட்ட விடாம பண்ணனும்னு பிளான் போட்டுச்சாம். அன்னிக்கு நைட் அந்த எலி,சிங்கம் சைக்கிள் ஓட்டி வர்ற வழில முள்ளு போட்டு வச்சுதாம். மனசுக்குள்ள சிரிச்சுகிச்சாம் -"நாளைக்கு சிங்கம் சைக்கிள் ஓட்டிட்டு வரும்போது முள்ளு குத்தி சைக்கிள் பஞ்சர் ஆகிடும். இனி சிங்கமும் சைக்கிள் ஓட்ட முடியாதே!."
           
அடுத்த நாள் மார்னிங்,சிங்கத்தோட குகைக்கு வந்த எலி சிங்கத்துகிட்ட "நானும் சைக்கிள்ள வரவா? எனக்கும் சைக்கிள்ளப்  போக ஆசையா இருக்கு. நீயே ஓட்டு.",அப்டினுச்சாம்சிங்கமும் சரின்னு  சைக்கிள் எடுத்துட்டு வர, ரெண்டு பேரும்  காட்ட சுத்த போனாங்க. ஜாலியா சுத்திட்டு இருக்கும் போது ஒரு சத்தம். என்னடா புது சத்தமா இருக்கேன்னு  சிங்கம் சைக்கிள விட்டு இறங்கி பார்த்தா,சைக்கிள் டயர்  பஞ்சர்!!! எலி போட்டிருந்த முள் மேல டயர் பட்டு,டயர் பஞ்சர்! என்ன பண்ணணு சிங்கம் தெரியாம முழிக்க,எலிக்கு ஒரே சந்தோஷம். "என்ன சைக்கிள் ஓட்ட விடாத சிங்கத்துக்கு நல்லா வேணும். இனி யாராலும் இத ஓட்ட முடியாது!",அப்டின்னு எலி மனசுக்குள்ள நினைச்சு ரொம்ப  குஷியாச்சாம்.  சிங்கம் உடனே தன்னோட முன் கால் இரண்டையும் கூப்பி,சாமி கும்பிட, கண்ணா சாமி சிங்கத்துக்கு முன்னாடி வந்தாரு! சிங்கம் அழுதுகிட்டே டயர் பஞ்சர் பத்தி கண்ணா சாமிட்ட சொல்ல, கண்ணா சாமி அவரோட கைய டயர் முன்னாடி  காட்ட,அவர் உள்ளங்கை நடுவுல இருந்து லைட் வந்துச்சாம்.  சிங்கம் அதிசயமா பார்க்க,லைட் டயர்ல பட்டதும் டயர்ல இருந்த முள் தானா கீழ விழ, அந்த லைட் அப்டியே டயர் ஓட்டைய அடைச்சு காத்த நிரப்பிடுச்சாம்குஷியான சிங்கமும் கண்ணா சாமிக்கு தாங்க்ஸ் சொல்லிட்டு எலிய கூப்பிட்டு சைக்கிள் ஓட்டிட்டு கிளம்பிடுச்சாம்.   


        நைட் அதோட வீட்டுக்கு போன எலிக்கு கோவம் கோவமா வந்துச்சாம்.  கண்ணா சாமி வந்து இப்டி பண்ணிட்டாரே! இனி என்ன பண்ணலாம்னு யோசிச்ச எலி,"முள் குத்தினா தான எடுப்பீங்க. நான் என் பல்லால டயர கடிச்சு உள்ள போய் உட்கார்ந்துகிட்டா!",அதான் நல்ல ஐடியா அப்டின்னு நினைச்ச எலி, அன்னிக்கு நைட் சிங்கத்தோட குகைக்கு போய்,சிங்கத்துக்கு தெரியாம சைக்கிள் டயர கடிச்சு அதுக்குள்ள போய் ஒளிஞ்சுகிச்சு.
           
மறுநாள்,சிங்கம் ப்ரஷ் பண்ணி, குளிச்சு சாப்ட்டு சைக்கிள் ஓட்ட சைக்கிள் எடுக்க வந்துச்சாம். வந்து பார்த்தா,சைக்கிள் டயர் திரும்பவும் பஞ்சர்! சிங்கத்துக்கு  அழுகை அழுகையா வந்துச்சாம். அழுதுட்டே திரும்ப கண்ணா சாமிய கும்பிட,கண்ணா சாமியும் வந்தார். சிங்கத்தோட அழுகையப் பார்த்த கண்ணா சாமிக்கு பாவமா இருந்துச்சாம். உடனே அவர் தன்னோட உள்ளங்கைய டயர் முன்னாடி காட்ட,அவர் உள்ளங்கைல இருந்து லைட் வந்துச்சாம். முள் குத்தல,அப்புறம் ஏன் இப்டினு கண்ணா சாமி டயர்  ள்ள நல்லா எட்டிப்பார்த்தார். உள்ள அந்த எலி இருந்தத கண்டுபிடிசுட்டாரு. "அட!நீ தான் கடிச்சியா!"-அப்டினு சிரிச்சுட்டே கண்ணா சாமி எலிய தூக்கி வெளில போட்டுட்டு ,டயர்ல காத்து நிரப்பி கொடுத்தாராம். சிங்கத்துக்கு எலிய பார்த்ததும் ஆச்சரியம்! "நீ என் நண்பன்! நீயே இப்டி பண்ணலாமா? இனி உன் நட்பு எனக்கு வேண்டா. நீ குட் எலி இல்ல. போ!"-அப்டின்னு எலிய தொரத்திடுச்சாம்.
         
சிரிச்சுட்டே சைக்கிள்கும்,எலி பத்தின உண்மைய புரிய வச்சதுக்கு  கண்ணா சாமிக்கு தாங்க்ஸ் சொல்லுச்சாம். "இனிமேல் குணம் பார்த்து பழகு."-அப்டின்னு கண்ணா சாமி அட்வைஸ் சொல்லி மறைய,சிங்கமும் ஜாலியா சைக்கிள்ள காட்ட சுத்திப் பார்க்க போச்சாம்!


Base story by : R.T.Thulasitha, U.K.G.-C
           

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...