February 28, 2018

Thirukolur Penpillai Rahasyam-50



 இனியது என்று வைத்தேனோ சபரியைப் போலே


மதங்க முனிவரின் காலத்தில், சபரி என்ற வேடுவ குல பெண் காட்டில் வாழ்ந்து வந்தார் (வேடர்களில் தேன், அரக்கு போன்ற பொருட்களைச் சேகரித்து விற்கும் பிரிவினரைச் சபரர் என்பர்). சிறு வயது முதலே சிறந்த பக்தியும் குணமும் நிறைந்த சபரி, மதங்க முனிவரின் போதனையால் அவருக்கு சிஷ்யையாக அவரது ஆஷ்ரமத்தில் சேர்ந்தார். நாட்கள் செல்ல செல்ல, சபரியைத் தமது முதன்மை சிஷ்யையாக அங்கீகரித்தார் மதங்கர். ஆஷ்ரமத்தில் அவருக்கும், அவரது சிஷ்யர்களுக்கும் பணிவிடைகள் செய்து வந்தார் சபரி.

காலங்கள் சென்றன. மதங்கர் யோகநெறியில் முக்தியடைய முற்பட்டார். அதற்குரிய சமாதி நிலையில் அமர்ந்தார். மதங்கர் இல்லா உலகம் தனக்கும் வேண்டாம். எனவே தன்னையும் அழைத்து செல்லுமாறு சபரி வேண்டினார்.  மதங்கர், சபரியிடம் -“இன்னும் சில காலங்களில், ஸ்ரீ இராமனும் லக்ஷ்மணனும் இவ்வழியே வருவர். அவர்களை தகுந்த முறையில் உபசரி. ராம தரிசனம் பெற்ற பிறகு மோட்சத்திற்குச் செல்வாய்.”, என்றார். சபரியை, ஸ்ரீ ராமர் வரும்வரை, தமது ஆசிரமத்தில் இருந்து ராமநாமம் கூறி தவமியற்ற அறிவுறுத்தி மதங்கர், முக்தி நிலை எய்தினார்.

வருடங்கள் பல சென்றன.
எந்த எதிர்பார்ப்பும் இன்றி, குருவின் வார்த்தைக்கு மதிப்பளித்து, அவரது வாக்கில் பூரண நம்பிக்கை வைத்து காலம் செல்வதைப் பற்றி துளியும் சிந்திக்காமல் குரு உபதேசித்த ராமமந்திரத்தை வாழ்நாள் முழுவதும் ஓதிக்கொண்டிருந்தார். சபரி தனது குருநாதரின் கட்டளைப்படி தவவாழ்க்கை மேற்கொண்டு ஸ்ரீ இராமனின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருந்தார். ஒவ்வொரு நாளும் ராமனின் வருகையை எதிர்பார்த்திருந்த முதியவரான சபரி, அனுதினமும் காலை, தனது கைத்தடியுடன் ஆஷ்ரமம் நீங்கி, காட்டினுள்ளே சென்று, கனிகளைப் பறித்து வருவார். அவற்றைக் கடித்துச் சுவைத்துப் பார்ப்பார். இனிய சுவையுடைய கனிகளை மட்டும் ராமனுக்கு என்று தனியே எடுத்து வைப்பார். தனது கூடை நிரம்பியவுடன், ஆஷ்ரமம் சேர்ந்து, ஸ்ரீ இராமனின் வருகைக்காக வாசலில் அமர்ந்து விடுவார்.

வனவாசத்தின் போது சீதாதேவியை இராவணன் கடத்திக்கொண்டு செல்ல, இராமனும் இலக்குமணனும் தேவியைத் தேடி அலைந்து களைப்பில், சபரியின் ஆசிரமத்தை வந்தடைந்தனர். மதங்கர் கூறியிருந்தபடி, ராமர் வந்ததைக் கண்டு சபரி பூரிப்படைகிறார் சபரி. மதங்காஸ்ரமத்திற்குள் ஸ்ரீ ராமனையும் லக்ஷ்மணனையும் அழைத்தார். அன்புடனும் பண்புடனும் உபசரித்தார். சபரியால் கடித்துச் சுவைத்துப் பார்த்து, தனக்கென்று வைத்திருந்த இனிய கனிகளை ராமர் உண்டு மகிழ்ந்தார். லக்ஷ்மணனுக்கும் கொடுத்தார். ராம தரிசனத்தின் பயனாக மோட்சம் எய்தினார் சபரி.

சபரி, ஸ்ரீராமனிடம் தனக்கு முக்திகொடு என்று கேட்கவில்லை. ஸ்ரீராமனும் சபரிக்கு ஏதும் வரம் அளிக்கவில்லை. சபரி, ஸ்ரீராமன் அவதரிக்கும் முன்னரே குருவின் உபதசேம் பெற்று ஸ்ரீராம நாமத்தை உச்சரித்து, தன் வாழ்நாளையே ராமநாமத்திற்காக அர்ப்பணித்தார்.  ‘ராம நாமம் ஒன்று போதும், எதையும் பெற்றுத் தந்துவிடும் என்று உலகிற்கு உணர்த்துகிறார் சபரி. 

திருக்கோளூர் அம்மாள், “சபரியைப் போல் இனிய பழங்களை மட்டுமே பெருமாளுக்கு ஈந்தேனோ?”, என்கிறார்.
========********========



iniyadhu enRu vaiththEnO sabariyaip pOlE

In the ashram of Sage Mathanga, at the foot of the Mountain Rishyamukha, lived an elderly woman called Shabari, who belonged to the hunter tribe. She accepted Sage Mathanga as her Guru and served him and his disciples. When her guru was about to attain moksha and reach for the higher worlds, she too wanted to join him. However, Sage Mathanga told her "Sri Rama and Lakshmana will be coming to this area in the future. Wait for them. You should serve and worship them and by their grace you can reach us". Saying so, Sage Mathanga sitting in lotus posture attains Mahasamadhi.

Obeying her acharya's words, Shabari stayed back and waited for the arrival of Rama and Lakshmana. Everyday Shabari would go out of her ashram, with the help of a walking stick and pluck berry fruits for Lord Ram. She would pluck a fruit, first taste it, and if it was sweet she would put it in her basket and discard the bitter ones. She wanted to give only the good and sweet fruits to Ram. Shabari collected the fruits, tasted them herself for sweetness, and kept only the good tasting ones for Rama. Then, she would return to the ashram and sit outside with the basket of fruits, waiting for Lord Rama and Lakshmana.

In their exile, while Sita was abducted by Ravana, Lord Rama and Lakshmana went in search for her. On their way, Rama and Lakshmana came to the ashram of Sage Mathanga and met Shabari there. Seeing two people walking towards the ashram, Shabari realized that they are indeed Lord Rama and Lakshmana and welcomed them happily. She invited them into her hut and offered them the fruits that she had gathered and kept.

When she offered them some wild fruits, the ones she first tasted to find which one tastes sweet and good to serve, Lord Rama was pleased very much at her devotion, service and love for him. As a result, she lost her sins and attained the fruits of her acharya bhakti.

Thirukkolur Ammal is asking, "Did I offer sweet fruits to the Lord like Shabari did?"

February 27, 2018

Thirukolur Penpillai Rahasyam-49



 இக்கரைக்கே சென்றேனோ விபீஷணனைப் போலே

விபீஷணன் - ராவணனின் இளைய சகோதரன்.   அரக்கர்களுக்கே உரிய தீய குணங்கள் கொண்ட சகோதர சகோதரிகளிடைய வளர்ந்தாலும் விபீஷணனின் குறிக்கோள் நேர்மை, தர்மம், நீதி. விபீஷணன் ஒற்றைக் காலில் நின்றபடி ஐயாயிரம் வருடங்கள் கடுந்தவம் புரிந்து கடவுளர்களை திருவுளங்கொள்ள வைத்ததால் பிரம்மன் அவனுக்கு மரணமில்லா பெருவாழ்வை வரமாக வழங்கினார்.

ராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது கண்டித்தான். பிராட்டியை ராமனிடம் ஒப்படைத்து விட்டு உயிர் பிழைத்துக் கொள்ளுமாறு ராவணனை வலியுறுத்தினான். விபீஷணன் ராவணனின் ஒவ்வொரு கொடிய செய்கையையும் எதிர்த்தான். அவனுடைய அறிவுரைகளை ராவணன் ஏற்கவில்லை.

சீதாதேவி இலங்கையில் சிறைப்பிடிக்கப் பட்டிருப்பதை ஹனுமார் கண்டு வந்த பின், ஸ்ரீ இராமனும் அவருடைய வானரப் படையும் இலங்கை நோக்கி பாலம் அமைக்க, இராவணன் இச்செய்தி கேட்டு அவசரமாக அமைச்சரவையைக் கூட்டினான். அப்பொழுது, அவனது மந்திரிமார்களும் படைத் தளபதிகளும் இராவணனின் வீரத்தையும், இந்தரஜித்தின் போர்த்திறனையும், தங்களின் வீரத்தைப் பற்றியும் பெருமையாக கூறி, வானரங்களுக்கு எதிராக போரிடுவதே தங்களுக்கு இழுக்கு என்று மார் தட்டிக் கொண்டிருக்க, விபீஷணனோ, “ஸ்ரீ இராமனின் பலத்தையும், எதிரிகளின் போர்த்திறனையும் அறியாமல் பேசுவது தவறு. அவர்களின் பக்கம் தர்மம் உள்ளது. தவறு நம் பக்கம் உள்ளது. எனவே, சீதாதேவியை அவர்களிடம் ஒப்படைத்து மன்னிப்புக் கோரினால் ஸ்ரீ இராமன் நிச்சயம் மனமிறங்கி மன்னித்துவிடுவார். வீணாக யாரும் உயிர் இழக்க வேண்டாம். எனவே சீதாதேவியிடம் மன்னிப்பு கோரி உயிர் வாழ்வது பற்றி யோசியுங்கள். இல்லையேல் போரில் மடிவீர்.”-என்றான்.

விபீஷணனின் வார்த்தைகள் இராவணனுக்கும் இந்தரஜித்துக்கும் கோபத்தை மூட்ட, விபீஷணனைக் கடிந்து பேசினர். ராவணன் தன்னைப் புண்படப் பேசியதும், சிறுவனாகிய இந்திரஜித்தைக் கொண்டு அவமானப்படச் செய்ததும் விபீஷணன் மனதை விட்டு அகலவில்லை.   உறவுகளை விட்டொழித்து, ஸ்ரீராமன் தான் உண்மையான உறவு என்று தீர்மானித்த விபீஷணன் நான்கு ஆதரவாளர்களுடன் ராமனைச் சரணடைய இலங்கை விட்டு இக்கரைக்கு வந்தான். ராமரிடம் தனது வரவை அறிவிக்கும்படி வானர வீரர்களிடம் வேண்டினான்.

விபீஷணனைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வது குறித்த ஆலோசனையை நடத்தினார் ராமர். சுக்ரீவனும் மற்ற வானர மந்திரிகளும் எதிர்த்த போதும், அனுமன் ஆராய்ந்து உரைத்த கருத்தின்படி விபீஷணனை தன்னிடம் வரப் பணித்தார் ராமர். ராமரின் திருவடிகளில் விபீஷணன் விழுந்து வணங்கி, சரணாகதி (அடைக்கலம்) வேண்டினான். ராமர் விபீஷணனை ஏற்றருளினார். ராமர் விபீஷணனுக்கு அடைக்கலம் கொடுத்த செயலை அபயப்பிரதானம் என்பர்.


திருக்கோளூர் அம்மாள், “ராமனிடம் அடைக்கலம் புகுந்த விபீஷணனைப் போல் தான் பகவானிடம் சரணாகதி அடைந்தேனா?”- என்று வினவுகிறார்

========********========

ikkaraikkE senREnO vibIshaNanaip pOlE

Vibhishana is the younger brother of King Ravana, in the great Indian epic, The Ramayan. Though he was a Rakshas, he was noble and pure hearted. From his early childhood, he spent all his time meditating on the name of the Lord. Eventually, Brahma appeared and said he would offer him any boon he wanted. Vibhishana said that the only thing he ever wanted was to have his mind fixed at the feet of the Lord as pure as lotus leaves (charan kamal). He prayed that he should be given the strength by which he would always be at the feet of the Lord and that he would receive the darshan (holy sight) of Lord Vishnu. This prayer was fulfilled and he was able to give up all his wealth and family, and join Sri Rama, an incarnation of Lord Vishnu.

In Ramayan, after Hanuman discovered the presence of Sita in Lanka, Rama came to the shores of Lanka, crossing the ocean with a huge monkey army under the guidance of Sugriva. Hearing this, King Ravana called for a meeting in his court and discussed the situation. His ministers and army leaders told him that their army would easily defeat the army of Rama and Sugriva.

The only one in the meeting who objected was Ravana's brother Vibhishana. He said "It is not smart to judge another army without fully judging its potential. From the time Sita was kidnapped and brought here, we have been seeing many inauspicious signs. Sita is a great pativrata. Rama and Lakshmana are incomparable warriors. Instead of battling, it is better if we return Sita to Rama and discuss peace. That's our only path to survival. I am saying this because of my interest in what is best for our clan."

Ravana and Indrajit were not pleased with Vibhishana’s talk.  When Vibhishana insisted again, Ravana got angry and asked him to leave Lanka. Vibhishana left Lanka along with four of his close friends to where Sri Rama and His army were camped.

There, he surrendered at Rama's divine feet. Initially, Sugriva and others objected to accepting Vibhishana. Rama, who does not distinguish his followers based on birth or circumstances in life, accepted Vibhishana, who fell at His feet and said "I have given up all my prior attachments. My life is now entirely in Your hands."

Thirukkolur Ammal is asking "Did I leave everything on this side and go to where the Lord is, like Vibhishana?"

February 26, 2018

Thirukolur Penpillai Rahasyam-48




அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே

இங்கு “பெரிய உடையார்” என்று அழைக்கப்படுபவர், ஜடாயுவாகும். ஸ்ரீ இராமன், ஜடாயு மீது கொண்டுள்ள நன்மதிப்பும், தந்தைக்கு நிகராக ஜடாயுவை கண்டதுமே இதற்கு காரணம். ஜடாயு, இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கருடன். சூரிய தேவனின் தேரோட்டியான அருணனின் மகன். ஜடாயுவும் அவரது அண்ணனுமான சம்பாதியும் தசரத சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்.

வனவாசத்தின் முதல் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்களுடன் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்ரீராமன் அதன் பின்னர், சீதாதேவி மற்றும் இலட்சுமணனுடன் அகத்தியரின் குடிலுக்கு சென்றார். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பஞ்சவடி நோக்கி தன் பயணத்தைத் தொடரும் பொழுது வழியில் ஜடாயுவை சந்தித்தனர்.

தன்னை யார் என்று வினவிய ஸ்ரீ இராமனிடம், ஜடாயு – “நான் அருணனின் புதல்வன். கழுகுகளுக்கெல்லாம் அரசன். சம்பாதியின் தம்பி. தசரத சக்ரவர்த்தியின் நண்பர்கள். இக்காட்டில் வசிப்பவன் நான். நீங்கள் பஞ்சவடியில் வாழும் வரை உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து தருகிறேன். என்னுடன் வாருங்கள்.”, என்று கூறி, அவர்கள் குடில் அமைக்க அமைதியான, அழகான இடத்தையும் காட்டினார்.

“... அவர் திண்சிறை
விரியும் நீழலில் செல்ல விண்சென்றான்

-       என்ற வரிகளின் வாயிலாக, கம்பர், ஜடாயுவின் பரந்த மனதையும், ஸ்ரீ இராமர், சீதாதேவி மற்றும் இலட்சுமணன் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறார். அவ்வரிகளின் அர்த்தம் , பஞ்சவடி நோக்கி காட்டில்  நடந்து செல்லும் ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும் இலட்சுமணனையும் வெயிலில் இருந்து பாதுகாக்க, தனது பெரிய அகண்ட சிறகுகளை குடைப் போல் விரித்தார் ஜடாயு.

சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராவணனின் தவறை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜடாயு. இராவணன் கேக்காமல் போக, இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். இராவணனின் தேரை உடைத்து சுக்குநூறாக்கி, அவனையும் தன் மொத்த பலம் கொண்டு தாக்குகிறார். இறுதியில் இராவணன் வாளுக்கு தன் ஒரு பக்க இறக்கையை இழந்து, ஜடாயு தரையில் விழுகிறார்.

ஸ்ரீ இராமன் மற்றும் இலட்சுமணனின் வருகைக்காக காத்திருந்தவர், அவர்கள் வந்ததும், நடந்தவற்றைக் கூறி, இராவணன் சீதையை கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு, ஸ்ரீ இராமருக்கு மங்களாசாசனம் செய்துவிட்டு உயிர் விடுகிறார்.

தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஏழு புண்ணிய நதிகளையும் வரவழைத்து, ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன் தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார். ஜடாயுவுக்கு மோக்க்ஷமும் கிடைத்தது.

திருக்கோளூர் அம்மாள், “ஜடாயுவைப் போல்  (பெரிய உடையார்) இராவணனுடன் போரிட்டு, பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உதவி புரிந்தேனா?” – என்று வினவுகிறார்.
 ========********========


arakkanudan porudhEnO periya udaiyAraip pOlE

Jatayu is referred as “Periya udaiyar”, here, by our acharyas, because of the great respect Lord Rama had for him. Jatayu is the youngest son of Aruna, the charioteer of Sun God, in Hinduism. Jatayu’s elder brother is Sampaati, who was an old friend of King Dhasaratha!  

During their exile, after staying in Dandaka forest for about 10 years, Lord Rama, Sita and Lakshmana left for sage Agastya's ashram. After receiving the blessings and weapons from Sage Agastya, they left for Panachavati. On their way, they meet an old vulture named Jatayu. When they asked who he is, the vulture replied "My name is Jatayu, Son of Aruna. I and my brother Sampaati are your father Dasaratha's friends. I am living in this forest and I will accompany you while you are here." Rama, Sita, Lakshmana and Jatayu all went together to Panchavati.

Kambar explains the heart of Jatayu through his lines:

          …Avar thisiai
viriyum nī
zhalil sella viseṉṟā

Meaning, as Lord Rama, Sita Piratti and Lakshmana were walking along the forest towards Panchavati, under the hot sun, Jatayu protected them by spreading his wings like an umbrella.

After they have built a hut in Panchavati, Jatayu stayed close to the ashram where Lord Rama was staying. Lord Rama told Lakshmana "We have been separated from our father. So, let's stay under the wings of Jatayu".

Later, when Ravana abducted Sita, Jatayu intercepted them. He tried to talk Ravana into giving up this bad idea and release Sita. When he did not listen, Jatayu began waging a great war with Ravana. He broke Ravana's chariot and attacked him fiercely. In the end, Ravana managed to cut Jatayu's wings and threw him to the ground. He then left with Sita to Lanka.

When Lord Rama and Lakshmana came looking for Sita, they saw Jatayu lying wounded on the ground. Jatayu told them what happened and consoled the distraught Lord Rama and reassured Him that no harm will come to Sita and that very soon she will be restored to them. Knowing that his end is near, Jatayu performed mangalashasana to Lord Rama by calling Him 'Ayushman' and then gave up his life.

Rama says that the grief of seeing Jatayu pass away is greater than the loss of Sita. He considered Jatayu as equal to His father and did the final rites for the bird. Lord Rama then slammed an arrow into the ground so as to call all seven sacred rivers to arrive at the very spot where he is and performed the last rites for Jatayu, so that he could attain moksha. 

Thirukkolur Ammal is asking "Did I fight against Ravana and dare to give up my body and soul, like Periya Udaiyar?"

February 23, 2018

Thirukolur Penpillai Rahasyam-47




 அக்கரைக்கே விட்டேனோ குஹப்பெருமாளைப் போலே

குகன், கங்கை ஆற்றின் கரையில் இருந்த சிருங்கிபேரபுரம் என்ற பகுதியின்  நிசாதார்களின்  வேடுவ மன்னர் ஆவார். பொய் நீங்கிய மனத்தினன். இராமனிடம் அன்பு கெள்ளும் குணத்தினன். யானைக் கூட்டம் போன்ற சுற்றத்தினரைப் பெற்றவன். அவன் ஆயிரம் ஓடங்களுக்குத் தலைவன்.

இராமன், சீதை மற்றும் இலக்குமணனுடன் 14 ஆண்டு வனவாசத்தை கழிக்கும் பொருட்டு,  அயோத்தி நகரத்தை விட்டு வெளியேறி, கங்கை ஆற்றை கடப்பதற்கு தேரில் வந்து கொண்டிருப்பதை அறிந்த குகன், தன் படை வீரர்களிடம், வருபவர்களை வரவேற்க உரிய ஏற்பாடுகளை செய்ய வைத்தான். ராமருடன் வரும் மக்கள், மந்திரிகள் என அனைவருக்கும் உண்ண உணவும், தங்க இடமும் தயார் செய்து வைத்தான்.

இராமன் சிரிங்கிபேரபுரம் வந்ததும், அவர் பாதங்களில் விழுந்து வணங்கினான். கானகம் சென்று வாழ்வதற்கு பதில், இங்கு தங்கிக்கொள்ளுமாறு வேண்டினான். புன்முறுவலுடன் அதை கேட்ட இராமன், “உன் நண்பன் தந்தைக்கும் தாய்க்கும் கொடுத்த சத்தியத்தை மீற விடுவாயா? இரவாகிவிட்டதால் இன்றிரவு இங்கு தங்கிக்கொள்கிறோம். நாளை காலை கங்கையை கடப்போம்.”, என்றார். அன்று இரவு இராமர் முதலானவர்களுக்கு உண்பதற்கு குகன் தேனும், மீனும் வழங்கி உபசரித்தார்.

மறுநாள் காலையில் கங்கை ஆற்றை கடக்க, குகன் தனது படகில் சீதை மற்றும் இராம-இலக்குமணர்களை அமர வைத்து, கங்கை ஆற்றின் மறு கரை வரை படகோட்டிச் சென்றார். பின்னர் இராமர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, குகன் சித்திரகூடம் செல்லும் வழி கூறினார்.

வனவாசம் சென்ற இராமரை காண்பதற்கு கங்கை ஆற்றின் கரைக்கு வந்த பரதன் முதலானவர்கள் கங்கை ஆற்றைக் கடக்க காத்து நிற்க, அடியார்களுக்கு செய்யும் சேவையாய் கருதி, அவர்கள் ஆற்றை கடக்க உதவி புரிந்தான் குகன்.


திருக்கோளூர் அம்மாள், “குகன் போல் சேவை செய்து, பரமாத்மாவையும், அவரது அடியார்களையும் ஆற்றை கடக்க உதவி புரிந்தேனா?”, என்கிறார்
========********========


akkaraikkE vittEnO guhapperumALaip pOlE

Considering the words of King Dasaratha as a command given to him, Rama decided to go to the forest for 14 years, accompanied by Sita and Lakshmana. Sumanthra drove Rama, Sita and Lakshmana in a chariot from the palace of Ayodhya to the banks of Ganges and left them at a town called Srungiberapura. Guha, the King of Shrungabheripura, is revered for his high-standing honourable qualities. Guha in Sanskrit means “the resident of” or "cave of the heart.”  

Guha was aware of Rama’s exile and he was waiting to receive Rama, Sita and Lakshmana. When Guha, on receiving Rama, tried to reach for Rama’s feet, Rama hugged him saying – “A friend like you should only be hugged with affection.” 

Guha asked Rama to stay with him for 14 years and that he would do services to him and worship him forever! Smiling at the devotion and affection Guha has got for him, Rama said –“You wouldn’t want your friend to disobey his father’s orders, right? Also, you wouldn’t ask your friend to not break the promise that his father has given to his mother, trusting him.”

Understanding the heart of Rama, Guha said –“It’s already getting dark. Entering forest at this time is not safe. Kindly, spend your night here.”

Accepting Guha’s devotion, Rama decided to stay in Guha’s place and made sure, Guha will take him, Sita and Lakshmana across river Ganges by next day. Guha made sure the three have a comfortable stay for the night. He also made sure the citizens of Ayodha who were following Rama’s chariot too get accommodation and proper care.

The next day, early morning, Rama decided to leave for the forest. While they were standing on the banks of Ganga, Guha, who was desperate to touch Rama’s feet and doubting whether Rama would allow him, said – “Oh Lord, I have heard about the story of you turning a stone into a woman (Ahalya), just by the touch of your foot. All I have is this wooden boat and this is all my life and business. I do not want my boat to turn into a woman. So, allow me to clean your feet before getting into the boat.”

Understanding the heart of Guha, Rama allowed him to do the services. When they crossed River Ganges, Guha said unto Rama – “before you enter the forest, grant me a wish, Oh Lord. I will be waiting for you for 14 years. If I do not get to see you after 14 years, my soul will leave this body, the very next second.” Rama too grants the wish to Guha, with an assuring smile.

Later, when Bharatha and the ministers and people came to visit Rama in the forest, Guha carried them all in 500 boats across the river, as a service to the devotees of the Lord.

Thirukkolur Ammal is asking "Did I help the Lord and His devotees reach the other side of the river like Guha?"



Thirukolur Penpillai Rahasyam-46




வைத்த இடத்து இருந்தேனோ பரதனைப் போலே

"ஆயிரம் ராமர்கள் உனக்கு இணையாவார்களோ?"  - என்று குகன் பரதனைப் பார்த்து கூறினான். பரதனுடைய பண்பு அத்தகையது.  அயோத்தியை ஆண்ட தசரத மன்னனின் மைந்தர்களுள் ஒருவர். கைகேயியின் ஓரே புதல்வன். இவர் இராமனுக்கு இளையவர் ஆவார்.

பரதனுக்குத்தான் அரசுரிமை, ராமன் காடு செல்ல வேண்டும் என்று கைகேயி மன்னனிடம் கேட்க, இராமனும் அதை தாய் தனக்கிட்ட ஆணையாக மனதிலேற்று, சிதாதேவியுடனும் இலட்சுமணனுடனும் கானகம் செல்கிறார். தன் தாய்மாமனைக் காண சென்ற பரதனுக்கு அயோத்தியில் நடந்தது எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இராமன் வனம் சென்ற சில நாளிலேயே தசரதன் இறந்து போக, பரதனுக்கு செய்தி அனுப்பபப்படுகிறது. அயோத்தி வந்தடைந்த பரதன் நடந்தவற்றை அறிந்து தந்தை இறப்பிற்கும் அண்ணன் கானகம் சென்றதுக்கும் தன் தாய் தான் காரணம் என்பதை அறிந்து அவளை பலவாறாக வைது தீர்க்கிறான். அழுது புலம்புகிறான். இப்படிப் பட்ட வரம் கேட்டது தெரிந்த பின்னும் நானும் இறக்காமல் இருக்கிறேன். இது நான் இந்த அரசை ஆசையோடு ஏற்றுக் கொண்டதற்கு ஒப்பாகும் என்கிறான். ஒரு மாவீரனைப் போல, தாய் செய்த தவறுக்கு தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறான்! இருந்தாலும், தாயாரை மன்னிக்காமல், இராமனின் வனவாசம் முடியும் வரை தன் தாயிடம் பேசாமல் வாழ்ந்து வந்தான் பரதன்.

மகரிஷி வசிஷ்டர் பரதனை முடிசூட்டிக் கொள்ளுமாறு வேண்ட, பரதனோ – “நானும் இந்நாடும் அண்ணனின் உடைமை. என்னால் எப்படி ஆட்சி செய்ய முடியும்? நேரே சென்று அண்ணனை அழைத்து வருகிறேன். அண்ணன் அரியணையில் அமர, நான் கானகம் சென்று வாழ்கிறேன்.”, என்று கூறி, மரவுரி தரித்து வனம் செல்கிறான். உடன் தாயார்களும், மந்திரிகளும், மகரிஷிகளும், அயோத்தி மக்களும் வர, பரதன் கங்கை கரையை அடைந்தான்.

அயோத்தில் நடந்தவற்றை கூறி, தந்தையின் மறைவையும் கூறி, இராமனின் பாதங்களில் விழுந்த பரதன் அண்ணனிடம் நீங்கள் வந்து முடிசூட்டி ஆட்சிபுரிய வேண்டும் என்று மன்றாடி கேட்கிறான். இராமனோ தந்தை சொல்லை தன்னால் மீற முடியாது, பதினான்கு ஆண்டு வனவாசம் புரிய வேண்டும் என்ற ஆணையை தான் கைவிடக்கூடாது என்கிறார். வனவாசம் முடித்து விட்டு வந்து அரசாட்சியை எடுத்துக் கொள்கிறேன் நீ அயோத்திக்குப் போய் கடமையைச் செய் என்கிறார். 

பரதன், “திரும்பி வர பதினான்கு ஆண்டுகளுக்கு மேல் ஒரு நொடி அதிகமானாலும் நெருப்பில் விழுந்து உயிர் தியாகம் செய்வேன். மேலும், அரியணை தங்களுக்கு உரியது. அதில் நான் அமர மாட்டேன்.” – என்று கூறி, ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டு, “உமது பாதுகைகளே அரியணையை அலங்கரிக்கும். நான் உன் பிரதிநிதி. அரியணை அமரவும் மாட்டேன். மணிமுடி சூடிக்கொள்ளவும் மாட்டேன்.”, என்று கூறி, பலமுறை இராமபிரானைத் தொழுது, அப்பாதுகைகளை தன் தலையில் வைத்துக்கொண்டு அழுது புறப்படுகிறான் பரதன்.

பரதன் அயோத்தி செல்லவில்லை. கோசல நாட்டின் தென் திசையில் உள்ள நந்திக் கிராமத்தில் மணி மண்டபம் அமைத்து, சிம்மாசனத்தில் இராமனுடைய பாதுகைகளை வைத்து, அப்பாதுகைகளுக்கு முடிசூட்டி வழிபட ஆரம்பிகிறான் பரதன். தென் திசையையன்றி வேறு திசையை நோக்காமல், இராமனைப் போல் உப்பில்லாத கஞ்சியைப் பருகி, தானும் குடிலில் தரையில் படுத்து, நல்லாட்சியும் புரிந்தான்.

திருக்கோளூர் அம்மாள், “பரதன் போல் இராமன் ஒன்றே பிராதானம் என்று நினைத்து, இறைவன் எதைத் தந்தாலும் அது நல்லதுக்கே என்று ஏற்றுக் கொள்ளும் மன பக்குவம் கொண்டுள்ளேனா?”, என்று வினவுகிறார்.

========********========

vaiththa idaththu irundhEnO baradhanaip pOlE

Bharata was younger brother of the protagonist Rama and second son of King Dasharatha and only son of Kaikeyi. Ramayana holds Bharata as a symbol of dharma and idealism. Bharata, in Vedic Sanskrit, means “to be or being maintained”. Sage Vashishtha during the naming ceremony says that Bharata is the incarnation of the power responsible for feeding and nourishing the whole world.

When Kaikeyi asked for two boons from king Dasaratha: Rama should be in exile for 14 years and Bharatha should be made as the King of Ayodhya, Bharatha was not in Ayodhya. He was at his uncles' place in the Kekaya kingdom. After Rama left for exile and king Dasaratha died due to the separation from Rama, the ministers of Ayodhya requested Bharatha to return to Ayodhya. When Bharatha returned and found about what had happened, he became very angry at his mom and it is said that for 14 years, until Rama’s return, Bharata did not forgive his mother.

After the final rites were completed for King Dasaratha, Sage Vasishta and the ministers of Ayodhya requested Bharatha to become the king. He refused and said "Both I and this kingdom are the property of Rama. How can one property rule over another?"

He then took his mothers, ministers, pundits, army and a large number of people with him and went into the forest to meet Rama. Crossing the banks of River Ganges, with the help of Guha, he met Rama, told Him of Dasaratha's demise and requested Him "I, along with the ministers, bow my head to you. Please show mercy on me who is your brother, disciple and slave".

Rama who understood the very heart of Bharata, refused to accept it and said softly that they both must fulfil their father's command. As Bharata's love for Rama was unparalleled, it became his duty to enable Rama to live righteously. Bharata gave up his efforts to take Rama back to Ayodhya. Rama promised Bharatha that he will come back after 14 years and will accept the kingdom, but Bharatha should rule Ayodhya till that time. Promising that, if Rama did not return after the fourteen years of exile, he will give up his life by immolation, Bharata agreed to rule Ayodha, not as a King but only as a representative of Rama. 

Bharata took Rama's padukas (Footwear) and told him that Rama’s padukas will be the one that will be decorating the throne for 14 years and he would only be a representative and that he will not sit on the throne or be crowned as King. He built a hut on the banks of the river Saryu and stayed there for fourteen years, waiting for Lord Rama to return and claiming that he cannot live in the palace when Rama lives in the forest and sleeps on the ground.

Bharata's reign was righteous and the kingdom was safe and prosperous, but Bharata continuously longed for Rama's return. After meeting Bharata, Guha said-"Even thousands of Ram cannot compare Bharata in virtue."


Thirukkolur Ammal is asking "Did I show the state of pAratantrya - of accepting the Lord's wish, no matter whether it is agreeable or not - like Bharatha?"

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...