Showing posts with label Sita. Show all posts
Showing posts with label Sita. Show all posts

March 25, 2018

Thirukolur Penpillai Rahasyam-54




கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே

இங்கு “திருவடி” என்று திருக்கோளூர் அம்மாள் அழைப்பது “சிறிய திருவடி”யான ஹனுமனை.

இந்தியாவின் பழம்பெரும் இதிகாசமான இராமாயணத்தில், ஸ்ரீ இராமனும் இலட்சுமணனும், இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி காடு முழுதும் அலைந்தனர். சீதையைத் தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் கிஷ்கிந்தையின்  அரசனும், வானரர்களின் அரசனுமா சுக்கிரீவனின் நட்பு கிடைத்தது. இராமனுக்கு உதவி புரிய விரும்பிய சுக்ரீவன், நான்கு திசைகளிலும் வானர கூட்டங்களை அனுப்பி, சிதையின் இருப்பிடம் குறித்து அறிய அனுப்பினான்.

தெற்கு திசையில் தேடிச் செல்ல, ஹனுமான், ஜாம்பவான், நிலா மற்றும் சில வானரங்களை, அங்கதனின் தலைமையில் அனுப்பினான். ஒரு மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்து வர ஆணையிட்டான். கடல் தாண்டி சென்ற ஹனுமான், இலங்கை அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீதையைக் கண்டார். இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி, தான் இராமனின் தூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சீதைக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கூறிய பின், சீதை கொடுத்த சூளாமணியை எடுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனிடம் வந்தார்.

ஹனுமானின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும் ஸ்ரீ இராமனிடம், “"கண்டெனன், கற்பினுக் கணியையைக் கண்களால்" என்கிறார் ஹனுமான். “சீதையை என்று தொடங்கி விட்டால் இராமன் சீதைக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்று பதைத்து விடுவாரோ என்று எண்ணி, இராமனுக்கு மணித்துளி மனவருத்தத்தையும் தான் அளிக்கக் கூடாதெனக் கருதியும், தன்சொல்லில் ஐயம் எழக்கூடாதெனக் கருதியும் ஹனுமான் “கண்டேன்” என ஆரம்பித்தார்.

ஹனுமானின் வார்த்தைகளைக் கேட்டு மனமகிழ்ந்த ஸ்ரீ இராமன், அவனை ஆரத்தழுவிக்கொண்டான்.

திருக்கோளூர் அம்மாள், “ஹனுமனைப் போல் பெருமானுக்கு தான் சேவை செய்து அவரை மனம் மகிழ செய்தேனா?” – என்று வினவுகிறார்.
 =========********========

kaNdu vandhEn enREnO thiruvadiyaip pOlE

Here, “Thiruvadi” refers to “Hanuman”.

In the great Indian Epic, Ramayana, when Rama and Lakshmana went in search of the abducted Sita, made friendship with King Sugriva and with the help of the monkey clan, they searched for Sita. Sugriva sent the monkeys in the four directions to find the place where Sita had been kept.

Knowing that Ravana is the one who abducted Sita, and guessing that there is a greater possibility for Sita to be taken across the ocean, to Sri Lanka, King Sugriva sent Hanuman, Jambavan and Nila towards South, under Angadha as their leader and gave them one month time to know the whereabouts of Sita. Knowing that Hanuman would be able to find Sita, Rama gave him a ring so that Sita would understand that Hanuman is a messenger from her Lord Rama.

Learning from Sambhati that Sita is imprisoned in Sri Lanka; Hanuman was selected by the monkey clan to leap across the ocean to meet with her. Meeting Sita in Lanka, Hanuman showed her the ring from Rama and delivered the message which Lord Rama wanted Hanuman to be delivered to Sita when he sees her, in order to make her feel better and stay confident.

Returning to Rama, he told Him that he had seen Sita ("drushTA maya sItA"). The phrase “Drushta Maya Sita” means “Saw I, Seetha”. Realizing that starting a sentence with “Sita…”, the ensuing gap of even those few seconds will be filled with anxiety for Rama. So, instead he mitigated the anxiety by saying “Saw I, Sita”. By doing this, beloved Hanuman relieved Lord Rama from the moments filled with only distraught and anxiety.  He also gave Rama the head ornament from Sita that She had given him. Seeing the ornament and hearing the message, Rama became very pleased and embraced Hanuman tightly.

Thirukkolur Ammal is asking "Did I do service to the Lord like Hanuman did?"

February 12, 2018

Thirukolur Penpillai Rahasyam-35



இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே

வால்மீகி முனிவர்  இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான,இராமாயணம் எனும் இதிகாசத்தை இயற்றியவர் ஆவார். 

இலங்கையில் இருந்து சீதையை மீட்டு, வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீ ராமர், அயோத்தி மன்னராக தருமநெறி வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்.  அயோத்தியே மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்தது. ஒரு நாள், நகர்வலம் வந்த காவலாளி, அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள் ராமரைப் பற்றி பேசுவதைக் கேட்டார். சலவை தொழில் செய்யும் குடும்பத் தலைவன் அங்கே சீதா தேவியைப் பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து, ஸ்ரீ ராமரிடம் கூறினார். அந்த வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என்றெண்ணி, மக்களின் நலனுக்காகவும், தர்மத்திற்காகவும் கர்ப்பிணியான தன் சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார்.  

கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம் அமைந்துள்ளது. அதன் அருகே சீதாதேவியை காட்டில் விட்டுவிட்டு, லக்ஷ்மணர் அயோத்தி திரும்ப, தாங்க முடியாத துயரத்துடன் வந்த சீதாதேவிக்கு வால்மீகி அடைக்கலம் குடுத்தார். சீதாதேவிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். ஸ்ரீ ராமரின் குழந்தைகளுக்கு லவன், குசன் என்று பெயரிட்டார் வால்மீகி.

அவர்கள் வால்மீகியின் ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். ராமாயணத்தை வால்மீகி முதல் முதலில் கற்றுக்கொடுத்தது லவ மற்றும் குசனுக்கு மட்டுமே! நற்பண்புடனும், நற்குணங்களுடனும், அறிவில் சிறந்தவர்களாகவும், ஆயுதங்களை கையாள்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் லவ குசனை வால்மீகி வளர்த்தார்.

திருக்கோளூர் அம்மாள், “வால்மீகி போல், ஸ்ரீ இராமருக்கு சேவை புரிந்தேனா?” என்று வினவுகிறார்.
========********========

iru mannar peRREnO vAlmIkiyaip pOlE

Valmiki is celebrated as the harbinger-poet in Sanskrit literature. He is revered as Ādi Kavi, the first poet, author of Ramayana, the first epic poem. Ramayana, originally written by Valmiki, consists of 24,000 shlokas and 7 cantos (kaṇḍas) including Uttara KandaRamayana is composed of about 480, 002 words, being a quarter of the length of the full text of Mahabharata or about four times the length of Iliad

Valmiki is also quoted to be the contemporary of Rama. Rama met Valmiki during his period of exile and interacted with him. After the completion of his exile and rescuing Sita from Sri Lanka and defeating Ravana, Lord Rama ruled Ayodhya with Sita as his queen. When Sita was pregnant, Rama heard that a washerman spoke ill of the fact that He had brought back Sita who was imprisoned in Ravana's place and made her His queen. He then decided to leave her in the forest.

During this time, Sita asked a boon from Rama that she be allowed to live in the forest for a while. So, Rama asked Lakshmana to take her to the forest and leave her near Valmiki Maharishi's ashram. Lakshmana followed the order of Rama and did the same.

Valmiki Maharishi took Sita to his ashram and protected her there. When Sita gave birth to Lava and Kusa, Valmiki blessed them by rubbing one child with the tip of the grass and the other with its root - the tip of this grass is called Kucham and the root is called Lavam - thus the boys were named. Valmiki was their guardian and he brought them up as worthy sons of Rama. His first disciples to whom he taught the Ramayana were Kusa and Lava, the sons of Rama. Sri Rama himself listened to the story of the Ramayana and was pleased. Lava and Kusa sang the story before Rama and Rama did not know that they were own sons!

Thirukkolur Ammal is asking "Did I do service to the Lord and brought up the two Princes, like Valmiki?"

February 02, 2018

Thirukolur Penpillai Rahasyam-25



அனுயாத்திரம் செய்தேனோ அணிலங்களைப் போலே
இராவணனால் கடத்தப்பட்டு, இலங்கையில் சிறையில் வாடும் சீதாதேவியை மீட்டு வர, இலங்கைக்கு கற்கள் கொண்டு குரங்குகள் பாலம் அமைக்க, வாடிய முகத்துடன் அமர்ந்திருக்கும் ஸ்ரீ இராமனைக் கண்ட அணில்கள், ராமனுக்கு உதவி புரிய முன்வந்தன.

கடலில் குதித்த அணில்கள், நனைந்த உடலுடன் கடற்கரையில் உருண்டன. உடலில் ஒட்டிய சிறு மணலுடன் ஓடிய அணில்கள், பாலத்திற்கு சென்று, குரங்குகள் அடுக்கிய பாறைகளின் இடுக்கில் அம்மணல் துகள்கள் விழுமாறு உடலை உலுக்கினர்.

அணில்களின் இச்செயலை கிண்டல் செய்த குரங்குகளிடம், ஒரு அணில் – “உங்களைப் போல் பெரிய உடலும் வலிமையும் என்னிடம் இல்லை. அதனால் என்னால் இயன்றதை நான் செய்கிறேன். இதற்காக நாங்கள் இக்கடலே வற்றிப்போகும் அளவிற்கு கடலில் குதிக்க வேண்டும் என்றாலும், நாங்கள் அதையும் செய்ய தயாராகவும் உறுதியாகவும் உள்ளோம். “ராமா” என்னும் ஒரு சொல் எங்களுக்கு அந்த வலிமையை தரும்.”, என்றது.

அணிலின் இவ்வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீராமர், மனம் நெகிழ்ந்து, அணிலை தன் கையில் ஏந்தி, “ எதையும் எதிர் பார்க்காமல், உதவி புரிய வந்துள்ளீர்! உனது கூட்டத்தாரின் பெரும்உதவிக்கு மிக்க நன்றி. உன் செயலாலும், வார்த்தைகளாலும் என் மனம் மகிழ்ந்துள்ளது.”-என்றார். அணில்களின் இச்செயலினை பாராட்டி அவர் அதன் முதுகில் பரிவுடன் தடவ, அவரின் மூன்று விரல் அணில்களின் முதுகில் கோடு போட்டன. இதனாலேயே அன்று முதல் அணில்கள் முதுகில் கோடு உள்ளது.

            அணில்களின் இச்செயலை, தொண்டரடிப்பொடியாழ்வார், தன் பாசுரத்தில் :
                        குரங்குகள் மலையை நூக்கக் குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
                        தரங்க நீர் அடைக்கல் உற்ற சலம் இலா அணிலும் போலேன்;
                        மரங்கள் போல் வலிய நெஞ்சு வஞ்சனேன், நெஞ்சு தன்னால்
                        அரங்கனார்க்கு ஆட் செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே.
            -என்றார்.

குரங்குகள் மலையை தள்ளி பாலம் அமைக்க, அணில்கள், கடலில் புரண்டு, கடலை வறண்டு போக செய்ய எண்ணியும், மணலைக் கொண்டு பாலம் உறுதியாக இருக்க உதவியும் செய்து ஸ்ரீ இராமனுக்கு தங்களால் இயன்ற வழியில் உதவி புரிந்தன. எந்த ஒரு பலனையும் எதிர் பார்க்காமல், தனது சிறு உடலினைக் கொண்டு, தன்னால் இயன்ற வழியில் உதவி புரிகின்றன! நானோ இங்கு மரத்தைப் போல் வலிய நெஞ்சினைக் கொண்டு இறைவனுக்கு எவ்வுதவியும் புரியாமல், எதிர் பார்த்து மட்டுமே நின்று கொண்டிருக்கின்றேனே!

திருக்கோளூர் அம்மாள், "அணில்களைப் போல், குரங்கின் பின் சென்று, ஸ்ரீ ராமனுக்கு பக்தியுடன் சேவை புரிந்தேனோ?", என்று வினவுகிறார்.


========********========



anuyAththiram seydhEnO aNilangaLaip pOlE

In the great Indian epic, Ramayan, after Sita was abducted by Ravana, Lord Rama and Lakshmana assembled the army of monkeys with the help of King Sugriva. In order to cross the ocean, they decided to build a bridge and on the command of Sri Rama, the monkeys started working immediately, without wasting any time, and started collecting stone and boulders from the mountains. Thousands and thousands of monkeys started working day and night, to collect, cut and assemble the rocks and make sure the bridge is ready as early as possible. Even Lord Rama was amazed and pleased at the way the monkeys are working and helping him.

One day, while he was watching the work going on, he noticed squirrels doing something unusual. Noticing the squirrels, he went close to them and tried to see what they were trying to do. When he was nearing the squirrels, he heard the conversation between a monkey and a squirrel.

A monkey that was carrying a heavy stone on his back was about to step on a squirrel that came in his path and realizing it, before stepping on it, the monkey jumped back by dropping the stone. Apologizing for the act, the squirrel replied – “Please look always before placing your steps for we are small and busy running to help Lord Rama!”

Amazed at the squirrel’s words, the monkeys started laughing. Without any response to the laughs of the monkey, the squirrel said – “Look, I’m not big enough to carry rocks and boulders like you all. But we do want to help. God gave me only a little strength. I can only carry pebbles. So, while few of us are carrying pebbles, the rest of us, we jump into the ocean and make our bodies wet; come back to the beach and roll in the sand. Then we go to the boulders and shake the sand from our bodies in the gaps between the rocks you place. Even it means we have to drain the ocean by making our bodies wet and help build the bridge stand strong for the army to cross over, get Sita safe and return safely, we are ready to even do that with the little body and strength we have. Crying out aloud “Rama”, will give us all the strength we need to even drain this ocean with our tiny little body.”

Listening to the words of the squirrel, Lord Rama was impressed and he came close to them. Holding the squirrel in his hand safely, Lord Rama said to the monkeys – “Oh, I really admire your help. But, do not make fun of the weak and the small. Your strength or what you do is not important. What matters are your love and a heart without expecting anything in return for the help you do. This little squirrel has love in his heart. These tiny pebbles and stones and sand that are brought by these little squirrels are the ones that are filling the gaps between the huge boulders and rocks you add to the bridge and they are binding the bridge to stand strong!

Turning to the squirrel, Lord Rama said softly, “My dear squirrel, I apologize on behalf of my army, and thank you for your timely help. Please go and continue your work happily.” Saying this, he gently stroked the back of the squirrel with his fingers, and three lines appeared where the Lord’s fingers had touched it.

Thondaradippodi Azhwar celebrated their service by the squirrels to the Lord in his Thirumaalai pasuram:

kurangugaL malaiyai nUkkak kuLiththuth thAm puraNdittOdith
tharanga nIradaikkaluRRa salamilA aNilum pOlEn
marangaL poL valiya nenjam vanjanEn nenju thannAl
aranganArkkAtcheyyAdhE aLiyaththEn ayarkkinREnE

“The squirrels thought “when the Lord is very anxious to retrieve Sita Piratti, these monkeys are blocking the ocean very slowly. Moreover, they do not have the strength to block the ocean. It is clear that they do not have sufficient manpower to fill the gaps between the mountains with sand. Only because of this, they are not carrying sand to fill the gap between the mountains”. In order to overcome this deficit, the squirrels entered the waters to wet their bodies, without expecting any benefit out of their work. Look at me… I’m standing here without any involvement, with my mind hard like a tree. Instead of doing service to the Lord, I stand here making myself not useful and even making the lord wonder whether my heart is stone or liquid!”

Thirukkolur Ammal is asking "Did I do divine service to the Lord like the squirrels?"

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...