தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே
அந்நாட்களில், ஸ்ரீரங்கத்து எம்பெருமான் பல்லக்கில்
வீதி உலா வரும்பொழுது, முன்னால் சவுக்கால் விதியை அடித்து சுத்தப் படுத்திக் கொண்டே
இருவர் வருவர். அவர்களின் செயலால், முன் நிற்கும் கூட்டமும் விலகும். சில சமயங்களில்,
எதிர்பாராமல், அவ்வடி பக்தர்கள் மேலும் படக்கூடும்.
ஒருமுறை, அவ்வாறு அடிக்கும் பொழுது, அது பராசர பட்டரின்
தோள்பட்டையில் அடியாக விழ, பட்டரின் சீடர்கள் சவுக்கு வைத்திருப்பவரை கடிந்து கொண்டனர்.
தெரியாமல் அடித்து விட்டதாக அடித்தவன் பட்டரிடம் மன்னிப்புக் கேட்க, பட்டரோ, “பரவாயில்லை.
எம்பெருமானுக்கான கைங்கரியத்தின் போது விழுந்த அடி. மற்றொரு தோளிலும் விழவில்லையே
என்றே நான் வருந்துகிறேன்.”, என வருந்திக் கூறினாராம். பொறுமையும் மன்னிக்கும் குணமும் ஸ்ரீ வைஷ்ணவனின்
குணமாக இருக்க வேண்டும்.
திருக்கோளூர் அம்மாள், “பட்டர்பிரானைப் போல் ஸ்ரீ
வைஷ்ணவ குணத்துடன் வாழ்ந்தேனா?”, என வினவுகிறார்.
========********========
thOL kAtti vandhEnO battaraip pOlE
In olden days, when Namperumal of Sri Rangam
temple is on a procession in the streets, in order to clear the crowd, there
will be some people in front who will hit the ground with long belts so that
the crowd will clear the path and leave way for Namperumal. Accidentally, the belts
might, at times, hit the devotees too.
On one such occasion, when Namperumal was amidst
the crowd, the belt’s edge hit Parasara Bhattar on his shoulder. Bhattar's
disciples got angry and used harsh words against the person who was using the
belt. Calming his disciples, Bhattar said-"They were only doing their
duty. There is no mistake in that. Besides, what's wrong in being hit by those
in the service of the Lord?"
He then told the person who hit him,
"What you did was correct. When I got hit on one shoulder, I should have
offered my other shoulder also to you. That was my mistake and I feel bad about
it. Now I am showing you my other shoulder".
The person who used the leather belt apologized
to Bhattar. It is the quality of a Srivaishnava to show patience and mercy to
anyone who makes mistake.
Thirukkolur Ammal asks, "Did I show these
qualities any time like Bhattar?"
No comments:
Post a Comment