January 31, 2018

Thirukolur Penpillai Rahasyam-24




ஆயனை வளர்தேனோ யசோதையாரைப் போலே

தேவகி வசுதேவரின் மகனாய்ப் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணன், நந்தகோபன் யசோதை மகனாக ஆயர்பாடியில் வளர்ந்தார். யாதவனாய், ஆயர் குல திலகமாய், யசோதையின் மகனாய் வளர்ந்த(ஆயன் - யாதவன்) கிருஷ்ணன், சிறு வயது முதலே சேட்டைகள் செய்தாலும், லீலைகள் புரிந்தாலும், வெண்ணை திருடினாலும், மண்ணை தின்றாலும், லீலைகளின் போது கண்ணனை கண்டித்தாலும், தண்டித்தாலும் கண்ணனின் செல்லம் கொஞ்சும் அழகினை யசோதை மட்டுமே அனுபவித்தார்!

தேவகி மகனாய் பிறந்தாலும், யசோதை மகனாகவே கிருஷ்ணன் வளர்ந்தார். இதனையே, பாபநாசம் சிவன் அவர்கள் தன் வரிகளின் வழி, அனைவரின் ஏக்கத்தையும் விளக்கியுள்ளார்.

                        “என்ன தவம் செய்தனை யசோதா
எங்கும் நிறை பரபிரம்மம் அம்மா என்றழைக்க II
ஈரேழு புவனங்கள் படைத்தவனை 
கையிலேந்தி சீராட்டி பாலுட்டி தாலாட்ட நீ ||
 பிரமனும் இந்தரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய்பொத்தி கெஞ்சவைத்தாய் கண்ணனை ||”

     திருக்கோளூர் அம்மாள், "யசோதை போல் ஸ்ரீ கிருஷ்ணனை அக்கறையுடனும் அன்புடனும் வளர்தேனோ?", என்று வினவுகிறார்.

========********========


Ayanai vaLarththaEnO yasOdhaiyAraip pOlE

After Sri Krishna was born to Devaki and Vasudeva, he was taken to Gokulam by Vasudeva, across the Yamuna river, at Yashoda and Nandagopa's place, in order to protect Krishna from King Kamsa.

Krishna grew up as the son of Yashoda. He grew up as a cowherd yadava in their house. Krishna grew up as the most mischievous kid ever! His Lilas in Gokulam along with the Yadava clan are stated in the great Indian Epic, Mahabharat. Though Devaki gave birth to Krishna, the Lord Himself, it was only Yasodha  who got to witness the Lilas of the lord and also to witness the beauty of the Lord in all his mischievous Lilas, smile, sleeping, even in feeding him and seeing the kid grow up! For poet-saint Surdas, only Yasodha’s deep affection for Krishna was an epitome of 'Vatsalya Prema' (Mother's Love) and even 'Vatsalya Bhakti’ (Mother's Devotion).

Witnessing Yasodha punishing Krishna for his mischievous acts by tying him to the grinding stone, Sage Narada asked : “Enna Thavam Seidhanai, Yashoda?" in Tamil, which literally means: "What penance did You (Mother Yashoda) perform  to be bestowed with the powers to punish the supreme (Sriman Narayana)". And also seen as a question to Sriman Naryana himself as to how he accepts all this. It literally means what penance Yashoda had undertaken in her previous birth to be bestowed upon with the powers to punish, love, and care for the Supreme Vishnu.

 Thirukkolur Ammal is asking "Did I bring up Krishna like Yashoda did, with utmost love and care?"

January 30, 2018

Thirukolur Penpillai Rahasyam-23



ஆழி மறை என்றேனோ வசுதேவரைப் போலே

சூரசேனரின் மகன் வசுதேவர் , தேவகிக்கு எட்டாவது குழந்தையாக மதுராவின் சிறையில் கிருட்டிணன் பிறந்தார். வசுதேவர் மற்றும் தேவகியின் மகனாய் அவதரித்த பகவான், சங்குசக்ரதாரியாய், தன் ஆயுதங்களுடன் அவதரித்தார். எங்கே உறங்கிக் கொண்டிருக்கும் கம்சனுக்கு தங்கள் மகனின் பிறப்பு தெரிந்து அதனால் ஸ்ரீமன் நாராயணனுக்கு தீங்கு நேர்ந்துவிடுமோ என்று பயந்த வசுதேவர், பகவானிடம் தனது சுயரூபத்தினை மறைத்துகொள்ளுமாறு வேண்டினார்.

அவதரித்தது ஸ்ரீமன் நாராயணனாகவே இருப்பினும், எங்கே கம்சனால் தீங்கு நேர்ந்து விடுமோ என பயந்த வசுதேவர் போல், தன்னிலை மற்றும் இறைநிலை மறந்த தூய அன்பினையும் அக்கறையையும் மட்டுமே மனதில் கொண்டு இறைவனை மங்களாசாசனம் செய்தல் வேண்டும். இதனையே பெரியாழ்வாரும் வழிமொழிகிறார்.


     திருக்கோளூர் அம்மாள், "வசுதேவரைப் போல் ஸ்ரீமன் நாராயணன் மீது அக்கறை கொண்டுள்ளேனா?", என்று வினவுகிறார்.
========********========


Azhi maRai enREnO vasudhEvaraip pOlE

Vasudeva was the father of the eighth incarnation of Vishnu, Krishna, and his sibling Balarama. When Sri Krishna was born to Devaki and Vasudeva, he appeared bearing his weapons Conch and SudharsanaChakra in his hands ("devakI pUrvasandhyAm AvirbhUtam mahAtmanA").

Devaki and Vasudeva prayed to him to hide his form as they were worried that Kamsa might wake up and if he knows about the birth of the kid, he might slay him! Sri Krishna hid His form and changed into a normal human child. He then told them to carry Him to Gokulam and leave Him at Nandagopa and Yashoda's place, which they did. There He grew up as their son and performed His avatara activities.

This is the nature of doing mangaLAshAsanam to the Lord, without thinking about his stature and ours. It should only be based on divine love and care.

Thirukkolur Ammal is asking "Did I show great concern for Him like Devaki and Vasudeva did?"




Thirukolur Penpillai Rahasyam - 22



தெய்வத்தைப் பெற்றேனோ தேவகியார் போலே

முன்பொரு காலத்தில், முனிவர் சுதாபர் மற்றும் அவரது துணைவியார் பிரசினி, ஸ்ரீமன் நாராயணனைப் போன்ற பிள்ளை வேண்டி ஸ்ரீமன் நாராயணனை வேண்டி தவமிருந்தனர். அவர்களின் பக்திக்கு இணங்கி, ஸ்ரீமன் நாராயணனும் அவ்வரத்தினை அவர்களுக்கு வழங்கினார். அவர்களுக்கு மகனாய், அப்பிறவியில் பிரசினிகர்பா என்ற பெயரில் அவதரித்த ஸ்ரீமன் நாராயணன், அவர்கள் கச்யபர் மற்றும் அதிதியாய் மறுபிறவி எடுத்தபொழுது, வாமனனாய் அவதரித்தார்.

வசுதேவர் மற்றும் தேவகியாய் மறுபிறப்பெடுத்த பொழுது, அவர்களின் எட்டாவது மகன், ஸ்ரீ கிருஷ்ணனாய் அவதரித்தார்.


திருக்கோளூர் அம்மாள், "தேவகியைப் போல் கடுந்தவமிருந்து ஸ்ரீமன் நாராயணனை பெற்றேனா?", என்று வினவுகிறார்.

========********========


dheyvaththaip peRREnO dhEvakiyAr pOlE

During the time Lord Brahma's son Svayambhuva Manu ruled this earth, Sutapas and his wife Pruchni prayed to Narayana for a long time. When the Lord appeared before them, they asked for a son like Him to be born to them. He blessed them and He Himself was born to them as Pruchnigarba. When they were reborn as Kashyapa and Atiti, He came as their son Vamana. They were reborn for a third time as Vasudeva and Devaki.

In that birth, Devaki was born as the younger sister of Kamsa. After their wedding, a divine voice informed that their eighth son would kill Kamsa. So, Kamsa imprisoned Devaki and Vasudeva and slew every time a child was born to them.
The eighth child was born inside the jail in the month of Avani in the star Rohini in Ashtami thithi at midnight. That child was Krishna. He told them how He was born to them three times. Krishna was later switched with Yashoda's daughter Ekanamsha (an incarnation of Yoganidra/Maya) by Vasudeva, as per the advice of Lord Sriman Narayana.

Thirukkolur Ammal is asking "Did I do severe penance and give birth to the Lord like Devaki did?"

January 29, 2018

Thirukolur Penpillai Rahasyam - 21



தேவு மற்றறியேன் என்றேனோ மதுரகவியைப் போலே

திருக்கோளூர் திவ்யதேசத்தில் அவதரித்த மதுரக்கவி ஆழ்வார், சுவாமி நம்மாழ்வாரின் கீர்த்தியினை உணர்ந்து ஆழ்வார் திருநகரி சென்று அவரின் சீடராய் சரணடைந்தார்.

"ஆச்சார்ய அபிமானம் உத்தாராகம்" என்பதற்கு உதாரணமாய், அன்னை, தந்தை, குரு மற்றும் கடவுள் என அனைத்துமே சுவாமி நம்மாழ்வார் மட்டுமே என 'ஆச்சார்யா பக்தி' ஒன்றே கொள்கையாய் கொண்டு வாழ்ந்தார் மதுரக்கவி ஆழ்வார். இவர் 11 பாடல்கள் கொண்ட ஒரே ஒரு பதிகம் பாடியுள்ளார். வைணவ ஆழ்வார்களில், பகவான் விஷ்ணுவைப் பாடாமல் நம்மாழ்வாரை மட்டுமே தெய்வமாக நினைத்து பாடினார்.

"கண்ணிநுண் சிறுதாம்பு" என தொடங்கும் தனது பதிகத்தில்,
                        "தேவு மற்றறியேன்; குருகூர் நம்பிப்
                        பாவின் இன்னிசை பாடிதிரிவேனே"
- என்ற வரிகளின் வழியாக, "ஆழ்வாரையொழிய (சுவாமி நம்மாழ்வார்) வேறொரு தெய்வத்தை அறியமாட்டேன்; அவ்வாழ்வாருடைய அருளிச் செயல்களின் இனிய இசையையே பாடிக்கொண்டு திரியக்கடவேன்." -என தனது ஆச்சார்ய அபிமானத்தை விளக்குகிறார்!


            திருக்கோளூர் அம்மாள், "மதுரக்கவி ஆழ்வார் போல் ஆச்சார்ய பக்தி ஒன்றே வாழ்வின் நோக்கமென வாழ்ந்தேனா?", என்று வினவுகிறார்.

========********========



dhEvu maRRaRiyEn enREnO madhurakaviyaip pOlaE

Madhurakavi Azhwar was born in Thirukkolur near Azhwar Thirunagari. Mathurakavi is believed to have recorded and compiled the works of Nammazhwar (Thiruvaimozhi (1102 verses)). The 11 verses of “Kanninun Siru Thambu” composed by Swami Madhurakavi Azhwar is considered as the key which opened the treasure to the 4000 verses of Nalayira Divya Prabandham. These verses were chanted by Swami Nathamuni 12,000 times to propitiate Swami Nammazhwar and re-obtain the lost Nalayira Divya Prabandham from Swami Nammazhwar.

While Madhurakavi Azhwar was on a yatra to the North, he saw a divine light in the southern sky. Following it he reached Azhwar Thirunagari and found Swami Nammazhwar sitting under a Tamarind tree, in yogic stance. Realizing the greatness of Swami Nammazhwar, Madhurakavi Azhwar fell at his feet and became his disciple.

He then considered his acharya, Nammazhwar as everything - mother, father, acharya (Guru) and God - to him ("annaiyAy aththanAy"). He expressed that in his divine work Kanninun Siruththambu - a work entirely dedicated to Nammazhwar.

In that work, occurs the following pasuram:

                           nAvinAl naviRRu inbam eydhinEn
                           mEvinEn avan ponnadi meymmaiyE
                           dhEvu maRRaRiyEn kurugUr nambi
                           pAvin innisai pAdith thirivanE

In this pasuram, Madhurakavi Azhwar states that he knows no God other than Nammazhwar ("dhEvu maRRu aRiyEn"). He not only is renouncing the things of this world, but he is rejecting the other world and even Him, in favor of his acharya. The philosophy of following one's acharya as everything, demonstrated by Srivaishnava Acharyas ("AchArya abhimAnamE uththAragam") arose from Madhurakavi Azhwar's Acharya bhakti.


Thirukkolur Ammal is asking "Did I demonstrate Acharya bhakti like Madhurakavi Azhwar?"

January 27, 2018

Thirukolur Penpillai Rahasyam - 20



அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்ரரைப் போலே

கௌசிகன் என்னும் மன்னன், பிரம்மரிஷி வசிட்டரோடு ஏற்பட்ட போட்டியின் காரணமாக, கடுமையான தவங்களைச் செய்து தானும் பிரம்ம ரிஷியானார். அவரே விசுவாமித்திரர்! காயத்ரி மந்தரம் உட்பட பழமையான ரிக் வேதத்தின் பல பகுதிகளை இவர் எழுதியதாக கருதப்படுகிறது. 

இராமவதாரத்தில், ஒரு நாள், தசரத சக்கரவர்த்தியின் அரண்மனைக்கு வந்த விசுவாமித்ரர் - "தசரத சக்ரவர்த்தியே! என் சித்தாஸ்ரமத்தில் வசிக்கும் முனிவர்கள் அசுரர்களின் துன்பத்திற்கு ஆளாகின்றனர். சித்தாஸ்ரமத்தில் நடைபெறவுள்ள யாகத்துக்கு ஆறுநாட்கள் காவலாக உன் புதல்வன், ஸ்ரீ ராமனை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இராமன் எங்களுக்கு பாதுகாப்பு அரணாகவும், அசுரர்களின் கொட்டத்தை அடக்கவும் உதவியாய் இருப்பான்.", என்றார்.

அசுரர்களுக்கு எதிராக தன் புதல்வனை அனுப்ப தயங்கிய மன்னன், இராமன் இன்னும் இளைஞன் என்றும், அதற்கு பதிலாக, தாமே தம் பெரும் சேனையுடன் வந்து பாதுகாப்பு அளிப்பதாகவும் வேண்டினார். மன்னரின் வார்த்தைகளைக் கேட்ட முனிவர், "தசரத சக்ரவர்த்தியே! எம் வார்த்தைகளில் நம்பிக்கை கொள். உம் புதல்வன் யார் என்பதும், அவனது வீரத்தின் மதிப்பு என்ன என்பதும் வசிஷ்டர் மற்றும் என் போன்ற பிரம்மரிஷிகளுக்கே  நன்கு தெரியும். வேதம் கற்றோர்க்கு மட்டுமே உம் புதல்வனின் பலமும் குணமும் தெரியும். தயங்காமல் உம் புதல்வனை அனுப்பு. அவனின் வீரத்தினை உலகம் அறிய வேண்டிய நேரம் இது.", என்று கூறினார்.

                   "அஹம்வேத்மி மஹாத்மானம் ராமம் ஸ்த்யராக்ரமம் வஷிஷ்டோபி
                     மஹாதேஜா யே சேமே தபஸிஸ்திதா"

நான் ராமனை மஹாத்மா என உண்மையில் அறிகிறேன். மஹாதேஜஸ்வியான விஷிஷ்டரும் கூட இதை அறிவார். அனைவரும் இதை அறிவார்கள்!

 மன்னனும், முனிவரின் வார்த்தையில் உள்ள உண்மையினை உணர்ந்து, நம்பிக்கையுடன் ஸ்ரீ ராமனையும், இராமனை விட்டு என்றும் நீங்காத இலட்சுமணனையும் முனிவருடன் வழியனுப்பி வைத்தார்.


           திருக்கோளூர் அம்மாள், "பிரம்மரிஷி விசுவாமித்ரரைப் போல் உண்மை அறிந்து, அதை நம்பிக்கையுடன் கூற என்னால் இயலுமா?", என்று வினவுகிறார்.

========********========



aham vEdhmi enREnO visvAmithraraip pOlaE

Brahmarshi Vishvamitra is one of the most venerated sages of ancient India. He is credited as the author of most of  Mandala 3 of the Rigveda, including Gayatri Mantra. The Puranas mention that only 24 rishis since antiquity have understood the whole meaning of—and thus wielded the whole power of—Gayatri Mantra. Vishvamitra is supposed to be the first!

Vishvamitra was a king in ancient India, called by the name, Kaushika. An enraged King Kaushika once had a fight against Brahmarishi Vasishta and looking at the powers of the Brahmarishi, Vishvamitra too performed tapasya for several years to please Shiva. Even after getting the grace of Lord Shiva, Vishvamitra lost his battle against brahmarishi Vasishta. This incident made a deep impression on the King. He realized that power obtained by penances is far greater than mere physical might. He renounced his kingdom and began his quest to become a greater rishi than Vashista. He took on the name Vishvamitra.

During the era of Ramayan, one day, Vishvamitra came to king Dasaratha's court. The king received him with great honor. The sage then asked Dasaratha to give him Sri Rama so that He can defend the 6 days of yaga which is to be conducted in his ashram by the great sages and maharishis, from the rakshasas who were disturbing it.

The king, who is really fond of Sri Rama than everyone else replied with a concerned heart that Rama is very young and instead, the King himself would come along with a vast army and defend the Yaga and slay the rakshasas!

Vishvamitra replied: "O King! I know Sri Rama. He is capable of defeating the rakshasas. Only people like me and Vasishta truly know who He is. Understand that my words are nothing but the truth."

“aham vedmi mahAtmAnam rAmam satya parAkramam
 vasishTopi mahAtejA ye cheme tapasistithA:”

Vasishta agreed with Vishvamitra and asked the king to send Rama and Lakshmana along with Vishvamitra. The king agreed and the two princes went with the sage and helped protect his yaga against the likes of Tataka and Maricha.

Thirukkolur Ammal is asking "Am I capable of understanding the truth and speak it like Vishvamitra?"



January 26, 2018

Thirukolur Penpillai Rahasyam - 19


அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே

மண்டோதரி, பாதாள உலகின் மாபெரும் அரசனான மயாசுரனின் மகள். அசுர குலமானாலும், சிவபெருமானின் சிறந்த பக்தை. இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி. மண்டோதரி என்றால் மென்மையான இடையுடையவள்ன்று பொருள். ஹனுமனே மண்டோதரியை கண்டதும் சீதாப் பிராட்டி என்று எண்ணினார்! மண்டோதரி மிகவும் அழகானவள், தூய பக்தியுடையவள், பண்பானவள், நேர்மையானவள். இராமன் மீது சீதை கொண்டிருந்த பக்தியை மிகவும் மதித்தாள் மண்டோதரி.

இராமாவதாரத்தில், ஸ்ரீ ராமபிரானாய் அவதரித்து, இராவணனை அழித்தார் ஸ்ரீமன் நாராயணன். தன் அவதாரத்தின் இரகசியம் தனை ஸ்ரீராமனே அறியாத போதும், ராவணனின் துணைவியான மண்டோதரி அறிந்திருந்தாள். சீதையை இராவணன் கவர்ந்து கொண்டு இலங்கை வந்த போதும், இராமபிரான் அமைதி தூது அனுப்பிய போதும், மண்டோதரி இராவணனை எச்சரித்து, ராமபிரானுடன் நட்புறவு கொள்ளவும் வேண்டினாள்.

சிறந்த சிவ பக்தையாக மண்டோதரி விளங்கியதால், சிவ பெருமானே மண்டோதரியிடம் இராமாவதாரத்தின் இரகசியத்தைக் கூறி, இராவணனை எச்சரிக்கும் படியும், ஸ்ரீ இராமனுடன் நட்புறவு கொள்ளவும் கூறியிருந்தார்! பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நல்வழிக்குக் கொண்டு வர அரும்பாடு பட்டாள். 

இராமபிரான் பானத்தால் இராவணன் மடிந்து வீழ்ந்த போது, மண்டோதரி - "ஸ்ரீ ராமன் சாதாரண மானிடர் அல்ல என்று முன்பே கூறினேனே!! பிறர் மனைவியை கவர்ந்து வந்தீர்...தலைகனத்துடன் ஆட்சி புரிந்தீர்...ஸ்ரீமன் நாராயணனே இராமனாய் அவதரித்து உங்களை வதம் செய்யும் நிலைக்கு உங்களை அனுமதித்து தடுக்காமல் விட்டேனே!"- என்று கதறி அழுதாள்.

            திருக்கோளூர் அம்மாள், "மண்டோதரியைப் போல் அவதார இரகசியங்களை அறியும் அளவு பக்தி கொண்டிருந்தேனா இல்லை அதை கூறும் அளவிற்கு தான் நம்பிக்கை பெற்றிருந்தேனா?", என்று வினவுகிறார்.

========********========


avan dheyvam enREnO maNdOdhariyaip pOlaE

Mandodhari was the wife of Ravana and his queen. Mandodhari was the daughter of Mayasura, the King of the Asuras (demons), and the apsara (celestial nymphs) Hema. She was also a great pativrata. Mandodhari is known to be beautiful, pious, righteous and an ardent devotee of Lord Shiva. 

When Ravana captured Sita and brought Her to Lanka, she advised Ravana that it was a great mistake to kidnap Her and that it would lead to great destruction. She was warned by Lord Shiva about the destruction Ravana is about to bring to him, his country and to his family. She also advised him to seek Rama's friendship.

Ravan did not listen to her and eventually went into war with Rama and Lakshmana. In the end, he was defeated and killed by Rama. His many wives then came to the battlefield and cried over his dead body. At that time, Mandodhari said- "Rama is not just an ordinary human being. It is Sriman Narayana who carries the divine Conch and Chakra. You did not listen to the good advice I gave you. The improper desire that you had for the great pativrata Sita is what caused this end. There is no doubt that Sri Vishnu came down as Rama and killed you".

Thirukkolur Ammal is asking "Am I capable of understanding the secrets of an Avatar by the Lord and talking about it confidentially like Mandodhari did?


Thirukolur Penpillai Rahasyam - 18



அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே

அசோகவனத்தில் சீதாப்பிராட்டி இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த பொழுது அவரின் காவலுக்கு இருக்கும் அசுரர்களின் தலைவியாய்  த்ரிஜடை என்னும் அசுர குல பெண்மணி இருந்தார். த்ரிஜடை, விபீஷணன் மகள் ஆவார். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், த்ரிஜடை சீதாப்பிராட்டிக்கு உறுதுணையாய் இருந்தார். தந்தையைப் போல் நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தார். மனமுடைந்து இருக்கும் சீதையை த்ரிஜடையே இராமனின் இலங்கை நோக்கிய பயணம் பற்றிக் கூறி தேற்றுவார்.

சீதை, த்ரிஜடையிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருந்த பொழுது, சீதை த்ரிஜடையை நோக்கி, “, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன், அல்லவா!!என்றார்.

இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கி, அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்! நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)”, என்றார்.

ஒரு நாள், காவலுக்கு வந்த  பிற அசுர குல பெண்கள் சீதையை கிண்டல் செய்த பொழுது, அங்கு வந்த த்ரிஜடை, அவர்களிடம் கோபமாக, "நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதில் இராவணன் சிகப்பு நிற உடை அணிந்து கழுதை மீது அமர்ந்து தெற்கு நோக்கி பயணிக்க, வானில் இருந்து ஆயிரம் அன்னப்பறவைகள் கொண்ட தங்க பல்லக்கில், வெண்ணிற உடை அணிந்து, வெள்ளை நிற மலர் மாலை அணிந்து வந்து ஸ்ரீ இராமன் சீதையை அழைத்துச் சென்றார். என் கனவு நிச்சயம் நடக்கும். எனவே, நீங்கள் உயிருடன் வாழ விரும்பினால் இப்பொழுதே சீதையிடம் சரணடையுங்கள். ஸ்ரீ இராமன் இலங்கை வந்து சேரும் நேரம், அவரின் கோபத்தில் இருந்து உங்களை காப்பாற்றும் சக்தி, சீதாப்பிராட்டியிடம் மட்டுமே உள்ளது. எனவே உண்மை உணர்ந்து, இப்பொழுதே அவரிடம் சரணடையுங்கள்.", என்றார்.

ஸ்ரீ ராமனுக்கும் இராவணனுக்கும் இடையே போர் நடந்த போது, த்ரிஜடை, போரின் நிலவரங்களையும் ஸ்ரீ ராமனின் வெற்றிகள் குறித்த செய்திகளையும் அனுதினமும் கூறி சீதாப்பிராட்டிக்கு உதவிகள் புரிந்தார்.


   திருக்கோளூர் அம்மாள், "த்ரிஜடையைப் போல் பிராட்டிக்கு நான் ஏதும் உதவி புரிந்தேனா?", என்று வினவுகிறார்.

========********========


andharangam sonnEnO thrijadaiyaip pOlaE

Trijada was a servant of Ravana and one of the demons who he had ordered to guard Sita in the Asoka Vanam. Trijada is the daughter of Vibhishana. Like father, Trijada also follows the path of justice and also believes in Sri Rama.

After being prisoned in Ashoka Vanam, Trijada was the only soul who was there to comfort and give confidence to Sita. Sita too shares her feelings, her stories and thoughts to Trijada, just like how she would share it to her sisters and friends. Trijada too protects Sita from the ill-talks of other guards. One day, the other guards were teasing Sita and mocked her for her character and for not enjoying the life that King Ravana is ready to give! 

Unable to handle the harsh words and demands of the rakshasis, raged Trijada says, "I saw Ravana wearing a red dress and heading south while seated on a donkey. I also saw Rama wearing a white dress with white flowers and looking like Vishnu, fly in from the sky in a golden palanquin which is being pulled by a thousand beautifully flawless white swans and carry Sita around on an elephant. Therefore, Rama will definitely defeat Ravana and take Sita away. If you all wish to survive, it is better to surrender to Sita and beg her pardon. When Sri Rama reaches Sri Lanka, and he will, nothing can save you from the raged and furious heart of him, other than Sita’s words and one look. So, if you all wish to live a life, surrender to her, immediately."

Later, during the war between Rama and Ravana, she brought news of the many victories of Rama's army to Sita. When Indrajit made Rama and Lakshmana unconscious using his Nagastra, the rakshasas took Sita to the battlefield and claimed that they were dead. When Sita shed tears seeing them dead, Trijada consoled her by saying "Do not fear. Rama and Lakshmana have only fainted. They cannot be killed by the arrows of these rakshasas. There’s no arrow in this world that could kill them!"

Thus, Trijada helped Piratti in many ways.


Thirukkolur Ammal is asking "Did I do any of the services or at least comforted her and gave confidence to Sita Piratti like Trijada?"

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...