April 30, 2018

Thirukolur Penpillai Rahasyam-57


 இரு மிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே


மண்ணுக்குள் புதைந்திருந்த திருநாராயணபுரம் கோவிலை, அவ்வூரின் மக்கள் மற்றும் மன்னனின் உதவியுடன் மீட்டெடுத்து, அங்கு புதியதாய் ஒரு கோவிலைக் கட்டி, மூலவருக்கு மூன்று நாள் திருவாராதனம் செய்த  ஸ்ரீ ராமானுஜரின் கனவில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணன், “உற்சவரான ராமப்ரியன் டெல்லி பாதுஷாவின் அரண்மனையில் உள்ளார். அவரை அழைத்து வருவாயாக!”, என்றார்.

ராமானுஜர், உற்சவரை மீட்க இரண்டு மாதங்கள் பயணம் செய்து, பாதுஷாவின் அரண்மனையை அடைந்தார். பாதுஷாவிடம் நடந்தவற்றைக் கூறி, தான் வந்ததற்க்கான காரணத்தையும் கூறினார். பாதுஷா, “ அவ்விக்ரகம் என் மகளிடம் உள்ளது. அவளுக்கு மிகவும் பிரியமான விக்ரகம். கொடுக்க விரும்ப மாட்டாள். நீங்கள் அவரை கூப்பிடுங்கள். அவர் உங்களுடன் வந்தால் கூட்டிக் கொண்டு செல்லுங்கள்.” – என்றார். இளவரசியின் அறைக்கு சென்ற ஸ்ரீ ராமானுஜரும் பாதுஷாவும் அங்கு, இளவரசியின் படுக்கையில் செல்வநாராயணனின் விக்கிரகத்தைக் கண்டனர்.

“சாரங்கபாணி தளர் நடை நடவானோ.” என்று பெரியாழ்வார் ஸ்ரீ கிருஷ்ணனை அழைத்தது போல், ஸ்ரீ ராமானுஜர், தன் இரு கைகளை விரித்து, “என் செல்வப்பிள்ளையே வாராய்!”- என கண்களில் நீர் பெருக அழைத்தார். ஸ்ரீ ராமானுஜரின் குரலைக் கேட்டதும், ராமப்ரியன் உடனே தான் அணிந்திருந்த ஆபரணங்கள் ஜொலிக்க, சின்னஞ்சிறு   பாதங்களில் சலங்கை சிணுங்க, ஓடி வந்து ராமானுஜரின் மடியில் ஏறி அமர்ந்து தன் இரு பிஞ்சுக் கரங்களால் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டார்.

பாதுஷாவின் அனுமதியுடன் பின், ஸ்ரீ ராமானுஜர்  ராமப்ரியனை திருநாராயணபுரம் அழைத்து வந்தார். கோவிலில் அவரை நிறுவி, உர்ச்சவமூர்த்திக்குரிய உத்சவங்களை முன்னின்று நடத்தினார்.

திருக்கோளூர் அம்மாள், “செல்வப்பிள்ளை போல் இரு கைகளால்  ஸ்ரீ ராமானுஜரின் கழுத்தை அன்புடன் அனைத்து பிடித்தேனோ?”  - என்று வினவுகிறார்.

========*********========



 iru midaRu pidiththEnO selvappiLLaiyaip pOlE

In 1069 C.E., Swami Ramanuja left Srirangam and stayed in the Hoysala Kingdom for not less than 20 years as a result of the conflicts arising between Chola King and Sri Vaishnavam. During his stay, one night, in his dream Lord Thirunarayana appeared and said- "I am buried under an ant hill in Yadavagiri. Find me from the ground, install me in a temple."

Ramanuja took the help of the Hoysala king and retrived the idol of Tirunarayanan under an ant-hill. But, as the ancient temple was crumbled and covered with mud for years, he built a new temple for the Lord. Hoysala Bitti Deva, gave him one lakh varahas, of which 50,000 were used for construction of the temple. Bitti also stationed one of his officers in Melkote, to help the Acharya. With the temple being built and the Lord being placed as the main deity and idol, Swami Ramanujar performed thiruvaradhanam for Him for three days. While he was not able to find the utsava vigraha,, Thirunarayana appeared in his dream and told him "Our utsava murthi, Ramapriyar, is with the daughter of the Badshah at Delhi."

Ramanuja, therefore, left for Delhi. After two month long journey, he met the Badshah, blessed him and informed him that he came to know that the Badshah is having the Idol of Sri Ramapriyar and he wanted to take him back to Yadavadri as per the Lord’s command. After searching the whole palace, they came to know that Badshah's daughter was having the deity of Sri Ramapriyar.The king was surprised to hear this. The king replied-"She is very fond of the idol and I do not think she would agree to part with it. Call out the Lord's name and if the Lord comes to you on his own, you can take Him back."

Swami Ramanuja invited Him like Periyazhvar called to Krishna in his divine pasurams "sArngapANi thaLar nadai nadavAnO". ( “Oh! My Lord! My Chella piLLaay! Please come and sit on my lap!”)

On hearing the voice of Swami Ramanujar, Ramapriyar, who was on the Badshah's daughter's bed, with all His jewels blinging and anklets humming and crown shining, walked towards Ramanuja and sat in his lap. Ramanuja embraced Him and called Him "vArAy! en selvap piLLaiyE!" (Come, my dear child). Ramapriyar also embraced Ramanuja by wrapping His divine hands around his neck. From that day forward, He was called "selvap piLLai" and "yatirAja selvakumAra".

Ramanuja then returned to Yadavadri with Selva Pillai and installed Him in the temple and performed utsavams for Him.

Thirukkolur Ammal is asking "Did I embrace acharya like Chella Pillai?"





April 14, 2018

Thirukolur Penpillai Rahasyam-56



இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே
கர்நாடகத்தின் மைசூரில் உள்ள சாலகிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம், அஸ்வினி நட்சத்திரத்தில் ஆந்திரபூரணர் என்னும் இயற்பெயரோடு பிறந்த வடுகநம்பி, வைணவ ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை மாணாக்கரில் ஒருவர். தன் குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும் புகழப்பெறுகிறார்.  
இராமானுசரோடு திருவரங்கனை சேவிக்க செல்லும்போதெல்லாம், இராமானுசர் அரங்கனின் வடிவழகில் தன்னைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ள, நம்பியோ தன் ஆச்சாரியனாகிய இராமானுசரின் வடிவழகில் லயித்துக் கொண்டிருப்பார். இதனை ஒருநாள் கண்ணுற்ற இராமானுசர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின் பாடலைப் பாடி அரங்கனின் கண்ணழகை காணும்படிக் கூற, நம்பியோ திருப்பாணாழ்வாரின் பாடலாகிய "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே..." என பதிலளிக்க, இவரின் குருபக்தியை பெருதும் மெச்சினார் உடையவர்.
ஒரு நாள், இராமானுசருக்காக பால் சூடுபடுத்திக் கொண்டிருக்கையில் திருவரங்கத்து அரங்கநாதன் கோயில் உற்சவராகிய நம்பெருமாள் உலா வந்துக் கொண்டிருந்தார். அவரை சேவிக்க (தொழும் பொருட்டு) இராமானுசர் தனது மாணாக்கர் ஒருவரை அனுப்பி வடுக நம்பியை அழைத்து வரக் கூறினார். “வடுகா, விரைந்து வா... நம்பெருமாள் உலா வந்து கொண்டிருக்கிறார். சேவித்துக்கொள்." என அழைத்தனர். அதற்கு வடுக நம்பியோ, “பெருமாளைக் காண நான் வந்து விட்டால், எம்பெருமாளுக்காக (இராமானுசர்) தயாராகிக் கொண்டிருக்கும் பால் பொங்கிவிடும். அதன் சுவையும் போய்விடும். ஆச்சார்யாருக்கான எனது சேவையை முதலில் சரியாக புரிந்து விட்டு வருகிறேன்.”, என்றார் பணிவுடன்.
தாமதமாக வந்த நம்பியை இராமானுசர் கடிந்துக்கொள்ள அதற்கு "உம்பெருமாளை (நம்பெருமாள் - ரங்கநாதன்) சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமாளுக்கான (இராமானுசர்) சேவையை (பணிவிடை) யார் செய்வது" என்று பதிலளித்தார்.

திருக்கோளூர் அம்மாள், “வடுக நம்பியைப் போல் ஆச்சார்ய பக்தி கொண்டுள்ளேனா?” – என வினவுகிறார்.
  ========********========

ingu pAl pongum enREnO vaduganambiyaip pOlaE

Vaduga Nambi, born in Saligramam in Karnataka, was a very close disciple of Swami Ramanuja. His faith in his acharya was unshakable that there are many incidents where his concern for Swami Ramanuja was more than what he had for the Lord. This is known as Madhurakavi nishtai (also known as Charamopaya nishtai) - the acharya bhakti shown by Madhurakavi Azhvar toward Nammazhvar.

One time, at Sri Rangam, while Vaduga Nambi was engaged in preparing milk for Swami Ramanuja, the processional deity Lord Namperumal was being glorified by Srivaishnavas. As Namperumal came outside Ramanuja's mutt, everyone went out to have His darshan. Ramanuja was outside and noticing Vaduga Nambi's absence, he sent his disciples to ask Vaduga Nambi to come outside. Vaduga Nambi politely responded- “If I step out to see the Lord then the milk I’m preparing for Swami Ramanuja would overheat, overflow and lose its flavor. I will finish my service to my Acharya first and then I will come out to see the Lord.” Such was his acharya bhakti. Such was his devotion towards Swami Ramanuja. To Vaduga Nambi, even Lord was only next to Swami Ramanuja.

Thirukkolur Ammal is asking "Did I show acharya bhakti like Vaduga Nambi?"

April 03, 2018

Thirukolur Penpillai Rahasyam-55



 இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே
இந்திரபிரஸ்தம் உருவாக்கப்பட்டு, யுதிஷ்டிரன் மன்னனாக முடிசூட்டப்பட்டான். விழாவில் கலந்துகொண்ட துரியோதனன், அரண்மனையை சுற்றிப் பார்க்கும் போது நீரில் விழுந்து விட, அதைக் கண்ட த்ரௌபதி நகைக்க, துரியோதனனின் கோபத்திற்கு வழி வகுத்தது.

சகுனியின் துணை கொண்டு, திட்டம் தீட்டி, பாண்டவர்களையும் த்ரௌபதியையும் அஸ்தினாபுரம் வரவழைத்தான் துரியோதனன். சகுனியுடன் யுதிஷ்டிரன் சூதாடினான். நாட்டை இழந்தான். அரண்மனையை இழந்தான். செல்வங்களை இழந்தான். தன் தம்பிகளை இழந்தான். தன்னை இழந்தான். இறுதியில், திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம் வைத்து விளையாடு. இழந்தது அனைத்தையும் திருப்பித் தருகிறேன்.” என்று சவால் விட்டான் துரியோதனன். சகுனியின் சூழ்ச்சியின் தொடர் வெற்றிகளின் விளைவாக த்ரௌபதியையும் இழந்தான்.

பாஞ்சால தேசத்து இளவரசி, இந்திரபிரஸ்தம் தேசத்து மகாராணி...பாஞ்சாலி, நொடியில் பணிப்பெண் ஆனாள். துரியோதனன் ஆணையை நிறைவேற்ற, துச்சாதனன் திரௌபதியின் சிகையைப் பிடித்து சபைக்கு இழுத்து வந்தான். சான்றோர்கள் நிறைந்த சபையில் தர்மம் தலைகுனிந்து நிற்க, அனைவரின் முன்னிலையில் துச்சாதனன் துகிலுரிக்க முன் வந்தான்.

தந்தைக்கு நிகரான தந்தையின் நண்பன் துரோணர் உதவிக்கு வரவில்லை. தர்மத்தின் திருஉருவம் பீஷ்மர் உதவிக்கு வரவில்லை. மன்னன் என மகுடம் சூடி அமர்ந்திருக்கும் மன்னனும் வரவில்லை. மற்றவர்களைப் போல், ஏதும் செய்யாது, பேசாது அமர்ந்திருக்கும் பாண்டவர்கள் கூட உதவவில்லை. வாதங்கள் வீணாய்ப்போக, உறவையும், மனிதனையும் நம்பி நின்றால் தான் காப்பாற்றப்பட போவதில்லை என்பதை உணர்ந்து, தன் பலத்தை, தன் துணிச்சலை விடுத்து, “கோவிந்தா” என்று குரல் கொடுத்து, தலை மீது இருகரம் கூப்பி வேண்டினாள்.

அழைத்ததும் வந்தான். அவள் மானத்தைக் காத்தான். மானத்தை உயிரை விடவும் பெரியதாய் கருதும் திரௌபதி, ஆடவர் நிறைந்திருக்கும் சபையில், அனைவரின் முன்னிலையில், துகிலுரியப்படும் நேரத்தில், தன் துகில் விட்டு இரு கை கூப்பி நின்று “கோவிந்தா” என்று கூவினால் என்றால், கண்ணனின் மீது அவள் கொண்டுள்ள நம்பிக்கையை என்ன வென்று கூறுவது? நுனிப்புல் அளவு கூட அவநம்பிக்கையோ ஐய்யமோ இல்லாது வேண்டி நின்றாளே!!

திருக்கோளூர் அம்மாள், “திரௌபதி போல் நான் நம்பிக்கை கொண்டிருந்தேனா?” – என்று வினவுகிறார்.
========*********========



iru kaiyum vittEnO dhraupadhiyaip pOlE

          
In the great Indian Epic, Mahabharata, after Yudhistra was crowned as the King of Indraprastha, Duryodhana, who was insulted during the ceremony fumed with anger. Duryodhana and his brothers, as per the advice of their uncle Sakuni, desired to seek revenge and designed an evil plan for it! The Kauravas built a new hall in their palace and invited the Pandavas to Hastinapur to see the hall and also for a pleasure game arranged in the evening. In the game of dice, they tricked and defeated the Pandavas through unfair means of Sakuni’s tricks and took over their kingdom, their wealth and even themselves. Finally, they made Yudishtra pledge Draupathi in the game and won her as well.

To seek revenge on Draupathi who laughed at him in Indraprastha, Duryodhana made Duschadhana drag her to the court by holding her hair. With the Pandavas being a slave to Duryodhana, Draupathi who too was now titled as slave, was insulted in the court and they had their revenge. Unable to bear the support Draupathi was getting from Pithamaha Bhishma and Vidhura, resented Duryodhana asked Duschadhana to disrobe her in the court.

When Draupathi cried out for help, none came for her aid, including Pithamaha Bheeshma, her father-like Drona who is also a friend of Draupathi’s father, the King and even her husbands-the Pandavas.  Realizing that she can neither depend on her own self nor on her husbands and the great people around her or even on others for her protection, she surrendered herself to the Lord completely. At that time, she remembered the sage Vasishta's words that Narayana is the sole refuge and surrendered to Him with both hands raised over her head:

shanka chakra gadApANe dvArakanilayAchyuta!
govinda! puNDarIkAksha! rakshamAm sharaNAgatam

It is next to impossible for a woman to give up her natural sense of modesty and let go of her dress while she is being disrobed in front of many men. But Draupathi, without even a single finch of doubt, raised her hands above her head and pleaded Krishna for help. Such was her faith in Krishna. At that time, Sri Krishna was battling in the outskirts of Dwaraka. And from there, He gave protection to Draupathi by providing her attire until Duschadhana got exhausted and gave up.

Thirukkolur Ammal is asking "Did I show complete faith in the Lord like Draupathi?"

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...