Showing posts with label Ravana. Show all posts
Showing posts with label Ravana. Show all posts

May 12, 2018

Thirukolur Penpillai Rahasyam-67



 அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே


இராமயணத்தில், மால்யவான், இலங்கையை ஆண்ட ராவணனின் தாய்வழி தாத்தா சுமாலியின் மூத்த சகோதரர் ஆவார். இலங்கையின் மன்னனாகவும் சில ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அரசியல் மற்றும் ஆட்சி குறித்த அரசவை தலைமை ஆலோசகராகவும், தாத்தாவாக, சிறந்த அறிவுரைகளையும் வழங்கி, மால்யவான், ராவணனுக்கு உறுதுணையாக இருந்தார்.

ராவணன் சீதையை சிறைப்பிடித்து இலங்கையில் வைத்திருந்த பொழுது, பலரும் சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய் சென்றுவிடும் படியும் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் ராவணன் எவர் சொல்லுக்கும் செவி சாய்க்கவில்லை.

ஆலோசகர் என்ற முறையில் மால்யவான் அறிவுறுத்தினாலும் ராவணன் செவி சாய்க்கவில்லை. தாத்தா என்ற முறையில், மால்யவான் - "ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப்போகாதே! மனிதர்களும்,குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர். நீ சிவபெருமானிடம் இருந்து வாங்கிய வரத்தில், உனக்கு மனிதர்களிடம் இருந்தோ குரங்குகளிடம் இருந்தோ ஆபத்து நேரக்கூடாது என்று இல்லை. ஆனால், இன்றோ, இரண்டும் ஒன்று சேர்ந்து உன்னை எதிர்த்து நிற்க, நீயோ அவர்களை போருக்கு அழைக்கிறாய். அதனால் இது நீ யோசிக்க வேண்டிய விஷயம். மேலும், ராமன், ஒரு சாதாரண மனிதனாய் தெரியவில்லை. உன் செயல், உன் அழிவிற்கு மட்டுமல்ல, நம் இனம் அழியவும் வழி வகுக்கிறது! ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சரணடைந்து, சமாதானமாய்ப் போய்விடு.", என்று அறிவுரை கூறினார்.

மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை. இறுதியில், போரில் ஸ்ரீ ராமர் வெல்ல, ராவணன் மடிந்தான். ராவணனின் மறைவுக்குப் பின், விபீஷணன் இலங்கையின் மன்னனாக முடிசூடினான். விபீஷணனின் அரசியல் மற்றும் தலைமை ஆலோசகராக மால்யவான் இருந்தார்.

திருக்கோளூர் அம்மாள், “மால்யவான் போல் எம்பெருமானிடம் சரணாகதி அடையுமாறு நல்வழி கூறினேனா?”, என்கிறார்.

========********========

anukUlam sonnEnO mAlyavAnaip pOlE



Malyavan, who was maternal grandfather of King Ravana, was also the Chief Royal Adviser to King Ravana. King Ravana respected him because of their relation and due to his intelligence. After Ravana abducted Sita and imprisoned her in Sri Lanka, many advised Ravana to return her to Lord Rama and avoid an upcoming war. But Ravana ceased to listen.

Malyavan, being Ravana's grandfather, advised Ravana, "Ravana, You should not go to war with Rama without knowing His strength. Amongst the boons you received, you never got one that protects you against men or monkeys. Now, both are standing together against you. Also, Rama does not appear to be an ordinary human being. Our entire clan will be destroyed in this war. So, let go of Sita, surrender unto him and make peace with Rama."

Ravana however, rejected this good advice and in the end, he was defeated by Rama. After Ravana’s death, Malyavan remained in his position and became the chief adviser to Ravana’s younger brother, King Vibishana.


Thirukkolur Ammal is asking "Did I give words of good advice and showed the right path to surrender to the Lord, like Malyavan?"



February 26, 2018

Thirukolur Penpillai Rahasyam-48




அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே

இங்கு “பெரிய உடையார்” என்று அழைக்கப்படுபவர், ஜடாயுவாகும். ஸ்ரீ இராமன், ஜடாயு மீது கொண்டுள்ள நன்மதிப்பும், தந்தைக்கு நிகராக ஜடாயுவை கண்டதுமே இதற்கு காரணம். ஜடாயு, இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கருடன். சூரிய தேவனின் தேரோட்டியான அருணனின் மகன். ஜடாயுவும் அவரது அண்ணனுமான சம்பாதியும் தசரத சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்.

வனவாசத்தின் முதல் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்களுடன் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்ரீராமன் அதன் பின்னர், சீதாதேவி மற்றும் இலட்சுமணனுடன் அகத்தியரின் குடிலுக்கு சென்றார். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பஞ்சவடி நோக்கி தன் பயணத்தைத் தொடரும் பொழுது வழியில் ஜடாயுவை சந்தித்தனர்.

தன்னை யார் என்று வினவிய ஸ்ரீ இராமனிடம், ஜடாயு – “நான் அருணனின் புதல்வன். கழுகுகளுக்கெல்லாம் அரசன். சம்பாதியின் தம்பி. தசரத சக்ரவர்த்தியின் நண்பர்கள். இக்காட்டில் வசிப்பவன் நான். நீங்கள் பஞ்சவடியில் வாழும் வரை உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து தருகிறேன். என்னுடன் வாருங்கள்.”, என்று கூறி, அவர்கள் குடில் அமைக்க அமைதியான, அழகான இடத்தையும் காட்டினார்.

“... அவர் திண்சிறை
விரியும் நீழலில் செல்ல விண்சென்றான்

-       என்ற வரிகளின் வாயிலாக, கம்பர், ஜடாயுவின் பரந்த மனதையும், ஸ்ரீ இராமர், சீதாதேவி மற்றும் இலட்சுமணன் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறார். அவ்வரிகளின் அர்த்தம் , பஞ்சவடி நோக்கி காட்டில்  நடந்து செல்லும் ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும் இலட்சுமணனையும் வெயிலில் இருந்து பாதுகாக்க, தனது பெரிய அகண்ட சிறகுகளை குடைப் போல் விரித்தார் ஜடாயு.

சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராவணனின் தவறை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜடாயு. இராவணன் கேக்காமல் போக, இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். இராவணனின் தேரை உடைத்து சுக்குநூறாக்கி, அவனையும் தன் மொத்த பலம் கொண்டு தாக்குகிறார். இறுதியில் இராவணன் வாளுக்கு தன் ஒரு பக்க இறக்கையை இழந்து, ஜடாயு தரையில் விழுகிறார்.

ஸ்ரீ இராமன் மற்றும் இலட்சுமணனின் வருகைக்காக காத்திருந்தவர், அவர்கள் வந்ததும், நடந்தவற்றைக் கூறி, இராவணன் சீதையை கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு, ஸ்ரீ இராமருக்கு மங்களாசாசனம் செய்துவிட்டு உயிர் விடுகிறார்.

தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஏழு புண்ணிய நதிகளையும் வரவழைத்து, ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன் தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார். ஜடாயுவுக்கு மோக்க்ஷமும் கிடைத்தது.

திருக்கோளூர் அம்மாள், “ஜடாயுவைப் போல்  (பெரிய உடையார்) இராவணனுடன் போரிட்டு, பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உதவி புரிந்தேனா?” – என்று வினவுகிறார்.
 ========********========


arakkanudan porudhEnO periya udaiyAraip pOlE

Jatayu is referred as “Periya udaiyar”, here, by our acharyas, because of the great respect Lord Rama had for him. Jatayu is the youngest son of Aruna, the charioteer of Sun God, in Hinduism. Jatayu’s elder brother is Sampaati, who was an old friend of King Dhasaratha!  

During their exile, after staying in Dandaka forest for about 10 years, Lord Rama, Sita and Lakshmana left for sage Agastya's ashram. After receiving the blessings and weapons from Sage Agastya, they left for Panachavati. On their way, they meet an old vulture named Jatayu. When they asked who he is, the vulture replied "My name is Jatayu, Son of Aruna. I and my brother Sampaati are your father Dasaratha's friends. I am living in this forest and I will accompany you while you are here." Rama, Sita, Lakshmana and Jatayu all went together to Panchavati.

Kambar explains the heart of Jatayu through his lines:

          …Avar thisiai
viriyum nī
zhalil sella viseṉṟā

Meaning, as Lord Rama, Sita Piratti and Lakshmana were walking along the forest towards Panchavati, under the hot sun, Jatayu protected them by spreading his wings like an umbrella.

After they have built a hut in Panchavati, Jatayu stayed close to the ashram where Lord Rama was staying. Lord Rama told Lakshmana "We have been separated from our father. So, let's stay under the wings of Jatayu".

Later, when Ravana abducted Sita, Jatayu intercepted them. He tried to talk Ravana into giving up this bad idea and release Sita. When he did not listen, Jatayu began waging a great war with Ravana. He broke Ravana's chariot and attacked him fiercely. In the end, Ravana managed to cut Jatayu's wings and threw him to the ground. He then left with Sita to Lanka.

When Lord Rama and Lakshmana came looking for Sita, they saw Jatayu lying wounded on the ground. Jatayu told them what happened and consoled the distraught Lord Rama and reassured Him that no harm will come to Sita and that very soon she will be restored to them. Knowing that his end is near, Jatayu performed mangalashasana to Lord Rama by calling Him 'Ayushman' and then gave up his life.

Rama says that the grief of seeing Jatayu pass away is greater than the loss of Sita. He considered Jatayu as equal to His father and did the final rites for the bird. Lord Rama then slammed an arrow into the ground so as to call all seven sacred rivers to arrive at the very spot where he is and performed the last rites for Jatayu, so that he could attain moksha. 

Thirukkolur Ammal is asking "Did I fight against Ravana and dare to give up my body and soul, like Periya Udaiyar?"

January 26, 2018

Thirukolur Penpillai Rahasyam - 19


அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே

மண்டோதரி, பாதாள உலகின் மாபெரும் அரசனான மயாசுரனின் மகள். அசுர குலமானாலும், சிவபெருமானின் சிறந்த பக்தை. இலங்கையை ஆண்ட இராவணனின் மனைவி. மண்டோதரி என்றால் மென்மையான இடையுடையவள்ன்று பொருள். ஹனுமனே மண்டோதரியை கண்டதும் சீதாப் பிராட்டி என்று எண்ணினார்! மண்டோதரி மிகவும் அழகானவள், தூய பக்தியுடையவள், பண்பானவள், நேர்மையானவள். இராமன் மீது சீதை கொண்டிருந்த பக்தியை மிகவும் மதித்தாள் மண்டோதரி.

இராமாவதாரத்தில், ஸ்ரீ ராமபிரானாய் அவதரித்து, இராவணனை அழித்தார் ஸ்ரீமன் நாராயணன். தன் அவதாரத்தின் இரகசியம் தனை ஸ்ரீராமனே அறியாத போதும், ராவணனின் துணைவியான மண்டோதரி அறிந்திருந்தாள். சீதையை இராவணன் கவர்ந்து கொண்டு இலங்கை வந்த போதும், இராமபிரான் அமைதி தூது அனுப்பிய போதும், மண்டோதரி இராவணனை எச்சரித்து, ராமபிரானுடன் நட்புறவு கொள்ளவும் வேண்டினாள்.

சிறந்த சிவ பக்தையாக மண்டோதரி விளங்கியதால், சிவ பெருமானே மண்டோதரியிடம் இராமாவதாரத்தின் இரகசியத்தைக் கூறி, இராவணனை எச்சரிக்கும் படியும், ஸ்ரீ இராமனுடன் நட்புறவு கொள்ளவும் கூறியிருந்தார்! பதிவிரதத்திற்காக பெயர் பெற்ற மண்டோதரி, சர்வ காலமும் தன் கணவனுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி, நல்வழிக்குக் கொண்டு வர அரும்பாடு பட்டாள். 

இராமபிரான் பானத்தால் இராவணன் மடிந்து வீழ்ந்த போது, மண்டோதரி - "ஸ்ரீ ராமன் சாதாரண மானிடர் அல்ல என்று முன்பே கூறினேனே!! பிறர் மனைவியை கவர்ந்து வந்தீர்...தலைகனத்துடன் ஆட்சி புரிந்தீர்...ஸ்ரீமன் நாராயணனே இராமனாய் அவதரித்து உங்களை வதம் செய்யும் நிலைக்கு உங்களை அனுமதித்து தடுக்காமல் விட்டேனே!"- என்று கதறி அழுதாள்.

            திருக்கோளூர் அம்மாள், "மண்டோதரியைப் போல் அவதார இரகசியங்களை அறியும் அளவு பக்தி கொண்டிருந்தேனா இல்லை அதை கூறும் அளவிற்கு தான் நம்பிக்கை பெற்றிருந்தேனா?", என்று வினவுகிறார்.

========********========


avan dheyvam enREnO maNdOdhariyaip pOlaE

Mandodhari was the wife of Ravana and his queen. Mandodhari was the daughter of Mayasura, the King of the Asuras (demons), and the apsara (celestial nymphs) Hema. She was also a great pativrata. Mandodhari is known to be beautiful, pious, righteous and an ardent devotee of Lord Shiva. 

When Ravana captured Sita and brought Her to Lanka, she advised Ravana that it was a great mistake to kidnap Her and that it would lead to great destruction. She was warned by Lord Shiva about the destruction Ravana is about to bring to him, his country and to his family. She also advised him to seek Rama's friendship.

Ravan did not listen to her and eventually went into war with Rama and Lakshmana. In the end, he was defeated and killed by Rama. His many wives then came to the battlefield and cried over his dead body. At that time, Mandodhari said- "Rama is not just an ordinary human being. It is Sriman Narayana who carries the divine Conch and Chakra. You did not listen to the good advice I gave you. The improper desire that you had for the great pativrata Sita is what caused this end. There is no doubt that Sri Vishnu came down as Rama and killed you".

Thirukkolur Ammal is asking "Am I capable of understanding the secrets of an Avatar by the Lord and talking about it confidentially like Mandodhari did?


November 22, 2017

Thirukolur Penpillai Rahasyam - 4



4.  தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

        தசமுகன், இராவணன். பிராட்டி, சீதாதேவி. இங்கு, "செற்றேனோ" என்னும் சொல்லிற்கு "கொன்றேனோ" என்று பொருள். இராவணனை சீதை வதம் செய்யவில்லை. இங்கு, சீதை இராவணனை கொன்றார் என்றால், ராவணனின் ஆணவத்தை, பேராண்மையை கொன்றார் என்று பொருள். மிதிலையின் இளவரசி. ஸ்ரீ ராமனின் துணைவியாய், ஸ்ரீ ராமனின் நிழலாய் வாழ அயோத்தி வந்தவர். ஸ்ரீ இராமனை பிரிய மனமில்லாமல், பதினான்கு ஆண்டுகள் மலரினும் மென்மையான பாதத்துடன் வனத்தில் வாழ முடிவெடுத்தவர். இராவணனின் அஹம்பாவம், பேராண்மை, தலைக்கணம் நிறைந்த பார்வையும் மனமும் வனத்தில் எளிய வாழ்வு வாழ்ந்த சீதையின் மேல் பட்டு, அவன் அழிவிற்கு விதையிட்டது. மிதிலையின் இளவரசியாக இருந்தபோதே கொடியிடையாள் என்று வர்ணிக்கப்பட்ட சீதாப்பிராட்டியார், இலங்கையில் சிறையில் வாடியபோது இன்னும் மெலிந்தார் என்றால், அவரின் துயரத்தை எவ்வார்த்தைகள் கொண்டு விளக்குவது?
       சீதாதேவி எண்ணியிருந்தால் இராவணனை அவரே வதம் செய்திருக்கலாம். அவரின் கோபக்கனலே இராவணனை பஸ்பமாகிவிடும். பிராட்டியின் புனிதத்தன்மை ஒன்று போதுமே இலங்கையை கடலின் ஆழத்திற்கு தள்ள! தேவியும் அடுத்த நொடி ஸ்ரீஇராமனுடன் வனத்தில் இருந்திருப்பார். அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவரைச் சுடாமல் பார்த்துக்கொள்ளச் செய்த சீதைக்கு இலங்கையை அழிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? சிறைப்பட்டு அனுதினமும் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.  சீதையின் ராமபக்தி ஒன்றே உலகை பஸ்பமாகிவிடும் வல்லமை வாய்ந்தது என்றால் இராவணன் எம்மாத்திரம்!ஆனால், அவர் அச்செயல் புரியவில்லை. சீதாதேவியார், அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு, இராமனின் வருகைக்காக காத்திருந்தார். அனுக்க்ஷனமும் ஸ்ரீ இராமபிரானயே எண்ணிக் கொண்டிருந்தார்.
       இராவணனின் உண்மை நிலையினை அவனுக்கு எடுத்துரைத்தார். ஆணவத்தின் உச்சத்தில் யோசிக்காமல் தவறுகள் புரிந்து கொண்டிருந்த இராவணனை ஸ்ரீஇராமனுடன் போர் புரிந்து மடியாமல் அவரிடம் சரணடையுமாறு கூறினார். இராவணனையும், ஹனுமனே கண்டு வியந்த இராவணனின் அரண்மனையையும் சீதாப் பிராட்டி ஒடிந்த புல்லினைப் போல் மதித்தார். சீதாதேவியை மயக்க இராவணன் குபேரனுக்கு இணையான தன் சொத்துக்களைப் பற்றிக் கூறி ஆசை வார்த்தைகள் காட்டிய போதும் அவர் அதை தூசினைப் போல் துச்சமெனக் கண்டார்.   சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு அனுக்க்ஷனமும் ஸ்ரீ ராமனை மட்டுமே எண்ணி வாழ்வது கூட சுகம் என்றார். அவ்வாறே சிறைவாசத்தை கழித்தார். தன் ஆன்மாவும் உடலும் ஸ்ரீராமனின் உடைமை என்பதை மனதில் நிறுத்தி அவர் வருகைக்காகவே காத்திருந்தார்.
            எளிமையின் வடிவாய் நின்ற ஸ்ரீ இராமனின் முன் லங்காபுரியின் மன்னனான இராவணன் தோற்றான். சீதையின் மனம், சரணாகதிக்கு சிறந்த எடுத்துக்காட்டென்றால், சீதையின் மனதை வென்ற ஸ்ரீ இராமனின் பண்போ, இன்னலில் தவிக்கும் பக்தர்களை ரட்சிக்க துடிக்கும் கடவுளின் குணம். இறையன்பு.

       திருக்கோளூர் அம்மாள், "என்னால் பிராட்டியைப் போல் அனைத்தையும் அவன் பொறுப்பில் விட்டு விட்டு, அவனையே அனுக்க்ஷனமும் எண்ணி வாழமுடியுமா?", என்று வினவுகிறார். 

=======*******=======



dhasamuganaich setRREnO pirAttiyaip pOlE

Dasa mugan is Ravana. PirAtti is Sita. The word “setRRal” refers to “destroy”.
            Princess of Mithila, charming Sita, after marrying Lord Rama, came to Ayodhya with full of love, dreams and hope. With her heart full of Lord Rama and her services for him, she even decided to follow her beloved Lord Rama to the forest for 12 years, ignoring all the pleasures of living life in a palace as a queen. Such is her love for Lord Rama.
After being abducted by the King of Lanka, Ravana, she lived her life thinking only about Lord Rama. She looked down upon Ravana and his wealth. She was willing to stay imprisoned and suffer the torture rather than agree to his advances.
 Sita could have killed him just be her looks, anger and her devotion towards Lord Rama. Such was her power and purity in heart and soul. But she did not do so. All she tried was only to make Ravana realize his fault and surrender himself to Sri Rama. She placed both her body and soul as belongings of Rama and she just waited for Him.

   Thirukkolur Ammal is asking "Can I be like Piratti and live in peace, placing everything completely in His hands?"



Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...