Showing posts with label Lakshmana. Show all posts
Showing posts with label Lakshmana. Show all posts

February 26, 2018

Thirukolur Penpillai Rahasyam-48




அரக்கனுடன் பொருதேனோ பெரிய உடையாரைப் போலே

இங்கு “பெரிய உடையார்” என்று அழைக்கப்படுபவர், ஜடாயுவாகும். ஸ்ரீ இராமன், ஜடாயு மீது கொண்டுள்ள நன்மதிப்பும், தந்தைக்கு நிகராக ஜடாயுவை கண்டதுமே இதற்கு காரணம். ஜடாயு, இராமாயணத்தில் இடம் பெறும் ஒரு கருடன். சூரிய தேவனின் தேரோட்டியான அருணனின் மகன். ஜடாயுவும் அவரது அண்ணனுமான சம்பாதியும் தசரத சக்ரவர்த்தியின் நெருங்கிய நண்பர்கள்.

வனவாசத்தின் முதல் பத்து வருடங்கள் தண்டக வனத்தில் முனிவர்களுடன் தவ வாழ்க்கையை மேற்கொண்ட ஸ்ரீராமன் அதன் பின்னர், சீதாதேவி மற்றும் இலட்சுமணனுடன் அகத்தியரின் குடிலுக்கு சென்றார். அகத்தியரிடம் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு பஞ்சவடி நோக்கி தன் பயணத்தைத் தொடரும் பொழுது வழியில் ஜடாயுவை சந்தித்தனர்.

தன்னை யார் என்று வினவிய ஸ்ரீ இராமனிடம், ஜடாயு – “நான் அருணனின் புதல்வன். கழுகுகளுக்கெல்லாம் அரசன். சம்பாதியின் தம்பி. தசரத சக்ரவர்த்தியின் நண்பர்கள். இக்காட்டில் வசிப்பவன் நான். நீங்கள் பஞ்சவடியில் வாழும் வரை உங்களுக்கு வேண்டிய உதவிகளையும் வசதிகளையும் செய்து தருகிறேன். என்னுடன் வாருங்கள்.”, என்று கூறி, அவர்கள் குடில் அமைக்க அமைதியான, அழகான இடத்தையும் காட்டினார்.

“... அவர் திண்சிறை
விரியும் நீழலில் செல்ல விண்சென்றான்

-       என்ற வரிகளின் வாயிலாக, கம்பர், ஜடாயுவின் பரந்த மனதையும், ஸ்ரீ இராமர், சீதாதேவி மற்றும் இலட்சுமணன் மீது அவர் கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துகிறார். அவ்வரிகளின் அர்த்தம் , பஞ்சவடி நோக்கி காட்டில்  நடந்து செல்லும் ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும் இலட்சுமணனையும் வெயிலில் இருந்து பாதுகாக்க, தனது பெரிய அகண்ட சிறகுகளை குடைப் போல் விரித்தார் ஜடாயு.

சீதாப்பிராட்டியை இராவணன் கடத்திச் சென்ற போது, இராவணனின் தவறை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஜடாயு. இராவணன் கேக்காமல் போக, இராவணனுடன் ஜடாயு மோதுகிறார். இராவணனின் தேரை உடைத்து சுக்குநூறாக்கி, அவனையும் தன் மொத்த பலம் கொண்டு தாக்குகிறார். இறுதியில் இராவணன் வாளுக்கு தன் ஒரு பக்க இறக்கையை இழந்து, ஜடாயு தரையில் விழுகிறார்.

ஸ்ரீ இராமன் மற்றும் இலட்சுமணனின் வருகைக்காக காத்திருந்தவர், அவர்கள் வந்ததும், நடந்தவற்றைக் கூறி, இராவணன் சீதையை கொண்டு போன தென்திசையை அடையாளம் காட்டிவிட்டு, ஸ்ரீ இராமருக்கு மங்களாசாசனம் செய்துவிட்டு உயிர் விடுகிறார்.

தனது தந்தையின் ஸ்தானத்தைக் கொடுத்து, ஜடாயுவை மதித்துப் போற்றிய ராமர், தன் அம்பினால் ஏழு புண்ணிய நதிகளையும் வரவழைத்து, ஒரு புஷ்கரணியை ஏற்படுத்தினார். தன் தந்தையாகவே ஜடாயுவை ஏற்று, தர்ப்பணம் முதலான ஈமக்கிரியைகளை புஷ்கரணியின் கரையிலேயே செய்தார். ஜடாயுவுக்கு மோக்க்ஷமும் கிடைத்தது.

திருக்கோளூர் அம்மாள், “ஜடாயுவைப் போல்  (பெரிய உடையார்) இராவணனுடன் போரிட்டு, பிராட்டிக்கும் பெருமாளுக்கும் உதவி புரிந்தேனா?” – என்று வினவுகிறார்.
 ========********========


arakkanudan porudhEnO periya udaiyAraip pOlE

Jatayu is referred as “Periya udaiyar”, here, by our acharyas, because of the great respect Lord Rama had for him. Jatayu is the youngest son of Aruna, the charioteer of Sun God, in Hinduism. Jatayu’s elder brother is Sampaati, who was an old friend of King Dhasaratha!  

During their exile, after staying in Dandaka forest for about 10 years, Lord Rama, Sita and Lakshmana left for sage Agastya's ashram. After receiving the blessings and weapons from Sage Agastya, they left for Panachavati. On their way, they meet an old vulture named Jatayu. When they asked who he is, the vulture replied "My name is Jatayu, Son of Aruna. I and my brother Sampaati are your father Dasaratha's friends. I am living in this forest and I will accompany you while you are here." Rama, Sita, Lakshmana and Jatayu all went together to Panchavati.

Kambar explains the heart of Jatayu through his lines:

          …Avar thisiai
viriyum nī
zhalil sella viseṉṟā

Meaning, as Lord Rama, Sita Piratti and Lakshmana were walking along the forest towards Panchavati, under the hot sun, Jatayu protected them by spreading his wings like an umbrella.

After they have built a hut in Panchavati, Jatayu stayed close to the ashram where Lord Rama was staying. Lord Rama told Lakshmana "We have been separated from our father. So, let's stay under the wings of Jatayu".

Later, when Ravana abducted Sita, Jatayu intercepted them. He tried to talk Ravana into giving up this bad idea and release Sita. When he did not listen, Jatayu began waging a great war with Ravana. He broke Ravana's chariot and attacked him fiercely. In the end, Ravana managed to cut Jatayu's wings and threw him to the ground. He then left with Sita to Lanka.

When Lord Rama and Lakshmana came looking for Sita, they saw Jatayu lying wounded on the ground. Jatayu told them what happened and consoled the distraught Lord Rama and reassured Him that no harm will come to Sita and that very soon she will be restored to them. Knowing that his end is near, Jatayu performed mangalashasana to Lord Rama by calling Him 'Ayushman' and then gave up his life.

Rama says that the grief of seeing Jatayu pass away is greater than the loss of Sita. He considered Jatayu as equal to His father and did the final rites for the bird. Lord Rama then slammed an arrow into the ground so as to call all seven sacred rivers to arrive at the very spot where he is and performed the last rites for Jatayu, so that he could attain moksha. 

Thirukkolur Ammal is asking "Did I fight against Ravana and dare to give up my body and soul, like Periya Udaiyar?"

February 22, 2018

Thirukolur Penpillai Rahasyam-45



வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே

 அயோத்தியின் அரசர் தசரதனுக்கு நான்கு மகன்கள் – மூத்தவர் இராமர், இலக்குவன்,  பரதன்,  சத்துருகனன். நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்றனர். இலக்குவன், இராமரிடம் தனி அன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம் தன் யாகங்களுக்கு ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார்.

இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணிய பொழுது, கைகேயி  தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் என்னும் இரண்டு வரங்களைக் கேட்க, தாய் சொல்லை மறுக்காமல், இராமரும் உடனடியாகவே காட்டுக்கு கிளம்பினார். அவர் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன் காட்டுக்கு கிளம்பினர்.

தனித்து வனவாசம் செல்ல எண்ணிய ராமரிடம், இலட்சுமணன் – “நீரின்றி மீனால் வாழ முடியாது. அது போல் தான் தாங்கள் எனக்கும், சீதாதேவிக்கும். எங்களையும் உடன் அழைத்துச்செல்லுங்கள்.”, என்றார்.

இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரையும் சீதாதேவியையும் பாதுகாத்து வந்தார் இலட்சுமணன். இராமனுக்கும் சீதாதேவிக்கும் தேவையான பணிவிடைகளை இலட்சுமணன் செய்தார். பஞ்சவடியில் இராமரும் சீதாதேவியும் தங்குவதற்கு குடில் அமைத்துக் கொடுத்தார்.

சீதாதேவியை இராவணன் கடத்திச்சென்ற போது, இராமருக்கு பக்க பலமாய் நின்று இராவணனை வென்று சீதையை மீட்க உதவினார். அயோத்தி திரும்பிய பின், மன்னராக முடி சூடிக்கொண்ட இராமர், இலட்சுமணனை பட்டத்து இளவரசராக முடி சூடிக் கொள்ள கூறிய போது, அதை பணிவுடன் மறுத்து, “என்னை விட பரதனே அப்பதவிக்கு தகுதியானவன். அடியேன் தங்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன்.”, என்றார்.

திருக்கோளூர் அம்மாள், “இலட்சுமணன் போல் சரணாகதி அடைந்து, இராமர் செல்லும் இடமெல்லாம் அவருடன் சென்று அவருக்கு பணிவிடைகள் செய்தேனா?” – என்று வினவுகிறார். 
========********========


vazhi adimai seydhEnO lakshmaNanaip pOlE

Rama was born to Kaushalya and King Dasharatha while Lakshmana and his brother Shatrughna were born to Sumitra and King Dasharatha. Lakshmana is personified by Rama as a man with unwavering loyalty, love and commitment to his elder brother through times of joy and adversity alike. Lakshmana is specially attached to Rama.

When sage Vishwamitra took Prince Rama with him for killing the demons, Lakshmana accompanied his brother. When Rama was asked to go to the forest based on the boons that Kaikeyi got from King Dasaratha, Lakshmana too wanted to go with Him. Initially, Rama did not agree to that.

Lakshmana pleaded with Lord Rama stating: "Just as a fish would not survive out of the water, so too mother Sita and myself cannot survive separation from You. Therefore, You have to take me with You." He then told Lord Rama that when He and Sita live and play in the sides of mountains, he would perform all kinds of services to them "aham sarvam karishyAmi".

Lakshmana's mother Sumitra tells him that he was made for the sake of living in the forest "srushTstavam vanavAsAya". She also warned him that he should not lose his mind watching the beauty of Rama's walk and fail in his duties.

During their exile, Lakshmana served Rama and Sita reverently. In Panchvati, Lakshmana also built a hut for Lord Rama and Sita to live in. There, never, was a situation where Lakshmana opposed Rama, except when, after the war, when Rama asked Sita to give test of her purity, Lakshmana for the first time got angry on Rama and opposed him.

After the war in Lanka, Rama was crowned king of Ayodhya and Bharata became the crown prince. Rama had offered to make Lakshmana the crown prince but he refused, saying Bharata is greater than he, and more deserving of the title. He added that he love to be on service for Rama than bearing the crown prince title.


Thirukkolur Ammal is asking "Did I stay always with Him and perform all kinds of services like Lakshmana?"

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...