January 26, 2018

Thirukolur Penpillai Rahasyam - 18



அந்தரங்கம் சொன்னேனோ த்ரிஜடையைப் போலே

அசோகவனத்தில் சீதாப்பிராட்டி இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த பொழுது அவரின் காவலுக்கு இருக்கும் அசுரர்களின் தலைவியாய்  த்ரிஜடை என்னும் அசுர குல பெண்மணி இருந்தார். த்ரிஜடை, விபீஷணன் மகள் ஆவார். அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், த்ரிஜடை சீதாப்பிராட்டிக்கு உறுதுணையாய் இருந்தார். தந்தையைப் போல் நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தார். மனமுடைந்து இருக்கும் சீதையை த்ரிஜடையே இராமனின் இலங்கை நோக்கிய பயணம் பற்றிக் கூறி தேற்றுவார்.

சீதை, த்ரிஜடையிடம் மிகுந்த அன்பு வைத்திருந்தார். அசோகவனத்தில் சம்பாஷித்துக் கொண்டிருந்த பொழுது, சீதை த்ரிஜடையை நோக்கி, “, த்ரிஜடை! புழுவானது இடைவிடாமல் வண்டை நினைத்துக் கொண்டிருப்பதால் அது வண்டாக மாறி விடும் என்று சொல்லப்படுவது உண்மையா? அப்படியென்றால் (ராமனை இடைவிடாமல் தியானிக்கும்) நான் ராமனாக மாறி விடுவேன்.எனது அன்புக்குரிய கணவரின் அன்பு இல்லாமல் தள்ளி தூர இருப்பதிலிருந்து விடுபட்டு விடுவேன், அல்லவா!!என்றார்.

இதைக் கேட்ட த்ரிஜடை உடனே சீதையை நோக்கி, அப்படி என்றால் அது நல்லதற்குத் தான்! ஏனெனில் நீங்கள் ராமர் ஆகி விடுவீர்கள். உங்களை இடைவிடாமல் நினைத்துக் கொண்டிருக்கும் ராமர் சீதை ஆகி விடுவார்! நீங்கள் (ராமராக ஆகி விடுவதால்) எதிரியான ராவணனைக் கொன்று விடுவீர்கள். உடனே ராமருக்கு அருகில் சென்று விடுவீர்கள். (அவரவர் தம் தம் உருவை எடுத்துக் கொள்வீர்கள்!)”, என்றார்.

ஒரு நாள், காவலுக்கு வந்த  பிற அசுர குல பெண்கள் சீதையை கிண்டல் செய்த பொழுது, அங்கு வந்த த்ரிஜடை, அவர்களிடம் கோபமாக, "நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதில் இராவணன் சிகப்பு நிற உடை அணிந்து கழுதை மீது அமர்ந்து தெற்கு நோக்கி பயணிக்க, வானில் இருந்து ஆயிரம் அன்னப்பறவைகள் கொண்ட தங்க பல்லக்கில், வெண்ணிற உடை அணிந்து, வெள்ளை நிற மலர் மாலை அணிந்து வந்து ஸ்ரீ இராமன் சீதையை அழைத்துச் சென்றார். என் கனவு நிச்சயம் நடக்கும். எனவே, நீங்கள் உயிருடன் வாழ விரும்பினால் இப்பொழுதே சீதையிடம் சரணடையுங்கள். ஸ்ரீ இராமன் இலங்கை வந்து சேரும் நேரம், அவரின் கோபத்தில் இருந்து உங்களை காப்பாற்றும் சக்தி, சீதாப்பிராட்டியிடம் மட்டுமே உள்ளது. எனவே உண்மை உணர்ந்து, இப்பொழுதே அவரிடம் சரணடையுங்கள்.", என்றார்.

ஸ்ரீ ராமனுக்கும் இராவணனுக்கும் இடையே போர் நடந்த போது, த்ரிஜடை, போரின் நிலவரங்களையும் ஸ்ரீ ராமனின் வெற்றிகள் குறித்த செய்திகளையும் அனுதினமும் கூறி சீதாப்பிராட்டிக்கு உதவிகள் புரிந்தார்.


   திருக்கோளூர் அம்மாள், "த்ரிஜடையைப் போல் பிராட்டிக்கு நான் ஏதும் உதவி புரிந்தேனா?", என்று வினவுகிறார்.

========********========


andharangam sonnEnO thrijadaiyaip pOlaE

Trijada was a servant of Ravana and one of the demons who he had ordered to guard Sita in the Asoka Vanam. Trijada is the daughter of Vibhishana. Like father, Trijada also follows the path of justice and also believes in Sri Rama.

After being prisoned in Ashoka Vanam, Trijada was the only soul who was there to comfort and give confidence to Sita. Sita too shares her feelings, her stories and thoughts to Trijada, just like how she would share it to her sisters and friends. Trijada too protects Sita from the ill-talks of other guards. One day, the other guards were teasing Sita and mocked her for her character and for not enjoying the life that King Ravana is ready to give! 

Unable to handle the harsh words and demands of the rakshasis, raged Trijada says, "I saw Ravana wearing a red dress and heading south while seated on a donkey. I also saw Rama wearing a white dress with white flowers and looking like Vishnu, fly in from the sky in a golden palanquin which is being pulled by a thousand beautifully flawless white swans and carry Sita around on an elephant. Therefore, Rama will definitely defeat Ravana and take Sita away. If you all wish to survive, it is better to surrender to Sita and beg her pardon. When Sri Rama reaches Sri Lanka, and he will, nothing can save you from the raged and furious heart of him, other than Sita’s words and one look. So, if you all wish to live a life, surrender to her, immediately."

Later, during the war between Rama and Ravana, she brought news of the many victories of Rama's army to Sita. When Indrajit made Rama and Lakshmana unconscious using his Nagastra, the rakshasas took Sita to the battlefield and claimed that they were dead. When Sita shed tears seeing them dead, Trijada consoled her by saying "Do not fear. Rama and Lakshmana have only fainted. They cannot be killed by the arrows of these rakshasas. There’s no arrow in this world that could kill them!"

Thus, Trijada helped Piratti in many ways.


Thirukkolur Ammal is asking "Did I do any of the services or at least comforted her and gave confidence to Sita Piratti like Trijada?"

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...