ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே
அகத்தியர் சப்தரிஷிகளில்
ஒருவராகவும், சித்தர்களில்
முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை. அகத்தியர், ஒரு இசைப் போட்டியில், மலையை உருக வைத்து, இராவணனை வென்றவராகவும்
அறியப்பெறுகிறார்.
அகஸ்தியர் முக்காலமும்
அறிந்த ஞானி. ராமாவதாரத்தின் போது, வனவாச காலத்தில், ஸ்ரீ ராமர், சீதை மற்றும்
இலக்குவனுடன் முனிவர்கள் பலரின் குடிலில் சென்று தங்கி ஆசிகள் பெற்றார். அவ்வாறு
ஒரு முறை, கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் அகஸ்தியரின் குடிலில் தங்கினர்.
அவர்கள் விடை பெரும் நேரம், முக்காலமும் அறிந்த அகத்தியர், ஸ்ரீ ராமர் எதிர்கொள்ள
போகும் போரினை அறிந்து, ஸ்ரீ இராமருக்கு மூன்று ஆயுதங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
அவை மகாவிஷ்ணு தேவர்களை அசுரர்களிடம் இருந்து காப்பாற்ற விஸ்வகர்மாவே செய்த வில்,
எடுக்க எடுக்க குறையாத அம்புகளை வழங்கும் அம்பறாத்துணி (அம்புக்கூடு), போர் வாள்! “எதிர்
வரும் காலத்தில் நீ சந்திக்க நேரும் அசுரர்களை இவ்வாயுதங்கள் கொண்டு
வீழ்த்துவாயாக!” – என்றார்.
திருக்கோளூர் அம்மாள், “அகத்தியர்
போல் வரும் இன்னல்களை அறிந்து, ஸ்ரீ
இராமருக்கு உதவி புரிந்தேனா?”, என்று வினவுகிறார்.
=========********========
AyudhangaL IndhEnO agasthiyaraip pOlE
Agastya was a revered Vedic sage of Hinduism, who is one of the seven or eight most revered rishis in the Vedic texts. He lived in the Dandakaranya forest with his wife Lopamudra, on the banks of river Godavari. While explaining about Sage Agastya to Lakshmana, Lord Rama said – “Sage Agastya is of such a purified nature that in his hermitage a liar cannot live, nor a deceitful person, nor a wicked person, nor one that is committed to sinful activity.”
When
Sri Rama entered the Dandakaranya forest in his exile, He went to the ashramas
of several maharishis and paid His respects to them, along with Sita and Lakshmana.
He went to see Sage Agastya too. Agastya received Rama with respect and love.
Knowing Rama's avatara secrecy and what was to come, he presented Him with three
weapons - a bow made by Visvakarma for Vishnu, an inexhaustible quiver and a
sword. He said to Lord Rama, "This bow which belongs to Vishnu. It was
made by Vishvakarma. Using this bow, Maha Vishnu killed many asuras and helped
the devas. These two quivers which never reduce in arrows and this sword were
given to me by Indra. Take these weapons and use them effectively in slaying
the demons."
Thirukkolur
Ammal is asking "Did I help the Lord like Agastya did?"
Perfectly written....good to read...flow is good and the words depicted the real picture.
ReplyDelete