February 09, 2018

Thirukolur Penpillai Rahasyam-32

Garuda Vahana,Kencana Cultural Park, South Kuta, Bali. 
கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே

இங்கு “திருவடி” என்பது, ஸ்ரீமன் நாராயணனின் வாகனங்களான கருடரையும் (பெரிய திருவடி), ஹனுமனையும் (சிறிய திருவடி) ஒரு சேர குறிக்கும்.

ஸ்ரீமன் நாராயணனின்  பெரியதிருவடியாக கருடன் போற்றப்படுகிறார்.  கருடன்  என்பதற்கு, சமஸ்கிருத மொழியில்,  பெரும் சுமையைச் சுமப்பவன் என்று பொருள். மாறாத பக்தி கொண்டு பெருமாள் சேவையே பெரிது என்று அவரிடம் பூரண சரணாகதி அடைந்ததால் கருடன், கருடாழ்வார் என்று போற்றி அழைக்கப்படுகின்றார்.  தன உடலில் அட்ட நாகங்கள் என்னும் எட்டு பாம்புகளை அணிகலனாக அணிந்திருப்பார் பெருமாளை வாகனங்களில் சுமந்து வரும் போது அமர்ந்த நிலையில் ஒரு காலை மண்டியிட்டு, ஒரு காலை சற்று உயர்த்தியிருப்பார். இரு பெரும் கரங்களை பெருமாளின் பாதங்களை ஏந்துவதற்காக முன் புறம் நீட்டியவாறு இருப்பார். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது வைணவர்களின் நம்பிக்கை .

ஸ்ரீமன் நாராயணன், ஸ்ரீ ராமராக அவதரித்த பொழுது, அவரையும், லக்ஷ்மணனையும் தன் தோள்களில் சுமந்து ராவணனுக்கு எதிராக போரிட உதவியவர் ஹனுமான்.  "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்க் காரணம் உண்டு. இராமனிடத்தில் அளவற்ற பக்தி கொண்டவராய் இருந்து, தேவைப்படும் போதெல்லாம் அவரைச் சுமந்தும், இணை பிரியாமல் எப்போதும் அவருக்குத் தொண்டுச் செய்ததால் திருமாலின் அடி(யார்) என்று புகழப்பட்டு, இராமனுக்குத் தொண்டு செய்து அவரை சுமக்கும் பாக்கியத்தையும் பெற்றதால் 'திரு' என்ற சிறப்புச் சொல்லையும் சேர்த்து திருவடி (திரு+அடி), சிறிய திருவடி என்றழைக்கப்பட்டார். கருடன் எப்போதும் திருமாலுக்கு வாகனமாகயிருப்பதால் அவர் பெரிய திருவடியென்றும், அனுமன் சிறிய திருவடி என்றும் போற்றப்படுகின்றார்.

திருக்கோளூர் அம்மாள், “கருடாழ்வாரையும் ஹனுமனையும் போல் பெருமாளின் திருவடியாய் இருந்து, தோள்களில் சுமந்து சேவை செய்தேனா?
========********======== 

Hanumantha Vahana


 koNdu thirindhEnO thiruvadiyaip pOlE

The term “thiruvadi” refers to the Vehicle Mount (Vahana) of Lord Vishnu. Both Garuda (periya thiruvadi) and Hanuman (siriya thiruvadi) are referred here. They got this name because they both perform the service of carrying the Lord, wherever and whenever he wants. Just as Adisesha does various services, so too Garuda and Hanuman acts as the Lord's friend, His servant, His conveyance, His seat, His flag, His umbrella, etc.

In Hindu Mythology, Garuda is a divine eagle-like sun bird and the king of birds. The Shatapatha Brahmana embedded inside the Yajurveda text mentions Garuda as the personification of courage. He is a powerful creature in the epics, whose wing flapping can stop the spinning of heaven, earth and hell. Azhwars refer many times to the fact that the Lord rides Garuda and performs various acts.

Hanuman is referred as the vehicle mount of Lord Rama, an avatar of Lord Vishnu. He symbolizes the human excellences of inner self-control, faith and service to a cause, hidden behind the first impressions of a being who looks like a monkey. In the great Indian epic Ramayan, Hanuman carried Lord Rama and Lakshmana on a few occasions. When they first arrived to meet Sugriva, after ensuring that they are not sent by King Vaali, Hanuman carried Lord Rama and Lakshmana on his shoulders to Sugriva. Later when Lord Rama and Lakshmana waged a war against Ravana, he carried them again on his shoulders so that they do not have to stand on the ground and fight.


Thirukkolur Ammal is asking "Did I carry the Lord on my shoulders with affection like Garuda and Hanuman?"

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...