May 13, 2018

Thirukolur Penpillai Rahasyam-68

கள்வன் இவன் என்றேனோ லோககுருவைப் போலே
கள்வன் என்பது ஸ்ரீமன்நாராயணனுக்கு ஆழ்வார்களும் அவரின் பக்தர்களும் பிரியத்துடன் வழங்கிய பெயராகும். கள்வன் என்றால் திருடன் அல்லது ஏமாற்றுபவன் என்று பொருள். எம்பெருமான் தனது பக்தர்களுடன் நடத்தும் லீலைகளினால் இவ்வாறு அழைக்கப்படுகிறார். மகாபலி சக்ரவர்த்தியின் யாகசாலையில் வாமனனாக சிறு உருவில் தோன்றி, மூன்று அடி நிலம் கேட்டு, திருவிக்ரமனாக மாறி உலகை அளந்தார் எம்பெருமான். அந்நேரம் அசுரர்களின் குருவான சுக்ராச்சாரியார், நாராயணனை கள்வன் என்றழைத்தார்.

இங்கு, திருக்கோளூர் அம்மாள், ஆழ்வார்களையே லோககுரு என்கிறார் என்றும் பொருள் கொள்ளலாம். தமது பாசுரங்களில், சில இடங்களில், பெருமானை நம்மாழ்வார் கள்வன் என்கிறார். திருவாய்மொழியில், "கொள்வான் அவன் மாவலி மூவடி தா என்ற கள்வனே" என்கிறார், வாமன அவதாரத்தை சுட்டிக்காட்டி.  

திருவாய்மொழி 2-2-10ல்,  'கள்வா! எம்மையும் ஏழுல கும்நின் உள்ளே தோற்றிய இறைவ!' என்று  சிவனும் பிரமனும் இந்திரனும் இதர தேவர்களும் ஒரு சமயம் நாராயணனை, ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்தின் பொது அழைத்தனர் என்கிறார் நம்மாழ்வார். சிவபெருமான் நாராயணனுக்கு வரம் ஒன்று அளித்திருந்தார். அதை கிருஷ்ண அவதாரத்தில், கைலாயம் சென்று கண்ணன் கேட்கிறான். அனைத்து உலகிற்கும் எம்பெருமானே தந்தை. அவர் சிவனிடம் வரம் கேட்பதைக் கண்ட சிவபெருமான் "கள்வனே" என்கிறார்.

திருமங்கையாழ்வாரும், தனது திருநெடுந்தாண்டகம் என்னும் நூலில்,  எம்பெருமானை "கார்வனத்து உள்ளே கள்வா" என்கிறார்.

திருக்கோளூர் அம்மாள், “ஆழ்வார்களைப் போல் எம்பெருமானை  “கள்வன்” என்றேனா?”, என்கிறார்.
========********========



kaLvan ivan enREnO lOkaguruvaip pOlE
The name "kaLvan" (meaning, one who steals (stealing their heart) or one who cheats/tricks others) is one of the many names of Sriman Narayana. He does this for the sake of His devotees in many cases. Many Azhwars have referred the Lord as “Kalvan”, in their verses. In the yagasala of Mahabali, He arrived in the form of a small dwarf (vamana), asked for and obtained three steps of land, grew up as Trivikrama and measured all the worlds with His divine feet. At that time, the asura guru, Sukracharya called Him as a "kaLvan".


Here, Thirukkolur Ammal refers Azhwars as “Loka Guru” (teacher to the world). In many of his verses, Nammazhwar has referred the Lord as "kalvan". In Thiruvaimozhi 5-10-4, he says "kaLLa vEdaththaik koNdu pOyp puram pukkavARum" - here he refers to the Lord going amidst the asuras and taking away their faith in the Vedas.

In Thiruvaimozhi 3-8- 9, Azhwar says "koLvan nAn mAvali mUvadi thA enra kaLvanE" - referring to the Lord's vamana avtara. In Thiruvaimozhi 2-2-10, he says "kaLvA! emmaiyum Ezulagum nin uLLE thORRiya iRaivA ..." - in this pasuram, it says that, Lord Shiva, Brahma, Lord Indra and other devas calls Lord Sriman Narayana as "kaLvA". This refers to the incident where Shiva obtained a boon from Narayana that He would ask for and gets a boon from him. To fulfill that promise, during His Krishna avatara, He went to Kailasha and asked Shiva for a boon. Shiva calls Him "kaLvA" because, it is He who is the father of all including Shiva and yet He is asking for a boon from Lord Shiva, knowing all the truth. Since Shiva is known for the greatness of his knowledge it would be alright that he is referred to as the Loka Guru.

Thirumangai Azhwar in his Thirunedunthandagam, says "nIragaththAy! ... kArvAnaththu uLLAy! kaLvA!". Azhwar says it is His trickery that He is hiding and not showing Himself to Azhwar. At another place in Thirunedunthandagam, he says "puLLUrum kaLvA! nI pOgEl". Since this Azhwar invited the Lord Himself to learn from him "kaNNa nin thanakkum kuRippAgil kaRkalAm kaviyin poruL", it would be appropriate to refer to him as Loka Guru.

Thirukkolur Ammal is asking "Did I refer the Lord as 'kalvan' like the knowledgeable Azhwars?"



No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...