அனுகூலம் சொன்னேனோ
மால்யவானைப் போலே
இராமயணத்தில், மால்யவான், இலங்கையை ஆண்ட ராவணனின்
தாய்வழி தாத்தா சுமாலியின் மூத்த சகோதரர் ஆவார். இலங்கையின் மன்னனாகவும் சில ஆண்டுகள்
ஆட்சி புரிந்தார். அரசியல் மற்றும் ஆட்சி குறித்த அரசவை தலைமை ஆலோசகராகவும், தாத்தாவாக,
சிறந்த அறிவுரைகளையும் வழங்கி, மால்யவான், ராவணனுக்கு உறுதுணையாக இருந்தார்.
ராவணன் சீதையை
சிறைப்பிடித்து இலங்கையில் வைத்திருந்த பொழுது, பலரும் சீதையை திருப்பி அனுப்பி விடும்படியும், ராமனுடன் சமாதானமாய்
சென்றுவிடும் படியும் ராவணனுக்கு அறிவுரை வழங்கினார்கள். ஆனால் ராவணன் எவர் சொல்லுக்கும்
செவி சாய்க்கவில்லை.
ஆலோசகர் என்ற முறையில் மால்யவான் அறிவுறுத்தினாலும் ராவணன் செவி சாய்க்கவில்லை. தாத்தா என்ற முறையில், மால்யவான் - "ராவணா! ராமனுடன், அவனது வலு தெரியாது சண்டைக்குப்போகாதே! மனிதர்களும்,குரங்குகளும் ராமனைக் காக்க உள்ளனர். நீ சிவபெருமானிடம் இருந்து வாங்கிய வரத்தில், உனக்கு மனிதர்களிடம் இருந்தோ குரங்குகளிடம் இருந்தோ ஆபத்து நேரக்கூடாது என்று இல்லை. ஆனால், இன்றோ, இரண்டும் ஒன்று சேர்ந்து உன்னை எதிர்த்து நிற்க, நீயோ அவர்களை போருக்கு அழைக்கிறாய். அதனால் இது நீ யோசிக்க வேண்டிய விஷயம். மேலும், ராமன், ஒரு சாதாரண மனிதனாய் தெரியவில்லை. உன் செயல், உன் அழிவிற்கு மட்டுமல்ல, நம் இனம் அழியவும் வழி வகுக்கிறது! ஆகவே சீதையை ராமனிடம் ஒப்படைத்து, சரணடைந்து, சமாதானமாய்ப் போய்விடு.", என்று அறிவுரை கூறினார்.
மால்யவானின் இந்த அறிவுரைகளுக்கு ராவணன் செவி சாய்க்கவில்லை. இறுதியில், போரில் ஸ்ரீ ராமர் வெல்ல, ராவணன் மடிந்தான். ராவணனின் மறைவுக்குப் பின், விபீஷணன் இலங்கையின் மன்னனாக முடிசூடினான். விபீஷணனின் அரசியல் மற்றும் தலைமை ஆலோசகராக மால்யவான் இருந்தார்.
திருக்கோளூர் அம்மாள், “மால்யவான் போல் எம்பெருமானிடம் சரணாகதி அடையுமாறு நல்வழி கூறினேனா?”, என்கிறார்.

========********========
anukUlam sonnEnO mAlyavAnaip pOlE
Malyavan, who was maternal grandfather of King
Ravana, was also the Chief Royal Adviser to King Ravana. King Ravana
respected him because of their relation and due to his intelligence. After
Ravana abducted Sita and imprisoned her in Sri Lanka, many advised Ravana to
return her to Lord Rama and avoid an upcoming war. But Ravana ceased to listen.
Malyavan, being Ravana's grandfather, advised
Ravana, "Ravana, You should not go to war with Rama without knowing His strength.
Amongst the boons you received, you never got one that protects you against men
or monkeys. Now, both are standing together against you. Also, Rama
does not appear to be an ordinary human being. Our entire clan will be
destroyed in this war. So, let go of Sita, surrender unto him and make peace
with Rama."
Ravana however, rejected this good advice and
in the end, he was defeated by Rama. After Ravana’s death, Malyavan remained in
his position and became the chief adviser to Ravana’s younger brother, King
Vibishana.
Thirukkolur Ammal is asking "Did I give
words of good advice and showed the right path to surrender to the Lord, like
Malyavan?"
No comments:
Post a Comment