May 08, 2018

Thirukolur Penpillai Rahasyam-62



அத்வைதம் வென்றெனொ எம்பெருமானாரைப் போலே

இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை பற்றிக் கூறும் கொள்கைகள் மூன்று :  அத்வைதம், த்வைதம், விசிஷ்டாத்வைதம்.

அத்வைதம் (அ + துவைதம்என்பது இரண்டற்ற நிலைஜீவனும்இறைவனும் (ஜீவாத்மாபரமாத்மா) ஒன்று தான். வேறு வேறு அல்ல. சகல உயிர்களுக்கும் பொதுவாக ஆத்மா விளங்குகிறது என்று இத்தத்துவம் விளக்குகிறது. ஆதிசங்கரர் தான் முதன்முதலில் அத்வைத தத்துவத்தை தொகுத்து எழுதி வைத்தார். இவர் யாருக்கும் உபதேசிக்கவோ பிரசாரம் செய்யவோ இல்லை.

த்வைதம் என்றால் இரண்டாக விளங்குவது என்று பொருள். பரமாத்மா என்பது இறைவன். ஜீவாத்மா என்பது கடவுளால் (பரமாத்மா) படைக்கப்பட்ட உயிர். எப்பொழுதுமே, இந்த வேறுபாடு இருந்து கொண்டே தான் இருக்கும் என்பதே த்வைதம் சொல்லும் உண்மை. இந்தக் கோட்பாட்டை உபதேசித்தவர் மத்வாச்சாரியார்.

விசிஷ்டாத்வைதம்...அத்வைதம் என்னும் கொள்கையோடு ஒரு விஷேஷத் தன்மை கொண்டது. ராமானுஜர் விசிஷ்டாத்வைதம் கொள்கையை பரப்பி வந்தார். அதாவது,  பரமாத்மா வேறு, ஜீவாத்மா வேறு. ஆனால், ஜீவாத்மா முயன்றால், பரமாத்மாவை தன்னுள் ஏற்றுக் கொள்ளலாம். அதுவே முக்திக்கான வழி.

வடநாட்டில் யக்ஞமூர்த்தி என்ற பெரும்புலவர் இருந்தார். அவர் அத்வைத நெறியை வலியுறுத்தி வந்தார். ராமானுஜருடன் வாதாட யக்ஞமூர்த்தி திருவரங்கத்திற்கு வந்தார். வாதப்போரின் நிபந்தனைப்படி, யக்ஞமூர்த்தி தோல்வி அடைந்தால் தன் பெயரை மாற்றி, ராமானுஜரின் பெயரை வைத்துக் கொள்வதாகக் கூறினார். அத்துடன், ‘‘நான் ராமானுஜரின் பாதுகைகளைச் சுமப்பேன்’’ என்றும் கூறினார். ராமானுஜர், ‘‘நான் தோற்றால் எனது நூல்களைக் கையால் தொடமாட்டேன்’’ என்றார். வாதம் பதினெட்டு நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. பதினேழாம் நாளிலேயே யக்ஞமூர்த்தி தன்னுடைய வாதத்தை நிறைவு செய்து விட்டார். பதினெட்டாம் நாள், ராமானுஜர் பல்வேறு சான்றுகளுடன் வாதாடினார். இறுதியில் வெற்றி வாகையும் சூடினார். யக்ஞமூர்த்தியும் ராமானுஜரின் சீடரானார்.  அத்வைத கொள்கை பின்பற்றிய யாதவ பிரகாசரிடம் கல்வி கற்றபோதே, சிறு வயது ராமானுஜர், தனது குருவிடம் துணிவுடன், ஆழ்வார்கள் கூறிய விசிஷ்டாத்வைத முறையைப் பற்றிக் கூறி விளக்கினார்.

திருக்கோளூர் அம்மாள், “எம்பெருமானைப் (ராமானுஜர்) போல வாதாடி அத்வைதம் வென்றேனா?”, என்கிறார்.


========********========

adhvaidham venREnO emperumAnAraip pOlaE


In explaining the meanings of the Vedas and Vedantas, three major philosophies came into existence - Advaita, Visishtadvaita and Dvaita.

Advaita, originally known as Puruavāda, is translated as “non-dualism” though it literally means “non-secondness.” Advaita says that the Supreme Lord alone is the truth and everything else is false. Advaita Vedanta is the oldest extant sub-school of Vedanta. Even though the soul (Jeevathma) may appear to be different based on our experiences, it is not different from the supreme. This is the interpretation of Adi Shankara of the famous Upanishad statement "tat tvam asi".

Dvaita, also known as BhedavādaTattvavāda and Bimbapratibimbavāda, was propounded by the 13th-century scholar Madhvacharya. Dvaita (द्वैत) is a Sanskrit word that means "duality, dualism". It says that the Supreme and the soul (Jeevathma) are always different and separate.

Visishtadvaita, literally "Advaita with uniqueness; qualifications", can be described as qualified monism or qualified non-dualism or attributive monism. It is a school of Vedanta philosophy which believes in all diversity subsuming to an underlying unity.
Swami Ramanuja followed the teachings of Alavandar and purvacharyas and the words of Azhvars and established Visishtadvaita. Ramanuja, the main proponent of Vishishtadvaita philosophy contends that the Prasthanatrayi ("The three courses"), namely the Upanishads, the Bhagavad Gita, and the Brahma Sutras are to be interpreted in a way that shows this unity in diversity, for any other way would violate their consistency.

The base of this sampradhayam is “sharIrAtma bhAva”, meaning, “He is my atma, I am his sharIra (body)”, as in, between the Supreme and the soul, the Supreme acts as the antaryami of all souls ("yasya AtmA sharIram"). In his work Sri Bhashya, that is a commentary to the Brahma Sutra, Ramanuja condemns the mAyA vAda of the advaita sampradhayam. Even when he was a student, learning from Yadavaprakasha who was following advaita, Ramanuja had the courage to correct the statements made by him. Later, he debated the great advaita vidwan Yajnamurthi, defeated him and took him as his disciple (he would be renamed as Arulala Perumal Emberumanar).

Thirukkolur Ammal asks, "Did I challenge and win the well-established siddhantam of Advaita like Ramanuja?"

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...