May 10, 2018

Thirukolur Penpillai Rahasyam-63


அருளாழி என்றேனோ நல்லானைப் போலே

காவேரி நதிக்கரையோரம் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமத்தில், அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். ஸ்ரீமன் நாராயணனின் பக்தரான அவர், ஒருநாள், காவிரியில் நீராடிக் கொண்டிருந்த பொழுது சடலம் ஒன்று நதியில் மிதந்து வருவதைப் பார்த்தார். சடலத்தை கரையோரம் கொண்டு வந்த அந்தணர், அந்த சடலத்தின் தோள்பட்டையில் சங்கு, சக்கரம் இருப்பதைக் கண்டார்.

அது ஒரு வைஷ்ணவனின் சடலம் என்று எண்ணி, இறுதிச் சடங்குகளை செய்தார். அந்த ஊர் மக்களுக்கு அது பிடிக்கவில்லை. அந்த சடலம் ஒரு தாழ்ந்த சாதி மனிதனுடையது என்றும், அதற்கு இறுதிச் சடங்கை அந்தணரான அவர் செய்ததால், அவரை சாதியைவிட்டு ஒதுக்கி வைத்தனர். அந்த அந்தணர், எம்பெருமானிடம், அவ்வூர் மக்களைத் திருத்தும் படி வேண்டினார்.

அடுத்த நாள் ஊர் மக்கள் கூடியிருந்த கோயிலில், எம்பெருமான், “ஜாதியாலும் இதர காரணங்களாலும் நீங்கள் பிரிந்து வாழ்வதால், உங்களுக்கு அந்தணரின் செயல் தவறாக படலாம். ஆனால், எதையும் எதிர் பார்க்காமல் அவன் செய்த செயலால் அந்தணன் எனக்கு ஒரு நல்லான் (நல்லவன்). அவனை மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.” என்றுக் கூறி மக்களுக்கு புரிய வைத்தார்.

ஸ்ரீமன் நாராயணனின் கையில் உள்ள சக்கரம் ‘அருளாழி’ எனப்படும். நல்லான், அந்த சடலத்தின் தோள்களில் அருளாழியையேப் பார்த்தான். எந்த ஒரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நல்லான் அருள் நிறைந்த உள்ளதோடு இறுதி சடங்குகளை செய்தான். எனவே, எம்பெருமானின் அருளுக்குப் பாத்திரமானான். 
ஸ்ரீமன் நாராயணனே நல்லான்என்று கூறியதால்,  அவரை மக்கள் நல்லான் சக்ரவர்த்திஎன்று அழைத்தனர்.

திருக்கோளூர் அம்மாள், “நல்லானைப் போல நல்லுள்ளங் கொண்டு அருளாழி கண்டேனா?”, என்று வினவுகிறார்.

========********========



aruLAzhi kaNdEnO nallAnaip pOlE

Long long ago, in a village located on the banks of river Cauvery, there lived an ardent devotee of Lord Sriman Narayana. The Brahmin devotee, once, while he was taking bath in the river, saw a dead human body being carried in the water flow. Dragging the body to the shore, he noticed marks of conch and Chakra on the shoulders. (Samasrayanam is a ritual or ceremony of initiating a person into the family of Sri Vaishnavites. This process is done by placing the heated emblems of Maha Vishnu - the Chakra and the Conch and embossing them on the shoulders of the devotee.)

On seeing the marks of conch and chakra and realizing that the body belongs to a devotee of Sriman Narayana and a Sri Vaishnava, the brahmin performed the final rites for that person. The people in the village did not like what the Brahmin has done. They said that the body could belong to someone who was from a low caste and also, stating that a Brahmin has performed the final rites for him, they made him an outcast. The brahmin prayed to the Lord to show the truth to the village people.

The next day, when people were gathered in the temple, the Lord told them - "In the name of caste and differences, you all may not find the doings of the brahmin devotee alright, but, to Me, he is a good person ('nallAn’). Therefore, you too accept him as such". From that day onward, he and his descendants were came to be known as "Nallan Chakravarthy".

The Lord's Chakra (discus) is known as "aruL Azhi". Nallan saw only the mark of the "aruLAzhi" and nothing else. To him, there was only care in his eyes for the departed soul and there was no expectation in his heart. In the process, he also saw the depth of the Lord's grace ("aruL Azham").

Thirukkolur Ammal is asking - "Did I see only the mark of the Lord's discus and nothing else like Nallan?"

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...