நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே
வைணவ ஆச்சாரியர்கள் பரம்பரை
வரிசையில் முதன்மையானவரான நாதமுனிகள் வீரநாராயணபுரம் எனும் இன்றைய காட்டுமன்னார்கோயில் பகுதியில் அந்தணக்குடும்பம்
ஒன்றில் ரங்கநாதன் எனும் இயற்பெயருடன் பிறந்தார். சிறுவயதிலேயே
பெருமாள் மீது பற்று கொண்ட இவர், ஒரு சமயம், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் குறித்து நம்மாழ்வார் பாடிய பத்துப்
பாசுரங்களை சில வைணவர்கள் இசையுடன் பாடியதை கேட்டார். ‘ஆயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்’ என்று அவர்கள்
பாசுரங்களைப் பாடி முடித்த போது, நாதமுனிகள், “ஆயிரத்தையும் பாடக் கூடாதா?’’ என்று கேட்டார்.
அதற்கு அவர்களோ “திருக்குருகூரில் வசிக்கும்
நம்மாழ்வாரின் சீடர் பராங்குசதாசனுக்கு தான் அத்தனையும் தெரியும்” என்றனர்.
பராங்குசதாசனைத் தேடி
தாமிரபரணிக் கரைக்குப் போனார் நாத முனிகள். அவரோ, “எல்லாம் மகான்
நம்மாழ்வாருக்குத்தானே தெரியும். ஆழ்வார் திருநகரியில் உள்ள புளியமரத்தடியில் தான்
அந்த மகான் மோட்சமான இடம் உள்ளது. அங்கு சென்று, நம்மாழ்வாருக்காக
மதுரகவி ஆழ்வார் பாடிய ‘கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்ற பாசுரத்தை பன்னிரெண்டாயிரம் முறை பாடினால் நம்மாழ்வார் காட்சி
கொடுப்பார். அவர் அருளினால், ஆயிரத்தையும் நீங்கள் பெறலாம்.”-
என்று கூறினார்.
அதன்படியே, ஆழ்வார்
திருநகரி சென்று பன்னிரெண்டாயிரம் முறை அந்தப் பாசுரத்தைப் பாடினார் நாதமுனிகள்.
அப்போது அவருக்கு காட்சி கொடுத்த நம்மாழ்வார், “ஆயிரமென்ன..
நாலாயிரமும் உமக்குத் தந்தோம்” என்றுக் கூறி நாலாயிரம்
திவ்யப் பிரபந்தங்களையும் நாதமுனிகளுக்கு அருளினார்.
அனைத்திலும் இறைவனை மட்டுமே கண்டார்
நாதமுனிகள். யோக பிரபாவம் உடையவர் நாதமுனிகள். ஒரு சமயம், பிருந்தாவனம்
வரை யோக மார்க்கத்தால் வந்த நாதமுனிகளைக் காண சிலர் வந்து சென்றனர். தியானம்
முடிந்து விழித்த நாதமுனிகள், விஷயம் கேட்டு, யார் வந்ததென வினவ, அவர்கள், “கையில்
வில்லுடன் இரு ஆடவரும், ஒரு பெண்ணும் உடன் சில வானரமும்
வந்தனர்.”, என்றனர். அதிர்ந்த நாதமுனிகள், வந்தது, தான் யோகத்தில் அனுபவித்த ராமனே என்பதை
உணர்ந்து, அவர்கள் சென்ற திசை நோக்கி
நடக்க ஆரம்பித்தார்.
வீர நாராயணப்பெருமாளே அவ்வாறு வந்து, போக்கு காட்டி, நாதமுனிகளை கங்கை கொண்ட சோழபுரம் வரை அழைத்துச் சென்றார். கடைசிவரை
அவர்களை நாதமுனிகளால் காணமுடியவில்லை. சோர்ந்துப் போன நாதமுனிகள் எங்கு செல்ல
என்று காட்டில் அமர்ந்து அழ, வீர
நாராயணப்பெருமாளே அவருக்கு காட்சிக் கொடுத்தார். பெருமாளைக் கண்ட ஆனந்தத்திலேயே
ஸ்ரீ வைகுண்டம் புகுந்தார்.
திருக்கோளூர் அம்மாள், “நாதமுனிகள் போல் பெருமாளைத்
தேடி நெடுந்தூரம் சென்றேனோ?”, என்று வினவுகிறார்.
nedundhUram pOnEnO nAthamuniyaip pOlE
Born in a small village called Viranarayana (Kattumannar Koil) near Chidambaram, Nathamunigal’s birth name was
Aranganathan. Nathamunigal was a Vaishnava theologian
who collected and compiled the Nalayira Dhivya Prabhandham, which was lost
for ages. Nathamunigal was a great exponent of the Ashtanga Yoga. He came to
know about Nalayira Divya Prabhandam, but he heard only 10 hymns. He wanted the
rest. He recited 12000 times, “Kanninun Siruthambu”, a poem in praise of
Nammazhwar and meditated on Nammazhvar in Azhvar Thirunagari. Nammazhwar
appeared and gave the 4000 hymns (Nalayira Divya Prabhandam). He also
wrote Nyaya Tattva, Yoga Rahasya and Purusha Nirnaya, but, none of them is
available today.
He saw the Lord in everything in this world. Nathamunigal can visit places while in meditation. One such day, Nathamunigal was enjoying the looks of the Lord in the beautiful Vrindhavan in deep meditation . When he came out of it, the people in his household
told him that two men with a bow in hand, a woman and a monkey came to
see him and left. Surprised, Nathamunigal said -"They must be Sri Rama, Lakshmana,
Sita and Hanuman!" and saying so, he started heading in the direction they went. Walking all the way lokoking for them, without any rest, Nathamunigal reached Gangai Konda Chozhapuram. Nathamunigal became extremely sad and sat in the forest with no idea on which way to proceed further. Seeing his condition, the Lord appeared in front of him and seeing the Lord, Naathamunigal was blessed and in happiness, his soul departed from his body and surrendered under the feet of the Lord.
Thirukkolur Ammal is asking "Did I walk
a long distance looking for the Lord, like Nathamunigal?"
No comments:
Post a Comment