March 17, 2018

Thirukolur Penpillai Rahasyam-53



காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே

கைகேயி, கேகய நாட்டு மன்னர் அஸ்வபதியின் மகளும், தசரத மன்னனின் மூன்று மனைவிகளுள் இளையவர் ஆவார். அழகும், வீரமும், விவேகமும் ஒரு சேர உருவான பெண். பரதன் இவருடைய மகன் ஆவார். ஸ்ரீராமனிடம் அதிக அளவு அன்பும் பாசமும் கொண்டவர்.

தசரத சக்ரவர்த்தி, ராமனுக்கு முடிசூட்ட எண்ணம் கொண்டு, மந்திரிகளுடனான ஆலோசனை முடிந்து ராமனுக்கு முடிசூட்ட நாளும் குறிக்கப்பட்டது. இராமனுக்கு முடிசூட்டு விழா என்று முரசு முழங்கியது. நாடே விழாக்கோலம் கொண்டு மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். எல்லோரையும் விட இச்செய்தியால் அதிகம் மகிழ்ந்தவர் கைகேயி. பெருமிதம் கொண்டார்.

ஆனால், சிலந்தி வலையில் சிக்கிய சிறு பூச்சியைப் போல், மந்தரை என்றொரு கூனி வீசிய வலையில் சிக்கிய கைகேயியின் மனமும் குணமும் முற்றிலுமாக மாறியதுராமனுக்கு நாளை முடிசூட்டப் போகும் கனவில் மகிழ்ந்திருந்த அரசன் தசரதன் இரவு கைகேயியைக் காண வந்தார். அலங்கோலமாய் அமர்ந்திருந்த கைகேயியின் நிலை கண்டு பதறினான். என்ன ஆயிற்று?”- என்று கேட்ட மன்னனிடம், “எனக்கு தாங்கள் இரு வரம் தருவதாய் முன்பு வாக்களித்தீர். இன்று அதை நான் கேட்கின்றேன். ஒன்று, ராமனுக்குப் பதிலாக என் மகன் பரதனுக்குப் பட்டம் சூட்ட வேண்டும். இரண்டு, 14 வருடங்கள் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டும்.”- என்றும் தசரதனிடம் இரண்டு வரங்களைக் கேட்டாள் கைகேயி. 

கைகேயி தன் முடிவில் உறுதியாய் நின்றாள். தசரதன் கொடுத்த வாக்கை மீற முடியாமல் தவித்தான். இரவெல்லாம் மன்றாடியும், தசரதனால் கைகேயியின் மனதை மாற்ற இயலவில்லை. வேறு வழியின்றி வரத்தை வழங்கினார். தாயிடம் ஆசீர்வாதம் வாங்க வந்த ஸ்ரீ இராமன், தன் தந்தை மற்றும் தாயின் நிலை கண்டு பதறி, நடந்ததை வினவ, கைகேயியும் நடந்தவற்றைக் கூறினாள்.

ஆழ்ந்த மௌனத்திற்கு பின், சற்றும் பதறாமல், ஸ்ரீ இராமன்சரியம்மா! தம்பி பரதன் நாடாளட்டும். நான் கானகம் புறப்படுகிறேன்.”-என்று கூறி, தாயிடமும் தந்தையிடமும் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு தன் அறைக்கு சென்றார்.


திருக்கோளூர் அம்மாள், “தந்தையின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, மறுப்பேதும் கூறாமல், வார்த்தையில், செயலில், இதயத்தில் தெளிவு காட்டி, ஸ்ரீ இராமன் காட்டிற்கு சென்றாரே, அதுபோல் ஒரு தெளிவை பெருமாளிடம் நான் கொண்டுள்ளேனா?” –என்று வினவுகிறார்.

========********========


kAttukkup pOnEnO perumALaip pOlE


King Dasaratha of Ayodhya decided to coronate Rama as the king and he informed to everyone in the court and the news spread all over the kingdom and people started to celebrate the occasion they were waiting for. With the approval of the sages and ministers of the court, he sets the date to crown Sri Rama.

When the message of Rama’s coronation was passed to Kaikeyi, Kaikeyi was delighted and as happy as she would have been if it was her own son, Bharata's coronation. But due to the ill advice of Mantara, Kaikeyi had a change of heart and demanded two boons from Dasaratha. Fuelled with envy and jealousy as a result of Mantara’s words, she asked that her son Bharatha be crowned as the king instead of Rama and that Rama be sent to the forest for 14 years. Hearing this, Dasharatha fell into a swoon and passed the night in a pitiable condition in Kaikeyi's palace.

The night before the coronation ceremony, Rama performed a vratam along with Sita and prayed to Lord Ranganatha. When Rama came to the palace of Kaikeyi to seek her blessings, he saw his father and mother Kaikeyi sitting devastated. When Rama asked for the reason, she told Him about the two boons and that it was a royal decree that He go to the forest. King Dasaratha’s promise has to be kept and he has to grant the boons Kaikeyi asked! Rama immediately accepted it and with great pleasure prepared to go to the forest.

Thirukkolur Ammal is asking "Did I show steadiness in my heart and mind like Rama showed, in following His father's word and gave up the kingdom and go to the forest?"





2 comments:

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...