இங்கு இல்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே
ஒருமுறை, என்றும் போல், வெண்ணை திருடி கண்ணன் மாட்டிக்கொள்ள, கோபியர்கள்
துரத்தி
வருகிறார்கள்.
கண்ணனும் அவன் நண்பர்களும் போக்கு காட்டி தெருக்களில் முத்துக்களாய் சிதறி ஓட, கண்ணன் ததிபாண்டனின்
இல்லத்திற்குள் நுழைகிறான். ததிபாண்டன் ஆயர்பாடியில் தயிர்விற்கும் ஒரு
இடையர்குலத்தைச் சேர்ந்தவன். ததிபாண்டனின் வீட்டில் பெரிய பெரிய தாழிகளில் தயிர்
ஊற்றி வைக்கப்பட்டிருக்கும். காலையில் அனைத்தையும் விற்றுவிட்டு மாலையில் காலி பானைகளை அலம்பி
வைத்திருப்பார். அப்படி
ஒரு பெரிய காலியான தயிர் தாழிக்குள் கண்ணன் மறைந்து கொள்கிறான்.
இதனை
ததிபாண்டன் பார்த்துவிடுகிறார்.
கிடைத்த வாய்ப்பை நழுவ விடலாமா? ததிபாண்டன் ஓடி
சென்று அந்த தாழியை மூடி,
அதன் மேல் அமர்ந்து
கொள்கிறார். கண்ணனை எல்லா
இடத்திலும் தேடி கலைத்த கோபியர்கள்,
ததிபாண்டனை நோக்கி “கண்ணன் இங்கே
வந்தானா?”, என்கின்றனர்.
“இல்லையே!”- என்கிறார்
ததிபாண்டன், சற்றும் யோசிக்காமல்.
கோபியர்கள்
போனபின்பும் ததிபாண்டன் தாழியின் மேலிருந்து இறங்கவில்லை. உள்ளே கிருஷ்ணனுக்கு
மூச்சு முட்டுகிறது. தனது புல்லாங்குழலால் தட் தட் என்ற பானை மூடியில் தட்டி
மூடியை திறக்க சொல்லுகிறான்.
“உன்னை வெளியில் கொண்டுவர வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை. நீ எனக்கு மோட்சம் கொடுக்க வேண்டும்”- என்கிறார் ததிபாண்டன்.
“மோட்சம் கேட்கும் முறையா இது?? நான் ஏதோ ஆடு மாடு மேய்ப்பேன். குழலூதுவேன். வெண்ணை திருடி உண்பேன். வேறு எனக்கு என்ன தெரியும்?”- என்று ஸ்ரீகிருஷ்ணர் சிரிக்கிறார்.
“உன்னை வெளியில் கொண்டுவர வேண்டுமென்றால் ஒரு நிபந்தனை. நீ எனக்கு மோட்சம் கொடுக்க வேண்டும்”- என்கிறார் ததிபாண்டன்.
“மோட்சம் கேட்கும் முறையா இது?? நான் ஏதோ ஆடு மாடு மேய்ப்பேன். குழலூதுவேன். வெண்ணை திருடி உண்பேன். வேறு எனக்கு என்ன தெரியும்?”- என்று ஸ்ரீகிருஷ்ணர் சிரிக்கிறார்.
“பூதனையை, சடகாசுரனை, கேசியை கொன்றவன் நீ. காளிங்க நர்த்தனம் ஆடியவன். கோவர்தனத்தைக் குடையாக பிடித்தவன். உன்னை நான் அறிவேன் கண்ணா ! மோட்சம் கொடுப்பேன் என்று உறுதியளித்தால் மட்டுமே வெளியில் விடுவேன்.”- என்கிறார் ததிபாண்டன் உறுதியாக.
கண்ணனை அறிதல் என்பது மிக முக்கியமல்லவா?
சிரித்த கண்ணன்
உடனே நிஷ்டையில் ஆழ்ந்தான். வைகுந்தத்திலிருந்து தேரும் தேவரும் வந்தனர்.
ததிபாண்டனை மட்டுமல்ல கண்ணன் ஒளிந்த தாழியையும் சேர்த்து வைகுந்தம் கொண்டு
போனார்கள். வைகுண்டம் போனால் இப்போதும் அந்தப் பானையையும் பார்க்கலாம் என்பது
ஸ்ரீவைஷ்ணவர்களின் நம்பிக்கை.
திருக்கோளூர் அம்மாள், “ததிபாண்டன் போல், எம்பெருமானின் நன்மைக்காக நான் போய் கூறினேனா?” - என்று வினவுகிறார்.
திருக்கோளூர் அம்மாள், “ததிபாண்டன் போல், எம்பெருமானின் நன்மைக்காக நான் போய் கூறினேனா?” - என்று வினவுகிறார்.
========********========
ingu illai
enREnO dhadhipANdanaip pOlE
One evening, while returning from their play time,
Krishna, Balram and his friends, tired of their day’s play, decided to steal
butter from the gopis who were seen churning butter in the morning.With an
assurance that there’s no one in the house, everyone went inside the kitchen
and started having the butter. Since there was no one in the house, everyone
had fun and ate all the butter. In the meantime, the house owner returned and
saw Krishna and Balram having fun with the kids. The Gopi started shouting in
anger at them. “Krishna! I know it’s you who would have started this. I’m going
to take you to your mother this time and make sure you get punished.”
Krishna, Balram and their friends started running towards
the streets. They ran faster than the gopis. Krishna ran and entered into a
house. The hall had large drums kept in the corner. Krishna checked every
single drum. They were all filled with buttermilk. Finally he got inside the
one that was empty. He hid himself from the gopis. It was Dhadhipanda’s house. “Dhadhipanda”
means “one who has a large yogurt pot”. Every day, Dhadhipanda would take a
large pot of yogurt and sell it. In the evening, he would come back with the
empty pot and rest outside his home. Dhadhipanda is a seller of milk products
especially buttermilk and butter. Dhandhipanda who was in the other room saw
all this. Dhadhipanda is an ardent devotee of Lord Vishnu. He knew that Krishna
is an incarnation of Lord Vishnu.
Dhadhipanda came running and sat on the top of the drum
as if like nothing happened. The gopis who came looking for Krishna saw Dhadhipanda
and asked him, “Oh Dhadhipanda! Did you see that little thief Krishna? He came
running this side. He stole butter in my house. That little thief ate all my
butter.”
“Oh really! That’s so bad. I didn’t see him. I’m sitting
here for a long time. I do not remember seeing him or any kid running this
way.”- Dhadhipanda lied to the gopis in order to save Krishna.
“If you see him, get hold of him. Don’t let him run away.
I’m going to present him in front of Yashoda and tell her about his stealing.
Every time we complaint, he makes us look like fools in front of Yashoda.”-saying
so the gopis left. But Dhandhipanda did not move. He sat on the drum’s top
humming to himself.
Krishna who is inside the drum knew that the gopis left.
He was waiting for Dhadhipanda to get up, but now it seemed like it’s not going
to happen. He punched Dhandhipanda from inside-“Oi Gopa Dhandhipanda! How long
are you planning to sit on the top? It’s suffocating inside. I’m not able to
breathe. Get up.”
“Hey Krishna, you are struck in my hands now. If you want
to get out of the pot, grant me my wish. Only then I will release you.”-Dhadhipanda
was sitting firmly on the top of the drum.
“What is this? I tried to escape from the gopis and now
struck with this guy. That too inside a drum! Oi Gopa! Is this the way to ask
for a wish? That’s not fair. This is blackmail!”- Krishna shouted from inside.
“I know. But this is the only way to get hold of you. And
also you are not that easy to be caught. While you are Krishna and also while
you are the Lord himself. This is my only chance! Grant me Moksha. Get me out
of this cycle of birth and rebirth and the worldly life. Agree to it and then I
will let you free.”- Dhandhipanda was so firm on his side.
“Oh boy! What have I pulled myself into? Fine, I agree. I
agree. I will grant Moksha to both you and your drum that I’m struck in. Now
let me out!” – Krishna bellowed from inside.
Dhadhipanda was so relieved to hear those words and he
jumped from the top of the drum out of happiness. Krishna came outside and he
brought the Pushpaga Vimanam from heaven and made sure Dhadhipanda and his drum
attained Moksha.
No one can say, upon whom the Lord's grace would fall. In
the previous varththai, one saw that His grace fell on Prahlada who told that
He was everywhere; in this varththai, it is seen that He gave moksha to
Dhadhipanda who lied that He was not there (near him).
Thirukkolur Ammal is asking "Did I say a lie for His sake, like Dhadhipanda?"
Great details here, better yet to discover out your blog which is fantastic Krishna.
ReplyDeleteThanks! Krishnarpanam!
Delete