இங்கு “திருவடி” என்று
திருக்கோளூர் அம்மாள் அழைப்பது “சிறிய திருவடி”யான ஹனுமனை.
இந்தியாவின் பழம்பெரும்
இதிகாசமான இராமாயணத்தில், ஸ்ரீ இராமனும் இலட்சுமணனும், இராவணனால் கடத்திச்
செல்லப்பட்ட சீதையைத் தேடி காடு முழுதும் அலைந்தனர். சீதையைத்
தேடி அலைந்த இராமனுக்கும், இலட்சுமணனுக்கும் கிஷ்கிந்தையின் அரசனும்,
வானரர்களின் அரசனுமான சுக்கிரீவனின் நட்பு கிடைத்தது. இராமனுக்கு உதவி புரிய விரும்பிய
சுக்ரீவன், நான்கு திசைகளிலும் வானர கூட்டங்களை அனுப்பி, சிதையின் இருப்பிடம்
குறித்து அறிய அனுப்பினான்.
தெற்கு திசையில் தேடிச் செல்ல, ஹனுமான்,
ஜாம்பவான், நிலா மற்றும் சில வானரங்களை, அங்கதனின் தலைமையில் அனுப்பினான். ஒரு
மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்து வர ஆணையிட்டான். கடல்
தாண்டி சென்ற ஹனுமான், இலங்கை அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள
சீதையைக் கண்டார். இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி, தான்
இராமனின் தூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சீதைக்கு நம்பிக்கையும்,
ஆறுதலும் கூறிய பின், சீதை கொடுத்த சூளாமணியை எடுத்துக் கொண்டு ஸ்ரீ இராமனிடம்
வந்தார்.
ஹனுமானின் வரவை எதிர்நோக்கி காத்திருக்கும்
ஸ்ரீ இராமனிடம், “"கண்டெனன், கற்பினுக் கணியையைக் கண்களால்" என்கிறார் ஹனுமான். “சீதையை” என்று தொடங்கி
விட்டால் இராமன் சீதைக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்று பதைத்து விடுவாரோ என்று எண்ணி, இராமனுக்கு மணித்துளி மனவருத்தத்தையும் தான் அளிக்கக் கூடாதெனக் கருதியும், தன்சொல்லில் ஐயம்
எழக்கூடாதெனக் கருதியும் ஹனுமான் “கண்டேன்” என ஆரம்பித்தார்.
ஹனுமானின்
வார்த்தைகளைக் கேட்டு மனமகிழ்ந்த ஸ்ரீ இராமன், அவனை ஆரத்தழுவிக்கொண்டான்.
திருக்கோளூர்
அம்மாள், “ஹனுமனைப் போல் பெருமானுக்கு தான் சேவை செய்து அவரை மனம் மகிழ செய்தேனா?”
– என்று வினவுகிறார்.
=========********========
kaNdu vandhEn
enREnO thiruvadiyaip pOlE
Here,
“Thiruvadi” refers to “Hanuman”.
In
the great Indian Epic, Ramayana, when Rama and Lakshmana went in search of the
abducted Sita, made friendship with King Sugriva and with the help of the
monkey clan, they searched for Sita. Sugriva sent the monkeys in the four
directions to find the place where Sita had been kept.
Knowing
that Ravana is the one who abducted Sita, and guessing that there is a greater
possibility for Sita to be taken across the ocean, to Sri Lanka, King Sugriva sent
Hanuman, Jambavan and Nila towards South, under Angadha as their leader and
gave them one month time to know the whereabouts of Sita. Knowing that Hanuman would
be able to find Sita, Rama gave him a ring so that Sita would understand that
Hanuman is a messenger from her Lord Rama.
Learning
from Sambhati that Sita is imprisoned in Sri Lanka; Hanuman was selected by the
monkey clan to leap across the ocean to meet with her. Meeting Sita in Lanka, Hanuman
showed her the ring from Rama and delivered the message which Lord Rama wanted
Hanuman to be delivered to Sita when he sees her, in order to make her feel
better and stay confident.
Returning
to Rama, he told Him that he had seen Sita ("drushTA maya sItA"). The
phrase “Drushta Maya Sita” means “Saw I, Seetha”. Realizing that starting a
sentence with “Sita…”, the ensuing gap of even those few seconds will be filled
with anxiety for Rama. So, instead he mitigated the anxiety by saying “Saw I,
Sita”. By doing this, beloved Hanuman relieved Lord Rama from the moments
filled with only distraught and anxiety. He also gave Rama the head
ornament from Sita that She had given him. Seeing the ornament and hearing the
message, Rama became very pleased and embraced Hanuman tightly.
Thirukkolur
Ammal is asking "Did I do service to the Lord like Hanuman did?"
Thanks for sharing. Wonderful content and so clearly and nicely.
ReplyDeleteThank You! Krishnarpanam!
Delete