March 01, 2018

Thirukolur Penpillai Rahasyam-51


 இங்கும் உண்டு என்றேனோ ப்ரஹ்லாதனைப் போலே
கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்த பிரகலாதன், தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். ஹிரண்யகசிபு தவத்தில் அமர்ந்த பொழுது, அவன் மனைவியான கயாது கர்ப்பம் தரித்தாள். இரணியன் இல்லாத காரணத்தால், தேவர்கள் அவனது நாட்டை அழிக்க வந்த பொழுது, நாரத மாமுனி கயாதுவை தேவேந்தரனிடம் இருந்து காப்பாற்றி, அவரை தனது ஆஷ்ரமத்தில் வைத்து கவனித்து வந்தார். அப்பொழுது, அனுதினமும் நாரத மாமுனி, ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்தார்.  பின்னாளில் இரணியன் வரங்கள் பெற்று நாடு திரும்ப, அரண்மனை சென்ற கயாதுவுக்கு பிரஹலாதன் பிறந்து, அக்குழந்தை சிறுவயது முதலே சிறந்த ஸ்ரீமன் நாராயணனின் பக்தனாக வளர்ந்து வந்தது.

இரணியகசிபு, பிரம்மாவிடம் இருந்து தான் பெற்ற வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும், அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். குருகுலத்தில் குரு அனைத்து குழந்தைகளுக்கும் “இரணியகசிபு தான் முழுமுதற் கடவுள்”, என்று கற்றுக்கொடுக்க, பிரஹலாதனோ, “ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற் கடவுள்” என்றான். இச்செய்தியறிந்த இரணியன், விஷ்ணு உண்மையான கடவுள் அல்லர், அவர் நம் குல விரோதி, உன் சித்தப்பாவைக் கொன்றவன் என்று நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற முடியவில்லை. துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். 
பிரகலாதனை மாற்ற பலவிதங்களில் துன்புறுத்தினான். ஆனால், எதையுமே கண்டுகொள்ளாத பிரஹலாதன் நாராயணா நாராயணா என்றபடி இருந்ததால், ஸ்ரீமன் நாராயணன் அவனைக் காப்பாற்ற,  இரணியனின் முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் பிரகலாதனைக் கொலை செய்ய ஆணையிட்டான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்தும் பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டான். 
பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்த இரணியன், விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி, உன் கடவுளைக் காட்டு’, என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ, ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.
இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ, “தூணிலும் இருப்பார், தூணின் தூசியிலும் இருப்பார், தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற வரங்கள் பொய்க்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.

திருக்கோளூர் அம்மாள், “பிரகலாதனைப் போல், மாறுபாடில்லா நம்பிக்கையுடன், ‘ஸ்ரீமன் நாராயணன் எங்கும் உள்ளார், இங்கும் உள்ளார்’, என்று கூறினேனா?”, என்று வினவுகிறார்.

========********========

ingum uNdu enREnO prahlAdhanaip pOlE

Hiranyakashipu's younger brother, Hiranyaksha was slain by Lord Vishnu when he took the Varaha Avatar. Angered by this, Hiranyakashipu performed great penance towards Brahma and when Brahma appeared in front of him, he asked for immortality which was refused by Lord Brahma, saying, everything once born has to eventually die.

Hiranyakashipu then requested, “Oh Lord, I should not meet death from any of the living entities created by you. Grant me that I shall not die within any residence or outside any residence, during the daytime or at night, nor on the ground or in the sky. Grant me that my death not be brought by any being other than those created by you, nor by any weapon, nor by any human being or animal. Grant me, further, that I shall not be killed by any demigod or demon. Grant me the benediction that I may have no rival. Give me sole lordship over all the living entities and presiding deities, and give me all the glories obtained by that position. Furthermore, give me all the mystic powers attained by long austerities and the practice of yoga, for these cannot be lost at any time.”

With Brahma granting the boons to Hiranyakashipu, he became mighty and crueler than ever that he ruled both the earth and Indraloka for 107,280,000 years. In consequence of the boons, he put forth the command that no one should worship Sriman Narayana and instead everyone should worship him. Legends say that he was able to shake the very Himalayas down to their roots and once when King Ravana tried to lift Hiranyakashipu's earrings, he was unable to do so because they were very heavy.

When Hiranyakashipu was doing penance, Sage Naradha took care of Hiranyakashipu’s wife Kayadhu, who was pregnant at that time. Sage Naradha recited transcendental instructions and mantras and stories of Lord Vishnu to the unborn child in the womb and as a result, when the kid was born, he became an ardent devotee of Lord Vishnu. Prahlada was the son of Hiranyakashipu. While the teachers of Hiranyakashipu’s Kingdom taught all children that Hiranyakashipu was the supreme power, Prahlada prayed only to Narayana and also taught the same to the children in his gurukula.

Hiranyakashipu eventually becomes so angry and upset at his son's devotion to Vishnu (whom he sees as his mortal enemy) and he tried to kill his son in malicious ways such as using weapons, having poisonous snakes bite him, crushing him with elephants, throwing him from a mountain-top, throwing him in fire, into the ocean, etc. Prahlada's mind was always set on Sriman Narayana and so each time Hiranyakashipu attempts to kill the boy, Prahlada was protected by Vishnu's mystical power.

In spite of everything that Hiranyakashipu did to him, Prahlada showed no anger towards him. Instead, he advised Hiranyakashipu, "Vishnu is the Supreme Being who is the controller of everyone and omnipresent. Just like he is inside me, so too he is inside you. He is present everywhere."

Fumed, Hiranyakashipu points at a pillar near by and asked Prahlada -“O most unfortunate Prahlada, you have always described him as a supreme being other than me, who is the controller of everyone and who is all-pervading. If He is everywhere, then why is He not present before me in this pillar?"

Prahlada answered, “He was, He is and He will be.”

Hiranyakashipu wrecked that pillar with all his anger and strength and Sriman Narayana appears as Narasimha and slays Hiranyakashipu, standing by the words of Lord Brahma’s boons.


Thirukkolur Ammal is asking "Did I, with great certainty said that he is everywhere, “including here (in this pillar)”, like Prahlada?"

1 comment:

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...