வழி அடிமை செய்தேனோ லக்ஷ்மணனைப் போலே
அயோத்தியின் அரசர் தசரதனுக்கு நான்கு மகன்கள் – மூத்தவர் இராமர், இலக்குவன், பரதன், சத்துருகனன். நால்வரும் வசிட்டரிடம் சீடர்களாக சேர்ந்து பல்வேறு கலைகளை கற்றனர். இலக்குவன், இராமரிடம் தனி அன்பும், மரியாதையும்
கொண்டிருந்தார். விசுவாமித்திர முனிவர், அயோத்தியை அடைந்து தசரதரிடம்
தன் யாகங்களுக்கு ராட்சகர்களால் இடையூறு ஏற்படுவதால் அவர்களை அழிக்க இராமனை
தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். முதலில் தயங்கினாலும் பிறகு
இராமனையும், லட்சுமணனனையும் அவருடன் அனுப்பி வைத்தார்.
இராமனுக்கு முடிசூட்ட தசரதர் எண்ணிய பொழுது, கைகேயி தனது மகனான பரதன் அரசனாக வேண்டும், இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும்
என்னும் இரண்டு வரங்களைக் கேட்க, தாய் சொல்லை மறுக்காமல், இராமரும் உடனடியாகவே காட்டுக்கு கிளம்பினார். அவர் தடுத்தும் கேளாமல் சீதையும், இலட்சுமணனும் இராமனுடன்
காட்டுக்கு கிளம்பினர்.
தனித்து வனவாசம் செல்ல எண்ணிய ராமரிடம், இலட்சுமணன் – “நீரின்றி மீனால் வாழ
முடியாது. அது போல் தான் தாங்கள் எனக்கும், சீதாதேவிக்கும். எங்களையும் உடன்
அழைத்துச்செல்லுங்கள்.”, என்றார்.
இராமன் காட்டிலிருந்த பதினான்கு ஆண்டுகளும் கண்ணுறங்காமல் அவரையும் சீதாதேவியையும் பாதுகாத்து வந்தார் இலட்சுமணன். இராமனுக்கும் சீதாதேவிக்கும் தேவையான
பணிவிடைகளை இலட்சுமணன் செய்தார். பஞ்சவடியில் இராமரும் சீதாதேவியும் தங்குவதற்கு குடில் அமைத்துக்
கொடுத்தார்.
சீதாதேவியை இராவணன் கடத்திச்சென்ற போது, இராமருக்கு பக்க பலமாய் நின்று
இராவணனை வென்று சீதையை மீட்க உதவினார். அயோத்தி திரும்பிய பின், மன்னராக முடி சூடிக்கொண்ட
இராமர், இலட்சுமணனை பட்டத்து இளவரசராக முடி சூடிக் கொள்ள கூறிய போது, அதை பணிவுடன் மறுத்து, “என்னை
விட பரதனே அப்பதவிக்கு தகுதியானவன். அடியேன் தங்களுக்கு சேவை செய்யவே
விரும்புகிறேன்.”, என்றார்.
திருக்கோளூர் அம்மாள், “இலட்சுமணன் போல் சரணாகதி அடைந்து, இராமர் செல்லும் இடமெல்லாம் அவருடன் சென்று அவருக்கு
பணிவிடைகள் செய்தேனா?” – என்று வினவுகிறார்.
========********========
vazhi adimai seydhEnO lakshmaNanaip pOlE
Rama was born to Kaushalya and King
Dasharatha
while Lakshmana and his brother Shatrughna were
born to Sumitra and King Dasharatha. Lakshmana
is personified by Rama as
a man with unwavering loyalty, love and commitment to his elder brother through
times of joy and adversity alike. Lakshmana is specially attached to Rama.
When sage Vishwamitra took
Prince Rama with
him for killing the demons, Lakshmana accompanied his brother. When Rama was
asked to go to the forest based on the boons that Kaikeyi got from King Dasaratha,
Lakshmana too wanted to go with Him. Initially, Rama did not agree to that.
Lakshmana pleaded with Lord Rama stating: "Just as a
fish would not survive out of the water, so too mother Sita and myself cannot
survive separation from You. Therefore, You have to take me with You." He
then told Lord Rama that when He and Sita live and play in the sides of
mountains, he would perform all kinds of services to them "aham sarvam karishyAmi".
Lakshmana's mother Sumitra tells him that he was made for
the sake of living in the forest "srushTstavam vanavAsAya". She also
warned him that he should not lose his mind watching the beauty of Rama's walk
and fail in his duties.
During their exile, Lakshmana served Rama and Sita
reverently. In Panchvati, Lakshmana also built a hut for Lord Rama and Sita to
live in. There, never, was a situation where Lakshmana opposed Rama,
except when, after the war, when Rama asked Sita to give test of her purity,
Lakshmana for the first time got angry on Rama and opposed him.
After the war in Lanka, Rama was crowned king of Ayodhya
and Bharata became the crown prince. Rama had offered to make Lakshmana the
crown prince but he refused, saying Bharata is greater than he, and more
deserving of the title. He added that he love to be on service for Rama than bearing
the crown prince title.
Thirukkolur Ammal is asking "Did I stay always with
Him and perform all kinds of services like Lakshmana?"
No comments:
Post a Comment