February 21, 2018

Thirukolur Penpillai Rahasyam-44



பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே

கம்சனின் அழைப்பையேற்று, ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும் அக்ரூரருடன் மதுரா வந்தடைந்தனர். மதுரா நகர மக்களிடையே நாகரீகம், உடை, நடை என அனைத்திலும் ஸ்ரீ கிருஷ்ணனும் பலராமனும் தனித்து தெரிய, தாங்களும் மதுரா மக்களுக்குயேற்றது போல் மாற எண்ணினர்.

வண்ணான் ஒருவரிடம் இருந்து அழகிய வஸ்த்ரம் வாங்கிக்கொண்டனர். அழகிய புதிய மாலைகளை அணிய விரும்பி, மதுரா நகரின் கடைவீதியில் உள்ள மாலாகாரரின் குடிலுக்கு சென்றனர். மாலாகாரர் என்றார் பூமாலைகள் தொடுத்து விற்பவர் என்று அர்த்தம். பாகவதம், அம்மாலாகாரரின் பெயர் சுதாமா என்று கூறுகிறது. ஸ்ரீ கிருஷ்ணனையும் பலராமனையும் கண்ட சுதாமா அவர்களை அடையாளம் கண்டு கொண்டார். அவர்களின் பாதங்களில் விழுந்து வணங்கிய சுதாமா, அவர்கள் விரும்பியது போல் சிறந்த, அழகான, வாசனை மலர்கள் கொண்டு தொடுக்கப்பட்ட மாலைகள் இரண்டை எடுத்து அவர்களுக்கு கொடுத்தார்.

மாலையை ஸ்ரீ கிருஷ்ணனிடமும் பலராமனிடமும் வழங்கும் முன், தன் முகத்தை ஒரு துணியால் மூடிக்கொண்டு கொடுத்தார். மாலையின் அழகில் மயங்கி, அதை தான் உபயோகிக்க எண்ணம் கொண்டால் அம்மாலை ஸ்ரீ கிருஷ்ணனை சென்று சேராமல் போய்விடும். மேலும், அதனால் தன் முகம் வாடினால் அது ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் வருத்தத்தை அளிக்கும். தனது சிறந்த படைப்பு, ஸ்ரீ கிருஷ்ணனுக்கே சமர்ப்பணம். எனவே, தனது முகத்தை துணியால் மறைத்துக்கொண்டு மாலைகளை கொடுத்தார். சுதாமாவின் இச்செயலை, அக்ரூரர் பாராட்டினார் என்கிறது கீதா பாஷ்யம்.

திருக்கோளூர் அம்மாள், “மாலாகாரர் போல், எதையும் எதிர்பார்க்காமல் ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பு காட்டினேனா?” – என்று வினவுகிறார்.
 ========********========


pUvaik koduththEnO mAlAkAraraip pOlE

Krishna and Balrama reached Mathura along with Akrura, accepting the invitation of King Kamsa. Looking at the people and the new lifestyle in Mathura which is no way like that in Gokulam, they too decided to look not like an outsider! They got new clothes from a washerman and when they wished to wear new and fragrant flowers, they entered a small street in the market place and reached for the home of a Malakara. Malakara is referred to people who make garlands.

Bhagavatam says that the florist’s name was Sudhama. Upon seeing them both, Sudhama recognized their greatness and fell at their feet. The two, who looked like freshly blossomed lotuses themselves, asked him for flowers. Sudhama praised them and gave them an attractive garland made with the most beautiful and fragrant flowers. Before giving the garland to them, Sudhama covered his face with a piece of cloth, so that he would not be captivated at the looks of the garland and also, he would make sure the best garland reached the Lord in the best way, without his heart having any worries for him, not being able to wear that flower! Such was the love of Sudhama towards the Lord. Krishna was pleased by the affection shown by Sudhama and gave him several boons.

Swami Ramanuja praises Sudama along with Akrura in his Gita Bashyam. It is due to this that many of our Azhwars and Acharyas seek to perform flower service to the Lord.

Thirukkolur Ammal is asking "Did I show the selfless love exhibited by Malakara?"

1 comment:

  1. Spreading the knowledge of Indian mythical stories you are great don't delete this blog about Krishna.

    ReplyDelete

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...