February 20, 2018

Thirukolur Penpillai Rahasyam-43



பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே

கிருஷ்ணரும் பலராமரும் அக்ரூரருடன் கம்சனின் அரண்மனைக்கு வரும்போது வழியில், மதுராவின் அழகை ரசித்துக் கொண்டே வந்தனர். கடைவீதி, மக்கள் கூட்டம், நாகரீக வாழ்க்கை என சிறிதும் கோகுலத்தின் சுவடு இல்லா மதுரா நகரின் வாழ்க்கையை ரசித்தபடி வீதியில் நடந்து வந்தனர்.

கிருஷ்ணனின் லீலைகள் அறிந்த மதுரா மக்கள் கிருஷ்ணனையும் பலராமனையும் அதிசயத்துடன் பார்த்தனர்! அக்கூட்டத்தில், கம்சனின் அரண்மனையில் வேலை புரியும் பெண்ணொருத்தி வளைந்த கூனுடன் நின்று கொண்டிருந்தாள். திருவத்திரை என்னும் பெயர் கொண்ட அவள், கம்சனுக்கும், அரண்மனை பெண்களுக்கும் வாசனை திரவியங்களும் சந்தனமும் அரைத்து கொடுப்பார்.

மாலினி என பெயர் கொண்ட அவள், மிகவும் அழகானவள். சில ஆண்டுகளுக்கு முன் நோய் வாய்ப்பட்டதில் கூன் விழுந்து, கழுத்துப் பகுதி சாய்ந்தும், ஒரு கால் வேலை செய்யாமலும் போக, மக்கள் அவளை கிண்டல் செய்யும் விதமாக “திருவத்திரை”, அதாவது மூன்று குறைபாடுகள் கொண்டவள், என அழைத்தனர்!

சிறு வயது கிருஷ்ணனின் லீலைகளை கேட்டு ரசித்த அவள், கிருஷ்ணனால் தனது நிலையை மாற்ற முடியும் என மாறா நம்பிக்கை கொண்டிருந்தாள். “கிருஷ்ணன் வருவான், என் நிலை மாறும்!” – என தன்னை மக்கள் கிண்டல் செய்த போதெல்லாம் தன் மனதை தேற்றிக்கொள்வாள்.

கிருஷ்ணனை கண்டதும், அவனருகே சென்று, “நீ வருவாய் என நான் அனுதினமும் காத்துக் கிடந்தேன்! என் நம்பிக்கை பொய்க்கவில்லை!”, என்றாள்.

புன்னகைத்த கிருஷ்ணன், அவளிடம்- “கையில் என்ன வைத்துள்ளீர்”, என்றான்.

“சந்தனம். அரசனுக்கு!”- என்ற அவளிடம், “எங்களுக்கும் தர முடியுமா?”-என்று கூறி, இருவரும் கை நீட்டினர்!

“நான் கொடுத்து வைத்தவள். உங்களின் அழகு மார்புக்கு என் சந்தனமா!”- என்று கூறி, கம்சனுக்கு இவ்விஷயம் தெரியவந்தால் தனக்கு தண்டனை கிடைக்கும் என்பதையும் பொருட்படுத்தாமல், கையில் உள்ள சந்தனத்தை கிருஷ்ணனுக்கும் பலராமனுக்கும் கொடுத்தார். அவளது பணிவைக் கண்டு மகிழ்ந்த கிருஷ்ணர், அவளது கூன் உடலை அழகான உடல் அமைப்பாக்கி அருள்புரிந்தார்.

திருக்கோளூர் அம்மாள், “கூனியைப் போல், விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் சந்தனம் பூசக் கொடுத்தேனோ?”, என்கிறார்!
========********========


pUsak koduththEnO kUniyaip pOlE

Krishna and Balaram arrived in Mathura along with Akrura, accepting the invitation from King Kamsa. They had never been in a big town before, so they were excitedly looking at everything. As they walked from street to street, their reputation spread. People started talking about the little things they did in their childhood.

There was a lady in Mathura who was called by the people as Trivakra. Tri-vakra means “three deformities.” She was a hunchback, her neck was distorted, and one of her knees had gone totally stiff so she had to drag it when she walked. She was also called Kubja. Kubja means “dwarf.” She was a very beautiful woman but about 20 years ago, she was afflicted by some disease and became a cripple. Though her given name was Malini, people just called her Trivakra – “three deformities” – and teased her, cursed her and made fun of her.

She was an expert with perfumes, herbs, and grasses and handled the perfume for all the ladies in the palace. Listening to the stories of Krishna’s childhood and his lilas, Trivakra had fallen deeply in love with Krishna. With her heart she believed, one day, when Krishna comes and touches her, everything will be okay.

Seeing Krishna and Balram walking in the street, she asked, “Who are these boys?” Someone said, “They are Nanda’s sons. They have come from Gokula.” Her eyes were fixed on Krishna, this blue-bodied, 16-year-old boy, lean and tall, and so graceful in his movement. When she saw the way he was, the gracefulness with which he was handling people and the way he was touching everyone, she suddenly realized this Nanda’s son is Krishna.

She pushed her way through the crowd, looked up at him and said, “I’ve been waiting for you for many years. With every beat of my heart, I’ve been waiting for you!”

Krishna asked her, "Who are you taking this sandal paste for?"

She replied "O beautiful one! I am taking this sandal paste for King Kamsa".

Krishna and Balaram asked her for same sandal. She gave them some, without even considering about the consequences she will get to face when King Kamsa gets to know that she has given something that was meant for the king. Krishna and Balram wore it with pleasure.

Krishna looked at her, smiled and asked, “Why have you been waiting for me? How did you know that I was coming?”

She said, “I simply knew in my heart that you will come one day and you will make me alright.”

Krishna saw the love and longing for him that she had been nurturing within her, and her suffering. Then, Krishna placing His foot on her's and two fingers under her chin lifted her and removed the hunch from her back. He just embraced her and almost forcefully straightened her body. She stood up straight and alright.

Thirukkolur Ammal is asking "Did I give fragrant paste to the Lord like the hunchback, without thinking about consequences?"


1 comment:

  1. Extremely helpful information, thanks for sharing such an informative post about Krishna. I liked reading it and appreciate the work of author.

    ReplyDelete

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...