இரு மன்னர் பெற்றேனோ வால்மீகியைப் போலே
வால்மீகி முனிவர் இந்தியாவின் பழம்பெரும் இதிகாசங்களில் ஒன்றான,இராமாயணம் எனும் இதிகாசத்தை
இயற்றியவர் ஆவார்.
இலங்கையில் இருந்து சீதையை
மீட்டு, வனவாசம் முடிந்து அயோத்தி திரும்பிய ஸ்ரீ ராமர், அயோத்தி மன்னராக தருமநெறி
வழுவாது பல ஆண்டுகள் ராஜ்ய
பரிபாலனம் செய்து வந்தார். அயோத்தியே மகிழ்ச்சிக்
கடலில் ஆழ்ந்தது. ஒரு நாள், நகர்வலம் வந்த காவலாளி, அங்கே ஒரு வீட்டில் உள்ளவர்கள்
ராமரைப்
பற்றி பேசுவதைக் கேட்டார். சலவை தொழில் செய்யும் குடும்பத் தலைவன் அங்கே சீதா தேவியைப்
பற்றி தவறான விவாதம் நடந்து கொண்டிருப்பதை அறிந்து, ஸ்ரீ ராமரிடம்
கூறினார். அந்த
வார்த்தைகள் ராமனுடைய நெஞ்சில் முள் போல் குத்தியது. தர்மத்திற்கு எடுத்துக்
காட்டாக வாழ்ந்து வந்த நாம் இப்படி ஒரு விஷயத்தை எண்ணிப் பார்க்கவில்லையே என்றெண்ணி, மக்களின் நலனுக்காகவும், தர்மத்திற்காகவும் கர்ப்பிணியான தன்
சீதையைக் காட்டில் கொண்டு போய் விட்டு வர லட்சுமணரைப் பணித்தார்.
கங்கை ஆறு பாயும் பித்தூரில் வால்மீகி ஆசிரமம்
அமைந்துள்ளது. அதன் அருகே சீதாதேவியை காட்டில் விட்டுவிட்டு, லக்ஷ்மணர்
அயோத்தி திரும்ப, தாங்க
முடியாத துயரத்துடன் வந்த சீதாதேவிக்கு வால்மீகி அடைக்கலம் குடுத்தார். சீதாதேவிக்கு இரட்டைக்
குழந்தைகள் பிறந்தனர். ஸ்ரீ ராமரின் குழந்தைகளுக்கு லவன், குசன் என்று
பெயரிட்டார் வால்மீகி.
அவர்கள் வால்மீகியின்
ஆசிரமத்திலேயே வளர்ந்தனர். ராமாயணத்தை வால்மீகி முதல் முதலில் கற்றுக்கொடுத்தது லவ
மற்றும் குசனுக்கு மட்டுமே! நற்பண்புடனும், நற்குணங்களுடனும், அறிவில் சிறந்தவர்களாகவும்,
ஆயுதங்களை கையாள்வதில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும் லவ குசனை வால்மீகி
வளர்த்தார்.
திருக்கோளூர் அம்மாள், “வால்மீகி
போல், ஸ்ரீ இராமருக்கு சேவை புரிந்தேனா?” என்று வினவுகிறார்.
========********========
iru mannar peRREnO vAlmIkiyaip pOlE
Valmiki is celebrated as the harbinger-poet in Sanskrit
literature. He is revered as Ādi Kavi, the first poet, author
of Ramayana, the first epic poem. Ramayana, originally written by
Valmiki, consists of 24,000 shlokas and 7 cantos (kaṇḍas) including Uttara Kanda. Ramayana is
composed of about 480, 002 words, being a quarter of the length of the full
text of Mahabharata or about four times the length of Iliad.
Valmiki is also quoted to be the contemporary of Rama.
Rama met Valmiki during his period of exile and interacted with him. After the
completion of his exile and rescuing Sita from Sri Lanka and defeating Ravana,
Lord Rama ruled Ayodhya with Sita as his queen. When Sita was pregnant, Rama
heard that a washerman spoke ill of the fact that He had brought back Sita who
was imprisoned in Ravana's place and made her His queen. He then decided to
leave her in the forest.
During this time, Sita asked a boon from Rama that she be
allowed to live in the forest for a while. So, Rama asked Lakshmana to take her
to the forest and leave her near Valmiki Maharishi's ashram. Lakshmana followed
the order of Rama and did the same.
Valmiki Maharishi took Sita to his ashram and protected her
there. When Sita gave birth to Lava and Kusa, Valmiki blessed them by rubbing
one child with the tip of the grass and the other with its root - the tip of this
grass is called Kucham and the root is called Lavam - thus the boys were named.
Valmiki was their guardian and he brought them up as worthy sons of Rama. His
first disciples to whom he taught the Ramayana were Kusa and Lava,
the sons of Rama. Sri Rama himself listened to the story of the Ramayana and
was pleased. Lava and Kusa sang the story before Rama and Rama did not know
that they were own sons!
Thirukkolur Ammal is asking "Did I do service to the
Lord and brought up the two Princes, like Valmiki?"
No comments:
Post a Comment