Poigai Azhwar, Bhoodhath Azhwar, Peyazhwar |
இடைகழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே
முதலாழ்வார்கள் எனப்
போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களள் - பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார். இவர்கள் மூவரும் சமகாலத்தவர்கள் மட்டுமல்லாமல்,
ஞான, பக்தி, வைராக்கியங்கள்
மிக்கத் துறவறம் பூண்டு, ஆண்டவனின்
நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். தனித்தனியே பரம்பொருளான
ஸ்ரீ நாராயணனுக்கு அடிமை பூண்டு, அவன் புகழ்
பாடித் திரிந்த அவர்களை ஓரிடத்தில் சந்திக்க வைக்கும்
லீலையை, அற்புதத்தை, தனது ஆசையை ஸ்ரீமன் நாராயணன் நிகழ்த்தினார்!!
மூவரும்,
தனித்தனியே திருக்கோவலூர் க்ஷேத்திரத்தில் அரசாலும் உலகளந்த பெருமாளை தரிசிக்க வந்தனர். தரிசனம் முடிந்து,
இரவுப்பொழுது, பலத்த மழை பெய்ய, வேறு வழியில்லாமல், மிருகண்டு முனிவரின்
ஆசிரமத்தில் உள்ள ஒரு மிகச் சிறிய அறையில் தங்க பொய்கையாழ்வார் முடிவு செய்தார். ஒருவர் மட்டுமே
படுக்கக் கூடிய அளவிற்கு சிறிய அறையில், பொய்கையாழ்வார் உறங்கிக்கொண்டிருந்த நேரம், யாரோ கதவை தட்டும் சத்தம்
கேட்டு விழித்தார்! கதவை திறந்து பார்த்த பொழுது, வாசலில் நின்ற பூதத்தாழ்வார்
தனக்கும் அங்கு தங்க இடம் இருக்குமா என்று வினவினார்.
பொய்கையாழ்வார், அதற்கு, “இங்கு ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்! உள்ளே வாருங்கள்!”, என்று கூறி இடமளித்தார். இருவரும்
ஒருவரை ஒருவர் வணங்கி உரையாட ஆரம்பித்தார்கள். கடலை மட்டுமே சேர விரும்பும் இரு மழை துளிகள் போல் அவர்கள் இருவரும்
பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து, நேரம் போவது அறியா வண்ணம், இருவரும் பகவானின் லீலைகளைப் பற்றி தன்னை மறந்து பேசிக்கொண்டிருந்த
நேரம், மீண்டும் யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு மீண்டும் இவ்வுலகிற்கு வந்தனர்.
கதவை
திறந்து பார்த்த பொழுது, வாசலில் நின்ற பேயாழ்வார், தான் தங்க இடம் கேட்க, “இங்கு ஒருவர்
படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர்
நிற்கலாம்!! உள்ளே வாருங்கள்!”
என்று கூறி அவ்விருவரும் பேயாழ்வாரை வரவேற்றனர். நெருக்கி நின்று கொண்டு மூவரும், தாங்கள் மூவரும் பரமாத்மாவை மட்டும் எண்ணி, அவன் புகழ் பாடி வாழ்பவர்கள் என்பதை அறிந்து,
பேரானந்தத்துடன் இறைவனின்
பெருமையை சொல்லியும், பாடியும், கேட்டும்
மகிழ்ந்தனர்.
இந்த சந்தோஷ சூழ்நிலையில், மூன்று ஆழ்வார்களின் மத்தியில் இருக்க விரும்பி எம்பெருமானும்
அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரைத் தொடர்ந்து, பிராட்டியார் இருவரும் அங்கு வந்தனர். அவர்கள் மூவரும் இல்லா இடத்தில் தங்களுக்கு என்ன
வேலை என்பது போல், மூவரையும் தொடர்ந்து, ஆதிசேஷனும் கருடாழ்வாரும் அங்கு வந்தனர்! அந்த சிறிய
இடத்தில் அனைவரும் வந்து நெருக்க, யார் தங்களை நெருக்குவது என்ற
கேள்வி ஆழ்வார்கள் மனத்தில் எழுந்தது.
நெருக்கத்தின் காரணத்தை அறிய,பொய்கையாழ்வார் :
“வையம்
தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று”
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று”
-என்ற பாசுரத்தை பாடினார்.
“இவ்வுலகை
அகழியாக கொண்டு, கடலை
நெய்யாகக் கொண்டு, அக்கடற்பரப்பின் ஒரு
விளிம்பிலே தோன்றுவதுபோல் காட்சியளிக்கும்
கதிரவனை திரியாகக் கொண்டு விளக்கை ஏற்றி திருமாலின் திருவடிக்கு
பாசுரங்களை மாலையாகச் சூட்டினேன். இந்த இருள் நீங்கட்டும்!”
அவரைத் தொடர்ந்து, பூதத்தாழ்வார் :
அன்பே தகளிய ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர் விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானச் தமிழ் புரிந்த நான்
-என்ற பாசுரத்தை பாடினார்.
“அன்பை
அகழியாகக் கொண்டு, இறைவனையும் அவன் குணங்களையும் அறியும் ஆர்வத்தை
நெய்யாகக் கொண்டு, அறிவை
திரியாகக் கொண்டு திருமாலுக்கு விளக்கேற்றினேன்.”
இவர்கள் ஏற்றிய விளக்கின்
ஒளியில், இருள் அகல, பரமாத்மாவை கண்ட பேயாழ்வார்:
திருக்
கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று
அருக்கன் அணி நிறமும் கண்டேன் – செருக் கிளரும்
பொன் ஆழி கண்டேன் புரிசங்கம் கண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று
-என்ற பாசுரத்தின் வழியாக,
“பரிந்துரை
கூறி நம்மை இறைவனிடம் சேர்ப்பிக்கும் பிராட்டியைக் கண்டேன். அவருடைய
சேர்க்கையினாலே நிறம் பெற்ற திருமாலின் திருமேனியைக் கண்டேன். சூரியன் போன்ற அழகிய
நிறத்தையும் கண்டேன். போரில் சீறும் திருச்சக்கரத்தையும், மற்றொரு
திருக்கையில் உள்ள திருச்சங்கினையும் சேவிக்கப் பெற்றேன்”.
முதலாழ்வார்கள் மூவரும், நெருக்கத்தின்
காரணம், திருமாலே
என்று உணர்தனர். இறைவனை கண்ட காட்சியில், உள்ளம் உருகி அவனுள்ளமும் கனியும்
வண்ணம் பாசுரங்களை பாடினார்கள்.
திருக்கோளூர் அம்மாள், “முதலாழ்வார்கள்
போல், அவனருளால் அறியாமை எனும் இருள் நீங்கி அவனைக் காணும் பாக்கியத்தைப் பெற்றேனா?”
========********========
Poigai Azhwar, Bhoodhath Azhwar, Peyazhwar |
idaikazhiyil kaNdEnO
mudhalAzhvArgaLaip pOlE
Mudhal Azhwargal are the first three Azhwars to appear in
this world. They are Poigai Azhwar, Bhoodhathazhwar and Peyazhwar. One time the
Lord decided to bring them together in the divyadesam of Thirukkovilur. The
three azhwars decided to seek the blessings of the Lord, “Ulagalandha Perumal”
and travelled from their place to Thirukkovilur and reached the temple.
Unknowingly, the three of them were in the same place, at the same time but stayed
unnoticed! It was a dark and stormy
night and the rainfall was getting heavier every minute, making it tough for
the three Azhwars to proceed with their own plans.
Poigaiyazhwar took shelter in a small hut of Mrugandu
Maharishi. The room was so small that only one person could sleep with his legs
stretched. Tired of the walking he lied down on the floor and slept. Time
passed and there was a knock at the door! Wondering who it could be at this
time, Poigaiazhwar opened the door and saw Bhoodhathazhwar standing outside,
drenched in the rain. Even though the room is small, Poigaiazhwar gave shelter
to Bhoodhathazhwar, saying, “Inside, there is place for one man to lie down but
two can sit! Please come in!!”
Introducing formally, they both sat on the floor and knowing that they both are two separate water drops on a journey with a mission looking for the same ocean, they started discussing about the Lord’s lilas and shared stories and their experiences on the knowledge they have gained, forgetting about their tiredness and sleep.
While they were discussing about their Lord, forgetting
about the passing time, there was a knock on the door, again! When they opened
the door, they noticed Peyazhwar standing outside, looking for accommodation.
Smiling at each other, the two azhwars said – “Please come in! There is enough
space inside for three people to stand! We can stand and accommodate you also!”
Time went by. With introductions and knowing that they
are not two but three water drops looking for the same ocean, they all got
excited and forgetting all their pain, sleep and exhaustion, they shared their
feelings towards the Lord and their experiences with the Lord. Suddenly, the three
Azhwars realized that there seemed to be a fourth person in the room and was pushing
against all of them. They felt that the room was getting crowded and they were
being squeezed in the dark!
Wondering what could be the reason for the sudden crowd
in the dark when the door is locked, Poigaiyazhwar lit a lamp through a verse -
"vaiyam thagaLiyA vArkadalE neyyAga veyya kadhirOn viLAkkAga" - this
became the first verse of Mudhal Thiruvandhadhi. In this verse, Azhwar lit a
lamp using this world as the cup, the ocean as the ghee and the Sun as the
light. With that light, they noticed that Lord Sriman Narayana is standing with
them, along with his consorts and even Garuda and Adhisesha!
Bhoodhathazhwar lit another lamp through a verse -
"anbE thagaLiyA ArvamE neyyAga inburugu sindhai iduthiriyA" - this
became the first verse of Irandam Thiruvandhadhi. In this verse, Azhwar lit a
lamp using his love for the Lord as the cup, his passion as the ghee and his
thought as the light.
In this light, Peyazhwar saw the Lord with His divine
consorts! With tears rolling down his cheeks out of happiness, he sang "thirukkaNdEn
pon mEni kaNdEn". This became the first verse of Moonram Thiruvandhadhi.
In this verse, Azhwar is saying that with the light given by the two azhwars,
he got the dharshan of the Lord along with his consorts!
All three Azhwars thus saw the Lord and each sang 100
verses which came out like a stream of river flowing down the hill! From that
moment on, all the three azhwars went together to different places and temples!
Thirukkolur Ammal is asking "Did I receive the grace
of the Lord to see Him like the first three Azhwars?"
No comments:
Post a Comment