இரு மாலை ஈந்தேனோ தொண்டரடிப்பொடியார் போலே
வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் பத்தாவது ஆழ்வார் தொண்டரடிப்பொடியாழ்வார். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் 'விப்ர
நாராயணர்' என்னும் இயற்பெயருடன்
வளர்ந்தார்.
பல
தலங்கள்தோறும் சென்று, இறைவனை
வணங்க எண்ணியவராய் முதற்கண் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தார். அங்குப் பள்ளி
கொண்டிருக்கும் அரங்கநானைச் சேவித்து, அவரது
அழகில் ஈடுபட்டவராய், அங்கு
ஒரு நந்தவனத்தை
அமைத்து இறைவனுக்கு
மாலை கட்டித் தரும் திருப்பணியை மேற்கொண்டு அங்கேயே தங்கலானார். பின்நாளில்
திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை
மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார்.
இங்கு “இரு” என்று திருக்கோளூர் அம்மாள் குறிக்கும் மாலை இரு அர்த்தங்கள்
கொண்டுள்ளது. “இரு”...அதாவது “இரண்டு” மாலைகள் என்னும் ஒரு அர்த்தம். மற்றொன்று, “மிகப்பெரிய
சிறப்புமிக்க” மாலைகள்.
தொண்டரடிப்பொடியாழ்வாரின் இரு மாலைகள் – பாமாலை, பாமாலை!! அனுதினமும்
ஸ்ரீரங்கநாதனுக்கு, பூமாலை கட்டித் தரும் திருப்பணியை இவர்செய்தார். இது ஒரு மாலை.
மற்றொன்று, அவரால் இயற்றப்பட்ட பாமாலை – திருப்பள்ளியெழுச்சி, திருமாலை.
சிறப்புமிக்க மாலைகள் என்னும் அர்த்தம் எவ்வாறெனில், பரமனுக்கு
அடிமை என்பதினும் அவன் தன் உத்தம அடியார்க்கு அடிமை என்பதை பெரிதாக எண்ணுவது வைணவ
மரபு. அதனாலேயே அரங்கனுடைய தொண்டர்களின் அடியாகிய திருவடியின் தூசி எனும் பொருள்பட
"தொண்டரடிப்பொடி" என்று தன் பெயரை மாற்றிக்கொள்ள, அரங்கனின்
பக்தியில் ஆழ்ந்துப்போனவரை ஆழ்வார் என்று அழைப்பதற்கிணங்க தொண்டரடிப்பொடியாழ்வார் ஆன விப்ர நாராயணர், பக்தி மட்டுமே மனதில் கொண்டு, எதையும் எதிர்பார்க்காமல் அனுதினமும்
ரங்கநாதனின் புகழ் பாடி பூமாலை கட்டியதால், அவரது பூமாலைகள் சேவைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக
விளங்குகிறது. மேலும், அவரது இரு சிறப்பு மிக்க
பாமாலைகள் திருப்பள்ளியெழுச்சி, திருமாலை. பரமனாகிய திருமாலை
அறிய விரும்புவோர் ஆழ்வாரின் “திருமாலை” எனும் நூலை படித்தால் போதும் என்னும்
கருத்தும், மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும்
தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட
திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது என்பதும் இவரது படைப்புகளின் சிறப்பினை குறிக்க சிறந்த எடுத்துக்காட்டு.
திருக்கோளூர் அம்மாள், “தொண்டரடிப்பொடியாழ்வார் போல்
பூமாலையோ பாமாலையோ சூடி பெருமாளுக்கு சேவை செய்தேனா?”, என்று வினவுகிறார்.
========********========
irumAlai
IndhEnO thoNdaradippodiyAr pOlE
Thondaradippodi Azhwar or Vipra Narayanan, who
called himself as "the Dust at the feet of Bhagavatals", is the
tenth in the line of the twelve azhwars
of South India, who are known for their affiliation to Vaishnava tradition
of Hinduism. Thondaradippodi Azhwar was born in a small village by name
Thirumandangudi. He became an ardent devotee of Ranganatha of Sri
Ranganathaswamy Temple. He developed a big flower garden in Srirangam,
where various beautiful flower plants are still grown. He worshipped all the devotees
of Sri Vishnu and put the podi (Small tiny dust particles), which is found
under the feet of them in his head and sang songs in praise of Sri
Ranganathar. It is for this reason he is called as "Thondaradippodi
Azhwar".
The word "iru", used by Thirukkolur Ammal has
two meanings - one is "two" and the other is "great".
Referring to the two garlands, one is the garlands made
by the Azhwar using the flowers (Poomalai) he has grown in his garden and the
other is the garland he made using words (Paamalai), out of his love and
devotion to the Lord, Sri Ranganatha. The two Paamalai he comprised are Thirumaalai
and Tirupalliezhuchi. Tirupalliezhuchi consisting of 10 verses is the
Suprabatham for Ranganatha and is sung everyday. Thirumaalai comprising of 45
verses contains the essence of Vishnu dharmam. The power of Lord Narayana’s
Tirunamam (names) has been laid out so clearly and it is said that those who do
not know “Thirumaalai” do not know “Tirumal (another name of Lord Narayana).”
If used in the first sense, then we can say that Azhwar
provided great and wonderful flower garlands to the Lord and also the two great
works of his Paamalai - Thirumaalai and Tirupalliezhuchi. Vipra Narayana
realized that the dust of the servants of Lord Narayana were the most precious
thing on earth and with that heart, he lived for 105 years, singing only about
Ranganatha. Thondaradippodi vehemently opposed the caste system that was prevalent
during his times and mentioned that the ultimate way to reach Vishnu is through
service to him and his devotees. Because of his devotion and service to
the Lord Sri Ranganatha and to the devotees of the Lord without any expectation,
the garlands are considered as the purest form of service to the Lord. Also,
Azhwar wrote two amazing word garlands to the Lord through his works Thirumaalai
and Tirupalliezhuchi.
Thirukkolur Ammal is asking "Did I provide service
to the Lord with such great garlands like Thondaradippodi Azhwar?"
No comments:
Post a Comment