ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே
திருமழிசையாழ்வார், ஆழ்வார்கள் வரிசையில் 4-வது ஆழ்வார். பார்கவ மகரிஷிக்கும் கனகாங்கிக்கும், திருமழிசை
என்ற ஊரில் அவதரித்த பொழுது,
கை, கால்
தலை இல்லாமல் பிண்டமாக பிறந்ததனால் தாய் தந்தையாரால் பிரம்பு தோட்டத்தில்
கைவிடப்பட்டார். தனித்து விடப்பட்ட அக்குழந்தையின் மீது பரிதாபம் கொண்ட ஸ்ரீமன்
நாராயணன், அப்பிண்டதை ஒரு மனித குழந்தையாக உருமாற அருள் செய்தார். அவ்வழியே வந்த விறகு
மற்றும் கரும்பு வெட்டும் திருவாளன் மற்றும் அவர் பத்தினி பங்கஜவள்ளி, அக்குழந்தையைக்
கண்டு, தத்தெடுத்து,
தங்கள் மகனாய் வளர்த்தனர். திருமகளின் அருளால் எல்லா
அவயங்களும் பெற்று,
வளர்ந்த திருமழிசையாழ்வார், தன்னை மதங்கள் கடந்த
மனிதன் என்றே அடையாளம் காட்டிக்கொண்டார்.
சமணம், பௌத்திகம், சாக்கியம்
முதலிய மதங்களை கற்று,
ஆராய்ந்து,
சைவத்தில் ஆழ்ந்திருந்த நேரம், பேயாழ்வாருடன்
நடந்த உரையாடலின் வழி மனமாறி,
வைணவத்திற்கு வந்தார். பேயாழ்வார் இவருக்கு ஆச்சாரியராக
இருந்தார்.
“சாக்கியம் கற்றோம்,
சமணம் கற்றோம்,
சங்கரனார்
ஆக்கிய
ஆகமநூல் ஆராய்ந்தோம்;
பாக்கியத்தால்
வெங்கட்கரியனை சேர்ந்தோம்”
-என்று பாடி,
ஸ்ரீமன் நாரயணன் ஒருவனே எங்கும் நிறைந்தவன், மோட்ஷம்
நல்கும் எம்பெருமான் என்று அறுதியிட்டு கூறினார்.
ஸ்ரீமன் நாரயணன் ஒருவனே வணங்க
தக்கவன், அவரைத்தவிர வேறு எவர்க்கும் பரத்வம் கிடையாது என்பதை எள்ளளவும் ஐயமின்றி
இவ்வுலகுக்கு தெரியப்படுத்தினார்.
திருக்கோளூர் அம்மாள், "திருமழிசையாழ்வார் போல் பிற மதங்களை ஆராய்ந்து, ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்த
பின், அவை மூலம் கற்ற அனைத்தையும் விட்டொழித்தேனோ?", என்று
வினவுகிறார்.
********========********
AarAyndhu vittEnO thirumazhisaiyAr pOlaE
Thirumazhisai
Azhvar was born to Bhargava maharishi and Kanakangi in Thirumazhisai, in 4203
BCE. Just because the foetus came out as a lifeless lump of flesh with no arms
and legs, his parents were terribly depressed and with unwillingness, left him
under a bamboo bush and continued their spiritual journey. Seeing the kid
left alone in the bushes, Lord Sriman Narayan appeared along with his consort
and graced the baby and turned it into a lively and healthy human baby.
He
was picked up by a childless tribal couple Tiruvaalan and Pankajavalli, who are
engaged in cutting canes. Due to the grace of Lord Jagannatha of Thirumazhisai,
he grew up with great knowledge of the Sastras. He proclaimed that he did not
belong to Brahmin, Kshatriya, Vaishya & Shudra in
one of his couplets as he was considered (Avarna)
beyond caste bound person.
He
began to join and analyse various religions like Buddhism, Jainism, Advaita and
eventually became a staunch devotee of Siva (with a name “Siva Vaakya”) and
settled in Shaivism. At that time, Peyazhvar met him and through debate, won
him and initiated him into Vaishnava sampradhayam (Srivaishnava philosophies).
He settled in the divyadesam of Thirukkudandhai, from where he attained the
Lord's divine feet.
He
describes his journey into various religions and eventually reaching
Srivaishnavam in his own words:
sAkkiyam
kaRROm samaN kaRROm sankaranAr
Akkkiya
Agama nUl ArAyndhOm - bAkkiyaththAl
sengkatkariyAnaich
sErndhOm yAm thIdhilamE
engkatkariyadhonRil
Implication: "After my futile efforts
to know the supreme principle through Jainism, Buddhism and Saivic philosophy,
I am blessed by Sriman Narayana to take refuge at the Lotus feet of Sri Devi
and have escaped all problems and misfortunes since then."
Thirukkolur
Ammal is asking "Did I explore other religions and gave them up as false like
Thirumazhisai Piran?
No comments:
Post a Comment