நான் (அவன்) சிறியன் என்றேனோ ஆழ்வாரைப் போலே
"ஆழ்வார்"
என்று இங்கு அழைக்கப்பட்டவர் நம்மாழ்வார் ஆவார். எம்பெருமானால் மயர்வற மதிநலம்
அருளப்பெற்றவர்! நான்கு
வேதங்களை தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்று
புகழப்படுகிறார். முக்காலத்தையும் உணரும் ஞானம் பெற்ற நம்மாழ்வார், விஷ்வக்சேனரின்
அம்சமாகப் பிறந்தவர் ஆவார். இப்பூவுலகில் முப்பத்திரண்டு வருடங்கள் வாழ்ந்த நம்மாழ்வார், சம்சாரத்தில்
பற்றில்லாமல் எம்பெருமானையே எப்பொழுதும் தியானித்து ஒரு புளியமரத்தடியில்
வாழ்ந்தார்.
தமிழ்நாட்டில், ஆழ்வார்
திருநகரியில் பிறந்த நம்மாழ்வார்,
பிறந்த
உடன் பிற குழந்தைகளைப் போல் அழுதல், பால் உண்ணுதல்
முதலியனவற்றைச் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்ததால் "மாறன்" என்று
அழைக்கப்பட்டார். மாயையை உருவாக்கும்
"சட" எனும் நாடியினாலே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகிறது. ஆனால், இவர்,
சட நாடியை வென்றதால் "சடகோபன்" என்றும் அழைக்கப்பட்டார்.
எம்பெருமானையே எப்பொழுதும்
தியானித்து, யாருடனும் உரையாடாமல் திருக்குருகூர் நம்பி கோவிலில் இருந்த ஒரு புளியமரத்தடியில் சலனமேதும் இல்லாமல் தியானித்து
வந்தார் நம்மாழ்வார். வடதிசை யாத்திரை
மேற்கொண்டிருந்த மதுரக்கவி
என்பவர் அயோத்தியில் இருந்தபோது தெற்குத் திசையில் ஒரு ஒளி தெரிவதைக் கண்டு அதனை
அடைய தென்திசை நோக்கிப் பயணித்தார். திருக்குருகூர் நம்பி கோவிலினை
அடைந்த மதுரகவி, மாறனிடமிருந்தே அவ்வொளி வருவதை அறிந்து அவர் முன் சென்று நின்றார்.
மாறன்
கண்விழித்த உடன் மதுரகவி
ஆழ்வார் - "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எதைத் தின்று
எங்கே கிடக்கும்?" என்று கேட்க, நம்மாழ்வார்
"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அளித்தார். இதுவே நம்மாழ்வார் பேசிய முதல் வார்த்தை!!!
‘செத்ததின்’, அதாவது
உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன்
என்னும் சிறியது பிறந்தால், அதற்கான காரணம், அவன்
செய்த வினை. இதையே, “அத்தை“, அதாவது, அந்த
வினைகள் தீரும்வரை அவன் அந்த உடலிலேயே கிடக்க வேண்டியதுதான். என்று நம்மாழ்வார் கூறினார். மற்றுமொரு
தத்துவம், “‘செத்ததின்’, அதாவது
உயிர் இல்லாத இவ்வுடம்பில், ஜீவன்
என்னும் சிறியது பிறந்து, பரமாத்மாவை
பற்றிய அறிவு ஏற்பட்டால், அதை (பக்தி) உட்கொண்டே வளரும்.”
ஈடு
இணையில்லா மதியும் ஆற்றலும் பெற்ற நம்மாழ்வார், "இவ்வுலகில் உள்ள அனைத்தும்
நாராயணனின் சொத்து. நான் சிறியன்" என்று திருவாய்மொழியில் கூறியுள்ளார்.
மேலும், “அப்பேற்பட்ட பெருமையும் செல்வாக்கும் கொண்ட பரமாத்மா, இவ்வுலகையே தன் வாயினுள்
காட்டிய எம்பெருமான், தன்னை சிறியவனாக்கிக் கொண்டு தன்னுள் (நம்மாழ்வார்), தன்
உள்ளத்தினுள் குடிகொண்டுள்ளார் என்றால், நான் பெரியவன் அல்லவா”, என்கிறார்!
“கண்ணன்
கழலிணை நண்ணும் மனமுடையீர்
என்னும்
திருநாமம் திண்ணம் நாரணமே!”
-என்ற திருவாய்மொழி 10.5.1
வரிகளின் வாயிலாக, கண்ணனின் திருவடிகளில்
சரணடைய
ஆசை உடையவர்கள், கண்ணின்
திருநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருங்கள், அது
கண்ணனையே காட்டும். இது
திண்ணம் என்கிறார்.
கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு
முன் வைகுண்டம் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்டத்து வாசற்கதவுகள் மூடப்பட்டே
இருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த நாளில் அது திறக்கப்பட, ஸ்ரீமன் நாராயணனே வாசல்
வந்து நம்மாழ்வாரை அழைத்துக்கொண்டதாய் புராணம். இதுவே வைகுண்ட ஏகாதசி என்று
இன்றும் போற்றப்படுகிறது.
திருக்கோளூர்
அம்மாள்,
"சுவாமி நம்மாழ்வார் போல் என் உண்மை நிலை அறிந்தேனோ? அவர்
போல் என்னை சிறியேன் என்று கூறும் மனம் தான் நான் கொண்டேனா?", என்று வினவுகிறார்.
========********========
nAn (avan) siRiyan enREnO AzhvAraip pOlaE
The
word Azhvar refers to Nammazhwar. Nammazhwar is regarded as the one of the top three Hindu
mystics in India, with the other two being Manickavasagar and Kabir. Nammazhwar
was born in 3059 BCE in Azhwar Thirunagiri.
Legend says that as a baby he never cried or suckled and never opened his
eyes. In Hindu legend, Nammazhwar remained speechless from his birth
sitting in a tamarind tree and he first interacted with Madhurakavi
Azhwar, who saw a bright light shining to the south, and followed it
until he reached the tree where the boy was residing.
Unable
to elicit any reaction from the child, Madhurakavi Alvar asked him a riddle: "If the small is born in
a dead's body (or stomach), what will it eat and where will it stay?"
meaning, if the subtle soul is embodied in the gross body, what are its actions
and thoughts?
Nammazhwar
broke his lifelong silence and responded, "That it will eat, it will
rest!" -meaning that, if the soul identifies with the body, it will be the
body but if it serves the divine, it will stay in Vaikunta and
eat (think) of God. Madhurakavi Azhwar realized the divinity of this child.
In
spite of being given the flawless knowledge ("mayaRvaRa madhinalam")
by Lord Sriman Narayana Himself, in his verses he expresses his lowliness
(naichyanusandhanam) to the Lord. In Thiruvaimozhi 3-3-4, he says "nIsanEn
niRai onRumilEn". In Thiruvaimozhi 4-7-1, he says "sIlamillAch siRiyan".
In
Periya Thiruvandhadhi 75, Azhwar says:
puviyum
iruvisumbum nin agaththa nI en
seviyin
vazhi pugundhu ennuLLAy - avivinRi
yAn
periyan nI periyai enbadhanai yAr aRivAr?
Un
parugu nEmiyAy! uLLu
In
this verse, he shows the Lord to be the owner of everything - this world and paramapadham.
He then expresses his amazement that this Lord is inside him. Being that, he
asks the question, 'who knows if You are big or if I am big'. This is also
broken a little differently. It could also be said that Azhwar is saying 'yAn
periyan'; 'nI periyai enbadhanai yAr aRivAr?' – that is, 'I am big, who knows
if you are big?' The unsaid is that 'He is small'.
This
is Satvika Ahankaram of Azhwar. He is amazed that ‘The One’ who swallowed
everything has allowed Himself to be inside Azhwar for ever. Because of this verse,
Azhwar is called by the name 'periyan' in Azhvar Thirunagari. It is also said
that this verse is the reason why this work is called Periya Thiruvandhadhi, even
though it is made of only 87 verses, unlike other in the 4000 divya prabandham.
It
is for this devotion and divine humbleness towards the god, it is believed that
the doors of Vaikuntam (the supreme abode) was opened first time for him by
Sriman Narayan himself
and it is believed that the followers of Swami Nammazhwar have the most easy
access to the supreme abode.
Thirukkolur
Ammal is asking "Did I understand where I stand and was I ever able to
speak like Azhwar?"
Awesome post. Keep your post. Thanks for sharing.
ReplyDeleteThank You!
Delete