January 22, 2018

Thirukolur Penpillai Rahasyam - 12






எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே

பட்டர் பிரான் என்று அழைக்கப்படுபவர் பெரியாழ்வார். ஆண்டாள் நாச்சியாரை வளர்த்து அரங்கனுக்கே மாமானார் ஆகும் பேறு பெற்றவர்.  கிருஷ்ணாவதாரத்தில் கண்ணன் விரும்பிய மாலைகளைக் குறித்து அறிந்திருந்த விஷ்ணு சித்தர், ஸ்ரீ வில்லிபுத்தூரிலே வடபெருங்கோயிலுடையானுக்கு நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார்.       

மதுரையில் பாண்டிய மன்னர்களின் நல்லாட்சி நடந்து கொண்டிருந்த பொற்காலம் அது. திருமாலின் அவதாரங்களுள் முதன்மையும் முக்கியத்துவமும் பெற்றதான மச்சாவதாரத்தின் ஞாபகமாகவே பாண்டியர்கள் மீன் கொடியை தமது சின்னமாகத் தமது கொடியில் பொறித்தனர். ஆக, தமிழோடு, பக்தியும், கல்வியும், வீரமும், மக்களின் வாழ்வாதாரமும் முறையே மேன்மை கண்டு செழிப்புடன் வளர்ந்த காலம் அது. மதுரையை ஆண்ட மன்னன் வல்லபதேவன், ஓரிரவு, மாறுவேடத்தில் நகர்வலம் வந்து கொண்டிருந்தான். மன்னன் நடந்து வந்த வீதியில் ஒரு திண்ணையில் ஒரு பெரியவர் உறங்குவதற்கு முன் இறை வழிபாடு செய்வதைக் கண்ட மன்னன், அவர் அருகில் சென்று அவர் தன் வழிபாட்டை முடிக்கும் வரை காத்திருந்தான்.

அந்த பெரியவர் தன் வழிபாட்டை முடித்துவிட்டு பாண்டியனை நிமிர்ந்து பார்த்தார். வல்லபதேவன் அந்த பெரியவரை வணங்கி "ஸ்வாமி. நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்” என்று வினவ, அந்த பெரியவர் மன்னனைப் பார்த்து “நான் காசி தேசத்திலிருந்து தீர்த்த யாத்திரையாக இங்கு வந்துள்ளேன்"- என்றார்.

சிறிது நேரம் உரையாடிய பின் பாண்டியன் அந்த பெரியவரைப் பார்த்து "ஐயா, தங்களின் உறக்கம் கெட நான் காரணமாய் இருக்க விரும்பவில்லை. நான் விடை பெற்றுக்கொள்கிறேன். எனக்கு ஒரு நல்ல அறிவுரை கூறுங்கள்."- என்று கேட்டான்.

"இரவுக்கு வேண்டியதை பகலிலும், மழை காலத்துக்கு வேண்டியதை கோடையிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும், மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் பெற ஒருவன் முயல வேண்டும். இதுவே நான் உனக்கு தரும் அறிவுரை!" என்று அந்த பெரியவர் தத்துவம் மிகுந்த பாடலைக் கூறினார். மன்னன் அவரை வணங்கி அரண்மனை வந்து சேர்ந்தான்.

உறங்கும் வேளையில் உறங்காமல் மன்னன் வல்லபதேவனின் மனம் குழப்பமுற்று இருந்தது. பெரியவர் சொன்ன கருத்து உண்மைதான். முதல் மூன்றுக்கு குறையில்லா வண்ணம் எல்லா செல்வமும் எம்மிடமும், எம்மக்களிடமும் உள்ளது. ஆனால், மறுமைக்கு தேவையான மோட்க்ஷம்... அதை எப்படி இம்மையிலேயே சேர்ப்பது, மோட்சத்தை நிச்சயமாக அளிக்கக்கூடிய தெய்வம் எது என்பதும் கேள்வியாக இருந்தது. இரவு நேரம் என்பதையும் பாராமல் முதல் மந்திரியை அழைத்து தன் சந்தேகத்தினை கூறினார். மந்திரியாரின் விளக்கம் மன்னனுக்கு திருப்தி அளிக்கவில்லை.

மறுநாள், "முழுமுதற் கடவுள்" யார் என்று வினவி, அதற்கு தன் மனம் ஏற்கும் வகையில் விடை கூறுவோர்க்கு பொற்கிழியும் பரிசளிப்பதாய் கூறினான். நாட்கள் பல சென்றன. வந்தவர்கள் ஒவ்வொருவரும் பல விதமாக மன்னனின் கேள்விக்குப் பதில் கூறினாலும், பொருளாசையினால் மெய்ப்பொருளை விளக்கும் திறனை அறியாமல் இருந்த படியால், மன்னனின் சந்தேகத்திற்கு விளக்கமும் மனதிற்கு அமைதியும் இல்லாமல் போனது. தன் கேள்விக்கு தகுந்த பதில் கூறி தன்னை நல்வழியில் அழைத்துச் செல்லும் ஒரு அறிஞரை அனுப்புமாறு கூடல் அழகனின் ஆலயத்தை அடைந்து இறைவனை வேண்டினான்.
தன் பக்தனின் பெருமையை உலகம் அறிய இதுவே உகந்த தருணம் என்பதை அறிந்த ஸ்ரீமன் நாராயணன், விஷ்ணு சித்தர் கனவில் தோன்றி, "விஷ்ணு சித்தரே, என் பக்தனான பாண்டியன் உண்மைப் பொருளை அறிய விரும்புகிறான். நீர் மதுரைக்குச் சென்று வேதங்கள் ஓதி உண்மைப் பொருளைப் பற்றி தெளிவுறுத்தும். என் அடியாராகிய உமக்கு ஓதாதுணரும் தன்மையை அளித்துள்ளேன். கவலையின்றி என் அருளைப் முதலாய்க் கொண்டு பாண்டியன் சபைக்குச் செல்லும்.", என்றார்.

பொற்கிழிக்கு ஆசைப்படாத விஷ்ணு சித்தர், நாராயணனின் வார்த்தைகளை தமக்கிட்ட ஆணையாய் ஏற்று, அரண்மனை சென்று மன்னனிடம், மோட்சத்தை அளிக்கக்கூடியவன் ஸ்ரீமன் நாராயணனே என்பதை நிரூபித்தார். விஷ்ணு சித்தரின் வார்த்தை, அவரின் பக்தி, பண்பு, பணிவு, எளிமை என அனைத்திலும் தன்னை தொலைத்த மன்னன், தாம் தேடிய விடை கிடைத்த ஆனந்தத்தில், விஷ்ணு சித்தருக்கு "பட்டர்பிரான்" என்று பட்டம் வழங்கினான்!  மேலும், விஷ்ணு சித்தர் அவர்களை தன் பட்டத்து யானை மேல் ஏற்றி, குடை, கொடி, சாமரம், ஆல வட்டம் ஆகியவற்றின் மூலம் மரியாதைகள் செய்து, வாத்ய கோஷங்களுடன் மதுரையை வளம் வர செய்தான்.

அப்பொழுது, தன் பிள்ளையின் பெருமையை உலகம் கொண்டாடுவதை நேரில் காண விரும்பும் தாயைப் போல், பரம் பொருளான ஸ்ரீமந் நாராயணன் பெரிய பிராட்டியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் அமர்ந்த திருக்கோலத்தில் வானில் தோன்றினார். கருட வாகனதில் தோன்றிய ஸ்ரீமன் நாராயணனின் அழகில் மயங்கிய பெரியாழ்வார், மக்களின் திருஷ்டி பெருமாளுக்குத் தீங்கு செய்துவிடக் கூடாது என்பதற்காக, "திருப்பல்லாண்டு" பாசுரத்தை பாடி, "என்னல் எம்பெருமான்" என்று ஸ்ரீமன் நாராயணனை பணிவுடனும் பக்தியுடனும் அழைத்தார்.


            திருக்கோளூர் அம்மாள், "பெரியாழ்வார் போல் என் பிறப்பின் உண்மை அறிந்து, பெருமானை அவ்வாறு அழைத்தேனோ?", என்று வினவுகிறார்.

********========********





emperumAn enRaEnO pattar pirAnaip pOLAE

Pattar Piran is the title given for Vishnu Chiththar @ Periyazhvar, by the great Vallabha Deva, a Pandya King. Pattar Piran was the father of Aandal, whose devotion towards Lord Krishna was so divine pure that she ended up marrying Lord Sri Ranganathar.

Named as Vishnu Chiththar, by his parents, he grew up listening to stories of Lord Sriman Narayan and spent his life in serving to the lord. Vishnu Chiththar lived in Srivilliputhur where he maintained a flower garden and was making garlands for Vatapatrasayee, the residing deity of Srivilliputhur temple, every day.

One day, King Vallabha Deva had a doubt regarding who is the Supreme Lord who could protect us and lead us to Moksha (refers to freedom from the cycle of death and rebirth). Unsatisfied with the response given by his ministers and other scholars in his court, he left the question to the public and announced that the winner would get a bag of gold coins ("Porkizhi").

Days passed and no explanation from people and great scholars seemed to satisfy his thirst. Worried, he prayed to Lord Koodal Azhagar, to help with the answer.

The Lord appeared in Vishnu Chiththar's dream and told him to visit the king's court and establish that He is the supreme. Though Vishnu Chiththar is not well versed in Vedas and also not interested in the prize money, accepting the Lord’s word as a command, Vishnu Chiththar, who had no formal education from a teacher, went to the court and proved that Sriman Narayana is the Supreme Lord.

Pleased by the words, the king entitled him as “Pattar Piran” and placed him on his own crown elephant and took him around the city. In order to witness the beauty of Vishnu Chiththar riding on an elephant and the people celebrating his talent and devotion, Lord Sriman Narayan appeared on Garuda with His consorts. Witnessing the Lord sitting proudly and watching over him, though blessed, worried and concerned that the way people and even him praising the Lord and his beauty might harm the Lord and his wellness and that the evil eye should not affect the health of the Lord, Periyazhvar sang the glorious “Thiruppallandu” pasuram.

In that pasuram, he said "ennAL emperumAn! undhanukku adiyOm enRu
ezhuththuppatta annALE ..." and through that he showed His absolute supremacy and his natural servitude.

Thirukkolur Ammal is asking "Did I learn my true nature and call out to Him as my Lord like Periyazhvar?"







1 comment:

  1. Please write about garuda puranam and many more mythological stories

    ReplyDelete

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...