December 16, 2017

Thirukolur Penpillai Rahasyam - 9



9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே

    விஷ்வரதா என்னும் மன்னனுக்கு க்ஷத்ரபந்து என்னும் மகன் இருந்தான். பிறரைக் கேலி செய்வதும், மற்றவர்களுக்கு இடைஞ்சல் செய்வதுமே அவனது பிறவி குணமாய் இருந்து வந்தது. இளவரசன் வளர வளர, அவனது சேட்டைகளும் வளர்ந்து வந்தன. மகன் மீது கொண்ட அன்பால், மன்னன் இளவரசனை கண்டிக்காமல் விட, க்ஷத்ரபந்துவின் செயல்களால் மக்கள் மிகவும் அவதியுற்றனர். இளவரசனது செயல்களைப் பொறுக்க முடியாமல், ஒரு நாள் மக்களே அவனை நாட்டை விட்டு துரத்தினர். உயிருக்கு பயந்து காட்டிற்குள் ஓடிய க்ஷத்ரபந்து, அங்கு சென்றும் தன் சேட்டைகளை நிறுத்திக் கொள்ளவில்லை. காட்டில் வசிக்கும் மக்களிடமும், காட்டினை கடக்கும் வழிப்போக்கர்களிடமும் தன் சேட்டைகளை தொடர்ந்தான். மேலும், அங்கு வரும் முனிவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தும், அவர்கள் நடத்தும் யாகத்தில் இடையூறுகள் செய்தும்  கானகத்தில் கவலையின்றி அலைந்துத் திரிந்து கொண்டிருந்தான். மக்களுக்கு தொந்தரவு செய்தாலும், க்ஷத்ரபந்து யாரையும் துன்புறுத்தியதில்லை.

             ஒரு நாள், காட்டு வழியே சென்ற முனிவர் ஒருவர், குளத்தில் நீர் பருக முயன்ற போது தவறி குளத்தில் மயங்கி விழுந்தார். அவ்வழியே சென்ற க்ஷத்ரபந்து, அம்முனிவரை காப்பாற்றி, அவர் காயங்களுக்கு மருந்திட்டு அவர் நினைவு திரும்பும் வரை அவரை கவனித்துக்கொண்டான். கண் விழித்த முனிவரிடம் அவர் போக வேண்டிய சரியான வழியைக் காட்டினான். க்ஷத்ரபந்து காட்டில் தனியே வசிப்பதன் காரணத்தினை கேட்டு அறிந்து கொண்ட முனிவர், அவனது பிறவி குணம் இது என்பதை உணர்ந்து, அவனை நல்வழி படுத்த எண்ணி, "உன் ஆன்மாவின் குணம் இதுவல்ல. எனவே, அனுதினமும், நீ எக்காரியம் செய்தாலும் சரி, அதை செய்யத் தொடங்கும் முன்பும், அதை முடித்த பின்பும், "கோவிந்தா" என்னும் மந்திரத்தைக் கூறு." - என்றுக் கூறி, அவனிடம் இருந்து விடை பெற்றுக்கொண்டார்.

         க்ஷத்ரபந்துவும், அன்று முதல் முனிவர் கூறியது போல் "கோவிந்தா" எனும் நாமத்தை தொடர்ந்து கூறி வந்தான். அவன் செய்யும் சேட்டைகள் தொடர்ந்தாலும், தொடங்கும் முன்பும், முடித்த பின்பும் "கோவிந்தா" எனும் நாமத்தைக் கூறினான். இதன் பயனாக, க்ஷத்ரபந்து, தன் அடுத்த பிறவியில் நல்குடியில், ஸ்ரீமன் வாசுதேவனின் பக்தனாக பிறந்து, தவங்கள் பல மேற்கொண்டு, இறைவனடி சேர்ந்தான்.
  
       திருக்கோளூர் அம்மாள், "க்ஷத்ரபந்து போல், எக்காரியம் செய்யும் முன்னும் பின்னும், நாள் முழுதும் மறவாமல் "கோவிந்தா" எனும் நாமம் கூறுமளவிற்கு நான் பக்தி கொண்டேனா?", என்று வினவுகிறார்.

*******=======*******


9. mUnRezhuththuch sonnEnO kshathrabandhuvaip pOlE
Kshathrabandhu was the son of King Vishvaratha. His real name is not known. Kshathrabandhu means the lowest person amongst the Kshatriyas. Because of his lowly character, he was called Kshathrabandhu. Kshathrabandhu, being a prince of a Kingdom, never treated people with care or responsibility. Right from his childhood, he was so mischievous, disobedient and at times, rebellious. The King and the Queen, out of their love for their son, failed to teach him good manners or correct him when he does something mischievous. Years passed on but the prince’s naughtiness only increased. Unable to tolerate his behaviour, the people of the kingdom chased him into the forest. Even in the forest he continued in torturing others.
One time, a Rishi came into the forest where Kshathrabandhu was staying. Due to the extreme heat, he became very thirsty. Seeing a pond he went there to drink the water, slipped and fell into the pond. When Kshathrabandhu saw this, though he laughed at him at first, somehow he felt pity on the Rishi and pulled him out of the pond. He took care of the Rishi until he regained his conscious and also gave him fruits to eat.
The Rishi, pleased on the care of Kshathrabandhu, asked him about his story and why he was living alone in a forest. Kshathrabandhu told him his entire history without hiding anything. Wishing to correct him, the Rishi gave him some very good advice.
Kshathrabandhu replied "O Rishi! My bad nature was born with me and will not leave me. There is no point trying to make me a better person". The Rishi then taught him the Lord's divine name “Govinda” which is made of three aksharas (in Sanskrit). He then told Kshathrabandhu to chant the name “Govinda”, before starting and after finishing his work, be it anything, even if it is bad or mischievous.
From that day onward, Kshathrabandhu started repeating the Lord's name all the time. Because of that, after his death, he was reborn as a Brahmin and became an ardent devotee of the Lord. After that, he attained the Lord's feet. His story has been sung by Thondaradippodi Azhvar in his Thirumaalai.

         Thirukkolur Ammal is asking "Did I spend my time saying the Lord's name in everything I did, like Kshathrabandhu?"



No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...