உலகை படைக்க ஒப்பந்தம் போட்ட பின், படைக்கும் கடவுளான பிரம்மா முதலில் மனுவைப் படைக்கிறார். மனுவுக்கு ப்ரியவிரதன் மற்றும் உத்தானபாதன் என இரண்டு புதல்வர்கள் பிறக்கிறார்கள். உத்தானபாதனுக்கு சுநீதி,
சுருசி என்று இரு மனைவியர். சுநீதிக்கு துருவன் என்னும் மகனும் சுருசிக்கு உத்தமன் என்னும் மகனும் பிறந்தனர். உத்தானபாதன், சுருசியிடமும் உத்தமனிடமும் மட்டுமே அன்புடன் பழகினான். துருவனை ஒருநாளும் கையில் எடுத்துக் கொஞ்சியதில்லை. அணைத்துக்கொண்டதுமில்லை. துருவாவைக் கண்டுகொள்ளாமல், உத்தமாவிடமே அன்பாய் இருந்தார்.
ஒருநாள், தன் தம்பி உத்தமன் தனது தந்தையின் மடியில் கொஞ்சி விளையாடிக் கொண்டிருப்பதை துருவன் காண்கிறான். அவனுக்கும் தந்தையின் மடியில் அமர்ந்துகொள்ளவேண்டும் என்று ஆசை உண்டானது. பாசத்துடனும் ஆசையுடனும் தன் தந்தையை நோக்கி செல்கிறான். அதைக் கண்ட சுருசி, துருவனை தடுத்து, "இனியும் மன்னன் அருகில் செல்லாதே! அவர் உத்தமனுக்கு மட்டுமே தந்தை!" என்று கூறி தள்ளிவிடுகிறாள். இதை பார்த்துக் கொண்டிருந்த உத்தானபாதனும் ஒன்றும் சொல்லவில்லை.
மனமுடைந்த துருவன், கண்களில் கண்ணிர் வழியத் தன் தாயிடம் சென்று நடந்தவற்றைக் கூறினான். தன் மகனுக்கு ஆறுதல் கூறிய சுனிதி,
துருவனிடம் - "மகனே, மற்றவர்களைக் குறை சொல்லிப் பயன் இல்லை. பொறாமை கொள்ளாதே. எல்லோர்க்கும் தந்தையாக விளங்கும் வாசுதேவனிடம் உன்னை ஒப்படைத்துவிட்டால் இவ்வுலகில் நீ சந்தோஷமாக வாழலாம். அவன் ஒருவனே நம் எல்லோருக்கும் தந்தை." - என்றாள்.
தாயின் அறிவுரைகளை கேட்ட துருவன், காட்டில் சென்று வாசுதேவனை நினைத்து தவமிருந்தான். அங்கு வந்த நாரதர், துருவனின் மனஉறுதியை அறிய எண்ணி,
"துருவா! பல ஜென்மங்கள் முயன்றும் முனிவர்களும் யோகிகளும் அவனை அறிய முடியாதவர்களாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உயரிய தெய்வத்தை நீ அறிய முயல்வது வீண். பசி உறக்கம் இல்லாமல் தவமிருப்பது உன் போன்ற சிறுவனுக்கு இயலாத காரியம். நீயோ சிறு பாலகன். பிடிவாதம் செய்யாமல் நீ அரண்மனைக்கு திரும்பிப் போ!", என்றார்.
"தேவ ரிஷியே! மகாவிஷ்ணுவைக் காண்பது ஒன்றுதான் இனி என் வாழ்வின் குறிக்கோள். அவன் ஒருவனே என் தந்தை இனி. அவரைக் காண வேண்டும். அதை நிறைவேறும் வழியைக் காட்டி அருளுங்கள்." - என்ற துருவனின் பண்பையும் மனவலிமையையும் கண்டு மகிழ்ந்த நாரதர், துருவனுக்கு, “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்னும் வாசுதேவ மந்திரத்தை உபதேசித்தார். அம்மந்திரத்தை மனதில் நிறுத்தி, நாரதர் கூறியது போல் யமுனை ஆற்றங்கரையில் உள்ள மதுவனம் சென்று, யமுனையில் காலை,
மதியம்,
மாலை ஆகிய மூன்று நேரங்களிலும் குளித்து பரிசுத்தமான மனதுடன் இறைவனை மனதில் நிறுத்தி தியானம் செய்தான். அந்த ஜந்து வயது பாலகன் துருவனின் பக்தியில் நெகிழ்ந்த வாசுதேவன், துருவன் முன் தோன்றி நான்கு வேதங்களையும், ஆகம மந்திரங்களைப் பற்றிய ஞானத்தையும் வழங்கி, உயர்ந்த இடமான வைகுண்டத்தில் இடமளித்தார்.
திருக்கோளூர் அம்மாள், "ஸ்ரீமன் வாசுதேவனிடம் துருவன் கொண்ட அளவில்லா நம்பிக்கை என்னிடம் உள்ளதா?",
என்று வினவுகிறார்.
********=======******
8. Thandhai engE enREnO dhuruvanaip polaE
Manu was born out of Brahma's body as the first
human soul on earth when the God’s decided to have humans on the earth. He
married Satharupai and had two sons called Priyamaratha and Uththanapadha.
Uththanapadha became king and married Suneethi and Suruchi. They gave birth to
two sons. Suneethi's son was called Dhruva and Suruchi's son was called
Uththama.
Uththanapadha was very fond of Suruchi and ignored
Suneethi completely. Same way he treated the sons too! He showered all his love
and care only to Uththama and ignored Dhruva. One day, Uththanapadha was playing with
Uththama placed in his lap. Seeing his father playing with his brother, Dhruva
tried to approach his father. Suruchi,
who had plans in her mind to make her son as the next king, stopped Dhruva from
reaching the king and using harsh words, she chased him away.
Feeling both sad and angry, Dhruva went back to his
mother and cried to her, explaining what happened. Suneethi then consoled him
and told him "Pray to the father of everyone, Lord Vasudeva. You will live
a great life if you surrender to him for he showers his love on everyone
equally and to him, every soul is the same!”
Dhruva, the 5 year old kid, decided to look for
Lord Vasudeva and left the palace. While he was leaving, Sage Narada appeared
in front of him, with an intention to know about the heart of the kid. Looking
at the kid, he said – “ Dhruva, many sages and saints have failed in knowing and
seeing the Lord, even after hundred years of meditation. You have to live only
by breathing air. For a kid like you, it will be tough to live without food,
water and sleep. Kindly get back to the palace and I will speak with your
father on behalf of you.”
Hearing the words of Sage Naradha, Dhruva replied –
“O Sage Naradha! From now on, to me, only Lord Vasudeva is my father. All I
want to do with the given life is to find a way to see him. Kindly help me so
that I too can get the divine vision of seeing him.”
Pleased on hearing the words of the kid, Sage
Narada gave him the knowledge about the Vasudeva Mantra (Dvadasakshari) and
asked him to meditate in Madhuvana, a forest on the banks of River Yamuna.
After getting the blessings of Sage Narada, Dhruva left for Madhuvana and started
meditating on Lord Vasudeva. Pleased on the deep penance of the kid, Sriman
Narayana (Lord Vasudeva) appeared before him. He gave Dhruva the divine
knowledge and also a place amongst the stars.
Thirukkolur Ammal is asking "Did I have faith
that Dhruva had on the Lord and the great devotion he showed to the father of
the Universe?"
Awesome post. Keep your post. Thanks for sharing about Krishna
ReplyDeleteThank You!
Delete