அநஸூயை அத்ரி மகாமுனிவரின் தர்ம பத்தினி. மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவருக்கும் தாயாக மாறும் பெரும் பாக்கியம் பெற்றவர். உலகிலுள்ள உயிரினங்கள் மழையின்றித் தவித்தபோது, அநஸூயை கடும் தவம் புரிந்து, கங்கையை உலகிற்கு கொண்டு வந்தார். ஆலகந்த நதியின் துணை நதியாக, மந்தாகினி என்ற பெயருடன் இன்றும் மக்களின் வாழ்வாதாரமாய் அந்நதி ஓடிக்கொண்டிருக்கிறது.
சீதாதேவியுடனும், தம்பி லக்ஷ்மணனுடனும் வனவாசத்தை தொடங்கிய ஸ்ரீராமன், சித்திரக்கூடம் நீங்கி சென்ற போது,
இரவுப் பொழுதை கழிக்க, மந்தாகினி நதிக்கரையில் அமைந்திருந்த முனிவர் அதிரி
அவர்களின் குடிலை சேர்ந்தார். முனிவர் அதிரி, தனது துணைவியார் அநஸூயையுடன் வசித்து வந்தார். ஸ்ரீராமனை
வரவேற்ற முனிவர் அதிரி, சீதாப் பிராட்டியை நோக்கி, "மகளே! அநஸூயை தர்மத்தின் வழி வாழ்ந்து வருபவள். ஒரு
தர்மபத்தினியாவாள். ஒரு முறை இங்கு பஞ்சம் ஏற்பட்ட போது,
அநஸூயை, தனது பக்தியால் காய்கறிகளையும் கிழங்கு வகைகளையும்
முளைக்கச் செய்தாள். மேலும், புனிதமான கங்கையாற்றையும் வரவழைத்தாள். ஒரு முறை,
தேவர்களின் நலன் கருதி, ஒரு தேவ இரவை பத்து இரவுகளாக மாற்றிக் கொடுத்தாள். அவளை உன்
தாய்க்கு நிகராய் நினைத்துக்கொள். நீங்கள் இங்கு தங்கும் போது உனக்கு எக்குறையும்
வராமல் உன்னை கருத்தாய் கவனித்துக்கொள்வாள்.", என்றார். ஸ்ரீராமனும் அதையே வழிமொழிந்தார்.
அநஸூயை, அனைவரையும் நன்கு உபசரித்தார். உணவு பரிமாறினார். சீதாப் பிராட்டியும்,
அநஸூயைக்கு உதவி புரிந்து பணிவிடைகளும் செய்தார். சீதையும்
தனது சிறு வயது கதைகளையும், அவரின் திருமணம் பற்றியும் அநஸூயையுடன் பகிர்ந்தார். அன்று
அந்தி சாயும் நேரம், சீதையுடன் உரையாடிக் கொண்டிருந்த அநஸூயை,
"மகளே! உன்னை நினைத்து
பெருமை கொள்கிறேன். ரிஷிபத்தினி என்பதால், எனக்கு கணவரைப் பின்தொடரவேண்டியது தர்மம். மன்னின் மகளாக
அரண்மனையில் வளர்ந்த உனக்கு அந்நிலை இல்லை. தசரத சக்கரவர்த்தியின் அன்பும்
நன்மதிப்பையும் பெற்ற ஸ்ரீராமனின் துணைவி நீ! இராமன் நாடு திரும்பும் வரை நீ
அரண்மனையில் சுகமாய் நாட்களை கடந்திருக்கலாம்! ஆனால்,
காட்டில் வசிப்பதால் வரும் இன்னல்களை பொருட்படுத்தாமல்,
"பிரிவினும் சுடுமோ
பெருங்காடு" என்று காதலுடன் கூறி ஸ்ரீ இராமனின் நிழலாய் பின் தொடர துணிந்து
வனவாசம் வந்துள்ளாயே! இச்சிறு வயதில், உனது பண்பினையும், ஸ்ரீராமன் மீது நீ கொண்ட காதலையும் கண்டு நெகிழ்கிறேன்.
உனக்கு அந்த இறைவன் எல்லா சந்தோஷத்தையும் வழங்க பிராத்திக்கிறேன்."- என்றார்.
அநஸூயை சீதையை தன் மகளைப் போலவே பாவித்தார்! தன்னிடம் இருந்த சின்னச் சின்ன
ஆபரணங்கள் அணிவித்தார்! மலர்கள் கொண்டு சீதாதேவியின் கூந்தலை அலங்கரித்தார்.
சீதாப் பிராட்டியும், தன் தாயை வணங்குவது போல்
அநஸூயையை பரிவுடன் வணங்கினார். அன்றிரவு அக்குடிலில் தங்கிவிட்டு,
மறுநாள் மூவரும் வனவாசத்தினை தொடர்ந்தனர். அநஸூயை மற்றும்
சீதாப் பிராட்டியின் அன்புரையாடல்களையும், ஒரு நாள் பொழுதே சந்தித்திருந்தாலும் ஒருவரை ஒருவர்
பரிவன்புடன் கவனித்துக்கொள்வதையும் கண்டு ஸ்ரீராமன் பெருமிதம் கொண்டார்.
திருக்கோளூர் அம்மாள், "எந்த ஒரு எதிர் பார்ப்பும் இல்லாமல் தாயாரிடம்,
ஒரு தாயைப் போல், அநஸூயை போல் அளவில்லா அன்பினையும் பரிவையும் காட்டினேனா?",
என்று வினவுகிறார்.
*******========*******
THaaikolam seithaeno Anasuyayai
poale
Anasuya
is wife of the great Athri Maharishi. Than the powers of Maharishi Athri,
Anasuya’s selfless acts respect for her husband satisfied the gods. She even
once changed one night of Devalok into 10 nights, for the sake of saving the
Devas! Even when the prayers of all the sages and Kings failed the sky to pour
rain on earth, Anasuya’s prayers alone brought Ganga to earth and it’s still
flowing on earth in the name of River Mandhagini, as a tributary to Alaknanda
River.
Sri Rama, when he
started for his Vanavasa along with Sita and Lakshmana, he spent some time at
Chithrakoodam. It is here Bharatha tried to get Him to go back to Ayodhya.
Fearing further requests and following of people and especially Bharatha, Rama left
Chithrakoodam silently. After tiring and long day’s walk, they reached Sage
Athri's ashram on the banks of River Mandhagini. Sri Rama decided to spend the
night stay in the Ashram of Maharishi Athri.
Athri Maharishi
introduced his wife Anasuya to Sita, saying - "Anasuya is a great
pativrata. She follows the path of dharma. One time when there was a famine,
she created vegetables and tubers and also made Ganges flow here. Pray to her
like she is your mother. She will take good care of you during your stay here".
Rama too said the same.
Anasuya was
pleased by the behaviour and character of Sita and said- “Being wife of a sage,
I am destined to follow him to live in the forests. But that’s not the same
with you! Born as a princess in a Palace to a King and married to a King, as
the Queen of Ayodha, you can stay in the Palace in comfort and live safe and
secured. But, you chose to follow your husband! I appreciate you leaving all
the palace pleasures and following your husband to the forest. It shows your
love for him and your respect for him. May you gain all good things". Sita
bowed to Anasuya with respect, just like how she would do to her mother.
Taking care of
Sita like her own daughter, Anasuya decorated her with flowers and garments and
listened to her full story. Rama was pleased by the affection showed by Anasuya
to Sita.
Thirukkolur Ammal is asking "Did I
show the motherly affection to Thaayar (Sita) like Anasuya?"
No comments:
Post a Comment