November 22, 2017

Thirukolur Penpillai Rahasyam - 4



4.  தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

        தசமுகன், இராவணன். பிராட்டி, சீதாதேவி. இங்கு, "செற்றேனோ" என்னும் சொல்லிற்கு "கொன்றேனோ" என்று பொருள். இராவணனை சீதை வதம் செய்யவில்லை. இங்கு, சீதை இராவணனை கொன்றார் என்றால், ராவணனின் ஆணவத்தை, பேராண்மையை கொன்றார் என்று பொருள். மிதிலையின் இளவரசி. ஸ்ரீ ராமனின் துணைவியாய், ஸ்ரீ ராமனின் நிழலாய் வாழ அயோத்தி வந்தவர். ஸ்ரீ இராமனை பிரிய மனமில்லாமல், பதினான்கு ஆண்டுகள் மலரினும் மென்மையான பாதத்துடன் வனத்தில் வாழ முடிவெடுத்தவர். இராவணனின் அஹம்பாவம், பேராண்மை, தலைக்கணம் நிறைந்த பார்வையும் மனமும் வனத்தில் எளிய வாழ்வு வாழ்ந்த சீதையின் மேல் பட்டு, அவன் அழிவிற்கு விதையிட்டது. மிதிலையின் இளவரசியாக இருந்தபோதே கொடியிடையாள் என்று வர்ணிக்கப்பட்ட சீதாப்பிராட்டியார், இலங்கையில் சிறையில் வாடியபோது இன்னும் மெலிந்தார் என்றால், அவரின் துயரத்தை எவ்வார்த்தைகள் கொண்டு விளக்குவது?
       சீதாதேவி எண்ணியிருந்தால் இராவணனை அவரே வதம் செய்திருக்கலாம். அவரின் கோபக்கனலே இராவணனை பஸ்பமாகிவிடும். பிராட்டியின் புனிதத்தன்மை ஒன்று போதுமே இலங்கையை கடலின் ஆழத்திற்கு தள்ள! தேவியும் அடுத்த நொடி ஸ்ரீஇராமனுடன் வனத்தில் இருந்திருப்பார். அனுமனின் வாலில் வைக்கப்பட்ட தீ அவரைச் சுடாமல் பார்த்துக்கொள்ளச் செய்த சீதைக்கு இலங்கையை அழிக்க எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்? சிறைப்பட்டு அனுதினமும் கஷ்டப்பட்டிருக்க வேண்டாம்.  சீதையின் ராமபக்தி ஒன்றே உலகை பஸ்பமாகிவிடும் வல்லமை வாய்ந்தது என்றால் இராவணன் எம்மாத்திரம்!ஆனால், அவர் அச்செயல் புரியவில்லை. சீதாதேவியார், அனைத்து இன்னல்களையும் பொறுத்துக் கொண்டு, இராமனின் வருகைக்காக காத்திருந்தார். அனுக்க்ஷனமும் ஸ்ரீ இராமபிரானயே எண்ணிக் கொண்டிருந்தார்.
       இராவணனின் உண்மை நிலையினை அவனுக்கு எடுத்துரைத்தார். ஆணவத்தின் உச்சத்தில் யோசிக்காமல் தவறுகள் புரிந்து கொண்டிருந்த இராவணனை ஸ்ரீஇராமனுடன் போர் புரிந்து மடியாமல் அவரிடம் சரணடையுமாறு கூறினார். இராவணனையும், ஹனுமனே கண்டு வியந்த இராவணனின் அரண்மனையையும் சீதாப் பிராட்டி ஒடிந்த புல்லினைப் போல் மதித்தார். சீதாதேவியை மயக்க இராவணன் குபேரனுக்கு இணையான தன் சொத்துக்களைப் பற்றிக் கூறி ஆசை வார்த்தைகள் காட்டிய போதும் அவர் அதை தூசினைப் போல் துச்சமெனக் கண்டார்.   சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டு அனுக்க்ஷனமும் ஸ்ரீ ராமனை மட்டுமே எண்ணி வாழ்வது கூட சுகம் என்றார். அவ்வாறே சிறைவாசத்தை கழித்தார். தன் ஆன்மாவும் உடலும் ஸ்ரீராமனின் உடைமை என்பதை மனதில் நிறுத்தி அவர் வருகைக்காகவே காத்திருந்தார்.
            எளிமையின் வடிவாய் நின்ற ஸ்ரீ இராமனின் முன் லங்காபுரியின் மன்னனான இராவணன் தோற்றான். சீதையின் மனம், சரணாகதிக்கு சிறந்த எடுத்துக்காட்டென்றால், சீதையின் மனதை வென்ற ஸ்ரீ இராமனின் பண்போ, இன்னலில் தவிக்கும் பக்தர்களை ரட்சிக்க துடிக்கும் கடவுளின் குணம். இறையன்பு.

       திருக்கோளூர் அம்மாள், "என்னால் பிராட்டியைப் போல் அனைத்தையும் அவன் பொறுப்பில் விட்டு விட்டு, அவனையே அனுக்க்ஷனமும் எண்ணி வாழமுடியுமா?", என்று வினவுகிறார். 

=======*******=======



dhasamuganaich setRREnO pirAttiyaip pOlE

Dasa mugan is Ravana. PirAtti is Sita. The word “setRRal” refers to “destroy”.
            Princess of Mithila, charming Sita, after marrying Lord Rama, came to Ayodhya with full of love, dreams and hope. With her heart full of Lord Rama and her services for him, she even decided to follow her beloved Lord Rama to the forest for 12 years, ignoring all the pleasures of living life in a palace as a queen. Such is her love for Lord Rama.
After being abducted by the King of Lanka, Ravana, she lived her life thinking only about Lord Rama. She looked down upon Ravana and his wealth. She was willing to stay imprisoned and suffer the torture rather than agree to his advances.
 Sita could have killed him just be her looks, anger and her devotion towards Lord Rama. Such was her power and purity in heart and soul. But she did not do so. All she tried was only to make Ravana realize his fault and surrender himself to Sri Rama. She placed both her body and soul as belongings of Rama and she just waited for Him.

   Thirukkolur Ammal is asking "Can I be like Piratti and live in peace, placing everything completely in His hands?"



No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...