November 23, 2017

Thirukolur Penpillai Rahasyam - 5




5. பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே    

    மன்னன் தொண்டைமான். ஸ்ரீநிவாச பெருமாள் கலியுகத்தில் நிரந்தரமாய் தங்க ஏழுமலையில், "ஆனந்த நிலையம்" கோவில் கட்டிய மன்னன். ஸ்ரீநிவாச பெருமாள் தனது திருவிண்ணாழியையும் பாஞ்சன்ய சங்கையும் மன்னனிடம் கொடுத்து வைக்கும் அளவிற்கு திருமலை வாசனின் அன்பையும் நம்பிக்கையையும் பெற்றவர்.
        மன்னன் தொண்டைமான் ஆட்சி புரிந்த தொண்டை நாட்டில் கூர்மர் எனும் அந்தணர் வாழ்ந்து வந்தார். அவர், காசி சென்று கங்கையில் மூத்தோர் கடன் தீர்க்க வேண்டும் என்று எண்ணினார். ஆனால் அவரது எண்ணம் நிறைவேறும் முன் அவர் உயிர் உடல் விட்டு சென்றது. அவரது ஆசையினை நிறைவேற்ற அவர் மகன், கிருஷ்ண ஷர்மா விருப்பம் கொண்டான். தன் தந்தையின் ஆசையினை நிறைவேற்றவும், அவரது அஸ்தியினை கங்கையில் கரைக்கவும் எண்ணினான். நெடுந்தூர பயணம் என்பதால் தனது மனைவியையும் பிள்ளையையும் மன்னனின் நேரடி பாதுகாப்பில் விட்டுவிட்டு காசி நோக்கி புறப்பட்டான். மன்னன் தொண்டைமானோ, தனது பாதுகாவலர்களிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
      மாதங்கள் சென்றன. நாட்டினை வழி நடத்துவதில் கவனத்தை செலுத்திய மன்னன், கிருஷ்ண ஷர்மாவின் குடும்பத்தைப் பற்றி நாளடைவில் மறந்தே போனார். மன்னர் விசாரிக்கவில்லையே என்று பாதுகாவலர்களும் அரசாங்க நிதியினை கிருஷ்ண ஷர்மாவின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்காமல் அவர்கள் பயன்பாட்டிற்கு உபயோகித்து கொண்டனர். விளைவு? பசியால் வாடி கிருஷ்ண ஷர்மாவின் மனைவியும் மகனும் இறந்து போனார்கள்.
       காசியில் இருந்து திரும்பிய கிருஷ்ண ஷர்மா, நேரே மன்னன் அரண்மனைக்குச் சென்றான். கிருஷ்ண ஷர்மாவை கண்ட பின் தான் மன்னருக்கு கிருஷ்ண ஷர்மாவின் குடும்பத்தினர் பற்றிய ஞாபகமே வந்தது. கடமை தவறியதை எண்ணி பதைபதைத்த மன்னர், நேரே அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இல்லத்திற்கு சென்றவர், கண் முன் அவர்கள் இறந்து கிடந்ததைக் கண்டு மனம் உடைந்தே போனார். தன்னை நம்பி வந்தவர்களை, தனது நேரடி பார்வையில் பாதுகாப்புடன் இருக்க வேண்டியவர்கள் இறந்து கிடப்பதைக் கண்டு செய்வதறியாது மனம் கலங்கி நின்றார். நேரே கிருஷ்ண ஷர்மாவிடம் சென்று,"கிருஷ்ணா, உன் குடும்பத்தினர் திருமலை சென்றுள்ளனர். கூடிய விரைவில் திரும்பிவிடுவர்!", என்றார். கிருஷ்ண ஷர்மாவும் மன்னனின் வார்த்தையினை நம்பி திருமலை நோக்கிச் செல்கிறான்.
      இதனிடையே, திருமலை கோவிலுக்குக்கும் அரண்மனைக்கும் இடையே இருக்கும் இரகசிய பாதை மூலம் நேரே ஸ்ரீனிவாசனைக் காணச் சென்றார். பெருமாளின் பாதங்களில் சரணமடைந்த மன்னன் தொண்டைமான், "திருமலை வாசா! நம்பி வந்தவர்களை கவனிக்காமல் கடமை தவறி விட்டேன்!! மேலும், இறந்து கிடப்பவர்கள் உன்னை காண வந்திருப்பதாய் பொய் உரைத்துள்ளேன்! நம்பி வந்தவனிடம் இனி என்ன கூறுவேன்? பழி சொல்லிற்கு ஆளானேன். உன்னை சரணடைந்த என்னைக் காப்பாற்று இல்லையென்றால் உன் பாதங்களின் கீழ் என்னுயிரை உன்னோடு சேர்த்து விடு! உன்னை நம்பி வந்துள்ளேன். எல்லாம் இனி உன் பொறுப்பு!",என்று வேண்டினார்.
         தன்னை நம்பி வந்த பக்தனை திருமலை வாசன் கைவிடுவதில்லையே! மன்னனின் நிலை கண்டு வருந்திய பெருமாள், தொண்டைமான் முன் தோன்றி,"மன்னர் தொண்டைமானே! கலக்கம் வேண்டாம். சந்நிதியில் உள்ள துளசி தீர்த்தத்தினை கிருஷ்ணனின் குடும்பத்தாரின் உடல்களின் மீது தெளிப்பாயாக. அவர்கள் உயிர் பெற்று எழுவர்.",என்று கூறி நல்லாசி வழங்கினார். மன்னர் தொண்டைமானும் அவ்வாறே செய்ய, இறந்தவர்கள் உயிர் பெற்று எழுந்தனர். மனம் மகிழ்ந்த தொண்டைமான், அங்கு வந்த கிருஷ்ண ஷர்மாவிடம் அவன் குடும்பத்தினரை ஒப்படைத்தார். மேலும் தன் மீது திருமலை வாசன் கொண்டுள்ள அன்பினை அறிய காரணமாய் இருந்த இந்நிகழ்விற்கு காரணமாய் இருந்த கிருஷ்ண ஷர்மா மற்றும் அவன் குடும்பத்தினருக்கு செல்வங்கள் பல அள்ளி வழங்கினார்.
      
    திருக்கோளூர் அம்மாள், "மன்னன் தொண்டைமான் போல் பெருமாளிடம் சரணடைந்தேனா இல்லை, அவர் பெற்றதைப் போல் ஸ்ரீநிவாசனின் அன்பையும் அருளையும் தான் பெற்றேனா?",என்று வினவுகிறார்.

=======*******=======


Pinamezhupp- i vitteno THondai maanaip poale

            King Thondaiman, an ardent devotee of Lord Srinivasa built the temple, “Anandha Nilayam” in Thirumalai and made sure Lord Srinivasa stays forever in this world. The King is one of the foremost human soul who received love and trust of the Lord in such a way that, the Lord Himself left his conch and discus to the King and even forgot to take it back!
In the Kingdom of Thondai, while the King Thondaiman was ruling and the people were living a simple and peaceful life, a brahmin named Koorman lead a very simple and happy life with his family. He wished to perform the last rituals to his ancestors in Kasi, the spiritual place, in the banks of river Ganges, once he get to save some money for the long trip that will take months. But he died in his hometown out of illness.
            His son, Krishna Sharma, decided to fulfil his father's wish and also wished to have the ashes of his father immersed in River Ganges, for his father’s salvation. Out of safety for his wife and son and also considering the longness of the trip, he decided to leave them under the protection of the King. The next day, he brought his wife and children to King Thondaiman, explained about his trip and left his family under the King’s protection. He then left for Kasi with a satisfied heart, after receiving the King’s words of assurance and protection.
The king asked people under him to take care of Krishna Sharma's wife and son. He also made sure that the family got money every month for food and living expenses. Months passed. Involved in his daily duties, the king completely forgot about Krishna Sharma and his family. With no enquiries from the King, the workers did not take good care of the family and looted the money for their use and as a result, Krishna Sharma’s wife and son eventually died.
Days passed. Returning from Kasi, Krishna Sharma visited the King’s palace to ask for his family. Only after seeing Krishna Sharma walking towards him, the King remembered about him and his family! Terrified in realizing that he has forgotten his duties, he rushed to the house where they were requested to stay.  To worsen the situation further more, he found only the dead bodies of the wife and the son. Petrified and perplexed on what to say to Krishna Sharma, he returned to the court room where Krishna Sharma was waiting and told him that his family had gone to Thirumalai and will be returning sooner.
Trusting the words of the King like before, Krishna Sharma too left for Thirumalai. In the mean time, the King rushed to the temple taking the secret passage from his palace. Reaching the sanctum sanctorum, he fell on the Lord’s feet and prayed for help. “Oh Lord! I have failed in my duties and as a result, two lives are lying dead and the soul that trusted me and is on his way, looking for his family! What will I do? How will I tell him what has happened? Save me from this trouble and I will assure you that I will never repeat such mistakes ever. Save me from this trouble or take me too to your divine feet.”
Showering His divine grace on the king, the Lord told him to take some holy water from the sanctum sanctorum and sprinkle it on the dead bodies and they will come alive. The king did as advised and the family came back to life. He returned the family to Krishna Sharma along with wealth.

          Thirukkolur Ammal is asking "Did I surrender to the Lord like the King or did I receive  trust, love and grace of the Lord like the King?”

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...