1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே
கோகுலத்தில் கிருஷ்ணன் லீலைகள் பல புரிந்து,
நண்பர்களுடன் சேர்ந்து வெண்ணை எல்லாவற்றையும் திருடி உண்டு
மகிழ்ந்து, தன் அண்ணன் பலராமனுடன் இணைந்து மாடுகளை மேய்த்துக்கொண்டு,
கோபியருடன் ஆடிப்பாடி மகிழ்ந்து,
கோகுலத்தில் வசிப்போரை தன் அழகு பாவனைகளால் மகிழ்வித்து,
இடை இடையே கம்சனால் அனுப்பப்பட்ட அசுரர்களை வதம் செய்து,
கோகுலத்தின் மன்னனாய் வாழ்ந்து வந்தான். தன் அனைத்து
முயற்சிகளும் தோல்வியில் முடிய, கோபம் கொண்ட கம்சன் மதுராவிற்கு அவர்களை அழைத்து அவர்களை
கொல்வதற்கு திட்டம் தீட்டினான். மதுராவிற்கு கிருஷ்ணனையும் பலராமனையும் வரவழைத்து
விட்டால் தனது பட்டத்து யானையினைக் கொண்டோ அல்லது பட்டத்து மல்யுத்த வீரர்களான
சநுரன் மற்றும் முஷ்டிகன் கொண்டோ அவர்களை கொன்று விடலாம் என்பதே அவன் திட்டம்.
அதற்காக,
மதுராவில் தனுர் யாகம் நடத்த ஏற்பாடு செய்தான்.
அவ்விழாவிற்கு நந்தகோபன் குமாரர்களை அழைக்கும் நோக்கத்துடன்,
தன் மந்திரியான அக்ரூரரை அனுப்பி வைத்தான்.
அக்ரூரர், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின் சகோதரர்.
மகாபாரதத்தில் பீஷ்மாச்சாரியார் திருதராஷ்டிரனுடன் இருந்த அதே நிலை அக்ரூரரின்
நிலை கம்சனுடன். கிருஷ்ணனின் லீலைகளை நன்கு அறிந்தவர். கிருஷ்ணன் தான் ஸ்ரீமன்
நாராயணன்,
கம்சனை வதம் செய்ய பிறந்தவன் என்பதையும் அறிந்தவர்.
கிருஷ்ணன் பால் அதீத அன்பும் மாறா பக்தியும் கொண்டவர். எனவே கம்சனின் திட்டம்
நிறைவேறப் போவதில்லை என்பதும் மேலும் இதுவே கம்சனின் இறுதி திட்டம்,
இதில் கம்சன் மடிவான் என்பதும் அவருக்கு தெரியும்.
அனைத்தும் அறிந்திருந்தும் கம்சன் கூறியவுடன், மறுப்பேதும் கூறாமல், "இதோ புறப்படுகிறேன்!! இப்பொழுதே அழைத்து வருகிறேன்!!!"
என்று கிருஷ்ணனை விழாவிற்கு அழைக்கச் சென்றார். காரணம்?
கண்ணனின் மீதுள்ள மாறா நம்பிக்கை மட்டுமல்ல,
கண்ணன் மீதுள்ள தீராக் காதலும் தான். இதன் பயனாக அவர்
கிருஷ்ணனுடன், அவனருகில் இருக்கும் பேறினைப் பெறுவார் அல்லவா!! குறும்பு கண்ணனின் சேட்டைகளை
காதால் கேட்டு மட்டுமே இதுவரை ரசித்தவர், இப்பொழுது நேரில் சென்று அவனை,
அவன் அழகுகளை, அவன் அன்பை, அவன் சிரிப்பை கண்ணாரக் கண்டு ரசிக்கலாம் அல்லவா!! கோகுலம்
செல்லும் வழி முழுவதும் கிருஷ்ணனின் லீலைகள் பற்றியும் அவனுடன் இருக்கப் போகும்
கிடைப்பதற்கரிதான நொடிகளைப் பற்றியும் எண்ணிக்கொண்டே சென்றார். கோகுலம் சென்று
நந்தகோபன் மற்றும் யசோதையின் ஆசியுடன் கிருஷ்ணனையும் பலராமரையும் மதுரா அழைத்து
வந்தார். வழி நெடுக நொடி கூட இமைக்காமல் கண்ணனை கண்கள் குளிர குளிரக் கண்டு
ரசித்தார், மனதில் ஆனந்தம்கொண்டார். இதனால்,கிருஷ்ணன் அருகில் இருக்கும் பேரும்,
அவன் கடாட்ஷமும் பெற்றார்.
"அக்ரூரர் போல் மாறா பக்தியும் அளவில்லா அன்பும் நம்பிக்கையும் கொண்டு எந்நேரமும் அந்த
கிருஷ்ணனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தேனா?", என்று வினவுகிறார் திருகோளூர் அம்மாள்.
============*****===================
1. Azhaiththu varugiren enraeno akruraraip pole
Kamsa
had tried several times and failed in killing the kid, Sri Krishna while he was
growing up in Gokulam. While Krishna was having fun and enjoying his life in
Gokulam like no other kid in the world, Kamsa’s rage and pain of repeated
defeats grew in his heart. Knowing that it is going to be tough to kill Krishna
in Gokulam he decided to get Him and Sri Balarama to Mathura and kill them
there.
In
order to execute his plan, he ordered for a yaga to be conducted in Mathura and
sent an invitation to them both through Sri Akrura, who was a Yadava and a brother
of Vasudeva. Even after knowing that Krishna has been slaying all the demons
sent by him, right from when he was a toddler, the great-minded Kamsa believed
in his new plan: To kill them through his
royal elephant (Kuvalayapeeda) or through his royal wrestlers (Chanura and
Mushtika).
The
wise Akrura had great love for Krishna and knew that He was none other than Sriman
Narayana and that Krishna will slay Kamsa in Mathura. Delighting his life so
far by listening only to the stories of Krishna and his leelas while being
truthful to his official duties towards Kamsa, the moment his King Kamsa
informed him to invite Krishna and Balram in person, seeing that he has got a
chance to meet his Krishna, for the first time, without any second thoughts to
save his King, he agreed to the offer the next moment and immediately prepared
his chariot to pick up Krishna and Balram without wasting any moment.
Longing
and wishing only to see Krishna, enjoy the beauty and bliss of Krishna in his
very own eyes and to cherish every single moment he gets to see him, listen to
his words even if Krishna is speaking with others and not to him and most of
all, to be with him, Akrura left the palace with a delighted heart, just like
Krishna longing for butter!
All
through his way to Gokulam, all that he thought was only about Krishna and
about his time with Krishna. He then met Krishna and Balram and brought them
back to Mathura in his chariot. All through his way back to Mathura, he had his
eyes, heart and senses fixed one and only on Krishna!!!
Thirukkolur
Ammal asks - "Did I show irretrievable confidence and irrevocable love on Krishna
like Akrura?"
=====****====
No comments:
Post a Comment