இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே
கர்நாடகத்தின்
மைசூரில் உள்ள சாலகிராமம் என்னும் ஊரில் சித்திரை மாதம், அஸ்வினி
நட்சத்திரத்தில் ஆந்திரபூரணர் என்னும் இயற்பெயரோடு பிறந்த வடுகநம்பி, வைணவ
ஆச்சாரியனான இராமாநுசரின் முதன்மை
மாணாக்கரில் ஒருவர். தன்
குருவாகிய இராமானுசர் மீது கொண்ட அளவில்லா குருபக்திக்காக இவர் பெரிதும்
புகழப்பெறுகிறார்.
இராமானுசரோடு
திருவரங்கனை சேவிக்க செல்லும்போதெல்லாம், இராமானுசர்
அரங்கனின் வடிவழகில் தன்னைப் பூரணமாக ஈடுபடுத்திக் கொள்ள, நம்பியோ தன்
ஆச்சாரியனாகிய இராமானுசரின் வடிவழகில் லயித்துக் கொண்டிருப்பார். இதனை ஒருநாள்
கண்ணுற்ற இராமானுசர் "நீண்ட அப்பெரிய கண்கள்..." எனும் ஆழ்வாரின்
பாடலைப் பாடி அரங்கனின் கண்ணழகை காணும்படிக் கூற, நம்பியோ
திருப்பாணாழ்வாரின் பாடலாகிய "என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை
காணாவே..." என பதிலளிக்க, இவரின்
குருபக்தியை பெருதும் மெச்சினார் உடையவர்.
ஒரு நாள், இராமானுசருக்காக பால் சூடுபடுத்திக் கொண்டிருக்கையில்
திருவரங்கத்து அரங்கநாதன் கோயில் உற்சவராகிய நம்பெருமாள் உலா வந்துக் கொண்டிருந்தார்.
அவரை சேவிக்க (தொழும் பொருட்டு)
இராமானுசர் தனது மாணாக்கர் ஒருவரை அனுப்பி வடுக நம்பியை அழைத்து வரக்
கூறினார். “வடுகா, விரைந்து
வா... நம்பெருமாள்
உலா வந்து கொண்டிருக்கிறார்.
சேவித்துக்கொள்."
என அழைத்தனர்.
அதற்கு வடுக நம்பியோ, “பெருமாளைக் காண நான் வந்து விட்டால், எம்பெருமாளுக்காக
(இராமானுசர்) தயாராகிக் கொண்டிருக்கும் பால் பொங்கிவிடும். அதன் சுவையும்
போய்விடும். ஆச்சார்யாருக்கான எனது சேவையை முதலில் சரியாக புரிந்து விட்டு
வருகிறேன்.”, என்றார் பணிவுடன்.
தாமதமாக
வந்த நம்பியை இராமானுசர் கடிந்துக்கொள்ள அதற்கு "உம்பெருமாளை (நம்பெருமாள் -
ரங்கநாதன்) சேவிக்க வந்துவிட்டால், எம்பெருமாளுக்கான
(இராமானுசர்) சேவையை (பணிவிடை) யார் செய்வது" என்று பதிலளித்தார்.
திருக்கோளூர்
அம்மாள், “வடுக நம்பியைப் போல் ஆச்சார்ய பக்தி கொண்டுள்ளேனா?” – என வினவுகிறார்.
ingu pAl pongum
enREnO vaduganambiyaip pOlaE
Vaduga Nambi, born in Saligramam in Karnataka, was a very
close disciple of Swami Ramanuja. His faith in his acharya was unshakable that
there are many incidents where his concern for Swami Ramanuja was more than
what he had for the Lord. This is known as Madhurakavi nishtai (also known as
Charamopaya nishtai) - the acharya bhakti shown by Madhurakavi Azhvar toward
Nammazhvar.
One time, at Sri Rangam, while Vaduga Nambi was engaged in
preparing milk for Swami Ramanuja, the processional deity Lord Namperumal was
being glorified by Srivaishnavas. As Namperumal came outside Ramanuja's mutt,
everyone went out to have His darshan. Ramanuja was outside and noticing Vaduga
Nambi's absence, he sent his disciples to ask Vaduga Nambi to come outside.
Vaduga Nambi politely responded- “If I step out to see the Lord then the milk I’m
preparing for Swami Ramanuja would overheat, overflow and lose its flavor. I will finish my service to my Acharya first and then I will come out to see
the Lord.” Such was his acharya bhakti. Such was his devotion towards Swami
Ramanuja. To Vaduga Nambi, even Lord was only next to Swami Ramanuja.
Thirukkolur Ammal is asking "Did I show acharya
bhakti like Vaduga Nambi?"
No comments:
Post a Comment