February 08, 2018

Thirukolur Penpillai Rahasyam-31




குடை முதலானது ஆனேனோ அனந்தாழ்வான் போலே

அனந்தாழ்வான், ஆதிசேஷனின் பெயர். ஆதிசேஷன்,பாற்கடலில் திருமாலின் படுக்கையாக இருக்கின்ற நாகமாகும். ஆயிரம் தலைகளை உடையதான இந்த ஆதிசேஷன் நாராயணனுக்கு மிகவும் உற்றவனாக, திருமாலின் ஒவ்வொரு திரு அவதாரத்திலும், அவருக்குத் துணையாக, இணையானதொரு பாத்திரமேற்று வந்தவர். 

கீதையில் கிருஷ்ணா பகவான் 10 அத்தியாயம் 29 ஸ்லோகத்தில் "ஆனந்தாஸ் க அஸ்மி நாகானாம்" என்று, அதாவது “நான் நாகர்களில் நான் அனந்தன் “ என்றார்.

பொய்கை ஆழ்வார், தனது முதல் திருவந்தாதியில்,
சென்றால் குடையாம் இருந்தால்சிங் காசனமாம்
நின்றால் மரவடியாம் நீள்கடலுள் - என்றும்
 
புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
 
அணையாம் திருமாற்கு அரவு

திருமால் நடந்து சென்றால் குடையாகவும், அமர்ந்து இருந்தால் அரியணையாகவும், நிற்கும்போது காலணியாகவும் (பாதுகை), என திருமாலின் அனைத்து செயல்பாடுகளில் துணையாக நிற்கிறார்  ஆதிசேன். கடலில் மிதப்பதற்குத் தெப்பமாகவும்,விளக்காகவும் (ஒளி) ஆடையாகவும், படுக்கையாகவும்  விளங்குகிறார் ஆதிசேஷன்!

திருக்கோளூர் அம்மாள், “ஆதிசேஷன் போல் திருமாலுக்கு ஏதேனும் கைங்கரியம் செய்தேனா?”, என்று வினவுகிறார்.

========********========

Chennakeshava Temple, Karnataka,India

kudai mudhalAnadhu AnEnO ananthAzhvAn pOlE

Ananthazhwan is the name for Adisesha on whom the Lord rests. Adisesha is the nagaraja, King of the serpents. Adisesha is said to hold all the planets of the universe on his hoods and also constantly sings the glories of the God Vishnu from all his mouths. He is sometimes referred to as Ananta Sesha, which translates as endless-Sesha or Adisesha "first Shesha". It is said that when Adisesha uncoils, time moves forward and creation takes place; when he coils back, the universe ceases to exist.

Ananthazhwan floats coiled on the ocean of bliss, to form the bed for Lord Vishnu. In the Bhagavad-Gita of Chapter 10, verse 29, Lord Krishna, while describing 75 of his common manifestations, declares, "anantaś ca asmi nāgānā:”, meaning, “Of the nagas, I am Ananta.”

He is always with the Lord! Even when the Lord descends to this world, Adisesha accompanies Him in some form and do services to his Lord. He is in eternal service and hence, is the personification of service.

Poigai Azhwar sings in his Mudhal Thiruvandhadhi about Adisesha as:

senRAL kudaiyAm irundhAl singAsanamAm
ninRAl maravadiyAm nILkadluL enRum
puNaiyAm maNi viLakkAm pUmpattAm pulgum
aNaiyAm thirumARku aravu

Meaning, Ananthazhwan is an umbrella when the Lord walks; he is a seat when He sits; he is the footwear/sandals when He stands up; he is the float when He is in the milky ocean; he is a lamp; he is a cloth and he is a pillow!! Thus he is everything when it comes to rendering service.


Thirukkolur Ammal is asking "Have I rendered any kind of service to the Lord, like Adisesha?"



No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...