February 03, 2018

Thirukolur Penpillai Rahasyam-26



அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே

ஸ்ரீ கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர் குசேலன் (சுதாமா). கிருஷ்ணரோடு வேத பாடசாலையில் படித்தபோதே, வேத வாக்கியங்கள் பிரம்மத்தை அறிந்து கொள் என்றால் சுதாமா கிருஷ்ணரை பார்ப்பார். அவரது குடும்பம் வறுமையில் இருந்தாலும், ஞானம் எனும் மாபெரும் நிதி இருந்ததால் நிறைவாகவும், நிரம்பியவராகவும் இருந்தார். அழுக்கு வஸ்திரங்களை உடுத்தியிருப்பதால் ஊரிலுள்ளோர் குசேலர் என்று அழைத்தனர். அவர் பத்தினி, சுசீலையை சுட்சாமா என்று கூப்பிட்டனர். அதாவது, ஒட்டிய வயிற்றை உடையவள் என்று பொருள்.

நாட்கள் சென்றன. வருடங்கள் பல ஆகின. ஸ்ரீ கிருஷ்ணன் துவாரகையில் ஆட்சி புரிந்து கொண்டிருக்க, சுதாமரோ வறுமையில் வாடிக் கொண்டிருந்தார். வறுமையினால் பிள்ளைகள் பசியால் வாடுவதைக் கண்ட சுசீலை, ஒரு நாள், சுதாமரிடம் - "உங்கள் நண்பர் ஸ்ரீ கிருஷ்ணன் இப்போது துவாரகையின் மன்னனாய் உள்ளார். அவரிடம் சென்று உதவி வேண்டினால், நம் வறுமை நிலை மாறும் அல்லவா?" - என்றார்.

சுசீலையின் வார்த்தைகளில் சுதாமருக்கு உடன்பாடில்லையென்றாலும், இக்காரணம் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணனைக் காண ஒரு வழி கிடைத்ததாய் எண்ணி ஒப்புக்கொண்டார். சுசீலை குடிலில் இருந்த சிறிதளவு அவல் பொரியை சுதாமரிடம் தந்து வழியனுப்பி வைக்க, சுதாமரும், ஸ்ரீ கிருஷ்ணனை இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கப் போவதை எண்ணியவாறே துவாரகை நோக்கி பயணித்தார்.

பல வருடங்கள் கழித்து தன்னை காண வந்த நண்பனை, மாளிகை வாசலில் நிற்கும் சுதாமாவைக் காண, துவாரகையின் மன்னனான ஸ்ரீ கிருஷ்ணன் துள்ளிக் குதித்து ஓடி வருவதை கண்களில் கண்ணீருடன் சுதாமா கண்டார்.  ஸ்ரீ கிருஷ்ணனின் தங்க இருக்கையில் சுதாமரை அமர வைத்து, கிருஷ்ணனே பாதபூஜை செய்ய, ருக்மிணி சாமரம் வீச, சத்யபாமா பல வகை இனிப்பு, பலகாரம் மற்றும் பழ வகைகளை சுதாமருக்கு தங்க தட்டில் வைத்து பரிமாறினார். தங்களின் சிறு வயது குறும்புகளை, கிருஷ்ணனின் லீலைகளை, சுதாமரின் தன்னலமற்ற அன்பினைப் பற்றிய சம்பவங்களை நினைவு கூர்ந்தும் இருவரும் நேரம் போவது தெரியா வண்ணம் உரையாடினர்.

கிருஷ்ணனின் ஆடம்பர மாளிகை, ஆபரணம், பட்டு உடைகள், தங்கத்தட்டில் உணவு என எல்லாவற்றையும் கண்ட சுதாமருக்கு, சுசீலை கொடுத்தனுப்பிய அவல் பொரியை கிருஷ்ணனுக்கு கொடுக்க சங்கோசம் கொண்டு மறைத்தே வைத்திருந்தார். சுதாமரின் எண்ணங்களை அறிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், "சுதாமா! எனக்காக என்ன கொண்டு வந்தாய் உன் வீட்டில் இருந்து?"-என்று மீண்டும் மீண்டும் கேட்டு, சுதாமரிடம் இருந்து அவல் பொரியை பெற்றுக்கொண்டார். இரு கை அளவே கொண்ட அவல் பொரியை பெற்றுக்கொண்ட ஸ்ரீ கிருஷ்ணன், அதில் சிறிதளவு உண்டு - "கோகுலத்தின் வெண்ணையை விட ருசியுள்ளதாய் உள்ளது"- என்றார், கண்களில் நட்புடனும் அன்புடனும். கிருஷ்ணனின் சிறு பிள்ளைப் போன்ற சிரிப்பினையும், குறும்பையும் கண்டு மகிழ்ந்த சுதாமர், அன்றிரவுப்பொழுதை கிருஷ்ணனுடன் களித்தார்.

பொழுது புலர, மறுநாள், சுதாமா ஸ்ரீ கிருஷ்ணனிடம் இருந்து ஏதும் வேண்டாமலே, மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் விடைப் பெற்றுக்கொண்டார். இல்லம் நெருங்கும் போது, வெறுங்கையுடன் செல்வதைக் கண்டு சுசீலை என்ன கூறுவாளோ என்றெண்ணியவாறே தயக்கத்துடன் சென்றார். தெரு முனையில் திரும்பும் பொழுது, தயக்கத்துடன் நிமிர்ந்த சுதாமர், தன் குடில் இருந்த இடத்தில் மாட மாளிகை இருப்பதையும், தன் பிள்ளைகள் பட்டாடை அணிந்து தெருவில் விளையாடுவதையும் கண்டு ஆச்சர்யம் கொண்டார். இவை அனைத்தும் கிருஷ்ணனின் லீலையே என்பதை அறிந்து கொண்ட சுதாமா, ஸ்ரீ கிருஷ்ணனின் தூய நட்பினையும், இணையில்லா அன்புள்ளத்தையும் தினம் எண்ணியவாறு பல நற்காரியங்கள் செய்து, எளிய வாழ்க்கை வாழ்ந்தார்.

திருக்கோளூர் அம்மாள், "சுதாமரைப் போல், அன்பு மட்டுமே உள்ளத்தில் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ணனை மட்டுமே கருத்தில் கொண்டு அவல்பொரியை ஈந்தேனோ?", என்று வினவுகிறார்.

========********========


aval poriyai IndhEnO kusElaraip pOlE

Sudhama, also known as Kusela, was a Brahmin childhood friend Lord Krishna from Mathura. He was born as a poor man in order to enjoy the transcendental pastimes. The bonding between Krishna and Kushela is said to be a story on how friendship should be! Sri Krishna learned all the arts from Rishi Santhipini. His fellow student at that time was Kushela, who had great knowledge and knew the truth about Krishna. After the end of their studies, Kushela went back home and married Suseelai and lived with her. He continued to be poor and survived on alms.

One day, when the family was in extreme poverty, Suseelai approached Kushela and told him "We are not able to feed the kids even for one time in a day! They are growing weak and also, there’s no food for us. Your childhood friend Krishna is now king of Dwaraka. Go see Him. He will help us get rid of our poverty".

Kushela did not want to ask Krishna for anything but he agreed to go to Him, because it would be an opportunity to meet Him again. He did not want to go empty handed though. So, Suseelai gave some aval (fluffed rice) to Kusela, on the advice of Kusela who knows that his friend loves fluffed rice.

When he reached the palace, the royal gatekeepers did not allow him inside as he was dressed in rags. When Sri Krishna was informed about Kusela’s arrival, he rushed to the gate and welcomed Kusela with utmost love and respect. .

Kusela was seated in Krishna’s throne and Krishna had Rukmini fan him while Krishna was washing Kusela’s feet with water. They both shared their memories from the past and even shared it with Rukmini and Bama. Kusela, looking at the grandeur way Krishna is living his life and the food they have prepared for him, he was ashamed to give Him the small amount of aval that he had brought and so he hid it in his rags itself.

While he was about to leave, sensing Kusela’s heart, Sri Krishna asked Kusela whether he came to see his friend empty- handed. He asked Kushela what he had brought for Him to eat. Knowing that Krishna would not leave him until he gives the hidden fluffed rice; Kusela gave the aval to Him. With great pleasure and claiming that it was dearer to Him than the butter in Gokulam, He ate a handful of the aval. Watching Sri Krishna being the same from childhood, Kusela was delighted and at the same time, was too embarrassed to ask Sri Krishna for anything and left the palace empty handed.

But Kusela did not realize that as soon as Krishna ate his fluffed rice, His full grace had fallen on Kushela. It is said that Rukmini stopped Him from eating any more of the aval. Only on his return to his home, he found that his hut has become a palace and that his family had received great wealth. He continued to live a simple life while praising His greatness.


Thirukkolur Ammal is asking "Did I take aval with great affection to the Lord like Kushela did?"

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...