Kandakarnan |
6. பிண விருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
கண்டாகர்ணன், பூலோகத்தில் பிணங்களை
உண்டு வாழ்பவன். தேவனாகவோ மனிதனாகவோ இல்லாவிடினும், மிகச் சிறந்த சிவ பக்தன்.
வேறு ஒரு தெய்வத்தின் திருநாமம் தவறுதலாய்க் கூட தன் காதுகளில் கேட்டு விடக்கூடாது
என்பதற்காகவே தன் இரு காதுகளிலும் வெண்கல மணிகளைக் கட்டிகொண்ட அளவிற்கு தீவிர சிவ
பக்தன். இதர தெய்வங்களின் திருநாமம்
கேட்கும் நேரம் தன் தலையினை ஆட்டிக் கொள்வான். இதனாலயே கண்டாகர்ணன்
என்றழைக்கப்பட்டான்.
ஒரு நாள், கைலாயம் சென்ற கண்டாகர்ணன், சிவபெருமானை
நோக்கி, "கைலாச நாதா! காற்றோடு காற்றாய் வாழ்ந்தாலும் உன்னை பிரிந்து இருக்கும் துயரம்
மனதை கனக்கிறது. இப்பூவுலகம் விட்டு மோக்க்ஷம் வழங்கி அடியேனுக்கு உதவி
புரிவீர்களாக!",
என்று வேண்டி சிவபெருமானை சரணடைந்தான். கண்டாகர்ணனின்
வேண்டுதலை பொறுமையுடன் கேட்ட விஷ்ணு வல்லபாவாகிய மகேஸ்வரன், "கண்டாகர்ணா! உன் கர்மவினை இது. கர்மப்பயனை முற்றிலுமாக நீக்கி முக்தி
அளிக்கும் பொறுப்பு காக்கும் கடவுளான ஸ்ரீமன் நாராயணனிடம் மட்டுமே உள்ளது. என்னால்
இயலாது. ஆனால்,
எம் பக்தனான நீ முக்தி வேண்டி வந்துள்ளதால், உனக்கு
சம்மதம் என்றால் ஒரு வழி உள்ளது. கூறுகிறேன். கேளும். ஸ்ரீமன் நாராயணன், கிருஷ்ணாவதாரம்
எடுத்துள்ளார். மகாவிஷ்ணுவிடம் ஒருமுறை அவருக்கு வரமளிக்கும் வாய்ப்பினை எனக்கு
வழங்குமாறு வேண்டினேன். அதற்க்கு சம்மதித்த அவர், பூலோகத்தில் கிருஷ்ணனாய்
அவதரிக்கும் போது கைலாயம் வந்து என்னிடம் வரத்தினை பெற்றுக்கொள்வதாய்
வாக்களித்தார். கிருஷ்ணன் இங்கு வரும் பொழுது அவரை நீ வணங்கி வேண்டினால் நீ
கேட்டது நிச்சயம் உனக்கு கிடக்கும். மறந்து விடாதே! அவர் திருநாமம்
கிருஷ்ணன்!!",
என்று கூறி கிருஷ்ணன் எவ்வாறிருப்பான் என்று அங்க
அடையாளங்களையும் கூறினார்.
சர்வேஸ்வரனிடம் முக்திக்கான வழியினை அறிந்து
கொண்ட கண்டாகர்ணன்,
தன் நன்றியினை தெரிவித்துவிட்டு கைலாயம் வாசலில்
வந்தமர்ந்தான். கிருஷ்ணன் வந்தால் தெரிந்துகொள்வதற்காக தன் காதுகளில் கட்டியிருந்த
மணிகளை கழற்றி எறிந்தான். கிருஷ்ணன் என்ற நாமத்தையும் அவன் எவ்வாறிருப்பான் என்று
சிவபெருமான் கூறிய அடையாளங்களுடன் கூடிய உருவத்தினை மனதில் பதியச் செய்தான். சதா
சர்வகாலமும் இவ்விரண்டை மட்டுமே அவன் மனம் நினைத்துக் கொண்டு கைலாய வாசலில்
கிருஷ்ணனின் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தான்.
கிருஷ்ணனும் ஒரு நாள் கைலாயம் வந்தார்.
தூரத்தில் வருவது கிருஷ்ணனே என்றறிந்தான் கண்டாகர்ணன். தன் நிலை எதுவாகினும், மனிதன், தான்
உணவு உண்பதற்கு முன் தன் உணவினை தான் வணங்கும் தெய்வத்திற்கு படைத்த பின்னரே உண்ண
வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. கண்டாகர்ணனோ பிணங்களை உண்ணுபவன். தன் அருகில் தவத்தில் இருந்த ரிஷி ஒருவரைக்
கொன்றான். சிறிதும் தயக்கமோ கலக்கமோ இன்றி அவரின் உடலை நேரே கிருஷ்ணன் முன்
சமர்ப்பித்து,
"நீர் கிருஷ்ணன் என்பதை அறிவேன். கர்மவினை நீக்கி முக்தி
அளிக்க உன்னால் மட்டுமே முடியும் என்று சிவபெருமான் கூறியுள்ளார். இந்த ரிஷியினை
உனக்காகவே கொன்று கொண்டு வந்துள்ளேன். ஏற்றுக்கொண்டு எனக்கும் என் சகோதரனுக்கும்
முக்தி அளிப்பாயாக கிருஷ்ணா!",
என்று வேண்டினான். பக்தி நிறைந்த மனதுடன் தனக்கு
படைக்கப்பட்ட பொருளைப் பார்க்காமல்,
பக்தியை மட்டுமே கண்ணன் கண்டான்! நேர்மையுடன்
கிருஷ்ணனுக்காக இதை செய்துள்ளதால்,
கிருஷ்ணனும் மகிழ்ந்து அவன் வேண்டியது போல்
கண்டாகர்ணனுக்கும் அவன் சகோதரனுக்கும் முக்தி வழங்கினார். கண்டாகர்ணன் கொன்ற
ரிஷிக்கும் முக்தி வழங்கினார்.
திருக்கோளூர் அம்மாள், "கடவுள், பக்தியை மட்டுமே காண்பார்,
சமர்பிக்கும் பொருளை அல்ல என்ற கண்டாகர்ணனுக்கு இருந்த சிறு
ஞானம் கூட எனக்கில்லை. கண்டகர்ணனைப் போல் நேர்மையுடன் என்னால் புருஷோத்தமனை வணங்க
இயலுமா??",
என்று வினவுகிறார்.
========*****=======
Pina virunthitteno Kandakarnanai polae
Once there lived a spirit named Kandakarna who feed on
dead bodies. Being an ardent devotee of Shiva, he ignored and teased other
gods. Even after being advised by Lord
Shiva, he did not change his character and kept continuing to tease other gods
and their followers. He went to the extension that he hung a bell on his ears
to prevent him from hearing the names of other gods. Hence he was called KandaKarna
(“Kanda” means “bell”, “Karnan” means “ears”). Desire of attaining Moksha, he went to Kailash
and prayed to Lord Shiva to help him.
Lord
Shiva said, "Kandakarna! Only Lord Narayana could do that! I am not
responsible for that. But I can help you with the way to attain Moksha. Lord
Narayana has appeared on earth as Sri Krishna now. Once I have asked Him to
give me an opportunity to give Him a boon. He agreed and told me that He would come
to Kailash and get the boon. So, he will definitely visit Kailash any day!! You
wait in front of the gates of Kailash. I will tell you how will look. When He
comes here, if you pray to Him, He will give you what you seek. Do remember his
name and look." He also gave a description of Krishna's form to
Kandakarnan so he would recognize Krishna easily.
Thanking Lord Shiva, Kandakarna sat in front of the gates
of Kailash and waited for Krishna. Removing the bell from his ears in order to
hear “Krishna” when someone calls him and keeping Krishna's image and name in
his mind, he started waiting for His arrival.
After a long
wait with hope, one fine day, he saw Krishna walking towards the gates of
Kailash from distance and recognized Him right away. Vedas say that whatever a
person eats according to his state, he should offer that to the Lord that he
prays to, before eating it. Kandakarna is someone who feed on dead bodies! Remembering
that, immediately, Kandakarna killed a Rishi who was nearby and placed the body
in front of Krishna’s feet. Praying to Krishna he said "I have heard from my
Lord Shiva that you are the one who is capable of giving moksha. Please accept
my offering and give me and my brother moksha."
The Lord always looks at the devotion of the devotee and
not what the devotee is offering him in terms of material or food and money,
for he expects only divine devotion and surrender. Since Kandakarna had offered
his devotion to Krishna with great sincerity, Krishna accepted the offering and
granted him moksha. He also granted moksha to Kandakarna's brother and to the Rishi
who was offered by Kandakarna to Krishna.
Thirukkolur Ammal is asking "Did I pray to the Lord
with such an understanding, sincerity and devotion like Kandakarna?"