December 03, 2014

சிறையில் மாயவன் !

   
                    சஹாதேவன்பாண்டவர்களில் இளையவன்முக்காலம் அறிந்தவன்சுக்ராச்சாரியாரின் அவதாரம்சுக்ராச்சாரியார்அசுரர்களின் குரு.பரமாத்மாவான விஷ்ணு எந்த ரூபத்தில் வந்தாலும்கண்டநொடிப் பொழுதில், "இது பரம்பொருளான  விஷ்ணுவே!" என்று கூறிவிடும் அளவிற்கு திறமை கொண்டவர்அதனால்பீஷ்மர் மற்றும் விதுரர் தவிர்த்து கிருஷ்ணன்,விஷ்ணுவின் அவதாரம் என்பதை உணர்ந்தவன் சஹாதேவன்

முனிவர் அங்கிராஸின் புதல்வனும் தேவர்களின் குருவுமான ப்ரஹஸ்பதியினைக் காட்டிலும் அறிவிலும், ஆற்றலிலும் மிகச் சிறந்தவர்மேலும், உலகங்கள்  அனைத்தும்  அறியும் வண்ணம், நாராயணனுக்கு அக்ரபூஜை  செய்தவர்அசுரனாய்  இருந்த போதிலும் நாராயணின் மீது  மாறா  பக்தி கொண்டவர். ஸ்ரீமன் நாராயணனின் அன்பையும் பெற்றவர்.  

தன் மீது உண்மையான அன்பும் பக்தியும் கொண்டவர்களின் உள்ளத்தில் என்றும் நீங்காமல் வாசம் புரிபவன் ஸ்ரீமன் நாராயணன் என்பதை உலகினிற்கு உணர்த்தவும், தன் அன்பர்களின் அன்பிற்கு அவன் என்றுமே அடிமை என்பதை உலகிற்கு உணர்த்தவும், துவாபரயுகத்தில் கிருஷ்ணனாய் அவதரித்த போது  சஹாதேவனால் சிறை  பிடிக்கப்பட்டான்  விஸ்வமூர்த்தியான  மாதவன்! அந்த லீலையை நடத்தியவனும் மாயவனே!

                                  * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * 
          துரியோதனன் வனவாசம் முடித்து வந்த பாண்டவர்களுக்கு ஐந்து ஊர் அல்லஐந்து வீடு கூட தரமுடியாது என்று கூற, பாண்டவர்கள் கிருஷ்ணனை தூது அனுப்ப எண்ணினர் நட்சத்திரங்களுடன் கண்ணாமூச்சி ஆடி ஆதவன் அவற்றை கண்டு பிடிக்க முடியாமல் சோர்வடைந்து  உறங்கச் செல்ல,  அதை அறிந்த நட்சத்திரங்கள் கண் சிமிட்டி எட்டிப் பார்க்கும்  அந்தி சாயும் பொழுதில்,திரௌபதி மற்றும் பாண்டவர்களுடன் ஆலோசனையில் இருந்த மாதவன் லீலை ஒன்றை புரிய எண்ணினார். 
        "நான் சென்று கேட்டு, துரியோதனன் மறுத்து விட்டால் யுத்தம் ஒன்று தான் நமக்கு வழி. உங்களின் குடும்ப பிரச்சனைக்கு நிறைய வீரர்கள்  மடிவார்கள்மேலும் நாட்டின் பொருளாதார நிலைமை மோசமாகிவிடும்.  இப்படியொரு யுத்தம்  அவசியம் தானா?" என்ற கிருஷ்ணனை நோக்கி தர்மன்,"கிருஷ்ணா!  துரியோதனன் அதர்மம் புரிந்தவன்  அல்லவா! மன்னரான திருதராட்டிரரும் அமைதிகாத்து துரியோதனனின் அதர்மத்திற்கு துணை நின்றார். அதர்மம் புரிபவன் நாட்டை நல்வழியில் நடத்துவானா? எவ்வாறு  அதர்மம்  நாட்டின்  முன்னேற்றத்திற்கு  உதவும்? மக்களை  அதர்மம் சூழாதா?" என்றான்.

"அப்படியும் விட முடியாது! அது நாம் புரியும் அதர்மமாகும்.  தர்மம் வென்றாக வேண்டும். யுத்தம் இல்லாமல் தர்மம் நிலைக்க நாம் என்ன  செய்யலாம்? அர்ஜுனா, உனக்கு ஏதேனும் வழி  தெரிந்தால் சொல்லேன்!",என்று அப்பாவியாக கிருஷ்ணன் தனது   லீலையை தொடங்கினார்.  

"மாதவா! யுத்தம் வேண்டாம். கௌரவர்களை அழிக்க என் வில் போதுமே!அதர்மம்  புரியும்   கௌரவர்களை,முதலில் அந்த துரியோதனனை என் அம்பு மழையில் வேரோடு சாய்ப்பேன்.", என்று கூறிய அர்ஜுனனை பெருமையுடன்  திரௌபதியும் ஏனைய பாண்டவர்களும் பார்க்க, "அதுவும் சரிதான். நீ   ஒருவன் போதுமேபீமன் கூட தேவையில்லை. என்ன பீமா?நான் கூறுவது சரிதானே?",  என்று   கிருஷ்ணன் தன் லீலையினுள் பீமனை இழுத்தார்.

 "நான் கூறுவதை கேளுங்கள்.  நீங்கள் தூது செல்லவும் வேண்டாம்யாரும் துரியோதனனிடம் கெஞ்சவும் வேண்டாம். யுத்தமும் வேண்டாம். என் கதாயுதம்  போதும். அந்த துரியோதனனை துவம்சம் செய்துவிடுகிறேன். பின் தர்மர் மன்னனாவார்!உலகில் தர்மமும் நிலைக்கும். என் துணைக்கு அர்ஜுனன் கூட வேண்டாம்.", என்ற பீமனை நோக்கி புன்னகைத்த கிருஷ்ணன், தன் பார்வையை நகுலன் பக்கம்  திருப்ப, சுதாரித்துக் கொண்ட நகுலனோ, "என்னை  எதும் கேட்காதீர்கள்.  அண்ணன்களுக்கு எது சந்தோஷமோ,  திரௌபதிக்கு எது நிம்மதி தருமோ அது போதும் எனக்கு. எனக்கென்று  ஏதும்  இல்லை.",  என்று  கிருஷ்ணனின் லீலையிலிருந்து தப்பித்துக் கொண்டான். 

நகுலனை புரிந்துகொண்ட கிருஷ்ணனும் புன்னகையுடன்,"சஹாதேவா! ஏன் இந்த மௌனம்?   நீ கூற ஏதும் இல்லையா? உனக்கும் அண்ணன்கள்  நிம்மதி தானா?" என்றார்.

சஹாதேவன் மாயவனை அறிந்தவன். அவனா மாதவனின் லீலையை அறியாதவனாய் இருப்பான்!? அதை  உணர்ந்தவனாய் மாயவனை பார்த்து புன்னகைத்து ,"கிருஷ்ணாயுத்தம் நடக்காமல்  இருக்க என்னிடம் வழி ஒன்று இருக்கின்றதுஆனால், உனக்கோ யுத்தம் நிச்சயம் நடந்தாக வேண்டும். அதிலிருந்து நீயும் மாறமாட்டாய். மாற எண்ணுபவர்களையும் எப்படியும் உன் பக்கம் மாற்றி விடுவாய்பின் எதற்கு இந்த கேள்வி?",என்றான்.   

"சஹாதேவா! என்னைப் பற்றி என்ன நினைக்கின்றாய் நீ??  நானா யுத்தம் நடத்த முயற்சிக்கிறேன்! என்றால்பின் நானே  அமைதி தூது  செல்வேனா ? என்ன இது? நீயும் கூட பழியை  என்  மேல்போடுகிறாயே! ஹ்ம்ம், நான் என்ன செய்ய? என்  நிலைமை  அப்படி.  பச்ச்", என்று அப்பாவியாய்  தன் மேல் தானே பரிதாபப்பட்டுக் கொண்ட  கிருஷ்ணன் , "சரி   விடு.  உன்னிடமுள்ள வழியைக் கூறு.  எல்லோரும்  சம்மதித்தால்   எப்பாடுபட்டாவது நீ கூறுவதை  நானே முன்னின்று  செயல்படுத்துவேன்.  சம்மதம் தானே?  சொல் உன் வழியை."என்றான். 

 கிருஷ்ணன் வார்த்தைகளில் உள்ள அர்த்தத்தைப் புரிந்துகொண்ட சஹாதேவன் சிரித்து கொண்டே,  "ஆக, நான் கூறுவதற்கு யாரும் சம்மதிக்க மாட்டார்கள். யுத்தம் நடக்கும். 
அதானே! சரி, கூறுகிறேன். நான் கூறுவது படி செய்தால் யுத்தம் நடக்காது. உலகில் தர்மமும் நிலைக்கும் ஷத்ரியர்கள் மட்டுமல்ல, மக்கள்  அனைவரும் தர்மத்தின் வழி நடப்பர். 
அதற்கு கௌரவர்களும் பாண்டவர்களும் தங்கள் பட்டங்களை துறந்து  திரௌபதியுடன் தங்கள் காலம் முடியும் வரை காட்டில் சென்று வாழ வேண்டும். திரௌபதியின் சபதம் நிறைவேற வேண்டுமென்றால் துச்சாதனன் இறக்க வேண்டும். அதுவும் கூட கிருஷ்ணனின் சூழ்ச்சியால் 
யுத்தத்திற்கு வழி வகுக்கும். ஆக,  திரௌபதிக்கு தன் காலம் முடியும் வரை  கூந்தல்  இருக்கக்கூடாது.  முடி இறக்கி, மொட்டை அடிக்க வேண்டும். 
கர்ணன் நாடாள வேண்டும்கர்ணன் நீதி தவறாதவன். நேர்மையானவன்.  தர்மத்தின் வழி செல்பவன். மேலும், நாட்டையும் நல்வழியில் நடத்திச் செல்வான். எக்காலத்திலும் அவன் அதர்மம்  புரிய மாட்டான் என்பதை இவ்வுலகில் யாரும் மறுக்க முடியாது. இறுதியாகமுக்கியமானதும் கூட.  இதைத் தான்  முதலில் செய்யவேண்டும் நான் கூறியவற்றை நடக்காமல் தடுக்க, யுத்தம் நடக்க வேண்டுமென்று கிருஷ்ணன்  ஏதேனும் சூழ்ச்சி புரிவான்எனவே,அவனை ஒரு அறையில் கட்டிப்போட்டு அடைத்து வைக்க வேண்டும். யாரும் அவனைப் பார்க்க செல்லக் கூடாது. இவை  அனைத்தும் என்று நடக்கிறதோ, ன்றே தர்மம்  வென்று   விடும். அமைதியும் அன்பும் தர்மமும் உலகில் நிலைத்து நிற்கும்."என்றான்.

 அறையில் இருந்த அனைவரும் சஹாதேவனை வியப்புடன் பார்க்கவார்த்தைகளை தேட மறந்த அவர்கள் சிந்தனையை கிருஷ்ணனின் பலத்த சிரிப்பு கலைத்தது.
"எல்லாம்  சரி சஹாதேவா,  ஆனால் என்னை  கட்டிப் போட முடியுமா? யாரால் என்னை பிடிக்க முடியும் என்று சிந்தித்து தான் கூறினாயா நீ?",என்று வினவிய கிருஷ்ணனை நோக்கி, "என்னால் முடியுமே", என்ற சஹாதேவனை வியப்பு மாறாமல், இமைக்க மறந்த விழிகள் கொண்டு  ஏனைய பாண்டவர்களும் திரௌபதியும்  நோக்கினர்.

",உன்னால் முடியுமா! எங்கே ,என்னை  கட்டிப்போடு பார்க்கலாம்!", என்று கூறிய மாயவன், அவன் கூறிய வார்த்தைகள் காற்றில் கரையும் முன் மாயமானான்!

தன் லீலையினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்.      

  மாயவன் மாயமான நொடி முடிவதற்குள் துவாரகைமதுராபிருந்தாவன் என அனைத்து ஊர்களிலும் அனைவரும் மாயவன் கிருஷ்ணனைப் போன்றே தோற்றமளித்தனர். சஹாதேவனுக்கு  மாதவனின்  லீலை  புரிய, மறைந்திருக்கும் கிருஷ்ணனை தேடாமல்  தியானத்தில் அமர்ந்தான்.  ஆழ்நிலை  தியானத்தில்  மாதவனிடம் பூர்ண சரணாகதி அடைந்தான்.  தன்னிடம் சரணாகதி அடையும் அன்பர்களின்  அன்பிலும்,  அவர்களின் தூய்மையான பக்தியிலும் சரணடைந்து அவர்களின் நெஞ்சில்  என்றும் நீக்கமற குடிகொள்ளும் அனிருதன்,  பரமாத்மாவான கிருஷ்ணன் ஆயிற்றே! சஹாதேவனின்  சரணாகதியில் தானும் சரணடைந்தான்.

மறைந்திருக்க முடியாமல், மாதவன் தானாகவே முன்வந்து சஹாதேவனின் உள்ளத்தில் குடிகொண்டார். தன் தியானத்தின் பலனால் தன்னுள் இருக்கும் லீலாவிநோதனை  பச்சிளங் குழந்தையாய் பாவித்தான்.  தன் உன்னதமான அன்பில் குழந்தையாய் மாறிய மாயவன் கிருஷ்ணனை, தன் பாசக்கயிற்றால் கட்டினான். சஹாதேவனின் பக்தியில் தன் நிலை மறந்து குழந்தையாய்  மாறிய கிருஷ்ணனால் கயிற்றில் இருந்து விடுபட முடியவில்லை. 

  யுத்தம் காலத்தின் கட்டாயம் என்பதை முன்பே அறிந்த  சஹாதேவன், பின்  கிருஷ்ணனின்   வேண்டுதலின் பேரில் கிருஷ்ணனை விடுதலை செய்தான். தன் மீது சஹாதேவன் எப்பிறப்பிலும் மாறாத அன்பும் பக்தியும் கொண்டிருப்பதைக் கண்ட மாதவனும், மனம்  மகிழ்ந்து  ஆசிகளை   வழங்கினார்!  

P.S. : கிருஷ்ணன் திரௌபதியிடம் சஹாதேவனின் வழி பற்றியும்,அவள் விருப்பம் பற்றியும் கேட்க, திரௌபதி, தனக்கு நேர்ந்தது இனி இவ்வுலகில் நடக்காமல் இருக்க,அதர்மம் அழிய வேண்டும். எனவே யுத்தம் அவசியம் என்று கூறி யுத்தத்திற்கு வழி வகுத்தாள். 


No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...