February 15, 2018

Thirukolur Penpillai Rahasyam-38


அவன் மேனி ஆனேனோ திருப்பாணர் போலே
கலிகாலம் பிறந்து 343வது வருடமான துர்மதி வருஷம், திருச்சி அருகே உள்ள நிசுளாபுரி எனும் உறையூரில் திருப்பாணாழ்வார் தோன்றினார்.  வயலில்  பயிர்களுக்கு நடுவே தோன்றி திருப்பாணரை, பாணன் என்கிற குலத்தைச்(பண்ணிசைத்து பாடுபவர்கள்) சேர்ந்த தம்பதியினர் வளர்த்தால், இவர் திருப்பாணர்ஆனார். 

சிறுவயது முதலே, பெரிய பெருமாளிடம் ஞானத்தோடு கூடிய பக்தி இவருக்கு உண்டாயிற்று. தான் பாணர் குலத்தவர் என்பதால், கோயிலுக்குள் செல்லாமல், காவேரி தென்கரையில் நின்று கொண்டு  வீணையை மீட்டி பாடி பெருமாளை அனுதினமும் மகிழ்வித்தார்.

திருப்பாணரை கோவிலுக்குள் அழைத்து வர விரும்பிய ஸ்ரீ ரங்கநாதன், அதற்கும் வழி செய்தான். ஒரு நாள், என்றும் போல், திருப்பாணர் காவேரியாற்றின் கரையில் நின்று, தன்னிலை மறந்து, பெருமாளை எண்ணி பாடல் பாடிக்கொண்டிருந்தார். அப்போது பெருமாளுக்கு திருமஞ்சன தீர்த்தம் எடுப்பதற்காக  குடத்தை  எடுத்துக்கொண்டு லோகசாரங்க மாமுனிவர் அங்கு வந்தார். இவரைக் கண்டவுடன் தூரப்போஎன்றார். ஆனால், பக்தியில் தன்னிலை மறந்து பாடிக்கொண்டிருந்த திருப்பாணருக்கு அம்முனிவர் சொன்ன சொல் காதில் விழவில்லை. முனிவரும் கோபமுற்று ஒரு கல்லை எடுத்து  திருப்பாணர் மேல்  வீசினார். அந்தக் கல் இவர் நெற்றியில் பட்டு ரத்தம் வழிந்தது. பின்னர் சற்று நேரம் கழித்து மெதுவாக திருப்பாணாழ்வார் கண்விழித்துப் பார்த்தார். நடந்ததை தெரிந்து கொண்டார். ஏதும் கூறாமல், வழி விட்டுச் செல்ல, திருமஞ்சனத்திற்கான  தீர்த்தத்தை எடுத்துக்கொண்டு பெரிய பெருமாளின் சந்நதிக்குள் சென்றார் லோகசாரங்க மாமுனிவர். அங்கு பெருமாளின் நெற்றியிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்ததைக் கண்டு லோகசாரங்க மாமுனிவர் அதிர்ந்தார்.

திகைத்து நின்ற மாமுனிவரைப் பார்த்து, ‘‘என் அருமை பக்தனை இப்படி கல்லால் அடிக்கலாமா? என்னைக் குறித்து கானம் செய்து பக்தியில் திளைத்த யாவருமே என்  அடியார்கள் அல்லவா. அப்படிப்பட்ட திருப்பாணரை ஏன் கல்லால் அடித்தீர்!?’’- என்று கோபத்தோடு கேட்டார் பெருமாள்.

லோகசாரங்க முனிவர் மிகவும் வருந்தினார்.
பெருமாள் உடனே லோகசாரங்க மாமுனிவரிடம் பாணரைத் தம் சந்நதிக்கு அழைத்து வருமாறும், அவரை எப்படி அழைத்து வரவேண்டு மென்றும்  கூறி உத்தரவிட்டார். மறுநாள் காலை, எம்பெருமானின் நியமனத்தை சிரமேற்கொண்டு முனிவர் முதலில் திருக்காவேரியில் நீராடினார். கைகளை கூப்பிக் கொண்டே, வீணையுடன் பாடிக் கொண்டிருந்த  திருப்பாணரை நோக்கிச்  சென்றார். நேற்று நடந்ததற்கு மன்னிப்பு வேண்டி நின்ற லோகசாரங்க மாமுனிவர், திருப்பாணரிடம், ‘‘நம்பெருமாள் தங்களை  ஸ்ரீ ரங்கத்து கோவிலுக்குள் கொண்டு  வரவேணும் என்று அடியேனை நியமித்திருக்கிறார்’’ என்று விண்ணப்பம் செய்தார்.

பதறிப்போன திருப்பாணாழ்வார்,
தன்னுடைய குலத்தைக் கருதி, திருவரங்க பெருநகரை அடியேன்  எப்படி  மிதிப்பது என்று தயங்கி பின் வாங்கினார்.   லோகசாரங்க மாமுனிவர் உடனே - ‘‘அப்படியானால் அடியேனுடைய தோளின் மேல் எழுந்தருளும். நம்பெருமாளை தரிசிக்கலாம்! இது நம்பெருமாளின் கட்டளை!’’ என்றார்.

திருப்பாணாழ்வாரும் எம்பெருமாளின் நியமனமாக இருப்பதால் தட்ட முடியாமல் வர இசைந்தார்.
தனது திருத்தோள்களில் திருப்பாணரை  சுமந்து கொண்டு திருவரங்க கோயிலில் இருக்கும் அழகிய மணவாள திருமண்டபத்திற்குள்ளே புகுந்தார் முனிவர். திருப்பாணாழ்வாருக்கு நம்பெருமாள் தன்னுடைய திவ்ய மங்கள சொரூபத்தைக் காட்டியருளினார். திருப்பாணாழ்வாரும் திருவடி முதல் திருமுடிவரை பெருமாளைக் கண்ணாரக் கண்டு அனுபவித்தார்.

உடனேயே, ‘அமலனாதிபிரான்என்கிற திவ்ய பிரபந்தமாக தமது அனுபவத்தை உலகு உய்ய வெளியிட்டருளினார். இவர் அருளியது பத்து பாசுரங்களே
.

கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளங் கவர்ந்தானை
அண்டா கோனணி அரங்னென் னமுதினைக்
கண்ட கண்கள்மற் றொன்றினைக் காணாயே 

என்று பத்துப்பாசுரங்களையும் பாடிமுடித்தார். திருப்பாணாழ்வார் கடைசிப்பாகத்தில் அரங்கண் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்ற ஒன்றினைக் காணாவே என்ற இறுதி அடியைப்பாடி முடித்ததுமே அனைவரும் காணும்படி பெருமாளின் திருவடிகளில் சரணடைந்து, பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்தார்.

திருக்கோளூர் அம்மாள், “திருப்பாணாழ்வார் போல் பண்ணிசைத்து பெருமாளின் புகழ் பாடி, அவனருளைப் பெற்று, பெருமாளுடன் கலந்தேனா?”- என்று வினவுகிறார்.
========********========


avan mEni AnEnO thiruppANar pOlE

 Thiruppanzhwar is the eleventh in the line of the 12 azhwars who are known for their affiliation to Vaishnava tradition of Hinduism. He was found in a paddy field by a paanar community (a community of musicians and traditional song makers) couple in Uraiyur, near Srirangam. The childless pair cherished the child and fed him. Being a divine child, right from his childhood, as he belongs to a lowly caste in those days who are not allowed to enter into temples, he would stand an the southern side bank of River Cauvery on the other side of Sri Rangam Temple with a veena in his hand and sings the praises of Lord Ranganatha.

One day, Sage Lokasaranga came to the banks of Cauvery to fetch water for the temple. He saw Thiruppanazhwar there singing. He tried to attract his attention to ask him to move away while he fetched the water, but as Azhwar was immersed in devotion and in singing, the words of Lokasaranga did not reach him. So, Lokasaranga threw a stone at him to get his attention. The stone hit Azhwar's head and caused him to bleed. Azhwar then realized what was happening and stepped away quietly. Lokasaranga then returned to Srirangam and was taken aback on seeing blood oozing out from the forehead of the image of Ranganatha. The Lord asked him to apologize to the great devotee Thiruppanazhwar and bring him into Sri Rangam.

Lokasaranga returned to Azhwar and apologized to him for his conduct and requested him to come and see Lord Ranganatha. When Azhwar refused to set foot in Srirangam referring to his lowly birth, Sage Lokasaranga offered to carry him on his shoulders. As it was the Lord's command, Azhwar could not refuse.

When Sage Lokasaranga brought Azhwar in front of Lord Ranganatha inside the Srirangam temple, Azhwar Paanar experienced the bliss of Ranganatha and composed the Amalan Adhipiraan a poem describing the beauty from head to foot of Vishnu in ten verses. At the end of the ten pasurams, Azhwar disappeared from this world and attained the lotus feet of Lord Ranganatha.

He composed a total of ten pasurams, where he explains how humans should lead their life. His principal purport in them is: "Perumal is the principal supreme entity and our aims and aspirations should be to attain Him through total surrender to him signified by our placing all of ourselves at his lotus feet". One of his verses reads:

Kondal vannanaik kovalanai venney
Unda vayan en ullam kavarndhanai
Andar kon ani arangan en amudhinaik
Kanda kangal matronarinaik kanave

Meaning, I have seen the One whose color is like dark rain clouds. He is the one with the mouth that swallowed the butter of cowherds, He is the Lord of the devas, He is Lord Ranganatha, He is my nectar, my life! My eyes that have seen my Lord will not see anything else!
  
Thirukkolur Ammal is asking "Did I get the Lord’s divine grace and attain His divine feet like Thiruppanazhwar?"

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...