November 05, 2014

Being a Decision Maker!





வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் முடிவெடுக்கும் தருணம் உருவாகிறது.
நடக்கவேண்டிய நிகழ்வுகளுக்காக முடிவெடுக்க வேண்டியது அவசியமாகிறது.

அந்த முடிவும் தன்னுடைய தன்மையை வெளிப்படுத்துகிறது.

மானிடர் தம் வாழ்வில் எடுக்கும் முடிவு, இரண்டு விளைவுகளை விளைவிக்கும்.
நன்மையையும் உருவாக்கும்,.. அது தீமையையும் வாரி வழங்கும்.
அது வேரருக்கும் சக்தி படைத்தது.

இன்னல் ஒன்று தோன்றுகையில் மனமானது சஞ்சலமடைகிறது. வேதனை மனதை வியாபிக்கிறது.

முடிவெடுக்க வேண்டிய தருணம் யுத்தமாகிறது. மனித மனமானது யுத்த பூமியாய் மாறுகிறது.

இக்கட்டான சூழலைப் போக்கும் உபாயத்தை மானிடர் தேடுவதில்லை. மனதினை சாந்தப்படுத்துவதற்க்கே அவர்கள் முயல்கின்றனர்.

ஆனால் ஓடிக்கொண்டே உணவருந்த முடியுமா என்ன??
இயலாது,. யுத்த களமாய் மாறிய மனிதனின் மனதால் சுத்த முடிவை எடுக்க இயலுமா ம்ம்??

ஒருவன் தன்னுடைய வருங்கால முடிவை அமைதியான மனதோடு எடுத்தால் வரும் காலம் சிறப்பாகிறது.

அதே சமயம் மனதை அமைதியடையச் செய்ய வருங்கால முடிவை ஒருவன் முடிவை எடுத்தால்,, அவன் வருங்காலம் புதிராய் மாறி முட்கள் நிறைந்த விருட்சமாகிறது.

தாம் எடுக்கவுள்ள முடிவு எது????

Courtesy :  Mahabharat,Star Vijay

No comments:

Post a Comment

Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...