October 09, 2015

கடவுளும் பக்தியும்!

    

         யார் கடவுள்எப்படி கடவுளை வணங்க வேண்டும்எப்படி கடவுளை எளிதில் அடைய முடியும்இப்படி பல கேள்விகள் மனிதனின் மனதில் புகுந்து மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகப்படுத்துகின்றன. உண்மையில் இக்கேள்விகள் கடவுளை அடைய வழி வகும்மேயானால் எவ்வழியும் சம்மதமே என்று அறிந்து கொள்ளலாம். அவ்வாறு அறிந்து கொண்டவராயின் கடவுளையும் அறிந்து கொண்டார்கள் என்று புரிந்து கொள்ளலாம். மனிதன் கடவுளிடம் பக்தி கொண்டவனாய் இருந்தாலும் கடவுளை அடையலாம். கடவுள் மீது அன்பு கொண்டவனாய் இருந்தாலும் கடவுளை அடையலாம். கடவுள் இல்லை என்று கூறுவானேயானாலும் எல்லா உயிர்களும் ஒன்றென கருதி வாழ்பவனும் கடவுளை அடையலாம். பக்தியும் அன்பும் ஒன்றென கூற முடியுமா? உண்மையில் பக்தியின் ஒரு வெளிப்பாடு தான் அன்பு. அன்பினை காட்டும் விதம் தான் பக்தி. பக்தியில் சிறு மரியாதை கலந்திருப்பதால் கடவுளை ஒரு அரியாசனத்தில் அமர்த்தி சற்று மதிப்புடனே காண்பர். அன்பு கொண்டவர்கள் தன்னுள் ஒருவனாய் கடவுளை காண்பர். உண்மை அறியாத மனிதனுக்கு தான் அது மாறுபட்டு தெரியும். ஆனால் கடவுளுக்கு எல்லாம் ஒன்றே.      
                 பக்தியின் மகத்துவத்தினை உணர்த்த மார்கண்டேயனுக்காக யமனை காலால் உதைத்த அதே ஈசன் தானே அன்பின் வெளிப்பாடாய் தன் மீதே கால் வைத்த கண்ணப்பனையும் ஏற்றுக்கொண்டான். கடவுளைக் காட்டிலும் கடவுள் மேல் கொண்டுள்ள பக்திக்கு சக்தி அதிகம். அவ்வளவு ஏன்? உலகிலுள்ள அனைத்து சக்தியின் திருவுருவமாய் விளங்கும் அந்த ஆதி பராசக்தியினைக் காட்டிலும் பக்தி பெரியது. கஷ்டம் வந்த பின் தான் நாம் கடவுளை நினைக்கின்றோம். நல்லது ஒன்று வாழ்வில் நடக்கும் போது அவனை சீண்ட கூட மாட்டோம் என்று எண்ணி வருந்துபவர்கள் அதிகம்.உண்மை தான். நாம் நமக்கு கஷ்டம் நேரும் போது தான் கடவுள் என்று ஒருவன் இருப்பதை உணர்கின்றோம். உணர்ந்து கொள்வதில் தப்பில்லையே!
        நோய் என்று ஒன்று வந்த பின் தானே மருத்துவரைப் பற்றி நாம் எண்ணுகிறோம். கஷ்டம் என்பது அவன் நம்மை சோதிக்கும் நேரமல்லவா. அவனுக்குத் தானே வினை எனும் நோய் ஆற்றும் மகத்துவம் தெரியும். ஆக, சங்கடம் நேரும் பொழுது அவனைப் பற்றிக்கொண்டீர்கள் என்றால், நீங்கள் சரியான மருத்துவரை கண்டு கொண்டுவிட்டீர்கள் என்று எண்ணி நிம்மதி கொள்ளுங்கள்.
       மனித வாழ்வானது கர்மத்தினை அடிப்படையாக கொண்டது. கர்மத்தின் பயனாய் பலன்களை அனுபவிக்கும் நேரம் மனம் ஆனந்தம் கொள்கின்றது. அதே நேரம்,செய்த வினையின் விளைவாய் அனுபவிக்க வேண்டிய சங்கடங்களை ஏற்றுக் கொள்ளும் மனவலிமையும் நாம் பெற்றிருக்க வேண்டும். கடவுளின் விருப்பமும் அதுவே! கர்மத்தின் வழி நடக்கும் சம்பவங்களையே மனிதன் விதி என்று கூறுகிறான். காற்றில் நறுமணத்தை சில நேரம் நுகர்வோம்சில நேரம் துர்நாற்றத்தை நுகர்வோம். அது காற்றின் வாசனை அல்ல. காற்று கடந்து வரும் பொருளின் மனம். அது போலவே மனிதப் பிறவியும். இங்கு காற்று ஆன்மா எடுக்கும் பிறவிகள். பொருள், நாம் செய்த கர்மங்கள். நறுமணமும் துர்நாற்றமும் ஆற்றும் செயல்கள்  பொருத்து மாறுபடும். வாழ்வில் சுகமும் துக்கமும் அவ்வாறே. நல்லவை செய்ததால் வாழ்வில் நறுமணம் நிறைந்த சுகமும், தவறு செய்ததால் துர்நாற்றம் என மனம் நினைக்கும் துக்கமும் நிகழ்கின்றன. ஆனால், மனித மனமானது ஆற்றும் செயல்கள் அனைத்திலும் பயன் மற்றும் லாபம் பற்றி மட்டுமே எண்ணுகின்றது. அதன் விளைவாகவே மனிதனின் வாழ்வினில் மனக்குறை என்று ஒன்று நிறைந்து காணப்படுகிறது. மனக்குறை ஏமாற்றத்தின் வெளிப்பாடு. எண்ணியவை எண்ணியவாறு நடக்காமல் போவதால், திட்டமிட்டபடி செயல்கள் நடக்காமல் போவதால், ஆசைகளின் விளைவாய் காணும் கனவுகள் தகர்ந்து போவதால், பிறர் மீது எதிர்பார்ப்பு இருப்பதால், சமுதாயத்தின் முன்னும் உறவினர்களின் முன்னும் அவமானப்பட்டு நிற்கும் நிலை என்று கருதுவதால் மனிதனின் வாழ்வில் மனக்குறை நிறைந்துள்ளது. வாழ்வின் சில தருணங்களில் இன்பம் நிறைந்து இருப்பது எப்படியோ அப்படியே சில தருணங்களில் வலி ஏற்படுவதும் விதிப்பயனே. உண்மையில், சங்கடம் நிறைந்த தருணங்களில் நாம் கடவுளை எண்ணுகின்றோம். சங்கடம் நேரும் பொழுது இறைவன் நம்மை சோதிக்கின்றான் என்பதே உண்மை. நம் அருகில் நின்று நாம் எடுக்கும் முடிவுகளை பார்த்துக் கொண்டிருக்கின்றான். தர்மசங்கடமான தருணங்களிலும் இறைவனிடம் வேண்டுதல் வைக்கும் மனம், அவனை பிராத்திக்க மறந்து விட்டது என்பதே அவன் வருத்தம்.
        வாழ்வில் சங்கடம் நேரும் பொழுது இறைவனிடம் நாம், அச்சங்கடம் தீர வழி கேட்கின்றோம். தீர்ந்தால் போதும் என்றா வேண்டுகின்றோம்!? நமக்கு சாதகமாய்,நமக்கு பயனளிக்கும் விதமாய், நாம் நம் உறவினர்கள் மற்றும் சமுதாயத்தின் முன் பெருமையாய் நிற்கும் விதமாய் அப்பிரச்சனை முடிய வேண்டுகின்றோம்! மீண்டும் அது போல் ஒன்று நமக்கு நிகழாமல் இருக்க வேண்டுகின்றோம். நடப்பவை அனைத்தும் கர்மத்தின் பயன் என்பதை உணர மறந்து விட்டோம். இறைவனை வேண்டும் பொழுது நமக்கு வேண்டியவற்றை வேண்டுகின்றோம். மனித வாழ்வில் நிகழும் அனைத்திற்கும் காரணம் அவனவன் ஆற்றும் கர்மங்களே என்பதை உணர மறுக்கின்றோம். ஆன்மா செய்த பாவத்தின் வினையை அனுபவித்தே ஆகவேண்டும். அதுவே தர்மம். என்றால், பரிகாரம் செய்வதால் செய்த பாவம் இல்லை என்று ஆகிவிடுமா? இல்லை, அவ்வினைப் பயனை அனுபவிக்க தேவை இல்லாமல் போய் விடுமா?? உண்மையில்,பரிகாரம் என்பது செய்த பாவத்தினை உணர்ந்து அக்கர்ம வினையினை ஏற்கும் மனபலத்தினை ஆண்டவனிடம் வேண்டி, இனியோரு முறை மறந்தும் அப்பாவத்தினை புரியாமல் இருக்க அவனிடம் சரணடைவதே ஆகும். ஆனால் மனித மனம் வேண்டுவது சமுதாயத்தின் முன் நிமிர்ந்து நிற்க அந்தஸ்தும், செயல்கள் புரிய பலமும், செய்யும் செயல்களின் பலன் மட்டுமே.
          செல்வம், சுற்றம், அறிவு, உடல் பலம் என நாம் கேட்கும் இவை அனைத்தும் இப்பூவுலகில் நம்மை காத்துக்கொள்ள என்றாலே,"நம்மை காப்பவன் இறைவன்" என்ற எண்ணம் மனதில் புதைந்து, மறைந்தும் போய்,"நான்" என்கிற எண்ணம், அகங்காரம் முன்னிற்பதாக தானே அர்த்தமாகின்றது! உண்மையில் பிராத்தனை என்பது நம் மனதில் குடி கொண்டுள்ள அனைத்து கவலைகளையும், பாரத்தையும், ஐயத்தினையும், ஆசைகளையும் இறைவனின் பாதங்களில் சமர்பிப்பதே அல்லவா! அவனே கதி என்று செல்வதல்லவா! இறைவனே கதி என்று செல்லும் போது அவன் ஆணையை ஏற்க வேண்டுமல்லவா! அவன் ஆணையானது ஆத்மா அதன் கர்மத்தின் வினைகளையும் பயன்களையும் இப்பூவுலகில் முடித்து விட்டு விரைந்து அவனடி சேர உதவி புரியும் விதமாகத் தானே இருக்கும்! மனிதன் மனிதனின் திறமையை அறிந்துகொள்ள பரிட்சிப்பதைப் போல் இறைவனும் நம் பக்தியினை அறிந்துகொள்ள பரிட்சிக்கின்றான். என்றால்,சங்கடம் நேரும் போது இறைவனை உருகி உருகி வேண்டுவது நாம் தவறான வழியில் கடவுளை நோக்கி செல்வதாய் அர்த்தப்படுமா??
           "அழிவு நெருங்கும் போது அறிவீனமும் பற்றிக்கொள்ளும். அப்பொழுது என்னை நினைக்கவும் கூட மனிதன் மறந்து போவான். அப்படி என்றால் அவ்வாத்மா மீண்டும் பூமியில் பிறப்பெடுத்து விதியின் வலையில் சிக்கும் நிலை ஏற்படும். என்னை மனிதன் நினைக்காவிடிலும் அவன் நலனையே எண்ணிக் கொண்டிருக்கும் நான் அதற்கு தீர்வு காண வேண்டும். மனிதன் பலம் கொண்டிருந்தாலும் என்னை நினைக்க ஒரே வழி, சங்கடம். தர்மசங்கடம் நேரும் நேரத்தில் அவன் நடந்து கொள்ளும் விதம் தான். உண்மை நிலை அறிந்து என்னை அப்பொழுது நினைப்பவன் தன் இறுதி நாளில் என்னை நினைக்காவிடினும் அவனை நான் இரட்சிப்பேன்.",என்பதே கடவுளின் கருணையுள்ளம். அதை அறிந்து கொள்ளாத மனிதர்கள் கஷ்ட காலங்களில் கடவுள் இல்லை என்பர். ஆனால்,சங்கடம் நேரும் பொழுது அவனை பற்றுபவர்களை அவன் அனைத்துக் கொள்கிறான்.
           "என்னை சேரும் வழி எதுவாகினும் பரவாயில்லை. என்னை சேர வேண்டும் என்று மட்டும் எண்ணம் கொண்டு, நானே பரமாத்மா என்றுணர்ந்து என்னிடம் நீ சரணடைந்து விட்டால் உன்னை தர்ம வழியில் நடத்திச் சென்று முக்தி தருவது என் கடமை.", என்கிறார் பரம்பொருளான ஸ்ரீமன்  நாராயணன். என்றால் இறைவனைப் பற்றி சிந்திக்காத ஆத்மாவின் நிலை? அதற்கும் ஒரு திட்டம் வைத்திருப்பான் மாயவன். இக்கருத்தையே "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா", என்ற வரிகளின் மூலம் நமக்கு உணர்த்துகிறார் ஆண்டாள். மலர்களில் தேனை வைக்க அவன் மறக்கவில்லை. கனிகளில் சுவையை வைக்க அவன் மறக்கவில்லை. இப்படி உலகின் அனைத்து உயிர்களிடத்திலும் வேறுபாடில்லாமல் அன்பு வைத்திருப்பவன் நம்மை எப்படி சங்கட காலங்களில் மறந்துவிட்டான் என்று மனம் எண்ணலாம்?

               கடவுள் ஒன்றே உண்மை. மற்றவை அனைத்தும் மாயை. இதையே மதங்கள் போதிக்கின்றன. என்னிடம் என்னுடையது என்று மனிதனுக்கு எதுவும் இல்லை. "எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?", என்று அவ்வுண்மையை நம்மிடம் ஸ்ரீ கிருஷ்ணன் கீதை மூலம் கேட்டு உணர்த்துகிறான். "ஏழையாகவே நீர் இறைவனைச் சந்திக்க வேண்டும். செல்வந்தனாக சந்திக்காதீர்.",என்று கூறுகிறார் நபிகள் நாயகம். வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் வரை மாயை என்று ஒன்று இருந்து கொண்டே இருக்கும். இதிலிருந்து விடுபட இறைவனைச் சரணடைய வேண்டும். பலனை எதிர்ப்பார்த்து மரம் நிழலும் பழமும் தருவதில்லை. பலனை எதிர்ப்பார்த்து காற்று வீசுவதில்லை. பலனை எதிர்ப்பார்த்து மேகம் மழை பொழிவதில்லை. பலனை எதிர்ப்பார்த்து நிலம் நம்மை தாங்குவதில்லை. அத்தகைய வாழ்வை மனிதன் வாழ வேண்டும், பலனை எதிர்ப்பார்த்து எக்காரியமும் செய்யக்கூடாது என்பதை மனிதன் எக்காலத்திலும் மறக்கக் கூடாது என்பதற்காகவே நம் முன்னோர்கள், "மனிதன் வாழ நிலம், நீர், காற்று, உணவு இன்றியமையாதது" என்றார்கள். பலனை எதிர்ப்பார்க்காது தர்ம வழியில் செல்லும் மனமானது நல்வழியில் மனிதனை கொண்டு செல்லும். இறைவனிடம் சரணாகதி அடையும் மனம் இதை உணரும். சுகம் கிடைக்கும்.
             இனியோரு சங்கடம் வாழ்வில் நிகழும் பொழுது, இறைவனிடம் வேண்டாமல், அவன் நம் அருகில் இருக்கின்றான் என்பதை உணருங்கள். அவன் அருகில் இருந்தால் சங்கடமும் சுகமல்லவா! அவன் அருகிலேயே இருப்பான் என்றால் சங்கடம் தான் நேருமா?  "நீ அருகினில் இருக்க எனக்கென்ன மனக்குழப்பம்? சர்வமும் உன் பாதத்தில் வைத்துவிட்டேன்", என்று சரணடையுங்கள். மனம் மகிழும் இறைவன், வாழ்வின் போராட்ட காலங்களில் நம் கரம் பிடித்து நம்மை தர்மவழியில் கொண்டு செல்வான், நாம் கலைத்து போய் இருக்கும் நேரத்தில் நம் தலை சாய்க்க தன் தோள் கொடுப்பான்.
                           "தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா!
                            மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே!"
                                                                                                                     - பகவத்கீதை 7.14
  

June 09, 2015

மாயவனின் மாயலீலை!

மாயை. மூவுலகிலும் எளிதில் புரியாதது ஒன்று உண்டென்றால் அது மாயை மட்டுமே. மாயை, எளிதில் உணரும் உண்மை இல்லை. உலக வாழ்க்கை மாயை. இவ்வுலகம் மாயை. மனிதனின் சந்தோஷம், துக்கம், ஆசை, விருப்பு, வெறுப்பு, பற்று, சொந்தம், உறவு அனைத்தும் மாயை. இதை உணர்ந்தவன் கடவுளை அறிந்தவன் ஆவான்.

 மனிதர்களுக்கு மட்டுமல்ல,முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் கூட மாயை பற்றிய சந்தேகங்கள் இருந்த காலம் அது. நாரதர் புது முனிவராய் பதவியேற்ற சமயம். நாரதருக்கும் மாயை பற்றி சந்தேகம் எழுந்தது - "உலக இன்பத்தில் மனிதன் மூழ்கியுள்ளான் என்றால் என்ன அர்த்தம்? இன்பத்தில் திளைப்பது குற்றமா? மாயை பற்றிய சித்தாந்தம் ஏன் மனிதனுக்கு எளிதில் எட்டாக்கனி என்கின்றனர்? மனித வாழ்வு எளிதல்லவா! மாயை என்று என்ன உள்ளது?"  முனிவர்களுக்கு சந்தேகம் என்றால் குரு ஸ்தானத்தில் இருந்து அவர்களின் சந்தேகங்களை தீர்க்க வேண்டியது கடவுளின் கடமை. அப்பாவி நாரதர், ஸ்ரீமன் நாராயணனிடம் போய் தான் தன் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்க வேண்டுமா!

     "பிரபோ! மாயை என்பதன் அர்த்தம் யாது?", என்றார் நாரதர், நிம்மதியாக சென்று கொண்டிருக்கும் தன் வாழ்க்கை ஒரே ஒரு கேள்வியினால் மாறப்போவதை அறியாமல்!        "இந்த உலகம், உலக வாழ்க்கை, உலக வாழ்க்கையின் ஆதாரம் என மனிதன் எண்ணும் சந்தோஷம், பணம், சொந்தம், ஆசை அனைத்துமே மாயை நாரதா! வாழ்க்கை நிரந்தரம் என எண்ணும் எண்ணமும், உலகம் தன் கையில் உள்ளது என்ற எண்ணமும் மாயை. இதை உணர்ந்தவன் என்னை அறிந்தவன் ஆவான்.", என்ற நாராயணன் ஒன்றும் புரியாமல் நின்றிருந்த நாரதரை  உற்று நோக்கிவிட்டு,"உனக்கு இன்னும் விளக்க வேண்டும் போல் தெரிகின்றதே! சரி,அந்த ஆற்றில் இருந்து நான் பருக நீர் கொண்டு வாரும். உமக்கு மாயை பற்றி விளக்குகிறேன்." என்றார். 


          காரணம் இல்லாமலா ஸ்ரீமன் நாராயணன் நாரதரை அனுப்பி வைத்திருப்பார்நாரதர் ஆற்றில் நீர் எடுத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். இதமான மாலை நேரம்.

எந்நேரமும் இனிதே ஆனந்தமாய் பாடிக்கொண்டிருக்கும் நீரலைகள் பகலவனின் துணை கொண்டு தங்கநிற ஆடையில் பிரகாசத்துடன் ஆடிக்கொண்டு செல்ல, கிளிகளும் குயில்களும்,காக்கைகளும் தங்களின் நாள் இனிதே முடிவடைந்ததை எண்ணி ஆனந்தமாய் பாடிப் பறந்து செல்ல, ஆற்றுப்படுகையில் பூத்திருக்கும் மரங்களுக்கு வலிக்காமல் இருக்க இதமாய் வருடியவாறு சென்ற காற்று நாரதரையும் சீண்டி விட்டுச் செல்ல, பூலோக இயற்கையின் அழகில் மெய்மறந்து கானம் பாடிக்கொண்டு ஆற்றங்கரையில் மெதுவாக நடந்து சென்று கொண்டிருந்தார் நாரதர். பச்சைநிறப் புல்வெளி, தங்கநிற நீரலைகள், பூக்களின் மணத்தை திருடிக் கொண்டு செல்லும் காற்று என பூலோக அழகில் தன்னை மெதுவாய் தொலைத்துக் கொண்டிருந்த நாரதர் தன் கண் எதிரில் தோன்றிய காட்சியில் முழுதாய் தொலைந்தார்.
       நிலவினில் செதுக்கியது போல் அழகே உருவாய் ஒரு பெண்ணைக் கண்டார். நாரதருக்குள் இப்பொழுது புதிதாய் ஒரு புயல் வீச தொடங்கியது. மனதில் ஒரு புதிய ரீங்காரம்! காதல்! தன்னை மறந்தார். தன் நிலை மறந்தார். உண்மை மறந்தார். நாரதருக்கு முன்பை விடவும் ஆற்றங்கரை இப்பொழுது இன்னும் அழகாய் தெரிந்தது! பன்னீர் ஊற்றி வளர்த்த பூவினில் இருந்து வரும் நறுமனத்தினைப் போல் ஒரு வாசம் காற்றில் கலந்திருப்பதைப் போல் உணர்ந்தார். நேரே அப்பெண்ணிடம் சென்று தன்னை மணந்து கொள்ளுமாறு கெஞ்சினார். அப்பெண்ணும் அவளின் பெற்றோரும் சம்மதிக்க, நாரதருக்கு திருமணமும் நடந்தது.

         தன் காதலைக் கண்ட அழகிய ஆற்றங்கரையிலேயே ஒரு குடில் அமைத்து அதில் இன்பமாய் வாழ்ந்தார். நாட்கள் வாரங்கள் ஆகின. வாரங்கள் மாதங்கள் ஆகின. மாதங்கள் வருடங்களும் ஆகின. நாரதரின் வாழ்வில் இன்பமும் காதலும் கூடிக்கொண்டே சென்றன. அவர்களுக்கு அழகிலும் அறிவிலும் சிறந்த மகன்களும் மகள்களும் பிறந்தனர். நாரதர் பரமாத்மாவின் குவளை நீரைப் பற்றி முற்றிலும் மறந்து விட்டார். வருடங்கள் பல கடந்து சென்றன. நாரதருக்கு பேரப்பிள்ளைகளும் பிறந்துவிட்டன. மனிதனின் வாழ்வில் அனைத்து தருணத்திலும் காதலும் இன்பமும் நிறைந்து இருக்குமாயின் அவ்வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு அழகாய் இருக்குமோ அப்படியொரு வாழ்வை நாரதர் வாழ்ந்து கொண்டிருந்தார். காதல் இன்பத்தில் மூழ்கி இருந்த நாரதரின் வாழ்வில் புயல் வீச ஆரம்பித்தது. 
இடி மின்னலுடன் ஈரேழு நாட்களாய் அடை மழை. விடாது பெய்யும் மழையின் விளைவாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுக்க நாரதரின் குடிலும் ஆற்றின் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்தது. வருணதேவனுடன் வாயுதேவனும் கைகோர்க்க, வெள்ளத்தின் மிகுதியாலும் காற்றின் பலத்தாலும் நாரதரின் குடில் முழுதும் இருந்த இடம் தெரியாமல் நீரோடு நீராய் கரைந்து சென்றன. ஆற்று வெள்ளத்தில் தன் காதல் மனைவி, தன் பிள்ளைகள், தன் பேரப்பிள்ளைகள் என தன் வாழ்வாதாரம் அனைத்தையும் இழந்தார். ஆற்று வெள்ளத்தில் மூழ்க இருந்த நாரதர், "யாராவது காப்பாற்றுங்கள்!", என்று கதறியபடி தத்தளித்துக் கொண்டிருக்க, ஸ்ரீமன் நாராயணன் உடனே தன் இருகரம் நீட்டி நாரதரை மீட்டார்.
உயிர் பிழைத்த நாரதர் வெள்ளத்துடன் போரிட்டதில் சோர்ந்தும் மனப் போராட்டத்தில் இருந்து மீளாமல், பேச வார்த்தையின்றி, சொந்தங்களை இழந்ததில் சோகத்துடன், உயிர் வாழ விருப்பமுமின்றி அமர்ந்திருக்க, அமைதியினைக் கலைத்தார் புருஷோத்தமன். "நாரதா! எங்கே என் குவளை நீர்?"
           
"பார்வையில் வெறுமையை நிரப்பி இருந்த நாரதரின் விழிகள் இப்பொழுது புருஷோத்தமனை கோபத்துடன் நோக்கின. "எங்கே என் குவளை நீரா??!?? புத்தி பேதளித்துப் போய் விட்டதா உமக்கு??? நான் இருக்கும் நிலை அறிவாயா நீ??என் மனநிலை அறிவாயா நீ??? நான் அனைத்தும் இழந்து நிற்கின்றேன்!! என் காதல் மனைவியை இழந்து பிணமாய் நிற்கிறேன்! என் பிள்ளைகளை,பேரப்பிள்ளைகளை இழந்து வாழ்வற்று நிற்கிறேன்! நீ உருவாக்கிய வெள்ளத்தில் முற்றும் இழந்து உன் முன் வெறுமையாய் நிற்கின்றேன். என்னைப் பார்த்து, இந்நேரத்தில், எங்கே என் குவளை நீர் என்கிறாயே!!! இரக்கம் இல்லாதவனே!!! உன் மனதில் என் நிலைக்காக சிறிதும் அனுதாபம் இல்லையா?? அவ்வளவு கல் நெஞ்சம் கொண்டவனா நீ?? அது சரி,உன் மனைவியையோ பிள்ளைகளையோ இழந்திருந்தால் தானே என் நிலை புரியும் உனக்கு! உன் குடும்பத்தை மட்டும் பத்திரமாக பார்த்துக் கொள்பவன் அல்லவா நீ! மற்றவர் பற்றிய கவலை உனக்கில்லை. எதற்க்கெடுத்தாலும் காலத்தின் மீதோ விதியின் மீதோ பழியை போட்டுவிட்டு நீ நிம்மதியாய் இருந்துவிடுவாய்!" - நாரதர் தன் கோவக்கனைகளை ஆத்திரமும், அழுகையும் கலந்து நாராயணன் மீது தொடுக்க, அவரை அமைதியாய் நோக்கின நாராயணனின் அலர்க் கண்கள்.
"அமைதி கொள் நாரதா! சற்றே சிந்தித்துப் பார். எங்கிருந்து உன் குடும்பம் வந்தது? எங்கிருந்து உன் வாழ்கையும், உன் சொந்தங்களும் வந்தன? நன்றாக சிந்தித்துப் பார். அவை அனைத்துமே என்னிடம் இருந்து வந்தவை. நான் மட்டுமே உண்மை. இந்த மாயை நிறைந்த மூவுலகிலும் நான் மட்டுமே நிரந்தரம். உன்னிடம் இருப்பதும், இருந்ததும் என்னிடம் இருந்து வந்தவை. உனக்கு என்று மாறாமல் நிரந்தரமாய் நிற்பவன் நான் ஒருவனே! மற்றவை அனைத்தும், கானல் நீரைப் போன்றவை. உன்னிடம் இருந்தவை எதுவும் நிரந்தரம் இல்லை, என்னைத் தவிர. உன்னிடம் கொடுக்கப்பட்டவை அனைத்தும் காலத்தினைப் போல், உன் கையை விட்டு நழுவிவிடும். உன் உயிர் உட்பட. உலகத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் மனித வாழ்க்கையும், மனிதனின் வாழ்நாட்களின் இன்பமும் துன்பமும் வசந்த கால மலரைப் போன்றது. எவ்வளவு மனம் நிறைந்ததாய் இருந்தாலும் அதன் காலம் முடிந்ததும் வாடித் தான் போக வேண்டும்.  இதை அறிந்தவன் நீ. என் நாரதனுக்கு இது தெரியாமல் இல்லை. இருந்தும் உலக வாழ்கையும் அதன் இன்பங்களில் உள்ள மோகமும் உன்னை வசியப்படுத்திவிட்டன. என் பரம பக்தனாகிய நாரதன் கூட என்னை மறந்துவிட்டான்! உன் சந்தோஷமும், உன் வாழ்க்கையும்,உன் குடும்பத்தாரின் நிம்மதியும் மட்டுமே உனக்கு உலகம் என்றானது. உலகில் நடக்கும் மற்றவை எதுவும் உனக்கு ஒரு பொருட்டல்ல என்பது போல் வாழ்ந்தாய். லெளதீக வாழ்வு ஒன்று மட்டுமே நிரந்தர இன்பம் தரும் என்று எண்ணினாய். அது ஒன்று மட்டுமே நிரந்தரம் என்று எண்ணினாய். இதுவே மாயை. இந்த எண்ணமே மாயை. உலக வாழ்வின் உண்மையை உன் கண் முன்னால் திரையிட்டு மறைக்கும் இந்த இன்பமே மாயை. மனிதனின் மனமானதும், அதன் தேவையும் மூவுலகிலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகும்.  இதனாலே மாயை பற்றிய உண்மை மனிதனுக்கு எளிதில் எட்டாக்கனி!" - அமைதியும் அன்பும் அறிவும் கலந்த நாராயணனின் வார்த்தைகளில் உள்ள உண்மையினை உணர்ந்தார் நாரதர்.
            மாயைப் பற்றிய நாரதரின் சந்தேகத்தினை தெளிவுபடுத்திய நாராயணனும் நாரதரை உலகவாழ்வின் மாயையில் இருந்து கலைத்தார், உண்மை நிலைக்கு நாரதரை மாற்றினார். "என்ன நாரதா! இப்பொழுது புரிந்ததா மனிதன் உலக வாழ்வில் உள்ள இன்பத்தில் எப்படி சிக்கியுள்ளான் என்று. மாயை மனிதனுக்கு ஏன் எளிதில்லை என்று." - தன் மாணவன் நாரதரிடம் ஸ்ரீமன் புருஷோத்தமன் வினவ, "புரிந்தது பிரபோ! மனித வாழ்க்கை எளிதல்ல. மாயையும் எளிதல்ல! நன்கு உணர்ந்தேன்."- என்று நாரதரும் பணிவுடன் பதிலளித்தார்.
              "நல்லது நாரதா! மிக்க மகிழ்ச்சி. உனக்கு மாயைப் பற்றி விளக்கம் கூறியதில் சற்று தாகமாய் உள்ளது. அந்த ஆற்றில் இருந்து ஒரு குவளை நீர்..." என்று நாராயணன் விண்ணப்பம் போட ஆரம்பிப்பதற்குள் சுதாரித்துக்கொண்ட நாரதர் இடைமறித்து,"மீண்டும் குவளை நீரா!!!? நாராயணா! நாராயணா! போதும் எம்பெருமானே! ஒரு பாடமே போதும். நன்றாகவே கற்றுக்கொண்டேன். மாயைப் பற்றியும் அறிந்தேன், இனி எந்த ஒரு சந்தேகம் வந்தாலும், உங்களிடம் வரும் முன் நானே எப்பாடு பட்டாவது விடை அறிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொண்டேன்! வருகிறேன் புருஷோத்தமா!"- என்றவாறு அடுத்த சந்தேகம் வரும் முன் வைகுண்டத்தின் வாசல் நோக்கி விரைந்தார்!

April 23, 2015

நாரதர் சாபம்!


           புருஷோத்தமன், ஸ்ரீமன் நாராயணன், தன் அன்பர்களான ஜெய மற்றும் விஜயனின் சாபத்தை நிறைவேற்றுவதற்கான சரியான நேரத்தினை எதிர் நோக்கி காத்துக் கொண்டிருந்தார். பரசுராம அவதாரம் முடிந்து இளைப்பாரிக் கொண்டிருந்தவருக்கு எப்பவும் தேவர்கள் வந்து கூறி,பின் அவதாரம் எடுக்க மனமில்லை. இம்முறை வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டு,எவ்வாறு ஆரம்பிக்கலாம் என்று தன் சயனத்தில் யோசித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு விபரீத எண்ணம் தோன்றியது. "சரி,எண்ணத்தினை நிறைவேற்ற சரியானவன் யார்?" என்று ஆராய்ந்து கொண்டிருந்த லீலைகளின் மன்னனுக்கு சிந்தையில் தோன்றிய உருவத்தினைக் கண்டதும் சொல்லில் அடங்கா சந்தோஷம்! "இவனே சரியானவன்! இவன் கொண்டே ஆரம்பித்துவிடலாம்!" என்று புன்னகைத்துக் கொண்டார் நமது மாதவன்.
                            
                                                  *                 *                 *                 *               *
          சிவபெருமானுடன் உலகை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்த  நாரதர் திடீரென தவத்தில் அமர்ந்தது இதனால்தான்!


          நாரதருக்கு சில நாட்களாகவே மனதில் சிறு உறுத்தல். பிருகு முனிவரோ, முனிவர் தகூரோ , முனிவர் வசிஷ்டரோ வந்தால் தேவலோகம் கொடுக்கும் மரியாதை ஏன் தனக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்கின்றது? இந்திரன் கூட முனிவர் வசிஷ்டர் வந்தால் பயம் கலந்த மரியாதையுடன் அரியணை விட்டு இறங்கி வந்து வரவேற்கிறான். ஆனால் நான் சென்றால் இருந்த இடத்தை விட்டு கூட நகர்வதில்லை. அவனுக்கு ஏதும் காரியம் ஆகவேண்டும் என்றால் மட்டுமே என்னை தேடி வருகிறான்! அவர்களும் முனிவர்கள் தான். கடும் தவம் புரிந்து அனைத்தையும் வென்றவர்கள்! முற்றும் துறந்தவர்கள். அவ்வளவு தானே! என்றது நாரதரின் மனம். இதை விஷ்ணுவிடமோ சிவபெருமானிடமோ வினவ கூட எண்ணினார். ஆனால், ஏதும் சாக்கு  சொல்லி தள்ளிவைத்து விடுவார்களோ என்ற பயத்தால் கேட்காமல் இருந்தார்.

           சிவபெருமானுடன் இன்று உலகை சுற்றி வரும் போது சிவனும் எதேச்சையாக (?!?) ஒரு தபோவனத்திற்கு கூட்டிச் சென்று, "நாரதா! இத்தபோவனம் மிகவும் சக்தி வாய்ந்தது. இங்கு தவமிருப்பவர் யாராயினும் அவரின் தவத்தை எந்த சக்தியாலும் கலைக்க முடியாது என்ற வரத்தை நானே வழங்கியுள்ளேன்! இங்கு தவமிருந்த முனிவர்கள் பலர் காமதேவனையும்  வென்று தவ ஞானிகளாகி உள்ளனர். ", என்று கூற, நாரதருக்கும் தன் மனதின் நெருடல் நினைவிற்கு வர,"ஆஹா!நானும் இங்கு தவமிருந்து மன்மதனை வீழ்த்தி விட்டால், அனைவரும் என்னையும் மதிப்பர் அல்லவா!" என்று எண்ணினார். அவ்வளவுதான். தியானத்தில் அமர்ந்தார். நடப்பதை அறிந்த சிவபெருமானும் புன்னகைத்துக் கொண்டு, தான் வந்த வேலை முடிந்ததை அறிந்து கைலாயம் திரும்பினார்.

            நாரதரின் கடுந்தவம் வழக்கம்போல் இந்திரனை கலங்க வைத்தது. அனைத்து தேவர்களும் இந்திரலோகத்தில் கூடினர். "திடீரென எதற்கு நாரதர் இப்படி கடுந்தவம் புரிகிறார்? இதனால் நமக்கு ஏதும்  பிரச்சனை வந்து விடுமோ?", பயத்துடன் இந்திரன் வினவ, "நமக்கு என்று பெரிதாய் ஒன்றும் வராது. வந்தால் உமக்குத்  தான் வரும். நாரதர் தேவலோகத்திற்கு அதிபதியாகும் எண்ணம் கொண்டாரோ என்னவோ!?" - வாயு தேவன் தன் எண்ணக்கனைகளை காற்றில்  கலக்கவிட்டார். 

         "இந்திரன் பதவி மட்டுமா? நாரதர், ஸ்ரீமன் நாராயணனின் விருப்பமிக்க பக்தன். நாரதர் கேட்டால் அந்த நாராயணன் மட்டுமல்ல,சிவபெருமானும் எதையும் வழங்கிவிடுவார். நாராயணன் தன் பதவியைக் கூட வழங்கிவிடுவார்!", என்று சூர்யதேவனும் சிறு அனலை வீச, அவ்வளவுதான், இந்திரனுக்கு வேர்த்தே விட்டது!!! 

          "ஏன் எல்லோரும் என் பதவிக்கே ஆசைப் படுகிறார்கள்?", என்று முணுமுணுத்த இந்திரன் வருணதேவனை உடனே அழைத்தான். "வருணா! உடனே சென்று எப்பாடு பட்டாவது நாரதரின் தவத்தினை கலைக்கவேண்டும். வாயுதேவனையும் கூட அழைத்துச் செல்லுங்கள்", என்று ஆணையிட, வருணதேவனும் வாயுதேவனும்  தங்களின் பலத்தினை நாரதருக்கு காட்டச் சென்றனர்.

          சிவபெருமானின் வரம்! நாரதரின் தவத்தினை கலைக்க முயன்று வருணதேவனும் வாயுதேவனும் தோற்றுப்போக, இந்திரன் அக்னிதேவனையும் சூர்யதேவனையும் அனுப்பி வைத்தான். அக்னிதேவனும் சூர்யதேவனும் இணைந்து தங்களின் சக்தியினை நாரதரிடம் காட்டியும் கூட  தோற்றுப் போயினர் . இந்திரன் தன்  இறுதி அஸ்திரமான மன்மதனை ரதி,ரம்பை,ஊர்வசி மற்றும் இதர தேவலோக தேவதைகள் அனைவரையும் அழைத்துச் சென்று நாரதரின் தவத்தினை கலைக்க உத்தரவிட்டான். இந்திரலோகமே வெறிச்சோடி  இருக்க, இந்திரன் மட்டும் தனிமையில் பயத்துடன் அமர்ந்து தபோவனத்தில்  நடப்பவற்றை  கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். மீண்டும் தாம் இவ்வரியணையில் அமரப்போவதில்லையோ என்று கூட உள்ளுக்குள் நடுங்கினான்.

         தபோவனத்தில் நாரதரின் தவத்தினை கலைக்க மன்மதன் தொடுத்த அனைத்து அம்புகளும் பலனளிக்காமல் போயின. இதமான காற்றில் மலர்களின் தேன்நிறைந்த மணங்கள் கலந்து வனமெங்கும் வீச,  ரம்பை, ஊர்வசி, மேனகை,ரதி என அனைவரும் தோழியருடன் பூமாதேவிக்கு வலிக்காமல் மெல்லிய பாதங்கொண்டு ஆட , மன்மதனும் தன் வலிமையான  அஸ்திரமான காமபானத்தினை  நாரதரினை நோக்கி தொடுத்தார் . அந்தோ பரிதாபம்! நாரதரின் முன் அப்பானம் சாம்பலாகிப்போனது. அதைக்  கண்ட இந்திரன், நாரதருக்குள் இப்படி ஒரு பலமா என்று விக்கித்துப்போய் ஐராவதத்தையும் மறந்து வனத்திற்கு ஓடோடி வந்தான். மன்மதன் குனிந்த தலையுடன் இந்திரனை நோக்கி,"தேவா! நாரதரின் தவத்தினை என்னால் கூட கலைக்க இயலவில்லை. நாரதரின் தவ வலிமை முன் என் அஸ்திரங்கள் அனைத்தும் செயலற்றுப் போயின.  நான் தோற்றுவிட்டேன்." என்றார். 

         மன்மதனின் வார்த்தைகள் உதிர்ந்த  நொடி,"நான் மன்மதனை வென்றுவிட்டேன்!" என்று ஆனந்த கூச்சலுடன் நாரதர்  தவத்தில் இருந்து கலைந்தார். 
      
     அனைவரும் பிரமித்து நிற்க, நாரதரோ,"மன்மதா! நான் உன்னை வென்றுவிட்டேன் என்று நீயே கூறிவிட்டாய். நான் முற்றும் துறந்தவன் இனி. தேவர்கள் அனைவரையும் வென்றுவிட்டேன். மன்மதனை வென்றேன்...நான் இனி சிவபெருமானுக்கு இணை. இதை சிவபெருமானிடமே முதலில் கூறவேண்டும்." ஆனந்தமாக வனத்தினை விட்டு கைலாயம் விரைந்தார்.

          கைலாயத்தில் சிவபெருமானுடன் உரையாடலில் இருந்த பார்வதி தேவியின் கவனத்தினை நாரதரின் குரல் கலைத்தது. "வருவது நாரதரா!? பார்த்து எத்தனை நாட்கள் ஆயிற்று!",என்று தேவி பரிவுடன் வினவ,"ஆம் தேவி!நாரதரே தான்! தவம் முடிந்து நேராக கைலாயம் வந்திருக்கிறார்!", என்றவாறு சிவபெருமானே எழுந்து சென்று நாரதரை வரவேற்றார்! "வரவேண்டும் நாரதா! உன் முகத்தில் தேஜசை காண்கிறேன்! மிகவும் ஆனந்தமாய் உள்ளாய்! உடன் வந்த என்னையும் மறந்து தியானத்தில் அமர்ந்தாயே, உன் எண்ணம் கை கூடியதா?", என்று சிவபெருமான் வினவ,"எம்பெருமானே!  என் தவவலிமையினால் நான் மன்மதனை, அந்த நாராயணன் மைந்தனை வென்று விட்டேன்! என் தவவலிமை கண்டு மன்மதன் மட்டுமல்ல, அனைத்து தேவர்களும் நடுங்கிவிட்டனர். இந்திரன் உட்பட!", என்று ஆனந்த நடனம் ஆடினார்.

              "மிக்க மகிழ்ச்சி நாரதா! ஆனால், இக்கூற்றை நாராயணனிடம் கூறிவிடாதே. நாராயணனை அறிந்ததால் கூறுகிறேன். உன் நலனிற்கு தான் கூறுகிறேன்!", என்றார் எச்சரிக்கையுடன் விஷ்ணு வல்லபாவாகிய சிவபெருமான்.
     
         "பிரபோ! நான் நாராயணனின் சிறந்த பக்தன் அல்லவா! மன்மதனை நான் வென்றதைக் கேட்டால் அவர் நிச்சயம் அகம் மகிழ்வார். என் தவப்பலன், தாங்களே என்னை எழுந்து வந்து வரவேற்றீர்களே!  நான் வைகுண்டம் சென்று உங்களுக்கு உண்மையை உணர்த்துகிறேன்.", என்றவர் தன் வணக்கங்களை சிவபெருமானுக்கும் தேவி பார்வதிக்கும் தெரிவித்துவிட்டு வைகுண்டம் புறப்பட்டார்.
          
     "ஐயனே! தாங்கள் அளித்த வரத்தினால் தான் அத்தபோவனம் சக்தி வாய்ந்ததாக உள்ளது. இதை நாரதரும் அறிவார். பின் எதற்கு 'தன் தவவலிமை' என்று தற்புகழ் பாடுகிறார்? தாங்களும் எழுந்து சென்று வரவேற்றீர்கள்! நாரதருக்கு என்னாயிற்று?", என்று தேவி பார்வதி குழப்பத்துடன் வினவ, புன்னகைத்த சர்வேஸ்வரன், "தேவி!அனைத்தையும் கவனித்த நீ ஒன்றை கவனிக்க மறந்துவிட்டாயே. நாரதர், தபோவனம் விட்டு வந்ததில் இருந்து இக்கணம் வரை எப்பொழுதும் கூறுவதை கூறவில்லையே! எள்ளளவும் கூற எண்ணவுமில்லை! இதில், நான் எச்சரித்தும் கேட்காமல் வைகுண்டம் வேறு செல்கிறார்! நான் அதைப் பற்றியே  எண்ணிக் கொண்டிருக்கிறேன்!",என்றார்.
             
         நீலலோஹிதனின் வார்த்தைகளில் உள்ள அர்த்தங்களை புரிந்துகொண்ட தேவியும் மனம் விட்டு புன்னகைத்தார். "நாரதா! பாவம் நீ! அண்ணன் நாமம் சொல்லி கலகமூட்டி நிம்மதியாய் இருந்தாய்! அண்ணனிடம் தமக்கையாய் இருப்பது எளிது. அவரின் பிரியப்பட்ட பக்தனாய் இருப்பதைக் காட்டிலும்."
             
         வைகுண்டத்தில் தாயாருடன் அமர்ந்திருந்த ஸ்ரீமன் நாராயணன், நாரதர் வருவதைக் கண்டவுடன் தாயைக் கண்ட குழந்தைப் போல் துள்ளி எழுந்து சென்று வரவேற்றார். "வா நாரதா வா! நீ இல்லாமல் வைகுந்தமே கலையில்லாமல் போனது எனக்கு! என்னைக் காணாமல் நீயும் என்னைப் போல் பொழிவிழந்து இருப்பாய் என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால் நீயோ சூரியனைக் காட்டிலும் பிரகாசமாய் இருக்கின்றாயே!".  கைலாயத்தில் சிவபெருமானும் எழுந்து வந்து வரவேற்றார்! இங்கு நாராயணனும் எழுந்து வந்து வரவேற்கிறார்! எல்லாம் என் தவத்தின் பலன் என்று எண்ணிப் பெருமிதப்பட்டுக் கொண்ட நாரதர், "பிரபோ! நான் தங்களின் மைந்தன் மன்மதனை வென்றுவிட்டேன்",என்று ஆரம்பித்து கைலாயத்தில் பாடிய அதேப் பாடலைப் பாடி ஆடி முடித்தார்.


          "ஆஹா! பார்த்தாயா தேவி! என் பக்தன் நாரதனுக்குள் இப்படியொரு சக்தியா!? மிகவும் ஆனந்தமாய் உள்ளது. பெருமிதம் கொண்டேன் நாரதா!", என்றார் மாதவன். தேவியும்,"நாரதா! உன் தவவலிமையால் மூவுலகிற்கும் நல்லது நடக்கட்டும்!" என்றார். 
    
        "தேவி! நான் இதைப்பற்றி குபேரனிடமும் பிரம்மனிடமும் கூறவேண்டும். விடை கொடுங்கள் தேவி!", என்றவரை நோக்கி,"நாரதா! என்னை மறந்து விட்டு போகின்றாயே!"என்றார் பரமாத்மா, அப்பாவியாக . "மன்னியுங்கள் பிரபோ! பரபரப்பில் இருந்ததால்...விடை கொடுங்கள் பிரபோ! வருகிறேன் தேவி!" என்றவாறு நாரதர் வைகுண்டம் விட்டு புறப்பட்டார்.
         
           "ஐயனே! நாரதர் தங்களின் பெரும்பக்தன் அல்லவா! அவரிடமும் உங்கள் லீலைகளை நடத்த வேண்டுமா?", என்ற தேவியை நோக்கி புருஷோத்தமன், "தேவி! என் பக்தன் இதுவரை என்னை அழைக்கவில்லையே!", என்றார் உரிமையுடன்.

           மூவுலகத்திலும் தன் தவவலிமைப் பற்றி பெரியோர், பிரியப்பட்டோர் என அனைவரிடமும் கூறிய நாரதர், யாரேனும் விடுபட்டுள்ளனரா என்று எண்ணிக்கொண்டு பூலோகத்தினை கடந்து சென்று கொண்டிருந்தார். அழகான பசுமை நிறைந்த வனம் ஒன்றைக் கண்டார். குழந்தையின் அழகிற்கு கண் பட்டுவிடக்கூடாதென்று  கண் மையிட்டதில் அக்குழந்தையின் அழகு இன்னும் கூடுவதுப் போல் மலர்கள் மலர்ந்து நிறைந்து  வனத்தின் அழகை இன்னும் கூட்டியது. வனத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தவரின் எண்ணத்தினை ஒரு சிரிப்பொலி கலைத்தது. இல்லையில்லை. ஈர்த்தது!! வனத்தின் அழகினை கூட்டும் வண்ணம் அழகே உருவாய் ஆடிகொண்டிருந்தால் ஸ்ரீமதி! "ஆஹா! என்ன அழகு! அழகோவியமாய் இருக்கின்றாள்! யார்  என்று அருகில் சென்று காணலாம்."-நாரதரின் மனக்கனைகள்.

              ஸ்ரீமதி,மன்னன் ஷீலாநிதியின் மகள். நாரதர் வனத்திற்கு வர, தன் மகளைக் காண வந்த மன்னனும்,நாரதரைக் கண்டு அடையாளங் கண்டுகொண்டார். "நாரத முனிவரா! வரவேண்டும் வரவேண்டும்! தன்யனானேன்!",என்று நாரத முனிவரை வரவேற்று உபசரித்தார். 

        அரண்மனையில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த  நாரதரிடம்,"நாரத முனிவரே! எனது புதல்வி ஸ்ரீமதிக்கு சுயம்வரம் நடக்க உள்ளது. அவளுக்கு எப்படிப்பட்ட மணாளன் அமைவான் என்று கூறுங்களேன். அவளது இல்வாழ்கை எவ்வாறு இருக்குமோ என்று மனது ஐயம் கொண்டுள்ளது.",என்ற மன்னன், தன் புதல்வியை அழைத்து,"ஸ்ரீமதி,நாரதர் அருகில் அமர்வாய். அவர் உன் கைரேகைப் பார்த்து உன் எதிர்காலம் எவ்வாறிருக்கும் என்று கூறுவார்",என்றார். 

            ஸ்ரீமதியின் செங்காந்தல் அலர்ப் போன்ற  உள்ளங்கையினைப் பார்த்த நாரதர், "மன்னா! கவலை கொள்ள வேண்டாம். உனது மகளை மணப்பவன் மூவுலகிற்கும் தலைவனாகும் தகுதியினை உடையவன். உனது புதல்வியின் மணவாளன் ஈசனின் அன்பினைப் பெற்றவனாக இருப்பான். ஈசனுக்கு இணையான வலிமையினைக் கொண்டவனாக விளங்குவான்.", என்றவர், எதையோ எண்ணியவராய், "மன்னா! உன் புதல்வியின் சுயம்வரத்தினை சந்தோசமாக நடத்து. அவள் மனம் கவரும் மன்னனுடன் அவள் இல்வாழ்கை இனியதாய் அமையும். எனக்கு வேலை ஒன்று உள்ளது. நான் சென்று வருகின்றேன்." என்றபடி மன்னனிடம் விடைப்பெற்று நேரே வைகுண்டம் சென்றார்.

               "வா நாரதா! சமீப காலமாய் உனக்கு என் மேல் உள்ள பற்று அதிகரித்துக் கொண்டிருக்கின்றது! என்னை அடிக்கடி காண வருகின்றாயே!" - இன்முகத்துடன் லக்ஷ்மிநாராயணன் வரவேற்றார்.

                "பிரபோ! தங்களிடம் உதவி நாடி வந்துள்ளேன். ஷீலாநிதியின் புதல்வி ஸ்ரீமதியினை மணம் புரிந்து கொள்ள விரும்புகிறேன். அவள் அழகு என்னை அவளிடம் ஈர்க்கின்றது. அவளை மணமுடித்துக் கொண்டால் நான் மூவுலகையும் வெல்லும் பலம் கொண்டு ஈசனுக்கு இணையான வலிமை உடையவராய் இருப்பேன். ஸ்ரீமதி என்னை மணக்க வேண்டுமென்றால் சுயம்வரத்தின் போது அவள் எனக்கே மாலையிட வேண்டும். அதற்கு நான் அங்கு வரும் இளவரசர்களைக் காட்டிலும் அழகாகவும் இளமையாகவும் தெரிய வேண்டும். மூவுலகிலும் அழகானவன் ஹரியாகிய தாங்கள் தான். ஆக ஹரியினைக் காட்டிலும்  என்னை அழகாக உருமாற்றி, அழகிய ஆடை ஆபரணங்களை  கொடுத்து அருள வேண்டும்." , என்று நாரதர் தன் மனவிருப்பதினைக் கூறினார்.

            நாரதரின் விருப்பத்தினை முழுவதுமாக அமைதியாய் தலையசைத்து கேட்ட ஸ்ரீ ஹரி நாராயணன்,"நாரதா! நீ மன்மதனை வென்று முற்றும் துறந்தவன் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். நீ என்னவென்றால்...", என்றவாறு நாசுக்காக நாரதரை சீண்டினார்.

           "மாதவா! நான் மன்மதனை வென்றது உண்மை. அனால்,இப்பொழுது ஸ்ரீமதியை மணக்க விருப்பம் கொண்டுள்ளேன். நீங்கள் என்னை அழகாய் உருமாற்றினால் நான் ஸ்ரீமதியினை என் விருப்பம் போல் மணப்பேன்!",என்றார் அப்பாவி நாரதர்.

            "நாரதா! என் விருப்பமிக்க பக்தன் நீ! உன் விருப்பத்தினை நான் நிறைவேற்றுகிறேன். உன்னை ஹரியினைக் காட்டிலும் அழகாய் உருமாற்றி உலகின் உயர்ந்த வகை பட்டினால் ஆன ஆடை அணிவித்து,மூவுலகிலும் கிடப்பதர்க்கரிய இரத்தினங்கள் கொண்டு செய்த ஆபரணங்களை உனக்காக தருகிறேன். சுயம்வரத்திற்கு வந்திருக்கும் பிறதேசத்து மன்னர்களைக் காட்டிலும் நீ தனித்து தெரிவாய்!"

              "மாதவா! உன் கருணையே கருணை. தாங்களும் என்னுடன் வரவேண்டும். யாரும் இல்லாமல் செல்கிறேன். தாங்கள் வந்தால் நான் மிகுந்த ஆனந்தம் கொள்வேன்!", என்ற நாரதரின் அழைப்பை எதிர்பார்க்காத (எதிர்பார்த்த, ஆனால் எதிர்பார்க்காதது போல்!!) ஸ்ரீமன்  நாராயணன், "நான் ஏன் நாரதா? ஏதும் நீ எதிர்ப்பாராதது நடந்து விடப்போகிறது!", என்றார்.

           "விஷ்ணு தேவா! நான் தங்களைக் காட்டிலும் அழகானவன். என்னை விட அங்கு வேறு யார்க்கு ஸ்ரீமதி மாலையிட முடியும்? தாங்கள் என்னுடன் வரவேண்டும். எனக்கு துணைக்கு வேறு யாரும் இல்லை!", என்றார் அழகன் நாரதர். நாரதரின் விருப்பத்திற்கு இணங்கி நாராயணனும் தன் துவாரபாலர்களுடன் சுயம்வரத்திற்கு சென்றார்.

            ஷீலாநிதியின் அரண்மனை. ஸ்ரீமதியின் சுயம்வரம். இளவரசர்களும் பிற தேசத்து மன்னர்களும் சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். நாரதரும் அமர்ந்திருந்தார். ஸ்ரீமதி அழகே அலங்காரத்துடன் கையில் சுயம்வர மாலையுடன் நடந்து வந்தால். நாரதருக்கு மனதிற்குள் பெருமை. "நிச்சயம் எனக்குத்தான் மாலையிடுவாள்! வந்திருக்கும் இளவரசர்கள் என்னைக் கண்ட பார்வையில் அவர்களின் தோல்வியினைக் கண்டேன்!"

          அனைவரையும்  கடந்து வந்த ஸ்ரீமதி,நாரதரின் முன் நின்றாள். மையிட்ட தன் இரு கருவிழிகள்  நானத்தில் சிவக்க, வெட்கப் புன்னகையுடன் தனது இரு கொடிப்  போன்ற மெல்லிய கைகளில் உள்ள மாலையினை தன் மனம் வென்ற மன்னவனின் கழுத்தில் இட்டாள்.

         நடப்பது  புரியாமல் விக்கித்துப்போய் நின்ற நாரதருக்கு கோபம் மட்டும் தலைக்கு மேல் ஏறியது! பின்னர்! ஸ்ரீமதி மாலையிட்டது மன்மோகனரான புருஷோத்தமனுக்கல்லவா!!!

         "ஸ்ரீமதி! என்ன அநீதி இது? இங்குள்ளவர்களில், ஏன் இந்த நாராயணனைக் காட்டிலும் அழகில்  சிறந்தவன் நான் அல்லவா! நீ எனக்கே மாலையிட்டிருக்க வேண்டும் அல்லவா! எதற்கு நாராயணனுக்கு அணிவித்தாய்?", என்று தனது கோவக்கனைகளை தொடுக்க ஆரம்பித்தார்.

         "என்னது?! தாங்கள் அழகில் சிறந்தவரா!?", என்றவாறு கூறிய ஸ்ரீமதி நாரதரினைக் கண்டு சிரிக்க ஆரம்பித்தாள். கூடியிருந்த அனைவரும் சிரிக்க, நடப்பது புரியாமல் நின்ற நாரதரைக் கண்ட ஸ்ரீமான் விஷ்ணுவின் துவாரபாலகர்கள், "நாரத முனிவரே! தாங்கள் ஏன் இப்படி தற்பெருமையில் மூழ்கியுள்ளீர்கள்? தாங்கள் யார்,எப்படி இருக்கின்றீர் என்பது கூட அறியா வண்ணம் அறியாமையில் மூழ்கியுள்ளீரே!", என்றவர்கள் நாரதரை அறையில் உள்ள நிலைக்கண்ணாடி முன் அழைத்துச் சென்றனர். 

       கண்ணாடியில் தன் பிம்பத்தினைக் கண்ட நாரதர் கடுங்கோவத்துடன், "நாராயணா! என்னை என்ன செய்துள்ளாய் நீ? ஏன் என் முகத்தினை குரங்காய் மாற்றினாய்? உன்னை நாடி வந்தவனை இப்படி ஏமாற்றலாமா நீ??"



      "நாரதா! நீ தான் உன் முகத்தினை ஹரியினைப் போல் அழகாய் மாற்றக் கூறினாய். ஹரி என்றால் குரங்கு என்றோர் அர்த்தமும் உள்ளதல்லவா! நீ எனக்கு இருக்கும் மற்ற நாமங்களைக் கொண்டு கூறியிருந்தால் என்னைத் தான் கூறுகின்றாய் என்று எளிதாய் புரிந்திருக்கும் எனக்கு", என்றார் ஒன்றும் அறியாதவனாய்.

               சற்றும் கோபம் அடங்காத நாரதர்,"நாராயணா! நான் விரும்பியவள் முன் என்னை அவமானப்படுத்தி விட்டாய்!", என்றவர் தன் கமண்டலத்தில் உள்ள நீரினை கையில் எடுத்து,"நாராயணா! எவ்வாறு நான் விரும்பியவள் கிடைக்காமல் தவிக்கின்றேனோ அதேப் போல் நீயும் உன் தேவியை பிரிந்து துயரத்தில் வாடுவாய். காட்டில் குரங்குகளுடன் நட்புறவு கொள்வாய்!  குரங்குகளின் துணைக் கொண்டு தேவியுடன் சேர்வாய். நான் உன்னை சபிக்கின்றேன்.", என்று தன் கோபத்தினைக்  கொட்டி முடித்தார்.
       
       அனைவரும் அதிர்ந்து நிற்க, மாதவனோ,"நாரதா! உன் சாபத்தினை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனது துவாரபாலகர்கள் பெற்ற சாபத்தினை நிறைவேற்றவே இவ்வாறு நடந்தேன். மேலும்,ஸ்ரீமதி அலைமகளின் அம்சம் ஆவாள். எனவே அவள் என்னையே சேரவேண்டும். மன்மதனை வென்ற மமதையில் இருந்ததால்  உன்னால் ஸ்ரீமதி அலைமகளின் அம்சம் என்பதை அறிய முடியவில்லை. நான் பூமியில் ராமனாய் அவதரித்து உன் சாபத்தினை நிறைவேற்றுவேன்.", என்று பொறுமையுடன் நடந்தவை நடந்ததற்க்கான காரணத்தை விளக்கினார்.
     
           தன் தவறை உணர்ந்த நாரதர், உண்மை நிலை அறிந்து,"நாராயணா! என்னை மன்னித்துவிடு. தற்புகழ்ச்சி என்னும் அறியாமையில் தொலைந்த என்னை மீட்டு விட்டாய்! உண்மையினை உணர்ந்தேன். இனி என்றும் உன் புகழ் மட்டுமே  பாடுவேன். மணம் புரியும் விருப்பம் கொள்ளேன்!"


          "நாரதா! பிருகு முனிவர் போல் மதிப்பும் மரியாதையும் பெற இன்னொருமுறை தவம் புரியலாமே? மீண்டும் மன்மதனை வென்று  ஈசனுக்கும் எனக்கும் இணையான பதவி உனக்கு கிடைக்க வழி உள்ளது!", என்று நாராயணன் நாரதரை தூண்ட, அதிர்ந்த நாரதர், "புருஷோத்தமா!!  இருப்பதே போதும்! நிம்மதியாக உள்ளேன்! நாராயண!! நாராயண!!"



March 27, 2015

God and the Elephant!



            Long long ago, really so long ago (!!), there was an ashram deep inside the forest of India. The Guru and his humble disciples were living there. The disciples were taking care of the ashram works when they are done with their day's lessons. 
               One fine day, a group of disciples were out collecting wood. As it was rainy season, the woods were wet and also as it was green everywhere than the usual, the disciples lost track and were walking along the path where a village was situated, in the circumference of the forest. Not knowing this, the disciples saw some dry woods and collected the woods relaxed, as they got what they were looking for. Everyone was discussing happily about the forest and their adventure whilst, one of the disciple, who was collecting wood, got curious and went, “shush! Are you people hearing that weird sound?” Everyone got curious and turned towards the direction where the sound came from. To their amaze, they were able to see the big old forest trees being rumbled and the ground was trembling like even the earth is afraid of what is approaching them! By the time their brain was trying to fight the fear of unknown and identify the unknown, they were able to see a huge, dark skinned elephant approaching them with all its monstrous power and fierce. With the chains around its neck and hind legs, it was clear that the elephant is used by the village people. By passing the charging elephant's trumpet sound, they were able to also listen to a thin voice coming from behind. A human voice! A mahout!! "That's a mad elephant on lose. You kids, run away from its path!” shouted the mahout with all the left over energy he had on chasing the elephant from the village.  
                 Every disciple on hearing the mahout ran away into the woods out of fear whilst one disciple stood, without moving. "Why are you running? Why are you afraid of the elephant? Guru said God resides in everything! God is in me, God is in you all. And so inside the elephant too! Why the god inside an elephant would would try to hurt the god inside me!? That's not how...Ahhhhhh!” even before the attentive and studious disciple could finish his statement; the fiery elephant struck him, threw him in the air like a feather and kept on running in his own way. The disciple went unconscious without even knowing that he was flying!
                 The other disciples and the villagers carried the injured disciple and took him to the ashram. The Guru bandaged the wounds with medicines. Days later, when the disciple regained his conscious, he was so confused that he asked for Guru to clear his mind and doubt. As Guru knew what happened from the mouth of the other disciples and the villagers, he went to the injured disciple, knowing what the question is going to be.
                  "Guruji, you told me, God resides in everything. So, there’s god inside me and also inside that elephant! Why would the God inside an elephant want to hurt the God inside me!??", asked the confused disciple. Smiling at the disciple, Guru replied, “Of course, God resides inside you and the elephant. God is also inside the mahout who was shouting at you to run away from the elephant. Why dint you get out of the way when he told you to??Why dint you listen to the god who was trying to save you??".

March 03, 2015

From a Life of Limited Self to a Life of Love!


     



Every one of us desires to be happy. Normally, that is what we seek to achieve. Yet, most people are immersed in some kind of suffering. If at times they do get small instalments of happiness in their lives, it is neither unadulterated nor abiding. Even if one does not seek suffering, it comes as an inevitable outcome of the very manner in which one seeks happiness.

Most seek happiness through the fulfillment of desires but such fulfilment is never an assured thing. Hence, in the pursuit of desires, one is also unavoidably preparing for the suffering from their non-fulfilment. Goaded by multifarious desires, most seek the pleasures of the world with unabated hope. But the enthusiasm for pleasure is abated by suffering, which often follows in pleasure’s wake.

Man is subject to sudden moods and impulses. Sometimes he is happy and elated, at other times he is very unhappy and downhearted. His moods change as his desires are fulfilled or frustrated. Satisfaction of some desires yields momentary happiness, but this happiness does not last, and it soon leads to the reaction of depression. His moods subject him to ups and downs and to constant change.

Complete detachment is one of the essential conditions of lasting and true happiness, for he who has complete detachment no longer creates for himself the suffering which is due to the unending thraldom produced by desires. Desirelessness makes a man firm like a rock. He is neither moved by pleasure nor by sorrow. He is not upset by the onslaught of opposites. The steadiness and equanimity which remain unaffected by any opposites is possible only through complete detachment, which is an essential condition of lasting and true happiness. The state of complete desirelessness is latent in everyone, and when, through complete detachment, one reaches the state of wanting nothing, one taps the unfailing inner source of eternal and unfading happiness which is not based upon the objects of the world, but is sustained by Self-knowledge and Self-realization.

Mere desirelessness, however, cannot yield positive happiness, though it protects man from self-created suffering and goes a long way towards making true happiness possible. True happiness begins when a man learns the art of right adjustment to other persons, and right adjustment involves self-forgetfulness and love. From here one realizes the spiritual importance of transforming a life of the limited self into a life of love.

When true love is awakened in man it leads him to God-realization, opening up an unlimited field of lasting and unfading happiness. The happiness of God-realization is the goal of all creation. It is not possible for a person to have the slightest idea of that inexpressible happiness without actually having the experience of Godhood. Real happiness which comes through realizing God is worth all the physical and mental suffering in the universe. Then all suffering is as if it had never been.

Even those who are not God-realized can control their minds through yoga to such an extent that nothing makes them feel pain or suffering, even if they are in a distressing situation. However, though yogis can brave and annul any suffering, they might not experience the happiness of realizing God.

When one becomes God, everything else is zero. The happiness of God-realization is self-sustained, eternally fresh and unfading, boundless and indescribable. It is for this happiness that the world has sprung into existence.


-Avatar Meher Baba


Featured post

Radha Ki Krishna!

She sees her within his eyes!            Radha! Radha Rani is the only person who loved and lived for Krishna, a selfless love, no d...