மாதவன்! கமலநாதன்,ஆனாலும் நிர்குணன்! ஞானி! பாரபட்சம் பாராதவன்! அவன் முன் மரமும், மரத்தின் மேல் அமர்ந்திருக்கும் குரங்கும், குரங்கை விரட்டும் நாயும், நாயை வேட்டையாடும் வேடனும், நாட்டின் அரசனும் ஒன்றே! ஆன்மா ஒன்றே என்றுணர்ந்த ஞானி!!
கருணையின் திருஉருவமான வர்தமானாஹ்! அனைத்துமாகி நிற்கும் பரமாத்மா! அவனால் எப்படி திருதராட்டிரன், துரியோதனன் மற்றும் ஏனைய கௌரவர்களை வெறுக்க முடியும்?? ஆசை மனித இயல்பு என்றுணர்ந்தவன் அல்லவா! இராமாவதாரத்தில் இவ்வுலகில் மனிதனாய் அவதரித்து மனிதனைப் போல் சுக துக்கங்களை அனுபவித்து, சொந்தம்,அன்பு,காதலில் மூழ்கி, தன்நிலை மறந்து தவித்தவர் அல்லவா! (காலத்தின் விளையாட்டு, ஸ்ரீ ராமர் சீதையை காட்டிற்கு அனுப்பியது . பாவம்,அவரையும் விடவில்லை காலம்.) அப்படியிருக்க, கிருஷ்ணாவதாரத்தில் அவரால் பீஷ்மர், திருதராட்டிரன், துரியோதனன், சகுனி மாமா மேல் எவ்வாறு கோபம் கொண்டிருக்க முடியும்?
தர்மம் உலகில் நிலைக்க அவதரித்தவன், அதை கருணை கொண்டே வேரூன்ற எண்ணினான். யுத்தம் காலத்தின் கட்டாயம் என்றாலும் தன்னிடம் சரணாகதி அடையும் மனிதனால் அதை மாற்றும் சக்தி உள்ளது என்பதை உணர்ந்தவன்.
இதை உணர்ந்ததால் தான் அமைதி தூதனாய் ஹஸ்தினாபுரம் சென்றவன் துரியோதனனுக்கு கீதை உரைக்க முற்பட்டான். காலத்தின் விளையாட்டு, துரியோதனன் மனது செவிசாய்க மறுத்தது! (அந்த முரளி மனோகரின் குழலுக்கு ஆயர்பாடி பசுகளும் மயங்கிய போது துரியோதனனும் சகுனி மாமாவும் அவன் மோகனத்திற்கு மயங்காதது, மாதவனின் காலமே!)
எல்லாமறிந்த மாதவன் பின் ஏன் அமைதி தூது சென்றான்? ஏன் கீதை உரைக்க முற்பட்டான்? ஏன் முயன்றான்? துரியோதனன் தன்னிடம் சரணாகதி அடைந்து,மாதவனும் அதிசயிக்கும் வண்ணம் கீதையை கேட்டு,உண்மை நிலை உணர்ந்து, பாண்டவர்களுடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தர்மம், கருணை என்னும் வேரூன்றி உலகெங்கும் அமைதி மற்றும் அன்பு பரவி மனம் வீச வேண்டும் என்று எண்ணம்(ஆசை?) கொண்டிருப்பாரோ?? தப்பில்லையே! துரியோதனன் என்ன தவறு செய்தான்? பாவம்,தர்மம் எவ்வாறு சூழ்ச்சியின் பிடியில் சிக்கியதோ அதே போல் துரியோதனனும் சிக்கினான்! தர்மன் சூதாட்டத்தில் மோகம் கொண்டது துரியோதனன் தவறல்லவே! காலத்தின் கையில் அகப்பட்ட உயிர்களைப் போல, சூழ்நிலையின் பிடியில் சிக்கிய மனிதனைப் போல,சகுனி மாமா கையில் உள்ள பகடையைப் போல,பாவம் துரியோதனனும் காலம் மட்டுமில்லாமல் சகுனி மாமாவின் கையிலும் அகப்பட்டு, சகுனி மாமா விரும்பியதையும்,காலம் எண்ணியதையும் ஒருசேர முடிக்க, அவனையும் அறியாமல் உதவினான்!
தர்மத்தை கருணை கொண்டு இவ்வுலகில் நிலைநாட்டவே கிருஷ்ணன் விரும்பினார். அதுவே உண்மையான வெற்றி அல்லவா! சூழ்ச்சி இல்லாமல் தர்மம் வென்றிருக்கும். ஏன் மாதவன் விரும்பிய வெற்றி இதுவாய் இருந்திருக்கக் கூடாது? பின் எதற்கு குந்தி புத்திரர்கள் தேவர்களின் ஆசியுடன் இவ்வுலகில் அவதரிக்க வேண்டும்?? யுத்தம் இல்லாமல் என்றால் எதற்கு குந்தியின் புத்திரர்கள்?
மாதவன் ஏன் குந்தியின் புத்திரர்களை தன் அம்புகளாய் கொண்டிருக்க கூடாது? யுத்தத்திற்கு அல்ல. மனிதன் தர்மம் நிலைக்க எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்த!! ஸ்ரீ ராமன் வாழ்ந்ததைப் போல! கர்ணன் - மனிதன் தான தர்மங்களில் சிறந்து விளங்க,நட்பில் உண்மையாய், மனதில் கருணை கொண்டவனாய், உள்ளத்தில் உயர்ந்தவனாய் வாழ. தருமன் - சூழ்நிலை எதுவாகினும் மனிதன் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்த. தான் மட்டுமில்லாது தன்னை சேர்ந்தவர்களையும் தர்மத்தின் வழி நடத்திச் செல்ல. நாட்டையும் தர்மத்தின் வழி நடத்த. அர்ஜுனன் - மனிதன் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்க. பீமன் - அதர்மத்தை எதிர்க்க பலமிக்கவனாய் துணிந்து நிற்க. தனி ஒரு மனிதனாய் நின்றாவது அதர்மத்தை வேரறுக்க. (ஆனால் , இவர்களிலும் (தர்மனை தவிர ) மனிதனைப் போல், தான் கற்ற கலையில் தாம் தான் சிறந்தவன் என்ற அகங்காரம் இருந்தது...அதுவும் கிருஷ்ணனின் காலமே!)
யுத்தம் எல்லாவற்றிற்கும் தீர்வல்ல. இதை நன்கு உணர்ந்தவன் கிருஷ்ணன். கருணை கொண்டு வேரூன்றினால் மட்டுமே தர்மம் நிலைத்து நிற்கும். இதையும் நன்கு உணர்ந்தவன் மாதவன். அதனால் தான் துரியோதனனுக்கு கீதை உரைக்க முயன்றான். அதில் தோல்வியும் அடைந்தான். தானும் யுத்தத்திற்கு தயாரானான்! தர்மத்தை காலம் காட்டிய வழியில் நிலை நாட்டினான்!! உண்மையில்,இது, லீலைகள் புரியும் கிருஷ்ணனிடம் காலம் நடத்திய விளையாட்டே!!